السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday 27 October 2018

ஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி

ladies arabic college eravur
ஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி செய்தவர்கள்  முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்....

ஆனால், அவர்களது வீட்டிலோ வறுமை.

ஜகாத் (தர்மம்) பொருட்கள், அரசு கஜானாவில் வந்து குவியும்.
இல்லையென்று வருவோர்க்கு "இதோ இந்த ஒட்டகத்தை ஓட்டிச் செல்", என்று சொல்லுமளவுக்கு அரசின் நிதி நிலை அமோக வளர்ச்சியில் இருந்த காலத்திலும் கூட,

 ஜனாதிபதியின் வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அடுப்பு பற்ற வைக்க இயலாத அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 2567)

கோதுமை மாவை, சல்லடை செய்து பயன்படுத்த இயலாத அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 5413)

அந்த மாவை கூட தண்ணீர் ஊற்றி பிசைந்து சாப்பிட வேண்டிய அளவிலான கொடிய வறுமை.
(ஆதாரம் புஹாரி 5413)

வயிற்றில் கல்லை நிரப்பிக் கொண்டு பசியாற்றினார்.

பசியின் கொடுமையால் இரவில் இரவில் தூக்கமின்றி அமர்ந்திருந்த வறுமை.

(ஆதாரம் முஸ்லிம் 3799)

உடுத்திய‌ உடைக்கு மாற்று உடை இல்லை என்கிற அளவிற்கு வறுமை.
உடுத்திருக்கும் உடை கூட, வெறும் இரு போர்வைகள்.. (ஆதாரம் புஹாரி 3108)

ஒரு முறை சால்வையொன்றை நபிகள் நாயகத்திற்கு ஒருவர் பரிசளிக்கிறார், நபிகள் நாயகமோ, இதை நான் என் கீழாடையாக பயன்படுத்திக் கொள்கிறேனே என்று அதை அவ்வாறே பயன்படுத்துகிறார்கள்.

போர்வையை வேட்டியாக பயன்படுத்துகின்ற அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 1277)


அவர் ஒரு போதும் தட்டில் வைத்து உணவு உண்டது கிடையாது. துணியை விரித்து அதில் தான் உணவை வைத்து உண்டிருக்கிறார்கள்.
(ஆதாரம் புஹாரி 5386)

இரவில் படுத்துத் தூங்குவதற்கும், பகலில் அதையே முன் வாசல் கதவாய் பயன்படுத்துவதற்கும் தான் பாய் வைத்திருந்தார்கள்.
(ஆதாரம் புஹாரி 730)

தோலினால் ஆன தலையணையை பயன்படுத்தினார்கள்.
(ஆதாரம் புஹாரி 6456)

ஒருவர் படுத்திருந்தால் இன்னொருவரால் நின்று தொழுகை செய்ய இயலாது. அந்த அளவிற்கு சிறிய குடிசையில் தான் நபிகள் நாயகம் வசித்தார்கள். (ஆதாரம் புஹாரி 382)

மேற்கூரை கூட இல்லாத வீட்டில் வசித்தார்கள். அவர்கள் எழுந்து நின்றால் வெளியில் இருப்பவர்களால் அவரது தலையை காண முடியும் (ஆதாரம் புஹாரி 729)


நாமெல்லாம் கற்பனையில் கூட நினைத்து பார்த்திராத ஏழ்மை.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுபவித்த வறுமையில் 100 ஒரு பங்கினை நாம் இன்றைக்கு அனுபவிக்கிறோமா?

இன்று, பிளாட்ஃபாரத்தில் பிச்சையெடுப்பவனை தான் நாம் பரம ஏழை என்போம்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை, இன்றைக்கு நாம் கருதுகின்ற பரம ஏழையை விடவும் கீழ் நிலையில் தான் இருந்தது என்பதை நம்மால் ஜீரணிக்க இயலுகின்றதா?

இத்தனைக்கும் அப்போது அவர்கள் மன்னர்.
நாட்டுக்கே ஜனாதிபதி.
போர்ப்படை தளபதி..
மார்க்க அறிஞர்.
இறைவனால் நியமிக்கப்பட்ட இறைத் தூதர்,
சமுதாயத்தை நன்னெறிப்படுத்த வந்த புரட்சியாளர்,

என பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட மாமனிதராக அவர்கள்  திகழ்ந்தார்.

ஆக‌,
வறுமையிலும் நேர்மை.
வறுமையிலும் ஒழுக்கம்.
வறுமையிலும் வீரம்
வறுமையிலும் நீதி தவறாத நல்லாட்சி
வறுமையிலும் சுய மரியாதை
வறுமையிலும் மிகப்பெரும் புரட்சி..!

நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா??

எண்ணும் போதே உடலெல்லாம் சிலிர்க்கிறது..

மைக்கேல் ஹார்ட் என்கிற கிறித்தவ பாதிரியார், உலகில் மாற்றம் உருவாக்கிய நூறு பேரின் வாழ்வை அலசி, 'The Hundred' என்கிற நூலை வரைந்தார்.
அதில் முதல் இடத்தை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கே வழங்கினார்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாமெல்லாம் கற்பனையிலும் எண்ணிராத ஓர் உத்தம மனிதர்...!

அல் பத்ர் வாட்ஸ்அப் குழுமத்தில் இருந்து.......


 ஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி