சர்வதேச_அரபு_மொழி தினத்தில் புதிய வரலாற்றைச் சொந்தமாக்கிய கேரளா..
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டிக்காடு ஜாமியா நூரிய்யாவில் பயிலும் ஜசீம் செருமுக் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
உலகின் மிக நீளமான குர்ஆன் கையெழுத்து காலிகிராஃபி பிரதி உருவாக்கியதற்காக
Long's hand ridden குர்ஆன் பிரிவில் முஹம்மது ஜசீம் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த முஹம்மது கேப்ரியலின் பெயரில் ஏற்கெனவே இருந்த
700 மீட்டர் என்ற சாதனையை முறியடித்து ஜஸீம் புதிய வரலாறு படைத்துள்ளார்..
அனைத்து பக்கங்களையும் ஒவ்வொன்றாக மடக்கிப் பார்த்தால் 75 செ.மீ உயரம், 34 செ.மீ அகலம், 118.300 கிலோ எடை கொண்டதாக உள்ளது.
செருமுக் மாட்டும்மல் மொய்தீன் ஆசியா தம்பதிகளின் மகன் ஜசீம்.
ஜசீம் எல்லா விஷயங்களிலும் உச்சத்தை அடைய வாழ்த்துவோம்.
உயரங்கள் பல அடைய அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக.. ஆமீன்
தமிழில்:M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி












