துருக்கி பூர்வீக வைத்தியர் மீரா லெப்பை மேஸ்திரியார் செய்ஹ் அப்துல் காதிர் மரிக்கார்.
இலங்கையில் பலநாடுகளை பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம் மக்கள் வசித்துவருகிறார்கள். மௌலானா மார் பெரும்பாலும் ஹழரமிகளாகவும் (யெமன் நாட்டின் ஹழரமௌத் நகரம்) பக்தாதிகளாகவும் (ஈராக் நாட்டின் பக்தாத் நகரம் ) உள்ளனர். அவர்களில் சிலர் தமது பரம்பரையின் விபரங்களை இன்று வரை பாதுகாத்துவருகின்றனர்.
போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்து ஆக்கிரமிப்பை தடுத்து சுதேச மன்னர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக துருக்கியில் இருந்தும் பல படைகள் இலங்கை வந்தனர்.
ஊவா மாகாணத்தின் வெல்லவாய யுத்தத்தின் போது துருக்கியில் இருந்து வந்த சிலர் மன்னரின் படைக்காக யுத்தம் புரிந்து பின்னர் இலங்கையில் தங்கியிருந்தார்கள்.
குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான "பஷீர் சேகு தாவூத்" அவர்களின் தாய் வழிப்பூர்வீகம் துருக்கியாகும். இன்றைய இஸ்தான்பூல் அவரது தாய் வழிப்பூர்வீக ஊராகும்.
புகழ்பெற்ற யூனானி வைத்தியர். இவர் 1806ம் ஆண்டில் பிரித்தானிய உச்சநீதிமன்றத்தின் கீழ் இயங்கிய இலங்கை மருத்துவத் திணைக்களத்தின் Native Superintendent ஆக நியமிக்கப்பட்டார்.
இலங்கையின் அன்றைய ஆளுனர் நாயகம் பிரட்றிக் நேர்த் அவர்களால் அமைக்கப்பட்ட குழுவினால் 1806 ஆகஸ்ட் முதலாம் திகதி எழுதப்பட்ட முஸ்லிம் தனியார் விஷேட சட்டத்தில் இவரும் ஒப்பமிட்டார்.
பிரிதித்தானிய முக்கியஸ்தர்களின் வைத்திய ஆலோசகராகவும் இவர் பணியாற்றினார் என நீதியரசர் sir அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்ட்டன் அவர்கள் பதிவுசெய்துள்ளார்கள்.