சூஃபித்துவம் இஸ்லாமிய உலகின் நாகரிகம்.....
இஸ்லாம் மனித நேயத்தையும், பண்பாட்டையும் அதிகம் போதிக்கின்றதோடு , நாகரிகத்தத்துவத்தை அதன் சூஃபித்துவத்தின் வழியே வெளிப்பாடாக்கியது ..
சூஃபித்துவம் என்பது வெரும் ஒரு குழுவினரின் பெயரோ, தனிப்பட்ட கட்சியோ அன்றி அது மில்லத் எனும் பதத்தில் வெளிப்பட்ட தீனுல் இஸ்லாம் என்பதே பிசகற்ற உண்மை .
ஆடைகளை கிழித்து, பரட்டை முடிகளோடு முக்காடுபோடும் அசுத்த நிலையிலிருந்து, தஹாரத்து எனும் முழு நிலை சுத்தத்தின் பக்கம் தன்னை அமர்த்தி, சாதாரண மனிதனின் நிலையை விட அதிக இறை வணக்கத்தில் தன்னை அழித்து, தூய இஸ்லாத்தை அதன் முழு ஆடை ஒழுங்குடன் தந்து , தன் ரப்பிடம் தன்னை முழுவதும் ஒப்படைத்து தன்னிலை மறந்த நிலையில் காணப்படுவதே சூஃபிகள் எனப்படுகின்றனர்.
நாகரிகத்தின் உச்சம் இமாம் ஷாதுலி ரழியல்லாஹு அவர்கள் தனது மாணவர்களுக்கு இஸ்லாத்தை தனது நாகரிக பண்பாட்டிலும், மொழி விழுமியங்களின் அமைதிப்பேச்சிலும், அசத்தலான முகப்பாவனையிலும் காட்டிக்கொடுத்தார்கள்.
இன்று உலக வரலாற்றிலே சபை ஒழுக்கத்தையும் , நாகரிக பண்பாட்டையும், சமூகவியலில் புரட்சியாக செய்துகாட்டிய பெருமை இத்தரீக்காவிற்கு (ஷாதுலிய்யா தரீக்காவிற்கு) உண்டு.
இமாம் ஷாதுலியின் பேச்சு நாகரிகத்திலே ஈர்க்கப்பட்ட பல மொரோக்கோ குடி மக்கள், இத்தரீக்காவிலே உள்வாங்கப்பட்டு, சூஃபி தைக்காக்களில் அவர்களுக்கான இஸ்லாமிய உயர் நிலை பாடசாலைகள் நடாத்தப்பட்டு , முறையான மனித நாகரிக சமூகத்தை கட்டியெழுப்பினார்கள்.
ஏழைகளின் புரவலர் சூஃபி காஜா கரீப் முகையதீன் சிஷ்தி, இவர் இந்திய தெற்காசியவில் சூபித்துவத்தை அறிமுகப்படுத்திய இஸ்லாமிய ஜானி ஆவார், இவர்களின் நாகரீக நடத்தை மற்றும் பேச்சிலே காணப்பட்ட நட்பண்பு நாகரிகத்தின் விளைவு, சுமார் பதினைந்து இலட்சம் ஹிந்து மக்கள் இஸ்லாத்திற்குள்ளே நுழைந்தமை இந்திய சூபித்துவ வரலாறு.
வட இந்திய அஜ்மீரிலே தனது நாகரிக ஈர்ப்பின் காரணம் , தன்னை காண வருகின்ற ஹிந்து மக்களுக்காக , அங்கே சமைக்கின்ற உணவுகளில் இறைச்சி, மீன் போன்ற உணவுகளை சமைக்காது , மரக்கறி உணவுகள் சமைத்து அவர்களை மத நாகரிக நடத்ததையால் நயம் செய்த சூஃபி நாகரிக பண்பு முறை இதுவாகும் .
இன்று வரை அங்கே இறைச்சி மீன் சமைக்கப்படுவதில்லை என்பது வரலாறு.
Ash Shaike Nibras Saqafi
Sri Lanka







