السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 23 January 2024

பாபர் மஸ்ஜித் முழு வரலாறு


 1524-ல் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் அபோதையை டில்லி நாட்டு மன்னரான #இப்ராஹிம்லோடி ஆவார். அவர் அப்பணியை ஏனோ தொடரவில்லை. பின்னர், கிபி 1526-ல் முதலாம் #பானிபட் போரில், இப்ராஹிம் லோடியைக்கொன்றுவிட்டு டில்லி சாம்ராஜ்ஜியத்தை கைப்பற்றிய #காபூல் நாட்டு மன்னர் #பாபர்...காபூல், டில்லி, பாடலிபுத்திரம் (பாட்னா) வரை விரிந்து பரந்த முகலாய சாம்ராஜ்ஜியத்தின் முதல் மன்னராகிரார். 


(சங்கிகளின் 'அகண்ட் பாரத்'தில் காபூலும் பாரதத்தின் ஒரு பகுதிதான். ஆகவே, இப்ராஹிம் லோடியை போல... பாபரும் பாரதத்தின் தவப்புத்தல்வன்தான்) 


பின்னர், 1528-ல் அயோத்தி வந்த #மீர்பாஹி எனும் முஹலாய படைத்தளபதி... அந்த அடித்தளத்தின் மீது மசூதியை மேற்கொண்டு கட்டி டூம்கள் கொண்ட கூரைகள் அமைத்து பூர்த்தியாக்கிய பாபரின் தளபதி மீர்பாஹி... மஸ்ஜிதுக்கு பாபர் பெயரை வைத்தார். எனவே 'ராமர் கோவிலை பாபர் இடித்தார்' என்று சங்கிகள் கூறியது உலகமகா பெரும்பொய் என்பது, இதன் மூலமும் தெள்ளத்தெளிவாகிறது.


அப்படின்னா...

■★◆●

'இப்ராஹீம் லோடிதான் ராமர் கோயிலை இடித்தார்' என்றல்லவா பிரச்சினையை இந்த காவிக்கும்பல் கிளப்பி இருக்க வேண்டும்..?


"ஆஹா..! பாபர் பெயரில் மசூதி. எனவே அவர்தான் இடித்திருப்பார்." என்று புளுகு மூட்டையை அவசரப்பட்டு அவிழ்த்துவிட்டது பட்டவர்த்தனமாக இங்கே தெரிகிறது.


"அப்போது வரலாறு தெரியாம தப்பா உளறிட்டோம்... இப்போது சொல்றோம்... இப்ராஹீம் லோடிதார் இடித்தார்" என்று மீண்டும் இன்னொரு புளுகு மூட்டையை அவிழ்த்தார்களானால்..? ஹி...ஹி... இதற்கும் பதில் உள்ளது..!


ராமர் கோவில் இடிபட பாபரோ-லோடியோ அவசியமில்லை. ராமர் கோவில் என்ற ஒன்றுதானே மிக முக்கியம்..?


அப்படின்னா...  

■★◆●

1500களில் அயோத்தியில் இராமர் கோவில் என ஒன்று இருந்ததா..?


இராமர் கோவிலைக்கட்டிய விக்கிரமாதித்தன் யார் என்பதைப் பற்றி பலவறாக சங்கிகள் முரண்பட்டுக்கூறுகிறார்கள். கோவிலைக்கட்டியது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பது ஐயம் இன்றி அடுத்து நிரூபணம் ஆகிறது.


குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதிகளை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படுகின்றனர். கோயிலை கட்டிய விக்கிரமாதித்தன் யார் என்கிற குறிப்புகள் சங்கிகளிடம் இல்லை.


கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. #இந்திய_தொல்பொருள்_இலாகா-வின் தலைவர் #பி_பி_லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வறிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட்டிலும் வெளியிடப்பட்டது.


இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த கி.பி. 300 - 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்ததில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.


‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது எவரும் ஏற்றுக்கொள்ள இயலாத பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர்/லோடி எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து சகோதரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்..!


பொதுவாக...

ராமருக்கு கோவில்  என்ற ஒன்றை எப்போது கட்டுவார்கள்..? 

ராமர் என்ற ஒருவரை கடவுளாக அறிந்த பிறகுதானே..?


அப்படின்னா...

■★◆●

மக்கள் மத்தியில் இராமர் கடவுளாகக்கருதப்பட்டது எப்போது..?


இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இன்று இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300 முதல் 1100 வரையிலான குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராக கருதப்படவில்லை. இதனை... கி.பி. ஆறாம் நூற்றாண்டில் #அமரசிம்ஹ என்பவர் ‘#அமரகோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக்களஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாக கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக்காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.


#லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.


குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை..?


அதுபோல்...  #எஸ்எஸ்ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.


ஐ.ஏ.எஸ் அதிகாரியான #ராமச்சந்திரகத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.


அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.


கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் எவராலும் நம்ப முடியுமா..?


இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ்கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கிருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பார்ப்பனப்பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் சமஸ்கிருதம் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக்கருதப்படவில்லை.


மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் #துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் #இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் #இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.


அப்படின்னா...

■★◆●

துளசிதாசர் காலம் என்ன..?


எந்தக்காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாக சங்கிகள் பொய் கூறுகிறார்களோ...

எந்தக்காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, 

அதே காலத்தில் தான் துளசிதாசரும் வாழ்கிறார். 

அதுவும் எங்கே..? 

அயோத்தியில்தான் வாழ்கிறார்..! 

கிபி.1500-களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார்.

 அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.


இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை என்பதும், இந்து மக்கள் அவரைப்பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பதும் இதன் மூலம் தெளிவாக உறுதியாகிறது.


இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்


அப்படின்னா...

■★◆●

பதினாறாம் நூற்றாண்டில் ராமர் கோவில் இருந்ததா..?


இந்தியாவில் முதல் துணை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். #ராதாகிருஷ்ணன். இவரது மகன் #சர்வபள்ளிகோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.


இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் "கி.பி. 1750-க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவிலும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே" எனத்திடமாக அறிவிக்கிறார்.


200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528-ல் இல்லாத இராமர்கோவிலை பாபரோ அல்லது வேறு எவருமோ எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.


இன்னும் சொல்வதாக இருந்தால்...


அயோத்தியில், அதுவும் பாபர் மஸ்ஜித் கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.


அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட அயோத்தி இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை. இப்போது இத்தனையில் இது ஒன்றுதான் என்பது ஏன்..?


1930 களில் சங்பரிவாரம் இந்த புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் அயோத்தியில் நிலைமை.


எனவே, மக்களின் வெறியைக்கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று சதித்திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள் சங்கிகள்.


இந்து சமுதாய மக்களே..! 

இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம்..! 

பொய்களை பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களை புறக்கணிப்போம்..!


அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்..? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு. 

குர்ஆன் -2:114  


நம்பிக்கை கொண்டோரே..! 

பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்..! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்..! 

குர்ஆன் -2:153


■★◆●


இதுவரை நீங்கள் வாசித்தவை....

2011ல் வெளியிட்ட வலைப்பூ பதிவின் பாதிதான்.

இன்னும் பல வரலாற்று தகவல்களுடன் முழுவதும் வாசிக்க விரும்பினால்...

https://pinnoottavaathi.blogspot.com/2011/12/blog-post_05.html


பகிர்வு