السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 20 November 2023

இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம்


 இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் : பலஸ்தீன விடுதலை போராட்டத்தின் முன்னோடி


பலஸ்தீன விடுதலைப் போராட்டம் பற்றி முஸ்லிம்கள் அனைவரும் அறிந்திருப்பது அவசியமாகும். புனித மஸ்ஜிதுல் அக்ஸாவை மையப்படுத்தியே இந்த விடுதலைப் போராட்டம் இடம்பெறுகிறது. அல்லாஹ்தஆலா பைதுல்மக்திஸ் பகுதியை அல்குர்ஆனில் புனித பூமியாக அறிவித்திருக்கிறான். புனித பூமியை தாம் பாதுகாப்பதாக அவன் உறுதியளித்திருக்கிறான். மஸ்ஜிதுல் அக்ஸாவை சூழ உள்ள பகுதிகளில் அதிகளவிலான நபிமார்களும் ரசுல்மார்களும் வாழந்திருக்கிறார்கள். மர்யம் அலைஹிஸ்ஸலாம் போன்ற இறைவனிடம் அந்தஸ்துப் பெற்ற நல்லடியார்களும் இங்குவாழ்ந்துள்ளதொடு, இந்தப் பகுதியிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் தான் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலும் அதனைச் சூழ உள்ள பகுதிகளும், வளம் நிறைந்த பிரதேசங்களாகக் காணப்படுவதாக தப்ஸீர் அறிஞர்கள் கூறுகிறார்கள். 


பலஸ்தீன விடுதலைப் போராட்டம் என்பது நீண்டகாலமாக இடம்பெற்றவரும் விடயமாகும். உமர் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் காலத்தில் பைதுல்மக்திஸ் பகுதி முஸ்லிம்களின் வசமானதோடு, பின்னர் சிலுவைப் படையினரால் மீண்டும் கைப்பற்றப்பட்டது. பின்னர் ஐயூபிய ஆட்சியாளர் சுல்தான் சலாஹூத்தின் அல்- ஐயூபி அவர்களினால் கைப்பற்றப்பட்டது. உஸ்மானிய ஆட்சிக்காலத்தின் இறுதிப் பகுதியில் பலஸ்தீன் ஆள்புலத்தை பிரித்தானியா கைப்பற்றியதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை, பிரித்தானியா அமெரிக்கா ஆகிய நாடுகளின் உதவியோடு பலஸ்தின் நிலப்பகுதியில் இஸ்ரேல் என்ற அரசு உருவாக்கப்பட்டது. 


அன்று முதல் இன்றுவரை பலஸ்தீன மக்கள்  மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு தாக்குதல்களை தொடர்ந்தது மேற்கொண்ட வருகிறது. கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமா*ஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து காஸாவின் மீது  இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு போரை அறிவித்தது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசின் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 9000 இற்கும் அதிகமான பலஸ்தீன மக்கள் கொல்*லப்பட்டுள்ளனர். அதேபோன்று, அல் - கஸ்ஸாம் மற்றும் ஏனைய போராட்டக் குழுக்களின் தாக்குதல்களால் இதுவரை 327 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்*லப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். 


 பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை படிக்கும் சகலரும் அறிந்து வைத்திருக்க வேண்டியவர்கள் இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்கள். பிரான்ஸ், பிரித்தானியாவின் காலனித்துவத்திற்கு எதிராகவும் குறிப்பாக 1920ம் ஆண்டுக்குப் பின்னர் சியோனிஸத்திற்கு எதிராகவும் இளைஞர்களை ஒன்று திரட்டிப் போராடிய பெருமை செய்ஹ் இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்களை சாரும். 


இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்கள் சிரியாவின் ஜப்லிஹ் நகரில்  பிறந்தார்கள். அவரது தந்தை உஸ்மானிய கிலபாத்தின் கீழ் இயங்கிய ஷரீஆ நீதிமன்றத்தின் நீதித்துறை அதிகாரியாகப் பணியாற்றினார்கள்.  செய்ஹ் இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்களின் குடும்பம் ஈராக்கை பூர்வீகமாகக் கொண்டதாகும். சிரியாவில் ஆரம்பக் கல்வியை  பூர்த்திசெய்த அவர் உயர்கல்விக்காக அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகம் சென்றார்கள். நவ ஸலபி சிந்தனையாளர்களான முஹம்மத் அப்துஹூ, ராஷித் ரிழா போன்றவர்களிடமும் இமாம் கஸ்ஸாம் கற்றார்கள். நவஸலபி அறிஞர்களிடம் அவர்கள் கற்றாலும்  கற்றாலும் தரீக்கா காதிரியாவின் கலீபாவாகப் பணியாற்றினார்கள். சமூக சீர்திருத்தத்தில் ஆர்வம் கொண்டிருந்தமையால் கூடுதலானோர் இவர்களின் கருத்துக்களால் கவரப்பட்டார்கள். இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் சமூக சீர்த்திருத்த பணிகளுக்கு அவர் பின்பற்றிய காதிரிய்யா வழியமைப்பு உந்துசக்தியாக அமைந்தது என அரபு வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்த காலத்திலேயே  காலனித்துவத்திற்கு எதிரான செயற்பாடுகளில் அவர் இணைந்துகொண்டார் என்று பிரித்தானியாவின் எஸ்ஸீட்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி பெவர்லி மில்டன் எட்வட்ஸ்  அவர்கள் கூறுகிறார்கள். 


ஆன்மீக  அமைப்புக்கள் வரலாற்றில் மேற்கொண்ட சமூக புணர்நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்குடன் அவர் சிரியாவில் உள்ள தனது சொந்த ஊரான ஜப்லிஹ் நகருக்கு விஜம் செய்தார்கள். தொழுகை மற்றும் ரமழான் மாதத்தில் நோன்பை பயனுள்ள விதத்தில் கழித்தல் ஆகிய விடயங்கள் மீது அவர்கள் கூடுதல் நாட்டம் காட்டினார்கள். இதற்கு அமைவாக சூதாட்டம் மற்றும் மதுப்பாவனை ஒழிப்பு வேலைத்திட்டங்களையும் இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்கள் ஆரம்பித்தார்கள்.  இவரது முயற்சிகளுக்கு ஜப்லிஹ் நகரில் மகத்தான வரவேற்புக் கிடைத்ததது. உஸ்மானிய கிலாபத்தின் பெலிஸ் படையுடன் இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்கள் நெருங்கிய உறவுகளைப் பேணிவந்தார்கள். 


சமகாலத்தில் அரபுத் தேசியவாதத்திற்கு இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்கள் நேரடியாக ஆதரவு வழங்கினார்கள். அரபுத் தேசிய வாதத்திற்கு உஸ்மானிய கிலாபா எதிர்பர்ப்பாக இருந்தாலும் கூட இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்களுக்கு உஸ்மானிய கிலபா ஆதரவு வழங்கியது. ஆன்மீகத்திலும் தனிப்பட்ட வாழ்விலும் அவர் சிறந்த முன்மாதிரியாக வாழ்ந்தார்கள் என்று கலாநிதி பெவர்லி மில்டன் எட்வட்ஸ்  அவர்கள் கூறுகிறார்கள்.  


இத்தாலியின் ஆட்சியளார் பெனிட்டோ மொஸோலினி தலைமையிலான இத்தாலியப் படை 1911ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லிபியாவை ஆக்கிரமித்தது. இந்த ஆக்கிரமிப்பு எதிராகப் போராட அவர்கள் தயாரானார்கள். லிபியாவின் மன்னர் செய்ஹ் ஸன்னூஸியின் மன்னரின் மாணவர் உமர் முக்தாரின் போராட்டத்திற்கு முழுமயான ஓத்துழைப்பை வழங்குவதாக இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்கள் உறுதியளித்தார்கள். இதற்காக லிபியாவின் போராட்த்திற்கு ஆதரவளிக்கும் வகையில் சிரியாவில் நிதி திரட்டும் பணிகளை அவர்கள் ஆரம்பித்தார்கள். உஸ்மானிய கிலாபத்தின் ஆதரவும் இதற்காக கிடைத்தது. சிரியாவில் இருந்தே லிபிய விடுதலைப் போராட்ட அமைப்பும் உருவாக்கப்பட்டது. அதற்கான நிதியை திரட்டினார்கள். போராட்டத்திற்கான வெற்றிபாடலும் இமாம் அவர்களாலேயே இயற்றப்பட்டது. அது பின்வரமாறு அமைந்திருக்கிறது. 

