السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday 13 October 2018

புனித ரபீவுல் அவ்வல் புகழ்ப்பா

Eravuryoosuf


தாஹா ரஸூலே
திங்கள் ஹபீபே
மதீனத்து மன்னரே
மஹ்மூது மா நபியே
விண் போற்றும் விந்தையரே
மண் தேடும் மதி ஒளியே
ஏழை ஏங்கி அழைத்திடும்
எழில் ஓங்கும் ஏந்தலரே!

1) ஆமினாவின் அருள் மகவே
தாங்கள் மலர்ந்த திரு நாளில்
தரிசனம் யாசிக்கும்
தங்களின் அடிமையின்
பாவப் பிழை பொறுத்து
ஏற்றிடுவீர் யாநபியே
வாடி நிற்கும் பாவியை
பாருமிந்த வேளையிலே

2) முத்து முஹம்மதரே!
முழு மதி தாங்களே!
அகிலத்தில் உதித்தீரே!
அழியாத ஒளி விளக்காய்!
ரஹ்மானின் புண்ணிய
நேசராய் வந்துதித்தீர்
ரஹ்மதுல்லில் ஆலமீனாய்
ஆலத்தில் அவதரித்தீர்

3) மாந்தர் குலத்தை வையகத்தில்
வாழச் செய்த மஹ்மூதே
விண் மீனும் கண் சிமிட்ட
புவி மீதில் ஜனித்தீரே
விண்ணவரும் மண்ணவரும்
வியந்து போற்றும் பேரழகே
காண ஏங்கும் உள்ளங்களில்
வீற்றிருக்கும் பேரரசே

4) கண்மணி நாயகமே
கல்பின் கறை நீங்கவே
காட்சி தருவீர் அஹ்மதரே
புண்ணிய மாதமிதில்
வான் மதியும் நாணி நிற்கும்
வையகத்தின் பேரொளியே
வருக வருக வருகவே
வசந்தத்தின் திரு நாளில்

*கவி:* நிப்லா இம்தியாஸ், முஅஸ்கருர் ரஹ்மான் அரபிக் கல்லூரி, கஹடோவிட்ட, இலங்கை