அஹ்லுஸ் சுன்னா வல்ஜமாஅஹ் கொள்கை கோட்பாட்டின் தலைவர் இமாம் அபுல்ஹசன் அல் அஷ்அரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்..
இமாமவர்கள் நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பசராவில் ஹிஜ்ரி 260 ல் பிறந்தார்கள்.
இவர்கள் அபூ மூஸா அல் அஷ்அரி என்ற நபித்தோழரின் வழித்தோன்றலில் உதித்த பேரப்பிள்ளையாகும் .
அபூ இம்ரான் மூசா ஜஸூலி அவர்கள் கூறுகின்றார்கள் இமாமவர்கள் மாலிகி மத்ஹபை சேர்ந்தவர் என்று தனது இஹ்திஸார் அல் மபாஹிஸ் அல் அக்லிய்யா எனும் நூளில் குறிப்பிடுகின்றார்.اختصار المباحث العقلية
இமாமவர்கள் அப்பாஸிய பேரரசுக்காலத்தின் பொக்கிஷமாக திகழ்ந்தார்கள் என்பது மட்டுமல்லாமல் علم الكلام (science of discourse) தத்துவவாதி (philosopher) மற்றும் பகுத்தரிவுப்பேச்சு அறிவியலில் பெயர் போனவர்களாக காணப்பட்டார்.
இமாமவர்களின் ஆரம்ப காலத்து போக்கைபற்றி prof கலாநிதி கதீஜா நப்ராவி பிரபல இஸ்லாமிய ஆய்வாளர் கூறுகையில் : இமாமவர்கள் ஸஹாபியின் பேரன் மட்டுமல்லாமல் அவரின் சிறிய தந்தை (stepfather) இரண்டாம் தந்தை அபூ அலி அல் ஜுப்பாஇய்யிடமிருந்து தான் முஃதஸிலா கொள்கையை கற்றவர்கள் என்பது மட்டுமல்லாமல் அக் கொள்கையில் கடல்தொடும் அளவிற்கு உச்சம் தொட்டார்கள் என்று கூருகின்றார்.
மேலும் இமாம் அவர்கள் 40 வருடங்கள் முஃதஸிலா கொள்கையில் இருந்து அவர்களுடைய சேவைகளை அக்கூட்டத்திற்கு நிறைவேற்றி இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகின்றது.
மூன்றாம் நூற்றாண்டிலேயே (உமய்யா கால ஆட்சியின் முடிவில் ) பகுத்தறிவு தலைவிரித்தாட தொடங்கியது.” இஸ்லாமிய உலகில் மூன்றாம் நூற்றாண்டு என்பது மிகவும் குழப்பங்களும் , மதச்சிந்தனைகளும் நிறைந்ததாக காணப்பட்டது’’
ஆயினும் இமாம் அவர்களின் உள்ளத்தில் இக்கொல்கையின் பரிபூரணத்துவம் உள்ளத்தை தொடவில்லை ,இந்த கொள்கை சரியானதா பிழையானதா என்ற சிந்தனை அவ்வப்போது அவரின் மனதில் உலாவந்தது.
அதன் அடிப்படையிலேயே இமாம் அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மூன்று முறை கனவில் கண்டிருக்கின்றார்கள் , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபுல்ஹசனே நீ எனது சுன்னாவிற்கு உதவி செய்ய வேண்டாமா என்ற ஒரு வார்த்தை தான் இமாம் அவர்கள் முஃதஸிலா கொள்கையிலிருந்து பிறிந்து தூய இஸ்லாமிய கொள்கையில் இனைந்து அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஅஹ் என்ற கொள்கையை நிலை நாட்டுவதற்கும் அதன் தலைவராகவும் திகழக் காரணமாயிற்று.
இமாம் இப்னு அஸாகிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகையில்: இமாம் அவர்கள் 15 நாட்கள் பொது மக்களை விட்டும் ஒதுங்கி தமது வீட்டிலே இருந்து நூற்களை ஆராய்ந்து படித்து விட்டு பின்னர் மஸ்ஜிதிற்க்கு சென்று இன்று முதல் நான் நபி صلى الله عليه وسلم அவர்களின் சுன்னாவிற்கு உதவி செய்யப்போகிறேன் அதற்கு நீங்கள் சாட்சியாக இருந்து கொள்ளுங்கள் என்று கூறி நாஸிருஸ் சுன்னா எனும் பெயருக்கு சொந்தக்காரனாக திகழ்ந்தர்கள் .
