السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 19 January 2024

பிறந்த குழந்தையின் காதில் அதான் சொல்வது பித்அத்தா?

 

#பிறந்த_குழந்தையின்_ஒரு_காதில் #பாங்கும்_மற்றொரு_காதில்_இகாமத்தும் #கொடுப்பது_பித்அத்தா....? 


நூற்றாண்டுகளாக உலக முஸ்லிம்கள் புண்ணிய காரியமாக செய்து வரும் அமல்தான்  பிறந்தவுடன் குழந்தையின் காதுகளில் பாங்கும், இகாமத்தும் கொடுப்பது


இது நான்கு மத்ஹபுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, 

அங்கீகரிக்கப்பட்ட ஒரு 

உன்னதமான செயலாகும்.


வஹாபிகளுக்கு இது ஒரு பித்அத்தான காரியமாக இருக்கிறது... 


பித்அத் ஒழிப்பு மாநாடு நடத்த இருப்பவர்கள் முஸ்லிம்கள் சாதாரணமாக செய்து வரும் நல்ல அமல்கள் ஒவ்வொன்றையும் பித்அத்தின் பட்டியலில் சேர்த்து வருகின்றனர்.. 


பிறந்த குழந்தையின் காதுகளில் பாங்கு, இகாமத் கொடுப்பதில் மார்க்கம் அங்கீகாரம் வழங்குகிறதா என்பது குறித்து பார்ப்போம்.


இமாம் திர்மிதி அபூ ராஃபியிலிருந்து  அறிவிக்கப்படும் ஹதீஸில் இவ்வாறு பார்க்க முடியும்..


"பாத்திமா பீவி (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் ஹசன் மற்றும் ஹுஸைன் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரைப் பிரசவித்த போது நபியவர்கள் இரு குழந்தைகளின் காதில் பாங்கு கொடுப்பதை நான் கண்டேன்."


பிறகு இமாம் திர்மிதி அவர்கள் இந்த ஹதீஸ் ஹஸனும் மற்றும் ஸஹீஹ் என்றும் கூறுகிறார்கள்.


 1514 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالاَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللهِ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَةِ.

 هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ


இந்த ஹதீஸை இமாம் அஹ்மத் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) முஸ்னதிலும் (27186), இமாம் அபூதாவூத் ஸுனனிலும் (5105), இமாம் தப்ரானி முஃஜமுல் குப்ராவிலும் (926), இமாம் ஹாக்கீம் முஸ்தத்ரக்கிலும் (4827) 

மற்றும் இமாம் பைஹக்கி (8252) 

ஷுஃபுல் ஈமானிலும் (8252)  அறிவித்துள்ளனர். .  

இன்னும் பல முஹத்திஸுகள் அவர்களின் நூல்களில் இந்த ஹதீஸை மேற்கோள் காட்டியுள்ளார்கள்... 


இத்தகைய ஹதீஸ்களின் வெளிச்சத்தில் தான் பிறந்த குழந்தையின் காதுகளில் பாங்கும், இகாமத்தும் கொடுப்பது சுன்னத் என்று கடந்த கால  நூற்றுக்கணக்கான  இமாம்கள் தங்களது கிரந்தங்களில் பதிவு செய்துள்ளனர். 


இவர்கள் ஒன்றும் பார்க்காத ளயீஃபும், பித்அத்தும் வஹாபிகளுக்கு எங்கிருந்து கிடைத்தது.. 


இமாம் திர்மிதியை தவிர இன்னும் கூடுதலாக, இந்த ஹதீஸை முஹத்திஸுகளான  இமாம் ஹாக்கீம் முஸ்தத்ரக்கிலும், 

இமாம் அப்துல் ஹக் அஹ்காமிலும், 

இமாம் பகவி அவர்கள் மஸாபிஹுஸ்ஸுன்னாவிலும் (3/146), இமாம் இப்னு மாலிக் ஷர்ஹுல் மஸாபிஹுலும்  (4/ 533) 

இமாம் முள்ஹிரி அல் மஃபாத்தீஹிலும்

(4/595)  இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி துஹ்ஃபத்துல் முஹ்தாஜிலும் (9/376)  பதிவு செய்துள்ளனர்.. 


