கொடி ஏற்றுதல் என்ற சொல் எம்மில் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். அல்லது இன்னும் அவ்வாறான எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்க முடியும். காரணம் அது தொடர்பாக வழங்கப்பட்ட தவறான விளக்கள் மற்றும் புரிதல்களாகும்.
கொடி என்பது ஒரு நிகழ்வை அடையாளப்படுத்துவதைக் குறிக்கிறது.
ஒரு நிகழ்வின் ஆரம்பத்தை அடையாளப்படுத்துவதற்காக கொடியை ஏற்றிவைப்பார்கள். இலங்கையி உட்பட அநேகமான நாடுகளில் ஒரு நிகழ்வு ஆரம்பமாக முன்னர் அடையாளமாக தேசிய கொடியை (National Flag) ஏற்றுவது வழமையாகும்.
பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வின் போது பாடசாலை கொடியை ஏற்றுவது வழக்கமாகும். தேசிய பெருமையை (national pride) அல்லது ஒரு நிகழ்வின் அல்லது ஒரு இடத்தின் பெருமையை குறிப்பதற்காக கொடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு ஆள்புலத்தில் (territory) ஒரு நாட்டின், அல்லது ஒரு கோத்திரத்தின் அல்லது ஒரு நிறுவனத்தின் கொடி ஏற்றப்படுமாயின் அந்த இடம் உரிய நாட்டுக்கோ நபருக்கோ அல்லது இராணுவத்திற்கோ சொந்தமானது என்பது அர்த்தமாகும்.
இஸ்லாமிய வரலாற்றில் பல இடங்களில் கொடியின் முக்கியத்துவம் வலிறுத்தப்பட்டிருக்கிறது. போராட்டமொன்று இடம்பெற்ற வேளையில் ஒரு ஸஹாபி ( பெரும்பாலும் ஜாபர் பின் தையார் றழில்லாஹூ அன்ஹூஅவர்களாக இருக்கவேண்டும்) ஒரு கை வெட்டப்பட்ட போது, அடுத்த கையினால் கொடியை ஏந்துகிறார்கள் அடுத்த கையும் வெட்டப்பட்ட போது கொடி கீழே விழக்கூடாது என்பதற்காக நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டார்கள்.
தொழுகைகான அழைப்பை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று ஸல்லல்லாஹூ அலைஹிவஸ்லம் அவர்களிடம் ஸஹாபாக்கள் பல்வேறு ஆலோசனைகளை முன்மொழிந்தார்கள்.
ஒரு ஸஹாபி தொழுகைகான அழைப்பை கொடியை ஏற்றுவதன் மூலம் மேற்கொள்ளலாமே என்று கேட்டார்கள். அதற்கு இரவுநேரத்தில் மக்களுக்கு தெரிவதற்கான வாய்ப்புக்கிடையாது என்பதனால் அந்த யோசனை நிகரிக்கப்பட்டதாக வரலாற்றில் கற்றிருக்கின்றோம்.
உஸ்மானிய ஆட்சியின் உருவாக்கத்திற்கு வழிவகுத்த 'எர்துகுல் காஸியின்' வரலாற்றைக்குறிக்கும் "Diriliş ertuğrul" என்ற நாடகத்தொடரிலும் சுல்தான் அப்துல் ஹமீத் அவர்களின் சாதனைகளை கூறும் Payitaht: Abdülhamid தொடரிலும் கொடியின் முக்கியத்துவத்தை காணலாம்.
இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும் கொடி ஏற்றுதல் என்ற நிகழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துவந்திருப்பதை அவதானிக்கின்றோம். பள்ளிவாசல்களிலும், தைக்காக்களிலும் இஸ்லாமிய மாதங்கள் ஆரம்பமாகும் அல்லது தலைப்பிறையன்று கொடியை எற்றும் வழக்கம் இருந்துவந்திருக்கிறது. இந்த நிகழ்வு அமல் அன்று மாறாக இதனை சம்பிரதாயமாகவோ வழக்காறாகவோ எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு பள்ளிவாசலில் கொடி ஏற்றப்பட்டிருந்தால் அங்கு விஷேட நிகழ்வுகள் இடம்பெறுகின்றன என்பதை மக்கள் அறிந்துகொள்வர். சிலநேரங்களில் சிக தைக்காக்களுக்கென்று கொடிகள் இருக்கும். அந்த பகுதியில் நிர்வாகம் குறித்த பகுதியில் இருக்கும் தைத்காக்களுக்குச் சொந்தமானது என்பதையே அது அடையாளப்படுத்துகிறது. சில வேளைகளில் ஒரு இடத்தில் அடங்கப்பட்டிருக்கும் நல்லடியார்களுச் சொந்தமானன இடம் என்பதையும் கொடிகள் அடையாளப்படுத்தும் .
அரைக்கம்பத்தில் கொடியை ஏற்றி துக்க தினத்தைக் அனுஷ்டிக்கின்றோம். ஒர் அரசின் (state) ஆரம்பமான மக்கள் கூட்டங்கள் சேர்ந்த கோத்திரங்கள் கூட தமக்கென்று தனியான கொடிகளைப் பயன்படுத்தியிருக்கின்றன.
இலகுவான வரலாறுகளை நவீனம் என்ற பார்வையிலோ வேறு கண்ணோட்டங்களிலோ அவதானிக்க வேண்டியதில்லை. தனிநபர் செய்கின்ற தவறுக்கு பாரம்பரியங்களை குற்றவாளியாக்க முடியாது. ஆள்புலத்தின் அடையாளத்தையும், அதிகாரத்தையும் பெருமையையும் உறுதிப்படுத்துவதற்காகவே இந்த வழக்காறு பேணப்படுகிறது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் "லிவாஉல் ஹம்த்" என்ற கொடியின் கீழ் சேர்த்து வைப்பாயாக என்று எமது கண்ணியம்மிக்க ஆலிம்கள் பிரார்த்திப்பதையும் ஞாபகப்படுத்திக்கொள்கின்றேன்.
நன்றி: பஸ்ஹான் நவாஸ் ( Fazhan Nawas )