இமாம் அபுல்ஹசன் அல் அஷ்அரி (ரழி)அவர்கள் முஃதஸிலா கொள்கை தரப்பின் 40 ஆண்டு கால விவாதிப்பாளராக காணப்பட்டவர்கள் பின்பு 50க்கும் மேற்பட்ட கிரந்தங்களை எழுதியுள்ளார்கள், அக்கிரந்தங்கள் அனைத்தும் இல்முல் கலாம் சம்பந்தமான விடயங்கள் மற்றும் இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக எழுந்த சிந்தனைகளுக்கும் பொய்யான கருத்துக்களை திணிப்பவர்கள் போன்றவர்களுக்கும் தக்க பதில் கொடுக்கும் கிரந்தங்களாக தன்னுடைய கிரந்தங்களை அடிப்படையாக ஆக்கிக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
இதிலிருந்து தனது ஆசிரியரான சிறிய தந்தை அலி ஜுப்பாஇயோடு இறைத்தன்மைவியல் தொடர்பான விவாதம் சூடுபிடித்து كسب اختياري எனும் மனித தன்னியல் விவாதம் அக்காலத்து முஃதஸிலா கொள்கையினரை துரத்தியடித்தது (அலி ஜுப்பாஇயின் சாம்ராஜ்யம் ஆட்டம் காணத் தொடங்கியது).
அப்பாஸிய ஆட்சி காலத்தின் இமாமவர்கள் இஸ்லாமிய உலகின் மிகப் பெரும் ஜோதியாக திகழ்ந்தவர்கள் அன்றைய முஃதஸிலா அறிஞர் இப்னு ராவன்திக்கு எதிராக கொடுத்த மறுப்பு கடும் மாற்றத்தை ஏற்படுத்தியது .
கிழக்காசியாவிலும் மேற்கு உலகிலும் மில்லியன் கணக்கில் மக்கள் அன்னாரின் கொள்கைக்கு நுழைந்தார்கள் என்று prof Khatheejah கூறுகின்றார்.
இமாம் ஹாபிழ் பைஹகி, தாரகுத்னி அஸ்செய்யித் அஹ்மத் ரிபாஇ , இப்னு அஸாகிர், சூபிசத்தின் தூன் இஸ் இப்னு அப்திஸ் ஸலாம் , தகிய்யுத்தீன் சுப்கி, ரழியல்லாஹீ அன்ஹும் போன்ற பல மாணவ கடல்களின் ஆசிரியராக காணப்பட்டார்கள் .
இதே நேரம் சென்றல் ஆசியாவில் அபூ மன்சூர் அல் மாதுரீதி ரழி அவர்களும் தனது கொள்கை பதிலெடுப்பை கவாரிஜ் , முஃதஸிலாக்களுக்கு எதிராக படையெடுத்தார்கள்.
அதனால் முஃதஸிலாக்களுக்குல் பிளவு ஏற்பட்டு இபாழிகள் எனப்படுவோர் முஃதஸிலாவை விட்டும் முற்றாக பிரிந்தனர். இவ்விரு இமாம்களையும் பெரும்பான்மையினரான முஸ்லிம்கள் ஏற்று தமக்கு அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅஹ் எனும் பெயரை சூடினார்கள் .
உமய்யாக்காலகட்டத்தில் மறைந்திருந்து மூன்றாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் வெளிவந்த இபாழிய்யா குழுவினர்களுக்கு இமாமவர்கள் கடும் எதிரியாகத் திகழ்ந்தர்கள் .
குறிப்பு: அன்றைய காலத்தில் சுன்னிகள் சுன்னி முஸ்லிம்கள் என்று எமக்கு பெயர் வைக்கப்பட்டதன் காரணம் “வழிகெட்ட கொள்கையினரிடமிருந்து வேறுபடுவதற்காக” ஆனால் தற்போது வஹாபியர்கள் அப்பெயரை தமக்கு வைப்பதே கேலியாகவுள்ளது .
அதனாலேய நாம் அஷ்அரிகள், அஷாஇராக்கள் சுன்னிகள் என்று அழைக்கப்படுகின்றோம் .
Ash Shaik Nibras Saqafi B.A
Srilanka
2023-12-15