السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 20 November 2023

இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம்

 இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் : பலஸ்தீன விடுதலை போராட்டத்தின் முன்னோடிபலஸ்தீன விடுதலைப் போராட்டம் பற்றி முஸ்லிம்கள் அனைவரும் அறிந்திருப்பது அவசியமாகும். புனித மஸ்ஜிதுல் அக்ஸாவை மையப்படுத்தியே இந்த விடுதலைப் போராட்டம் இடம்பெறுகிறது. அல்லாஹ்தஆலா பைதுல்மக்திஸ் பகுதியை அல்குர்ஆனில் புனித பூமியாக அறிவித்திருக்கிறான். புனித பூமியை தாம் பாதுகாப்பதாக அவன் உறுதியளித்திருக்கிறான். மஸ்ஜிதுல் அக்ஸாவை சூழ உள்ள பகுதிகளில் அதிகளவிலான நபிமார்களும் ரசுல்மார்களும் வாழந்திருக்கிறார்கள்....

குஞ்சாலி மரிக்கார்

குஞ்சாலி மரிக்கார் .போர்த்துக்கேயருக்கு எதிராக இலங்கையின் மாயதுன்ன மன்னனுக்கு உதவுவதற்கு,  கோரளா ஸமோரின் இராச்சியத்தின் கடற்படைத் தளபதியான குஞ்சாலி மரிக்கார் அவர்கள் இலங்கைக்கு வந்தார். இவர்கள் நாகூர் மீரான் ஸாஹிப் வலீயுல்லாஹ் அவர்களின் மாணவராவார். போர்த்துக்கேயருக்கு எதிரான ஒரு யுத்தத்தில் ஷஹீதாக்கப்பட்ட இவர்கள் சிலாபத்தில் அமைந்துள்ள மலே  பள்ளிவாசலில் (Mosque Garden) அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். குஞ்சாலி மரிக்கார் அவர்களின்...

Sunday, 19 November 2023

காலி கச்சுவத்தை பள்ளிவாயல்

 காலி கச்சுவத்தை பள்ளிவாசல் இலங்கையின் பழமைவாய்ந்த மரபுரிமை சொத்தாக பிரகடணம் !காலியில் அமைந்துள்ள கச்சுவத்தை பள்ளிவாசல் இலங்கையின் பழமைவாய்ந்த மரபுரிமை சொத்தாக இன்று ஞாயிற்றுக்கிழமை (19/11/2023) பிரகடணப்படுத்தப்பட்டது. தொழில் மற்றும்  வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனூஷ நாணயக்கார அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் போது மேற்படி பள்ளிவாசல் இலங்கையின் பழமைவாய்ந்த மரபுரிமை சொத்தாக பிரகடணம் செய்யப்பட்டது.  இலங்கையில் காணப்படும்...

Saturday, 18 November 2023

அமெரிக்க இரட்டைக்கோபுரத் தாக்குதல் (9/11) முதல் பலஸ்தீனம் வரை!.....

 அமெரிக்க இரட்டைக்கோபுரத் தாக்குதல் (9/11) முதல் பலஸ்தீனம் வரை!.....பகுதி - 01*********9/11 அன்று அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல் நடந்தபோது - இச்சம்பவத்தைத் தொலைநோக்கியில் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கப் பெண் ஒருவர் - கோபுரக்கள் இடிந்து விழத்தொடங்கிய போது - அதனைக் கண்டு நடனமாடத் தொடங்கிய ஒரு குழுவைக் அவதானித்தார். அவர்கள் இந்நிகழ்வால மகிழ்ச்சியடைந்திருந்ததோடு கோபுரங்கள் எரிவதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டுமிருந்ததை கண்டார்.அந்த...

Wednesday, 15 November 2023

சேர் முகம்மது மாக்கான் மாக்கார்

 சேர் முஹம்மத் மாகான் மாகார் அவர்களும் பேராதனைப் பல்கலைக்கழக பள்ளிவாசலும்  சேர் முஹம்மத் மகான் மாகார் இலங்கையின் புகழ்பெற்ற மாணிக்கக்கல் வர்த்தகர். கொழும்பு வெஸ்லி கல்லூரியில் பாடசாலைக் கல்வியைப் பூர்த்திசெய்தார். பின்னர் குடும்ப வர்த்தகமான மாணிக்கக் கல் வர்த்தகத்தில் ஈடுபட்டார். இவரது மாணிக்கக் கல் வர்த்தகம் பிரித்தானிய அரசகுடும்பத்திலும், உஸ்மானிய கிலாபத்திலும் பிரபலம்பெற்றிருந்தது. 1909ம் ஆண்டில் பிரித்தானிய மன்னர் 7ம் எட்வர் அவர்களால்...

Tuesday, 14 November 2023

அப்துல் கபூர் ஹாஜி இலங்கை

 அல் ஹாஜ் என் டீ எச் அப்துல் கபூர் அவர்கள்அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பெடல்பியா நகரில் சர்வதேச மாணிக்கக் கல் கண்காட்சி நடைபெறும் காலப் பகுதி 1925ம் ஆணடு அனைவரும் என் டீ எச் அவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.மிகவும் பெருமதிவாய்ந்த மாணிக்கக் கல் அவரிடம் இருக்கிறதாம் என்று பேசிக்கொண்டார்கள். ஆமாம் விலைமதிப்பற்ற நீலநிற மாணிக்கல்லை Blue sapphire ஏலத்தில் விற்பனை செய்து தாய்நாட்டுக்கு பெரும் அண்ண்ணியச் செலாவணியுடன் திரும்புகிறார்....

