السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday 27 October 2018

ரபியுல் அவ்வல் வசந்தத்தின் வசந்தம் ரஹ்மத் நபி பிறந்த மாதம்

ரபியுல் அவ்வல்



ஆப்ரஹாவின் யானைச்சண்டை நடை பெற்று 50 நாட்களுக்கு பின்னர் 12 ம் திகதி கி.பி 571 ஏப்ரல் 20 ம் திகதி திங்கட் கிழமை காலை நேரத்தில் ஆமினா அம்மையாருக்கும் அப்துல்லாஹ் என்பவருக்கும் அருமைப் புதல்வராக அண்ணல் நபி அவர்கள் பிறந்தார்கள்.

பிறக்கும் போதே தந்தையை இழந்து விட்ட முஹம்மது நபியவர்கள் பிறந்த செய்திப பாட்டனார் அப்துல் முத்தலிபின் காதுக்கு எட்டியதும் அவர் அடைந்த சந்தோசத்திற்கு அளவில்லை. உடனே அவர் வந்து குழந்தையை அணைத்து தன் மடியில் அமர்த்தி முத்தமிட்டு நேராக கஃபதுல்லாவிற்கு கொண்டு போய் வலம் வந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்.

உலகத்தின் உயர்தரமான சிந்தனையின் சிகரமான உத்தமக் குழந்தை தாயிடத்திலும் துவைபா அன்னையிடத்திலும் அமூதட்டப்பட்டது. பிறந்து ஏழாம் நாள் அரபு நாட்டின் வழமைப்படி அப்துல் முத்தலிப் தமது வம்சத்தினருக்கு பெரிய விருந்தொன்றை ஏற்படுத்தி அந்த சபையில் முஹம்மத் என்ற பெயரைச் சூட்டினார். அரபு நாட்டின் பெரிய குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு பக்கத்து கிராமத்திலுள்ள செவிலித் தாய்மார்களிடம் பாலூட்டி வளர்க்கும்படி ஒப்படைப்பது வழக்கமாக வழக்கமாக இருந்தது.

இரண்டு ஆண்டுகள் தங்களிடம் தரப்படும் குழந்தைகளை சிறப்பாக வளர்த்து உரியவர்களிடம் ஒப்படைத்து ஊதியங்களைப் பெற்றுக் கொள்வார்கள். இத்தகைய அமைப்புக்கமைய பனிஸஅத் வம்ஸத்தை சேரந்த ஹலீமா அம்மையாரிடம் பாலூட்ட முஹம்மத் அவர்களை ஒப்படைத்தார்கள். அத்தகைய செவிலித்தாய் ஹலீமா அம்மையார் எப்படியான கட்டத்தில் குழந்தையை பெற்றுக் கொண்டார்கள் என்பதைப் பார்ப்போம்.

ஹலீமா அம்மையார் கதைப்பது காதுக்கு கேட்கிறது. மக்காவிலுள்ள செல்வச்சீமான்களிடம் பிள்ளைகளைக் கொண்டுவந்து பால் கொடுத்து பராமரிக்கலாம் என்று ஊரை விட்டு கிளம்பி வந்தேன். நடுவழியில் எனது கோவேறு கழுதை களைத்து விட்டது. அங்கு அதிக நேரம் தாமதமாகிவிட்டேன். அப்போது சிறிய தூக்கம் ஆட்கொண்டது. அதிலொரு கணவு,பழங்கள் நிறைந்திருந்த ஒரு மரம் அதன் கீழ் நான் இருக்கின்றேன். என்னைச்சுற்றி பனீஸஅத் வம்சப் பெண்களும் இருக்கின்றனர்.அதிசயமாக அம்மரத்திலிருந்து ஒரு பேரிச்சம் பழம் என் வாயில் விழுகின்றது.

அக்கனியின் இனிமை சுவையானது. நீண்ட நேரம் என்நாவில் அக்கனி சுவைபடுவதை நான் கண்டேன். ஞாயிற்றுக்கிழமை நாள் என்னை அறியாது விடை பெற்று திங்கட்கிழமை மக்காவுக்குப் போய்ச் சேர்ந்தேன். எனக்கு முன்பதாகவே பனீஸஅத் கோத்திரப் பெண்கள் சென்று அங்குள்ள செல்வந்தர்களின் செல்வக் குழந்தைகளை வளர்ப்பதற்கு பாரமெடுத்து மிகக் களிப்போடு சென்று விட்டனர். இன்னும் எனக்கு ஒரு குழந்தை கிடைக்க வில்லை. நான் பல நாட்கள் தங்கியிருந்தும் குழந்தையொன்று கைக்குக் கிடைக்கவில்லை.மனசு வருத்தத்திலேயே தோய்ந்து கிடந்தது. அப்போது ஒரு பெறியவர் என்னிடம் வருகிறார். ஒரு குழந்தையை பாரமெடுக்க யாராவது பெண்கள் உண்டா? எனக் கேட்கின்றார். நூன் வந்தவரின் பெயரைக் கேட்டடேன். வாய் நிறைய அப்துல் முத்தலிப் என உதித்தார்.

