யாருக்கு உள்ளம் உள்ளதோ, அல்லது கவனமாகச் செவியுறுகிறாரோ அவருக்கு இதில் படிப்பினை உள்ளது. (குர்ஆன் 50:37)
பூச்சியியல் என்றால் என்ன?
அறிவியல் பற்றி படித்த நாம் பூச்சியியல் பற்றி படித்திருக்கிறோமா? அல்லது அறிந்துத்தான் வைத்துள்ளோமா? நம்மில் பலர் பூச்சியியல் என்பதை இன்றுத்தான் கேட்டிருப்போம்! ஆம் பூச்சியியல் என்ற அறிவியல் பூச்சிகளைப் பற்றி ஆராயும் படிப்பறிவியலாகும் இதற்கு ஆங்கிலத்தில் என்டாமாலஜி (Entomology) என்று கூறுவர்.
16ம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த பூச்சியியல் இதுவரை உலகில் சுமார் 1.3 மில்லியன் பூச்சி இனங்கள் உள்ளதாக கூறுகிறது. ஆனால் அருள்மறை குர்ஆன்இந்த பூச்சியியலைப் பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன் அதை தெளிவாக விவரித்து உள்ளது வியப்பளிக்கிறது. அப்படி அருள்மறை குர்ஆன் என்னத்தான் கூறுகிறது இது உண்மையா என்பதை நாம் இந்த ஈ என்ற பூச்சியைக் கொண்டு அறியலாம். இதோ அழகிய அறிவுரையுடன் கூடிய ஈ என்ற பூச்சியை மையமாக வைத்து ஒரு சிந்தனை!
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள். (குர்ஆன் 22:73)
மேற்கண்ட வசனத்தில் அப்படி என்னத்தான் விஞ்ஞானம் கொட்டிக் கிடைக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் முட்டாள்தனமாகும் காரணம் இறைவன் அடிக்கடி குர்ஆனை சிந்தியுங்கள் என்று அறிவிப்பு செய்கிறான் எனவே சிந்திக்காத மனிதன் எவ்வாறு அறிவாளியாக இயலும் இதோ சிந்திக்கக்கூடிய வரிகளை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.
- அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர்ஈயைக் கூட படைக்க முடியாது
- ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது
இந்த ஒரு வசனத்தில் 2 வகையான கேள்விகள் அடங்கியுள்ளன. முதல் கேள்வியில் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது அப்படியானால் நம் பார்வையில் காணப்படும் சாதாரண அந்த ஈ எப்படிப்பட்ட படைப்பு சிந்திக்க வேண்டாமா? அந்த ஈ என்ற படைப்பின் கட்டமைப்பை நாம் சிந்திக்க வேண்டாமா? வாருங்கள் ஈயின் படைப்பை பற்றி ஆராய்ச்சி செய்வோம்!
கேள்வி – 1
அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது (குர்ஆன் 22:73)
ஈக்கள் என்றால் என்ன?
ஈக்கள் என்பது பூச்சியியல் துறையில் தலைசிறந்த பூச்சி இனமாகும். பட்டி தொட்டி எங்கும் பரவி பாரீஸ் போன்ற தூய்மையான நகரம் வரை நுழைந்து மக்களை துன்புறுத்தும் ஓர் பூச்சியினம்தான் ஈ. மனிதனின் உடலில் பலவகை நோய்களை உருவாக்கி மனிதனை மரணிக்கச் செய்யும் திறமையும் இந்த ஈக்களுக்கு உண்டு எனவேதான் ஈக்கள் என்றாலே சிலருக்கு ஒவ்வாமை எனும் அலர்ஜி ஏற்படுகிறது.

சராசரி வயதை அடையும் ஈக்கள் சுமார் 4 முதல் 8mm காணப்படுகிறது. இதில் இனப்பெருக்கத்தை அடையும் ஈக்கள் 6.35 mm நீளமும் .012 கிராம் எடையும் இருக்கின்றன. இவைகளின் இறக்கைகளின் நீளம் 13 முதல் 15 mm காணப்படுகிறது. அதாவது உடலைவிட இறக்கைகளின் நீளம் இருமடங்கு அதிகமாக இருப்பதால் அவைகளால் தன் உடலை மிகவும் இலகுவாக கொண்டு பறக்க இயலுகிறது. (சுபுஹானல்லாஹ்)
ஈக்களின் உடல் அமைப்பு
ஈக்களின் உடல் அமைப்பு 3 பாகங்களாக அமைந்துள்ளது.
- தலை
- மார்பு பகுதி
- வயிற்றுப் பகுதி

மார்ப்பு மற்றும் வயிற்றுப்பகுதியை இணைத்தவாறு இறக்கைகளும் ஆறு கால்களும் அமைந்துள்ளன. மேலும் இதன் இறக்கைகள் கண்ணாடி இழைகளைப் போன்று காணப்படுவதால் ஒளி புகும் தன்மையை கொண்டுள்ளது ஆச்சரியப்படவைக்கிறது! (அல்லாஹூ அக்பர்)
ஈக்களின் பாலினம்
ஈக்களில் ஆண் பெண் என்ற இரண்டு பாலினம் காணப்படுகிறது இதை குர்ஆன் மிகத் தெளிவாக கூறுகிறது! இதோ குர்ஆன் வசனம்
நீங்கள் சிந்திப்பதற்காக ஒவ்வொரு பொருளிலும் ஜோடிகளைப் படைத்தோம்.(குர்ஆன் 51:49)


இந்த ஈக்களின் பாலினத்தில் ஆண் ஈக்கள் பெண் ஈக்கள் என்ற இரண்டு ஜோடிகள் இருக்கின்றன. இதிலும் ஒரு வேடிக்கை என்னவெனில் ஆண் ஈக்களை விட பெண் ஈக்கள் சற்று தடிமனாக குண்டாக காணப்படுகிறது. மேலும் பெண் ஈக்களை விட நீள வாக்கில் ஆண் ஈக்கள் குட்டையாக காணப்படுவது வேடிக்கையாக உள்ளது. மேலும் ஈக்களின் கண்களைப் பொருத்தவரை பெண் ஈக்களின் கண்கள் ஆண் ஈக்களின் கண்களைவிட சற்று பருமனாக காணப்படுகிறது இங்கும் மனிதர்களைப் போன்றே பெண் ஈக்கள் தான் ஆண்களைவிட சற்று கூடுதல் அங்க அமைப்புகளை பெற்றுள்ளது.
ஈக்களின் கண்கள்!
ஈக்களுக்கு இரண்டு கண்கள் உள்ளன. இந்த கண்களில் பார்வையை உணரக்கூடிய ஆயிரம் பல்வேறு உறுப்புக்களின் கூட்டமைப்பாக திகழ்கிறது இதனால் இந்த ஈக்கள் ஒரு இடத்திலிருந்தவாறே பல்வேறு கோணங்களில் பார்க்கக்கூடிய திறன் பெற்றுள்ளன அதுமட்டுமின்றி மனிதனின் பார்வைக்கு புலப்படாத இராசயண வர்ணங்களின் கலவைகளை உணரக்கூடியதாக ஈக்களின் பார்வை உள்ளது.