இமாம் திர்மிதி மேற்கூறிய  ஹதீஸ் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று அறிவித்துள்ளதை மற்று பல இமாம்கள்  தங்கள் புத்தகங்களில் ஒப்புதல் அளித்துள்ளனர்.


 சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

*************************************************


1. الأذكار للإمام النووي (286)

2. البدر المنير للإمام ابن الملقن (9/ 348)

3. مشكاة المصابيح للإمام الخطيب الشربيني  (2/ 1209) 

4. ميزان الاعتدال للحافظ الذهبي (2/ 354)

5. ذخائر العقبى في مناقب ذوي القربى للإمام محب الدين الطبري (120)

6. مرقاة المفاتيح شرح مشكاة المصابيح للإمام ملا علي القاري (7/ 2691)

7. أسنى المطالب في شرح روض الطالب للإمام زكريا الأنصاري (1/ 549)

8. الغرر البهية في ش رح البهجة الوردية للإمام زكريا الأنصاري (5/ 173)

9. فتح الوهاب بشرح منهج الطلاب للإمام زكريا الأنصاري (2/ 234)

10. حدائق الأنوار ومطالع الأسرار في سيرة النبي المختار للإمام بحرق الحضرمي (508)

11. تاريخ الخميس في أحوال أنفس النفيس للإمام حسين الدِّيار بَكْري (1/ 418)

12. كفاية النبيه في شرح التنبيه للإمام الرفعة (8/ 132)

13. كنز الراغبين للإمام المحلي (4/ 257)

14. حاشية الجمل على شرح للإمام الجمل (5/ 267)

15. حاشية البجيرمي على شرح المنهج للإمام البجيرمي (4/ 303)

16. الوابل الصيب من الكلم الطيب لإبن قيم الجوزية (ص: 131)

17. مواهب الجليل في شرح مختصر خليل للإمام الحطاب الرُّعيني المالكي (1/ 434)

18. شرح منتهى الإرادات للإمام منصور البهوتي الحنبلي(1/ 130)

19. كشاف القناع عن متن الإقناع للإمام منصور البهوتي الحنبلي  (1/ 234)


இந்த பழங்கால அறிஞர்கள் அனைவரும் திர்மிதி ஹஸன் என்றும் ஸஹீஹ் என்றும் சொல்லியதை அங்கீகரித்தும்,சரி வைத்தும் உள்ளனர்

இவர்கள் அத்தனை பேரையும் வெளிக் காலால் உதைத்துதான் பித்அத் ஒழிப்பு பிரசுரத்தில் இந்த செயலை பித்அத்தின் பட்டியலில் சேர்த்துள்ளனர்.... 


 

திர்மிதியின் ஹதீஸ் பலவீனமானதா......?


திர்மிதியின் மேற்கூறப்பட்ட ஹதீஸின் அறிவிப்பாளரில் ஆஸிமுப்னு வாயில் என்ற ராவியை சிலர் ஜர்ஹ் செய்வதால் இந்த ஹதீஸின் ஏற்றுக்கொள்ளும் தன்மை பாதிக்கப்படாது. 


இமாம் இப்னுல் முலக்கின் கூறுகிறார்கள்:


ஆஸிமுப்னு வாயில் என்ற ஒரு அறிவிப்பாளர் இருந்த போதிலும் இந்த ஹதீஸ் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று முஹத்திஸ்கள் கூறியது அநேகமாக இந்த ஹதீஸ் அவர்களுக்கு வேறு அறிவிப்புகள் மூலம் நிறுவப்பட்டிருக்கலாம்.

(அல்-பத்ருல்-முனீர் 9/348)


ஸலஃபி அறிஞரான அல்லாமா முபாரக் ஃபுரி மேலும் தெளிவுபடுத்துகிறார்கள்


ஆஸிமுப்னு வாயில் என்ற  ஒரு அறிவிப்பாளரின் ஜர்ஹ் இமாம் இப்னுஸ்-ஸுன்னி ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மூலம் அறிவித்த ரிவாயத் கொண்டு பரிகரிக்கப்பட்டுவிட்டது 

(துஹ்ஃபத்துல் அஹ்வதி 5/90).