“நான் உன்னிடம் ஒரு அநாதைக் குழந்தையை கையளிக்கப் போகிறேன். பனுஸஅத் கோத்திரப் பெண்களிடம் அநாதைக் குழந்தையைப் பாரம்கொடுக்கப் பார்த்தேன் .அவர்கள் அநாதகை; குழந்தையை எடுத்தால் பணம் கிடைக்காதென பதிலூரைத்துப் போய்விட்டார்கள். நீங்கள் அக்குழந்தையை ஒப்புக்கொள்ளலாமா? ஏன அன்புடன் கேட்டுக் கொண்டார் அப்துல் முத்தலிப் தனது கணவருடன் ஆலோசனை நடத்தினார்கள் ஹலீமா அம்மையார். கணவனும் இசைந்தார். ஆனால் ஹலீமாவின் சகோதரியின் மகன் மாத்திரம் மறுத்தான். பனுஸஅத் பெண்கள் எல்லாம் பெரிய இடத்துப் பிள்ளைகளையெல்லாம் அழைத்துச் சென்று கை கை நிறையப் பணம் எடுக்கும் போது நீங்கள் மட்டும் ஏன் அநாதைப் பிள்ளையை எடுக்க வேண்டுமென அடம்பிடித்தார்.

ஹீமாவின் நாவில் வந்த கருணையான பதிலிலின் மூலம் அக்கா மகனும் தக்க சமயத்தில் மௌனித்தான். அப்துல் முத்தலிப் அவர்களுடன் வீட்டுக்குச் சென்று முஹம்மத் எனும் குழந்தையை பாரமெடுத்து ஊருக்கு திரும்பினேன். ஹலீமாவின் வீட்டில் குழந்தை வளர்கிறது எல்லா குழந்தைகளை விடவும் அதியசமான வளர்ச்சி. குழந்தைப் பராயத்தில் அதியசயமான பல நிகழ்வுகள் இடம்பெற்றன.குழந்தையை பாரமெடுத்த நாள் முதல் ஹலீமா நாயகியின் வீட்டில் இருந்த கஷ்டங்களும் துன்பங்களும் காற்றுடன் கைகோர்த்தன. செல்வம் பெருகியத. வீட்டில் இருந்த மந்தைகளின் மடிகளெல்லாம் பல சுமந்தன. ஹலீமா நாயகியின் அகமும் மலர்ந்தன.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அழகென ஒளிரும் முஹம்மதை () ஹலீமா நாயகி மக்காவுக்கு எடுத்துச் சென்று தாயார் ஆமினாவிடமும் பாட்டனார் அப்துல் முத்தலிபிடமும் காண்பிப்பார்கள். இரண்டு வயதானதும் பால் கொடுப்பதை நிறுத்தி மக்காவுக்கு தாயிடத்தில் ஒப்படைக்க வந்தார்கள். குழந்தை ஆரோக்கியமாக இருப்பதைக்கண்டு  சந்தோசப் பட்ட தாயார் மக்காவின் காலநிலை சீராக இல்லாததனால் குழந்தை ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். என நினைத்து குழந்தையை திருப்பிக் கொண்டு சென்று ஹலீமாவின் வீட்டிலேயே வளர்க்கும் படியும் சில காலம் சென்று மகளை திருப்பி அழைத்துக் கொள்வதாகவும் சொல்லி ஆமினா அம்மைளயார் அனுப்பி வைத்தார்கள். அண்ணல் நபியவர்களுக்கு வயது 03 . ஹலீமா நாயகியின் பிள்ளைகள் அதிகமாக ஆடு மேய்ப்பதைக் கண்டு தானும் போக வேண்டுமென ஆசைப்பபட்டார்கள். அதிகமான நபிமார்கள் ஆடு மேய்த்திருக்க அண்ணல் முஹம்மத் () அவர்களிடம் மட்டும் ஏன் அந்த ஆற்றல் அற்றுப் போக வேண்டும். ஹலீமா நாயகியின் பிள்ளைகளோடு ஆடுமேய்யக்கச் சென்ற போது அதிசமொன்றும் நிழ்ந்தது. அமரர்கள் அவர்களின் ஹலீமா நாயகிகியின் பிள்ளைகளோடு ஆடு மேய்க்கச் சென்ற போதும் அதிசமொன்று நிகழ்ந்தது. அமரரர்கள் அவர்களின் உள்ளத்தை பக்குவப் படுத்தினார்கள் .

காத்தான்குடி
Moulavi  Fouz Saharki
போதனைப் பொக்கிஷம் நூல் 19


போதனைப் பொக்கிஷம்


ரபியுல் அவ்வல் வசந்தத்தின் வசந்தம் ரஹ்மத் நபி பிறந்த மாதம்

ரபியுல் அவ்வல் வசந்தத்தின் வசந்தம் ரஹ்மத் நபி பிறந்த மாதம்