ஈக்களின் கண்கள் ஒரு சிறு அசைவு கூட மிக எளிதாக உணரக்கூடிய வகையில் படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஈக்கள் எளிதில் தங்களது இலக்கை மிக இலவகமாக அடைகின்றன. ஈக்களின் இந்த அபார பார்வைத்திறனால் தங்களது எதிரிகளின் அனைத்து அசைவுகளையும் துள்ளியமாக உணர முடிகிறது. எனவேதான் ஒரு ஈ-யை மனிதர்களாகிய நாம் அடிக்க கையை ஓங்கினாலும் அடிக்க முடிவதில்லை இதைத்தான் அல்லாஹ் சுபுஹானவதாலா கீழ்க்கண்டவாது குர்ஆனில் அழகாக கூறுகிறான்.
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள். (குர்ஆன் 22:73)

கண்களை பாதுகாப்பதில் இந்த ஈக்களுக்கு நிகராக யாருமில்லை எனலாம் ஏனெனில் இந்த ஈக்கள் தங்கள் பார்வையை துள்ளியமாக வைத்திருக்க எந்தவித அழுக்குகளையும் தன் கண்களில் படாதவண்ணம் பார்த்துக் கொள்கின்றன ஒரு வேளை இந்த ஈக்களின் கண்களில் தூசு போன்ற ஏதாவது தொற்றிக் கொண்டால் அதை நீக்குவதற்கென்றே உள்ள முன்னங்கால்களைக் கொண்டு அதன் தூசு படிந்த கண்களை சுத்தம் செய்துக் கொள்கின்றன.
ஈக்களின் கால்கள் அமைப்பு
ஈக்களுக்கு ஆறு கால்கள் உள்ளன.
- முன்னங்கால்கள் (இரண்டு)
- நடுப்பகுதி கால்கள் (இரண்டு)
- பின்னங்கால்கள் (இரண்டு)

கால்களின் விஷேச குணங்களைப் பார்க்கும் போது முன்னங்கால்கள் இரண்டும் தன் தலைப்பகுதியில் உள்ள கண்களில் அவ்வப்போது விழும் தூசித்துகள்களை அப்புறப்படுத்துவதற்கு உதவுகிறது.
கால்களில் சுவை நரம்புகள்
ஈக்களின் கால்களில் ஒருவகை செல்கள் அமைப்பு உள்ளது அவை சுவையை உணரக்கூடிய நரம்புகளுடன் தொடர்புடையது.

ஈக்களின் பின்னங்கால்களில் மயிர் இழைகளில் இந்த செல் அமைப்புகள் காணப்படுவதால் அதில் சுவையை உணரும் சுரப்பித் தன்மை உள்ளது. இதனால்தான் இந்த ஈக்கள் உணவுப் பொருட்களின் மீது அமர்ந்து மெதுவாக நடக்க முற்படுகிறது இதற்கான காரணம் இவைகள் அந்த உணவின் சுவையை அறிய முன் பின்னாக அதன் மீது நடந்து செல்வதால் கால்களில் உள்ள சுவையை உணரும் நரம்புகள் அந்த உணவின் அதிக சுவைப்புத் தன்மையை அந்த ஈக்கு உணர்த்துகிறது. (சுபுஹானல்லாஹ்)
ஈக்களின் கால்களில் உள்ள திரவம்!
ஈக்களின் கால்களில் சுவையை உணரும் நரம்புகள் மட்டும் அல்லாமல் ஒருவகை பசை உள்ள திரவமும் சுரக்கிறது இது சுவரில் தலைகீழாக நிற்பதற்கு பயன்படுகிறது எனவேதான் ஒரு மேசையின் மீது தலைகீழாக தொங்கியவாறு நடந்து செல்கின்றன எனவே ஈ கீழே விழுவதில்லை!
ஈக்களின் இறக்கைகள்
ஈக்களின் மார்புப் பகுதியிலிருந்து அதன் இறக்கைகள் முளைத்து விரிகின்றன. பின்பக்கமாக விரிந்து மடங்கக்கூடிய அமைப்பாக இறக்கைகள் காணப்படுகின்றன.
ஈக்களின் இரண்டு இறக்கைகளுக்கும் இடையில் சிறிய இறக்கை போன்ற தோல்பட்டை அமைப்பு உள்ளது. இந்த அமைப்பானது இறக்கைகளை கட்டுப்படுத்தி வேகமாக பறந்து செல்ல உதவுகிறது.