குஞ்சாலி மரிக்கார் .
போர்த்துக்கேயருக்கு எதிராக இலங்கையின் மாயதுன்ன மன்னனுக்கு உதவுவதற்கு, கோரளா ஸமோரின் இராச்சியத்தின் கடற்படைத் தளபதியான குஞ்சாலி மரிக்கார் அவர்கள் இலங்கைக்கு வந்தார். இவர்கள் நாகூர் மீரான் ஸாஹிப் வலீயுல்லாஹ் அவர்களின் மாணவராவார்.
போர்த்துக்கேயருக்கு எதிரான ஒரு யுத்தத்தில் ஷஹீதாக்கப்பட்ட இவர்கள் சிலாபத்தில் அமைந்துள்ள மலே பள்ளிவாசலில் (Mosque Garden) அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். குஞ்சாலி மரிக்கார் அவர்களின் ஸியாரத்தில் அவர்களது பெயர் பொறிக்கப்பட்ட மீதான் கல் நடப்பட்டுள்ளது.
குஞ்சாலி மரிக்கார் அவர்களுடன் போர்த்துக்கேயருக்கு எதிராகப் போராட வந்த மற்றுமொரு தளபதியான அலி இப்ராஹீம் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் போர்த்துக்கேயருக்கு எதிரான யுத்தத்தில் ஷஹீதாக்கப்பட்டு சிலாபம் கடற்கரையோரத்தில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
இலங்கைமுஸ்லீம்களின் பூர்விகத்தை நிரூபிக்கும் இப்படியான ஸியாரங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.