எந்த சூழ்நிலையில் எதற்காக அன்று உருவாக்கினார்கள் எமது முன்னோர்கள் என்பதை காணலாம் வாருங்கள்.
ஆமாம் 19 ஆம் நூற்றாண்டு காலம். அது . இலங்கை இந்தியாவை போர்த்துகீசியர்கள் ஒல்லாந்தர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து அவரவர் மதங்களை திணிப்பு செய்த காலம் அது.
இந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணம் நல்லூரில் டிசம்பர் 18 1822 ஆம் ஆண்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் பிறந்தார். காலப்போக்கில் அவர்கள். சைவமும் தமிழும் என் இரண்டு கண்கள் அவை இரண்டும் ஒலி குன்றாமல் இறுதி வரை காத்து பயன் பெறச் செய்யும் நோக்கை தனது வாழ்நாளில் குறிக்கோளாக கொண்டு முதல் முதலில் வண்ணார் பண்ணை சைவ பிரகாச வித்தியா என்ற பாடசாலையை 1864 இல் ஆரம்பித்தார்.
இவரைத் தொடர்ந்து 1864 செப்டம்பர் 17 ஆம் திகதி கொழும்பில் பிறந்த அனகாரிக தர்மபாலா அவர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கை திருநாட்டில் கிருஸ்தவ மதம் மேலோங்கி இருந்ததை கண்டு புத்த மத நெறிகளை பாதுகாக்க பெளத்த தேசியத்தை நிலை நாட்ட கொழும்பு ஆனந்தா கல்லூரியை உருவாக்கினார்.
இந்த சூழலில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழ் சங்கங்கள் மூலம் நடக்கும் தமிழ் பாடசாலைகளிலும், சிங்கள மொழி பேசும் முஸ்லிம்கள் சிங்கள பாடசாலைகளும் கல்வி கற்கும் நிலை 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது.
இந்த நிலையில் தமிழ் சங்கங்களில் கட்டுண்டு கிடந்த முஸ்லிம்களின் கல்வியை மீட்டெடுக்க,
* ஓராபி பாஷா,
* மு. கா. அறிஞர் சித்தி லெப்பை,
* வாப்பிச்சி மரைக்கார்,
* மாப்பிள்ளை லெப்பை ஆலிம்.
போன்றோர்கள் பல முயற்சிகளை செய்து கொண்டு இருக்கும் போது.
எகிப்து அல் அஸர் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் , அந்த பல்கலைக்கழகத்தின் எம் ஏ பட்டதாரியுமான ( சேக் அப்துல்லா பின் பாதிம் அல் கொமனி )அவர்கள் மார்க்க நெறிமுறைகளை மக்களுக்கு எடுத்துரைக்க கேரளா வந்தார்கள். பிறகு, இலங்கை வந்து இஸ்லாமிய மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துரைத்து கொண்டு இருந்தார்கள்.
அப்போது, இவர்களின் மாணவராக இருந்த சேர் ராசிக் பரீட் அவர்களின் பாட்டனார் பாபுஜி மரைக்கார் அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் கல்வி கலாச்சாரம் மற்றும் தனித்துவம் என்பன பாதுகாக்க பட வேண்டும் என அறிவுரைகளையும், ஆலோசனைகளை எடுத்துரைக்க,
எல்லோரும் இணக்க பாட்டுக்கு வந்து பாடசாலை அமைக்க இடம் தேடிய போது பாபுஜி மரைக்கார் மற்றும் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் போன்றவர்கள் 1840 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மருதானை ஜும்மா பள்ளிவாசல் அமைத்த இடத்திற்கு அருகில் அமைக்கலாம் என ஆலோசனை முன் வைத்தார்கள். இன்றைய கொழும்பு கோட்டை எப்படி வியாபாரிகள் சந்தையாக இருக்கிறதோ! இதேபோல் தான் அன்று அரேபியர்களின் வியாபார சந்தையாக பிரசித்தி பெற்று விளங்கியது மருதானை.
இதன் பிரகாரம் 22 ஆகஸ்ட் மாதம் 1892 ஆம் ஆண்டு கொழும்பு மருதானை சாஹிரா கல்லூரி உருவாக்கப்பட்டது.
8000 மாணவர்கள் கற்கும் இட வசதிகளை கொண்ட சாஹீராவில் இன்று ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கற்பிப்பதால் சிங்கள தமிழ் முஸ்லிம் மாணவர்கள் இங்கு கல்வி கற்கிறார்கள்.
முன்னாள் அமைச்சர் ஏ எச் எம் பெளசி அவர்கள். மற்றும் பாக்கீர் மரைக்கார் அவர்கள் மற்றும் தமிழ் அறிஞர் கார்த்திக் கேசு சிவத்தம்பி மற்றும் தமிழ் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி ஆகியோர்கள் இந்த கல்லூரியின் பழைய மாணவர்களாவார்கள்.
மேலும், இந்த கல்லூரியானது,
* இஸ்லாமிய சங்கம்.
* அறிவியல் சங்கம்.
* வர்த்தக சங்கம்.
* ஆங்கில இலக்கிய சங்கம்.
* சிங்கள இலக்கியச் சங்கம்.
* தமிழ் இலக்கிய சங்கம்.
* ஐக்கியநாடுகள் இளைஞர் சங்கம்.
* தகவல் தொழில்நுட்ப சங்கம்.
போன்ற சங்கங்களின் வழி காட்டலின் பிரகாரம் கொழும்பு மா நகரத்தில் வெற்றி நடை போடுகிறது.