" யா றஹீம் யா றஹ்மான்

உன்சுர் மௌலானா அஸ் சுல்தான்

வகுஸ்ர்  ஆதன்னா அல் இத்தாலியான்"

அதாவது 

'அருளாளனே அன்பாளனே எங்கள் இறைவனே எமக்கு வெற்றியை தந்தருள்வாயாக எமது எதிரிகளான இத்தாலியர்களை தேற்கடித்திடுவாயாக'  என்ற வெற்றிப்பாடலால் அரபு இளைஞர்களுக்கு பெரும் உத்வேகமடைநதார்கள். 


1912ம் ஆண்டு ஜூன் மாதம் வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர் இத்தாலியரை எதிர்ததுப் போராடுமாறு லிபியர்களுக்கு அவர் பகிரங்கமாக அழைப்புவிடுத்தார்கள். உஸ்மானிய படை தன்னார்வ முறையில் போராடவந்தவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்கியது. 1919ம் ஆண்டு பிரான்ஸியரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக சிரியாவில் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். பிரான்ஸின் ஆதரவுடன் இயங்கிய அலவியர்களுக்கு எதிராக இமாம் கஸ்ஸாமின் ஜப்லிஹ் படைதாக்குதலை நடத்தியது. இதன்போது தான் பிரான்ஸியர்களுக்கு எதிராக இமாமின் படை கெரில்லா தாக்குதலை முதல் தடவையாக முன்னெடுத்தது. 


1929ம் ஆண்டு பலஸ்தீன் ஷரீஆ நீதிமன்றத்தின் திருமணப்பதிவாளராக நியமிக்கப்பட்டார்கள். பலஸ்தீனில் விவிசாய அமைப்புக்களை கட்டியெழுப்புவதிலும் அயராது உழைத்தார். இஸ்ரேல் -பிரிடிஷ் எதிர்ப்பு இயக்கமான " Black Hand" இயக்கத்தை இமாம் அவர்கள் 1930ம் ஆண்டில் உருவாக்கி ஸியோனிஸர்களுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டார்கள். இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்கள் தனது படைவீரர்களுக்கு, போருக்கு செல்ல முன்னர் காதிரிய்யா வழியமைப்பின் ஆன்மீக வழிகாட்டலை பின்பற்றி திக்ர், ஸலவாத்தில் ஈடுபடுமாறு கட்டளையிட்டார்கள். பலஸ்தீன் மக்களுக்கு சொந்தமான காணிகளில் நிறுவப்பட்டிருந்த சட்டவிரோதக் குடியிருப்புக்கள் மீது இந்தப் படை தாக்குதல் நடத்தியது. ஜெரூஸலத்தின் முப்தி ஹாஜ் முஹம்மத் அமீன் அவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணினார்கள். ஜேர்தானைச் சேர்ந்த காலனித்துவ எதிர்பாளரான மன்னர் ரஷீத் அல்- குசையின் நெருக்கிய ஆதரவும் இமாம் அவர்களுக்கு இருந்தது. 


இமாம் கஸ்ஸாம் அவர்கள் 1935 நவம்பர் மாதம் 20ம் திகதி 52ம் திகதி பிரிடிஷ் பொலிஸாரின் தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்டார்கள். இமாம் அவர்கள் ஷஹீதாக்கப்படதன் பின்னர் டேவிட் பென்கூரியன் என்ற யூதன் இப்படிச் சொன்னான். "முதல் தடவையாக ஒருவர் தனது வாழ்வை அர்ப்பணித்ததை அரபிகள்கண்டுவிட்டார்கள். அரேபியர்களிடம் குறைபாடாக இருந்த தார்மீக உறுதியை இது வழங்கும்" என்றான். யூத சியோனிஸத்திற்கு எதிரான போராட்டத்தில் இமாம் அவர்கள் ஓர் அழியாச்சின்னமாகும். இமாம் அவர்களை கௌரவிக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பின் இராணுவப்பிரிவுக்கு "இஸ்ஸத்தீன் அல்கஸ்ஸாம் படையணி" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஸ்ஸாம் ஏவுகணையும் பலஸ்தீன் போராளிகளால் பயன்படுத்தப்படுகிறது. அல்லாஹ்தஆலா செய்ஹ் இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் அவர்களின் பணிகளை ஏற்றுக்கொள்வானாக, ஆமீன்!


நன்றி - பஸ்ஹான் நவாஸ்


தொகுப்பு: இப்ஹாம் நவாஸ்

NAWAS fb