இறப்பு உண்டு என்பது,இறையடியார்கள் நன்கு அறிந்த ஒன்று என்றாலும் திடீர் மரணம் வந்துவிடக் கூடாது என்பது குறித்து அண்ணல் நபி(ஸல்) அவர்களும் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
எங்கிருக்கும் போது இறப்பு எப்படி வரும் என்பதை இறைவனே அறிவான்.எனினும் "அழகிய முடிவு"க்காக நாம் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
ஒருவரின் இறப்பு எப்படி நேர்ந்தாலும் அதன் ரகசியத்தையும் மதிப்பையும் அறிந்தவன் அல்லாஹ்வே.
சற்றும் எதிர்பாராத தருணத்திலே மரணம் வந்தாலும் கூட இறைவனை நினைத்து அவனுடைய திருப்பெயர் கூறி அல்லது கலிமாவை (இஸ்லாத்தின் மூல முதல் உறுதிமொழியை)முழங்கி இறப்பை எதிர்கொள்வது என்பது சாதாரணமான செய்தி அல்ல.இதற்கு வாழ்வு முழுவதும் மனப்பயிற்சி பெற்றிருந்தால்தான் இது வாய்க்கும்.அதற்கு அல்லாஹ்வின் அருளும் வேண்டும்.வரலாற்றில் இந்தப் பேறுபெற்ற பலரை நாம் காண்கிறோம்.
அதனால்தான் தக்கலை ஞானி பீரப்பா அவர்கள் இதுபற்றிய தம் கவலையை இப்படி வெளிப்படுத்தினார்கள்:
"......
நிலையா உலகைவிட்டே உயிர்செல்லும் நேரத்திலுன்
'கலிமா'வை நெஞ்சுள் கலங்காமல்தா என்'ஹக்'கானவனே ...!
இந்தோனேசிய விமானவிபத்தின் போது விமானத்தில் இருந்த ஏறத்தாழ எல்லாரும் இப்படி இறுதியாகக் கூறுவதைக் காட்டும் காணொளியை கண்டபோது ஏற்பட்ட எண்ணங்களே மேற்கண்டவாறு பதிவானது.
சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் செய்வானாக.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் ....
Yembal Thajammul Mohammad FB Friend