السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 10 October 2018

நபி ﷺ அவர்களுக்கு நிழல் கிடையாது



Eravur Yoosuf
 *நபி ﷺ அவர்களுக்கு நிழல் கிடையாது*

*ظل ظل ظلت ظل الظل لا ظل له*
*ظلا ظليلا ظلل الغمام بالمظال ظال*

         (நாயகமே ஒளிமயமான தங்களுடைய) எதார்த்தத்தின் (அஸலின்) நிழலாக (பிரதியாக) ஆகிவிட்டீர்கள். (அந்த) எதார்த்தத்தின் நிழலாகிறது அதற்கு அறவே (சூரிய ஒளியில்) நிழலில்லை. (தாங்களுக்கு) மேகம் குடைப்பிடித்து நேர்த்தியான நிழலைத் தந்தது. (தாங்களோ எங்களுக்கு நாளை மறுமையில் *லிவாஉல் ஹம்து புகழ் கொடி* என்ற) கண்ணியம் மிகு குடையால் நிழல் தரக்கூடியவர்களாகும்.

           - *உமர் வலிய்யுல் காஹிரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்*

      *والذي بعثني بالحق بشيرا لم يعلم حقيقتي غير ربي*

          *உண்மையாகவே என்னை நன்மாராயம் சொல்வோனாக அனுப்பி வைத்தவனின் மீது சத்தியமிட்டு சொல்கிறேன். என் எதார்த்தத்தை என் ரப்பைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.*

(குர்ரத்துல் அலிப் 24)

            என்று தாங்கள் கூறி இருக்கிறீர்கள். ஆகவே தாங்கள் எங்களுக்கு தாங்களுடைய யதார்த்தத்தின் பிரதியைத்தான் காட்டியிருக்கிறீர்கள். மேலும் தாங்கள் இறைவனின் பிரதிபிம்பமானதால்தான் சூரிய ஒளியில் கூட தாங்களுக்கு நிழல் இல்லாமல் ஆகிவிட்டது. தாங்களுடைய நிழல் இம்மண்ணில்பட்டு அதை மற்றவர் மிதிப்பது தாங்களின் கண்ணியத்திற்கு உகந்ததல்ல என்பதால் தான் வல்ல ரஹ்மான் தாங்களுக்கு நிழலையே இல்லாமலாக்கி விட்டான். சூரிய வெப்பம் தாங்கள் மேல் படாமலிருக்க மேகமே தாங்களுக்கு குடைப் பிடித்திருக்கிறது. ஆனால் தாங்களோ எங்களுக்காக மறுமையில் *لواء الحمد புகழ் கொடி* என்ற குடையால் நிழல் தருவீர்கள்.

குறிப்பு : *ظل الظل என்பதற்கு அகிலத்தையே அரவணைத்துக் காக்கும் அருளாளர்* என்றும் பிரிதொரு பொருள் உண்டு.

         *عن ذكوان رضي الله عنه أن رسول الله صلى الله عليه و سلم لم يكن يري له ظل في شمس و لاقمر*
الخصائص ج ۱ ص ٦٨)

         நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு சூரிய ஒளியிலும் சந்திர ஒளியிலும் நிழலில்லை என்பதாக *தக்வான் (ரலியல்லாஹு அன்ஹு)* அவர்கள் அறிவிக்கிறார்கள்.

        *قال ابن سبع من خصائصه أن ظله كان لا يقع على الأرض و أنه كان نورا فكان إذا مشي في الشمس أو القمر لا ينظر له ظل*
 (الخصائص ص 68)

              மேலும் நிச்சயமாக நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நிழல் நிலத்தில் விழுவதில்லை. ஏனெனில், அவர்கள் ஒளியாக இருந்தார்கள். எனவே அவர்கள் சூரிய ஒளியில் நடந்தாலும் அல்லது சந்திர ஒளியில் நடந்தாலும் அவர்களின் நிழலைக் காணமுடியாது. இது அவர்களின் விசேட தன்மைகளில் ஒன்றாகும் என *இப்னு ஸபஃ (ரலியல்லாஹு அன்ஹு)* அவர்கள்
அறிவிக்கிறார்கள்

 (கஸாஇஸுல் குப்ரா பாகம் 01 பக்கம் 68)

🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹

பகிர்வு : *யாஸீனிய் மௌலவிகள் பேரவை.*

🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