السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 15 December 2023

நாகூர் மீரான் சாஹிப் அவர்களின் படை

 



கி.பி 1521ஆம் ஆண்டு கோட்டே மன்னன் 6ஆம் விஜயபாகு தனது மூன்று மகன்களின் சதியாலும் அரச மாளிகை வளாகத்தில் கொலைசெய்யப்படுகிறார். இது டவிஜயபாக கொல்லய (විජයබා කොල්ලය) என்று   இலங்கை வரலாற்றில் அறியப்படுகிறது. 

இதனால் கோட்டை  ராஜ்யம் 3 பகுதிகளாகப் பிளவடைந்தது. கோட்டை, சீதாவக, ரைகம என்று மூன்று நிர்வாக அலகுகள் உருவாக்கப்பட்டன.  

1. கோட்டே   நிர்வாகம் - 7வது புவனேக பாகு 
2. சீதாவக்க  நிர்வாகம் - மாயாதுன்னே 
3. ரைகம்    நிர்வாகம் - ரைகம் பண்டார 
ஆகியோர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். 

7வது புவனேகே பாகு போர்த்துக்கேயருடன் நெருங்கிய உறவைப் பேணிவந்தார். மாயதுன்னே போர்த்துக்கேயருடன் பகைமை பாராட்டினார். இந்த சந்தர்ப்பத்தில்  சீதாவக்க ராஜ்யத்தின் மன்னர் மாயாதுன்னே  திடீர் என படையெடுத்து கோட்டை ராஜ்யத்தின் மீது தாக்குதல் நடத்தி கோட்டே ரஜமஹா விஹாரையில் வைக்கப்பட்டிருந்த புத்தபெருமானின் புனித 'தந்த தாது' அல்லது 'புனித பல்' சீதாவக்கவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  புத்தபெருமானின் புனித 'தந்த தாது' அல்லது 'புனித பல்/உடல்பகுதி' எந்த இடத்தில் இருக்குமோ அங்கு தான் ஆட்சி அதிகாரம் அல்லது உத்தியோகபூர்வ ஆட்சி இருக்கும் என்பது நம்பிக்கையாகும். இதனால் அச்சமடைந்த 7வது புவனேக பாகு மன்னன் போர்த்துக்கேயரின் பாதுகாப்பை நாடினார். 

போர்த்துக்கேயரினால் தமதுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று அஞ்சி சீதாவக மன்னன் " தமக்கு உதவி வழங்குமாறு இந்தியாவின் கேரளாவில் இருந்த Zamorians அல்லது சாமுத்திரியர்களுக்கும்  தமிழ்நாட்டின் நாகூரைச் சேர்ந்த செய்ஹ் ஷாஹூல் ஹமீத் மீரான் சாஹிப் ரஹ்மதுல்லாஹ் அவர்களுக்குக்கும் செய்தி அனுப்பப்பட்டது. சாமுத்திரியர்களின் கடற்படைக்குப் பொறுப்பாக இருந்தார் "குன்ஹாலி அல்லது குஞ்சாலி மரைக்காயர்களர்களின் ஆன்மீக வழிகாட்டியாக நாகூர் மீரான் சாஹிப் அவர்களின் ஆதரவும் இலங்கை மன்னன்  மாயாதுன்னேவுக்கு அவசியம் தேவைப்பட்டது. 

நாகூர் மீரான் சாஹிப் அவர்களின் படை இலங்கையின் சிலாபம் பகுதியில் போர்த்துக்கேயக் கப்பல்கள் மீது போர்தொடுத்து அவற்றை அழித்து இலங்கை மன்னனை பாதுகாக்க வழிவகுத்தார்கள் என்பது, வரலாறாகும். 

அவர்களின் படையிலிருந்த வீரர் உயிர்த்தியாகம் செய்து சிலாபம் என்ற பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.அந்த இடம் இன்றும் பாதுகாப்பாக உள்ளது.

நாகூர் மீரான் சாஹிப் றஹ்மதுல்லாஹ் அவர்கள் ஒன்றும் இரண்டோடு மூன்றாவது நபரல்ல மாறாக அவர்கள் இலங்கை சுதந்திரப் போராட்ட வரலாற்றின் முக்கிய சின்னமாகும் அவர்களை இந்தத் தருணத்தில் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் நன்றியுடன் நினைவுகூர்கிறோம் 

ஆதாரம் 

1. Arabic, Arwi and Persian in Sarandib and Tamil Nadu — A study of the Contributions of Sri Lanka and Tamil Nadu to Arabic, Arwi, Persian and Urdu Languages, Literature and Education”.
By Dr.Thaika Shuaib M.A,Phd, PD.D(LIT)

2.PORTUGUESE RULE IN CEYLON 1594- 1612
By by Abeyasinghe, Tikiri

3. KUNJALI MARAKKARS: Myth and Reality
K.J. John

4.Study on Contribution of Kunjali Marakkars for Muslim Identity Preservation in Kerala. 

பஸ்ஹான் நவாஸ்
இலங்கை