இனி இந்த ஹதீஸ் பலவீனமானது என்று நிலைநாட்டினால் கூட ஃபழாயிலுல் அஃமாலில் ளயீஃபான ஹதீஸைக் கொண்டு அமல் செய்வதில் பிரச்சினை இல்லை என்பது அறிஞர் உலகில் சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவப்பட்டுள்ள விஷயமாகும்.. 


இமாம் இப்னுல் ஸுன்னி ரிவாயத்: இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கு குழந்தை பிறந்தால், அவர் வலது காதில் பாங்கையும் இடது காதில் இகாமத்தையும் கொடுக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்தால், குழந்தையைத் தொட்டு ஜின்களின் தீவினைகள்

உயர்த்தப்படும்.


இமாம் இப்னுஸ்ஸுன்னி அமலுல்யவ்மி வல்லைலிலும் (578) இமாம் பைஹக்கி ஷுஃபுல் ஈமானிலும் (8254) 

மற்றும் பல முஹத்திஸுகள் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவித்துள்ளனர். 


இமாம் உமரு இப்னு அப்துல் அஜீஸ் (ரலி) அவர்கள் குழந்தையின் காதில் பாங்கு கொடுத்து இருக்கிறார்கள்.. 


ஐந்தாவது கலீஃபாவாகப் புகழ் பெற்ற மாபெரும் அறிஞரும், ஆட்சியாளரும், அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்லடியாருமான உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரலி) அவர்கள் குழந்தை பிறந்ததும் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் கொடுப்பவர்களாக இருந்தார்கள்.. 


டஜன் கணக்கான இமாம்கள் தங்கள் நூல்களில் இந்த மகத்தான காரியத்தை மேற்கோள் காட்டியுள்ளனர்.


இமாம் இப்னு முலக்கின் (ரஹ்மத்துல்லாஹி) அவர்கள் கூறுவதை பாருங்கள்: இந்த நிகழ்வை நமது தோழர்கள் தங்கள் புத்தகங்களில் முத்தவாத்திரான வடிவில் விவரித்துள்ளனர்.


And in Al-Badder Al-Munir to Imam Ibn Al-Mullaqn (9/350): وَذكر فِيهِ عَن عَن عَن عَبد الْعَزِيز - رَحْمَة الله عَلَيْهِ - أَنه كَانَ إِذا ولد لَهُ ابْن اذنهِ فِي أُذُنهِ الْيُمْنَى وَأقَام فِي الْيُسْرَى.  واصحابنا يتواترون عَلَى نقل هَذَا عَنهُ,


நான்கு மத்ஹபுகளின் நூல்களிலும் குழந்தையின் காதில் பாங்கு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


 *ஷாஃபி மத்ஹப்*


இமாம் நவவி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) கூறுகிறார்கள்: குழந்தை பிறந்தால் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பாங்கு கொடுப்பது சுன்னத்தாகும். 

அபூ ராஃபியி, மற்றும் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ்கள் தான் இதற்கு ஆதாரம், 

அது மட்டுமின்றி உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இப்படி பாங்கு  கொடுத்ததையும் நமது அஸ்ஹாபுகள் பதிவு செய்துள்ளனர்.