Sunday, 12 November 2023

அபூதர் ரலியல்லாஹ்

 ஹிஜ்ரீ 32ஆம் ஆண்டு. உடல் நலமின்றி வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்தார் அபூதர். அருகில் அவருடைய மனைவி விம்மியவாறு அமர்ந்திருந்தார். “மரணம் அனைவருக்கும் வந்தே தீரும். பிறகு எதற்கு அழுகிறாய்?” என்றார் அபூதர். “தனிமையில் யாருமற்ற பாலைவனத்தில் மரணத்தைத் தழுவ இருக்கின்றீர்கள்; உங்களுடைய இறுதிச் சடங்கை நிறைவேற்ற எந்தத் துணையும் உதவியும் இல்லை; உங்களது பிரேதத்தை மூடும் அளவிற்குக்கூட நம்மிடம் துணியில்லை. நான் எப்படி அழாமல் இருக்க முடியும்?” அதைக்...

இஸ்லாமிய உச்சி மாநாடு

 இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமையத்தின் உச்சி மாநாடு அரசியல் முக்கியத்துவமற்ற ஒரு கூடிக் கலைதல் மட்டுமா? காஸா இனப்படுகொலை மற்றும் இனச்சம்ஹாரம் குறித்து ஆராய்ந்து உடனடித் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு நேற்றைய தினம் ஒன்றுகூடிய இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமையமும் அறபு லீக்கும் எந்த உருப்படியான தீர்மானமும் இல்லாமலேயே கலைந்து சென்றுள்ளமை எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. காரணம் ஒன்றுக்கொன்று முரண்பட்ட அரசியல் ராஜதந்திர நோக்கம் கொண்ட நாடுகள் கூடி ஒரேவகைப்பட்ட...

Friday, 10 November 2023

கொழும்பு சாஹிரா கல்லூரி

  எந்த சூழ்நிலையில் எதற்காக அன்று உருவாக்கினார்கள் எமது முன்னோர்கள் என்பதை காணலாம் வாருங்கள்.ஆமாம் 19 ஆம் நூற்றாண்டு காலம். அது . இலங்கை இந்தியாவை போர்த்துகீசியர்கள் ஒல்லாந்தர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து அவரவர் மதங்களை திணிப்பு செய்த காலம் அது. இந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணம் நல்லூரில் டிசம்பர் 18 1822 ஆம் ஆண்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் பிறந்தார். காலப்போக்கில் அவர்கள்.  சைவமும் தமிழும் என் இரண்டு கண்கள் அவை இரண்டும் ஒலி...

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!

🔴நியூஸிலாந்தில்  500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!தமிழகத்தின் தொன்மைத்துறை முகமாம் நாகப்பட்டினத்திற்கும் நியூஸிலாந்துக்கும் என்ன உறவு? New Zeeland தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!அதனை கைகளால் தொட்டுத் தூக்கிப் பார்க்க எமக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது அதுவும் கையுறை அணிந்து கொண்டு இந்த மணியின் வயது?-15ம் நூற்றுண்டுக்கும்...

Thursday, 9 November 2023

Pension-ஓய்வூதியத்தை முதல் முதலில் ஏற்படுத்தியது

 Pension-ஓய்வூதியத்தை முதல் முதலில் ஏற்படுத்தியது ஜெர்மானியர்கள் அல்ல. மாறாக அமீருல் முஃமினீன் உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் தாம்.ஒரு நாள் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மதீனாவிலுள்ள சந்தையைக் கடந்து சென்றார்கள். அப்போது வயதான  தோல்சுருங்கிய ஒருவர் மக்களிடம் யாசகம் கேட்பதைப் பார்த்தார்கள்.உமர்(ரழி) அவர்கள் அவரிடம் சென்று நீங்கள் யார் என்று கேட்டார்கள்? அதற்கு அந்த வயதான மனிதர் சொன்னார், நான் வயதான ஒரு யூதகுடும்பத்தை சேர்ந்தவன். ...

Tuesday, 7 November 2023

மஸ்ஜிதில் நபவி பள்ளிவாசலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது எப்படி?

 மஸ்ஜிதில் நபவி பள்ளிவாசலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது எப்படி?இஸ்லாமிய நாடுகளில் முதல் முதலில் மின்சாரம் வழங்கப்பட்ட இடம் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களை அடக்கம் செய்யப்பட்ட மஸ்ஜிதுல் நபவி பள்ளி வாசலாகும். இதற்கும் ஒரு வரலாறு உண்டு.அதாவது, துருக்கியில் அமைந்துள்ள உஸ்மானியா அரச மாளிகைக்கு மின்சாரம் வழங்க ஜெர்மன் நாட்டை சேர்ந்த மின் பொறியாளர்கள் வருகை தந்தார்கள். அப்போது ஆட்சியில் இருந்த இரண்டாம் சுல்தான் அப்துல் ஹமீது அவர்கள் சொன்னார்கள் எனது...

Monday, 6 November 2023

முற்றாக அழித்த பலஸ்தீன போராளிகள்

 98 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த படைகாவி கவசவாகனத்தை ஒன்றரை இலட்சம் பெறுமதி கொண்ட ரொக்கட்டைப் பயன்படுத்தி முற்றாக அழித்த பலஸ்தீனப் போராளிகள்காலாற்படை வீரர்களை யுத்த களத்துக்கு நகர்த்தும் முழுமையாக மூடப்பட்ட 'PANTHER' கவசவாகனமொன்றின் விலை மூன்று மில்லியன் டொலர்களாகும் (இலங்கை விலை 98 கோடி ரூபா). உலகத்தில் காணப்படும் மிகப் பாதுகாப்பான படைகாவி கவசவாகனங்களில் ஒன்றாக PANTHER படைகாவி கருதப்படுகிறது. அமெரிக்கத் தயாரிப்பான இந்த கவசவாகனத்தை 2019...