தொடர் 01
#முதலாவது விஷயம்
நாம் ஒரு கருத்தை மறுக்கிறோம் என்றால் அக்கருத்தின் விஷயத்தில் உறுதியான தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டுமே தவிர இன்னொரு கருத்துக்கு இடம்பாடு இருக்கக் கூடாது..அப்படி இருந்தால் தான் நம் கொள்கையில் கருத்தில் நிலையாக இருக்கலாம்..
அதாவது نص ظني الدلالة #நஸ்ஸு_ழன்னித்_தலாலா
அதாவது ஒரு கருத்தை தரும் ஆனால் அக்கருத்துக்கு வலிந்துரை செய்ய இடம்பாடு உண்டு மட்டுமல்ல எந்த கருத்து சொல்லப்பட்டதோ அக்கருத்தை விட்டும் வேறு ஒரு கருத்தின் பக்கம் திருப்பப்பட்டு அக்கருத்தையே நாடப்படும்..இதற்குத்தான் #நஸ்ஸு_ழன்னித்_தலாலா_என்று
نص ظني الدلالة
சொல்லப்படும்..
இதே போல் தான் நீங்கள் பதிவு செய்திருக்கும் குறிப்பிட்ட ஹதீஸ் விஷயம்..அதாவது #ழயீபான பலஹீனமான ஹதீஸ் மறுக்கப்பட வேண்டியது,அதை ஒரு பொழுதுமே ஏற்றுக்கொள்ள முடியாது என்ற சட்டம் #உஸுலுல்_ஹதீஸ்ல இருக்குமாக இருந்தால் தாராளமாக நீங்கள் மேற்குறித்த ஹதீஸை இப்படி பதிவு செய்து தள்ளி இருக்கலாம்...
ஆனால் இங்க விஷயமே வேற அதாவது நீங்க ஏதோ அவசரத்தில் எழுதி பதிவேற்றி விட்டீர்கள் என நினைக்கிறேன்..என்ன என்றால் அதாவது
فن المناظرة
என்று #விவாதக்_கலை என்ற ஒரு கலை உண்டு..குறிப்பாக
مناظرة رشيدية
என்ற ஒரு கிதாப் உண்டு.இலங்கையில் உள்ள அரபிக் கலாசாலையில் எந்த கல்லூரியிலும் இது பாடத்திட்டத்தில் இல்லை..பெரும்பான்மையான உலமாக்கள் ஓதி இருக்கவும் மாட்டார்கள்..
நீங்கள் விரும்பினால் இதை உங்களுக்கு நான் படிச்சித் தருகிறேன்..ஏன்னா இதை பிசகர அறிய படித்துள்ளேன் அல்ஹம்துலில்லாஹ்...இது #மன்திக் எனும் தர்க்கவியல் கலையில் தான் அடங்கும்.அங்கு
#முனாழரா ( مناظرة ) #முஜாதலா ( مجادلة) #முகாபரா (مكابرة ) பற்றிப் பேசுவார்கள்..அதுல தான் #முனாழரா_ரஷீதிய்யா_அடங்கும்...
இதில் நீங்கள் #முஜாதலா_எனும் ( مجادلة ) நிலையைக் கொண்டவர்..இருந்த போதிலும் ஏனையவர்கள் விளங்கிக்கொள்ளட்டுமே என்ற நல் எண்ணத்தில் தொடர்கிறேன்...
இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் நீங்கள் பதிவு செய்ததில் கீழே நிழற்படத்தை தருகிறேன் குறிப்பாக 3 இமாம்களின் கருத்தை கொண்டு வந்திருக்கிரீர்கள்...
தர்க்கவியல் கலை நுனுக்கத்தில் உள்ள சூத்திரம் அப்படி பிடி கொடுத்து மாட்டிக்கொள்ளக்கூடாது.மெதுவா நம்மட கருத்தைச் சொல்லி விட்டு நகர்ந்து விட வேண்டும்..அப்ப தான் நாம நம்மட கருத்துல பயணிக்கலாம்...
நீங்க அறியாத்தனமாக பதிவு செய்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்..
1- அல் ஹாபிழ் இமாம் நவவி ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய அல் அத்கார் ஐ பதிவு செய்தது..
2- அல் ஹாபிழ் இமாம் பைஹகீ ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய ஷுஃபுல் ஈமானை பதிவு செய்தது.
3- விஷேடமாக ஹதீஸ் கலையில் அமீருல் முஃமினீன் பட்டம் பெற்ற அல் ஹாபிழ் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய குறிப்பிட்ட ஹதீஸ் இடம் பெற்றுள்ளது என்று விஷேடமாக அவர்களின்
تبيين العجب بما ورد في شهر رجب
#தப்யீனுல்_அஜப்_பிமா_வரத_பீஃ_ஷஹ்ரி_ரஜப் என்ற கிதாபையும் சேர்த்து வலுப்படுத்தியது..குறிப்பாக இந்த 3 இமாம்களின் கருத்து இது என்று பதிவு செய்யாமல் உங்களுக்கு விட இருந்திச்சி...ஏன்னா அங்க தான் ஆப்பு..
பதிவை நீட்டாமல் கட்டம் கட்டமாக தொடரும்..குறிப்பிட்டு ஓர் இரண்டு தொடரில் விஷயத்தை முடிச்சிடுவன் இன்ஷா அல்லாஹ்...ஏன்னா ஹதீஸ் கலை #உஸுலுல்_ஹதீஸ்_அல்லவா கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விளக்கனும்...
அடுத்த தொடரில் ஹதீஸ் கலைக்குள் போய்ரலாம்...
மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி
ஏறாவூர்
+94 77 444 77 57