  وفي المجموع شرح المهذب (8/ 442): السُّنَّةُ أَنْ يُؤَذَّنَ فِي أُذُنِ الْمَوْلُودِ عِنْدَ وِلَادَتِهِ ذَكَرًا كَانَ أَوْ أُنْثَى وَيَكُونُ الْأَذَانُ بِلَفْظِ أَذَانِ الصَّلَاةِ لِحَدِيثِ أَبِي رَافِعٍ الَّذِي ذَكَرَهُ الْمُصَنِّفُ قَالَ جَمَاعَةٌ مِنْ أَصْحَابِنَا يُسْتَحَبُّ أَنْ يُؤَذِّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى وَيُقِيمَ الصَّلَاةَ فِي أُذُنِهِ الْيُسْرَى  وَقَدْ رَوَيْنَا فِي كِتَابِ ابْنِ السُّنِّيِّ عَنْ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ (قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ وُلِدَ لَهُ مَوْلُودٌ فَأَذَّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى وَأَقَامَ فِي أُذُنِهِ الْيُسْرَى لَمْ تَضُرَّهُ أُمُّ الصِّبْيَانِ) وَأُمُّ الصِّبْيَانِ التَّابِعَةُ مِنْ الْجِنِّ وَنَقَلَ أَصْحَابُنَا مِثْلَ هَذَا الْحَدِيثِ عَنْ فِعْلِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ رَحِمَهُ اللَّهُ


இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி கூறுகிறார்கள்: குழந்தையின் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் கொடுப்பது சுன்னத்தான காரியமாகும். 

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹஸன் (ரஹ்) அவர்களின் காதில் பாங்கு கொடுத்தார்கள் என்ற  ஹஸனான ஹதீஸ் தான் இதற்கு ஆதாரம்.. 

துஹ்ஃபத்துல் முஹ்தாஜ் (9/ 376)


 وفي تحفة المحتاج في شرح المنهاج للإمام ابن حجر الهيتمي (9/ 376)  (وَ) يُسَنُّ أَنْ (يُؤَذَّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى) ثُمَّ يُقَامُ فِي الْيُسْرَى (حِينَ يُولَدُ) لِلْخَبَرِ الْحَسَنِ «أَنَّهُ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَذَّنَ فِي أُذُنِ الْحُسَيْنِ حِينَ وُلِدَ »


 *ஹனபி மத்ஹப்*


 وفي الدر المختار وحاشية ابن عابدين (1/ 385): مَطْلَبٌ فِي الْمَوَاضِعِ الَّتِي يُنْدَبُ لَهَا الْأَذَانُ فِي غَيْرِ الصَّلَاةِ...وَفِي حَاشِيَةِ الْبَحْرِ الرَّمْلِيِّ: رَأَيْت فِي كُتُبِ الشَّافِعِيَّةِ أَنَّهُ قَدْ يُسَنُّ الْأَذَانُ لِغَيْرِ الصَّلَاةِ، كَمَا فِي أَذَانِ الْمَوْلُودِ، وَالْمَهْمُومِ، وَالْمَصْرُوعِ، .....أَقُولُ: وَلَا بُعْدَ فِيهِ عِنْدَنَا.  اهـ.  أَيْ لِأَنَّ مَا صَحَّ فِيهِ الْخَبَرُ بِلَا مُعَارِضٍ فَهُوَ مَذْهَبٌ لِلْمُجْتَهِدِ وَإِنْ لَمْ يُنَصَّ عَلَيْهِ، لِمَا قَدَّمْنَاهُ فِي الْخُطْبَةِ عَنْ الْحَافِظِ ابْنِ عَبْدِ الْبَرِّ وَالْعَارِفِ الشَّعْرَانِيِّ عَنْ كُلٍّ مِنْ الْأَئِمَّةِ الْأَرْبَعَةِ أَنَّهُ قَالَ: إذَا صَحَّ الْحَدِيثُ فَهُوَ مَذْهَبِي، عَلَى أَنَّهُ فِي فَضَائِلِ الْأَعْمَالِ يَجُوزُ الْعَمَلُ بِالْحَدِيثِ الضَّعِيفِ


 *மாலிகி மத்ஹப்*


 وفي مواهب الجليل في شرح مختصر خليل للإمام الحطاب الرُّعيني المالكي (1/ 434):  قَالَ جَمَاعَةٌ مِنْ أَصْحَابِنَا: يُسْتَحَبُّ أَنْ يُؤَذِّنَ فِي أُذُنِ الصَّبِيِّ الْيُمْنَى، وَيُقِيمَ الصَّلَاةَ فِي أُذُنِهِ الْأُخْرَى، وَقَدْ رَوَيْنَا فِي سُنَنِ أَبِي دَاوُد وَالتِّرْمِذِيِّ عَنْ أَبِي رَافِعٍ، قَالَ: رَأَيْت رَسُولَ اللَّه - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - «أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَاةِ» قَالَ التِّرْمِذِيُّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَرَوَيْنَا فِي كِتَابَ ابْنِ السُّنِّيِّ عَنْ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ - رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .

 (قُلْتُ) وَقَدْ جَرَى عَمَلُ النَّاسِ بِذَلِكَ فَلَا بَأْسَ بِالْعَمَلِ بِهِ وَاَللَّهُ َعْلَمَ


 *ஹம்பலி மத்ஹப்*


وفي كشاف القناع عن متن الإقناع للإمام منصور البهوتي الحنبلي (3/ 28): (وَ) سُنَّ أَنْ (يُؤَذَّنَ فِي أُذُنِ الْمَوْلُودِ الْيُمْنَى) ذَكَرًا كَانَ أَوْ أُنْثَى (حِينَ يُولَدُ، وَ) أَنْ (يُقِيمَ فِي الْيُسْرَى) لِحَدِيثِ أَبِي رَافِعٍ قَالَ «رَأَيْت رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ» رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَاهُ وَعَنْ الْحَسَنِ بْنِ عَلِيٍّ مَرْفُوعًا «مَنْ وُلِدَ لَهُ مَوْلُودٌ فَأَذَّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى وَأَقَامَ فِي أُذُنِهِ الْيُسْرَى رُفِعَتْ عَنْهُ أُمُّ الصِّبْيَانِ» وَعَنْ ابْنِ عَبَّاسٍ «أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ يَوْمَ وُلِدَ وَأَقَامَ فِي أُذُنِهِ الْيُسْرَى» رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي الشُّعَبِ وَقَالَ وَفِي إسْنَادِهِمَا ضَعْفٌ.


இப்னுல்-கய்யிம் அவர்கள் கூறுகிறார்கள்: 

பாங்கு கொடுப்பது  சுன்னத்தான காரியமாகும்.. 


வஹாபிகள் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இப்னுல் கய்யூம் அவர்கள் தனது துஹ்ஃபத்துல் மவ்தூத் என்ற நூலில் குழந்தை பிறந்தவுடன் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் கொடுப்பது சுன்னத் என்று ஒரு அத்தியாயம் கொடுக்கிறார்.  

இமாம் திர்மிதியின் ஹதீஸ் உட்பட 3 ஹதீஸ்கள் இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார். 

பின்னர் பாங்கு கொடுப்பதின்  நன்மைகளும் விவரிக்கிறார்.. 


சி.பி உமர் சுல்லமிக்கு இது பித்அத் இல்லை.. 


கேரள வஹாபிகளின் தலைவர் பதவி அலங்கரிகத்த சி.பி.உமர் சுல்லமி அவர்கள் நித்ய ஜீவிதத்தில் பிரார்த்தனைகள் என்ற புத்தகத்தில் "குழந்தை பிறந்தால்" என்ற அத்தியாயத்தில் எழுதுவதைப் பார்க்கவும்:

"நபி (ஸல்) அவர்களின் மகள் பாத்திமா பீவி (ரழியல்லாஹு அன்ஹா) ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பெற்றெடுத்தபோது, ​​நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக அழைப்பு விடுப்பது போல் குழந்தையின் காதில் பாங்கு கொடுத்தார்கள்  (அபூதாவூத், திர்மிதி)


அஹ்லுல் சுன்னாவின் ஆரம்பகால அறிஞர்கள் மற்றும் ஆரம்பகால வஹாபிகளின் தலைவர்களால் புனிதமான செயலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பாங்கு கொடுக்கும் செயலை பித்அத்தாக ஆக்குவதற்கு வஹாபிகள் எந்த ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று தெரியவில்லை.... 


பி.பி.  உவைஸ் அதனி கேரளா

தமிழில்: M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி