السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 3 February 2024

இஸ்ராவும் மிஃராஜும்

 

#ரஜப்_பிறை_27_ல்_இஸ்ராவும்_மிஃறாஜும்_மிஃறாஜ்_நோன்பும்


உம்மத்தே முஹம்மதிய்யா என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமுதாயத்தினர் என்று பெருமையாக பேசுகிறார்கள் ஆனால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த திகதி தெரியவில்லை.ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃறாஜ் எனும் விண்ணுலக யாத்திரை எப்போது போனார்கள் என்பது தெரியவில்லை..


என்றால் இந்த ஷரீஅத்திற்கு சொந்தமான ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி எப்படி போதிக்கிரீர்கள்..?

எப்படி பெருமையாக உம்மத்தே முஹம்மதிய்யா என்று சொல்லிக்கொள்கிரீர்கள்..?என்பதே வினோதம்!!


மார்க்க கல்வியை சரிவர ஆழ படித்தால் ஏன் இந்த குழப்பம்.?ஹதீஸில் வரக்கூடிய ஓர் அறிவிப்பாளரின் தரவுகளை எப்படி பெற்றீர்கள்..?உதாரணமாக ஒருவரைப் பற்றி சில ஹதீஸ் கலை வல்லுனர்கள் #குறை சொல்கிறார்கள்.பலர் #நிறைவாக பேசுகிறார்கள் எனும் போது இதில் என்ன தீர்ப்பை எடுப்பது.? இன்னும் தெளிவாக சொல்லப்போனால் அல் ஹாபிழ் இமாம் ஹாகிம் ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ஒரு ஹதீஸை ஸஹீஹ் என்பார்கள்.அதே ஹதீஸை அல் ஹாபிழ் இமாம் தஹபி ரஹ்மஹுல்லாஹ் ழயீப் என்பார்கள்..இதை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது..?


இதே அடிப்படையில் நேர்கோட்டில் வாருங்கள்...


ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினம் ரபிஉல் அவ்வல் பிறை 12 என்று நாம் சொல்கிறோம்.ஆனால் வேறு திகதிகளையும் சொல்லிக்காட்டுகிறார்கள்...இது வரலாற்று ஆசிரியர்களிடத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடு.


அஸ்ஸீரதுன் நபவிய்யா இப்னு ஹிஷாம் ரஹ்மஹுல்லாஹ் அல் பிதாயா வன் நிஹாயா இமாம் அல் ஹாபிழ் இப்னு கதீர் ரஹ்மஹுல்லாஹ் அஸ்ஸீரதுல் ஹலபிய்யா நூருத்தீன் அல் ஹலபி ரஹ்மஹுல்லாஹ் அஸ்ஸீரதுன் நபவிய்யா இமாம் அல் ஹாபிழ் இப்னு கதீர் ரஹ்மஹுல்லாஹ் இப்படி பல வரலாற்று நூற்களைப் பாருங்கள் வரக்கூடிய கருத்துக்களை சொல்லிவிட்டு அதில் #பிரபலமான_சொல் #அதிகப்படியான_இமாம்களிடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல் ரபிஉல் அவ்வல் பிறை 12 என்பதே!!

இருக்கா..?இல்லியா..?என்பதை பாருங்கள்..இது தவிர பிறை 12 ல் தான் பிறந்தார்கள் என்பதற்கு வேறு பல செய்திகளையும் நாம் சொல்வோம் அதுவல்ல இப்பதிவு....


அதே சமயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வபாத் ஆனது தான் ரபிஉல் அவ்வல் பிறை 12 அதில் மாற்றுக்கருத்து இல்லை.தெளிவான ஆதாரம் அது என்று சொல்கிரீர்கள்..அப்ப நீங்க கிதாப் வாசிக்கல்ல...நுனிப்புல் மேய்ந்த எருமை மாடுகள் என சொல்லலாம்....


ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வபாத் ஆன திகதி விஷயத்தில் இமாம் அல் ஹாபிழ் இப்னு கதீர் ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய அல் பிதாயா வன் நிஹாயா வை பாருங்கள்  என்ன சொல்கிறார்கள் என்பது தெரிய வரும்....


அதே போல் #இஸ்ரா எனும் பயணம் அதாவது கஃபா ஷரீபில் இருந்து பலஸ்தீன் மஸ்ஜிதுல் அக்ஸா வரை #மிஃறாஜ் எனும் பயணம் அதாவது பலஸ்தீன் மஸ்ஜிதுல் அக்ஸாவில் இருந்து விண்ணுலகம் வரை நடந்த இந்த நிகழ்வுக்கு வாருங்கள்..


விண்ணுலக யாத்திரை ரஜப் பிறை 27 ல் நிகழவில்லை என்றொரு வியாதி..அப்படி என்றால் மிஃறாஜ் எப்போது நிகழ்ந்தது.?சரியான திகதி நாள் இல்லையாம்..இதென்ன புதிர்...?


#மிஃறாஜ்_விண்ணுலக_யாத்திரை


மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவாக மிஃறாஜ் எனும் விண்ணுலக யாத்திரை ரஜப் பிறை 27 ல் நிகழ்ந்தது என்பதையும் அவ்விரவு #லைலதுல்_மிஃறாஜ் என்றும் சொல்கிறார்கள்.


இமாம் ஙஸ்ஸாலி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ( ஹிஜ்ரி 450 - 505)  தங்களுடைய #இஹ்யாஉ_உலூமுத்தீன் 1/ 361 

அல் ஹாபிழ் இமாம் அபுல் பரஜ் இப்னுல் ஜவ்ஸி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ( 510 - 597 ) தங்களுடைய #அல்_வபா_பிதஃரீபி_பழாஇலில்_முஸ்தபா 1/ 162 


இமாம் இமாதுத்தீன் அல் அஸ்பஹானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ( 519 - 597 ) தங்களுடைய #அல்_பத்ஹுல்_குஸ்ஸீ_பில்_பத்ஹில்_குத்ஸீ 

பக்கம் 73

பதிவு நீண்டு செல்கிறது என்பதால் சுருங்க சொல்கிறேன்..

عمدة القاري شرح صحيح البخاري 4/39

لمحات الانوار ونفحات الازهار 3/1329 

النوادر السلطانية 135

روضة الطالبين  10/ 206 

وفيات الأعيان 7 / 179

مرآة الجنان وعبرة اليقظان 3/ 344 

البداية والنهاية 14/ 228 

الأنس الجليل بتاريخ القدس والخليل  2 /33

الإقناع في حل ألفاظ ابي شجاع 2/ 556 

مغني المحتاج 6 /3 

تفسير روح البيان 5/ 103 

لوامع الانوار البهية 2/ 280 

تحفة الحبيب 2/ 10 

حاشية الطحطاوي على مراقي الفلاح 1/ 114

حاشية ابن عابدين 1/ 352 

نهاية الايجاز في سيرة ساكن الحجاز 1/ 138 

الآثار المرفوعة في أخبار الموضوعة 1/ 77

إظهار الحق 4/ 1017 

رحمة للعالمين 1/ 64 


இன்னும் நிறைய கிதாப்களில் மிஃறாஜ் எனும் விண்ணுலக யாத்திரை ரஜப் பிறை 27 ல் நிகழ்ந்தது என்பதை எழுதிக்காட்டுகிறார்கள்..


அதே சந்தர்ப்பம் இஸ்ராஃ மிஃறாஜ் என்பது ரஜப் மாதத்தில் தானா. ?நிகழ்ந்தது என்பது பற்றியும் கருத்து வேறுபாடுகள் உண்டு.

அதில் 15 விதமான கருத்துக்களை சொல்லி மிகப் பிரபலமானதும் ஏகோபித்ததும் ரஜப் மாதத்தில் தான் என்பதை அல்லாமா அல் ஹாபிழ் இமாம் ஜலாலுத்தீன் அஸ் ஸுயூதி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய 

#அல்_ஆயதுல்_குப்றா_பீ_ஷரஹி_கிஸ்ஸதில்_இஸ்ரா என்ற நூலில் சொல்லிக்காட்டுகிறார்கள்..


ஹழ்ரத் ஆயிஷா ஸித்தீக்கா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் கருத்தை "ஹிஜ்ரத்திற்கு ஒன்றரை வருடத்திற்கு முன் ரஜப் மாதத்தில் நிகழ்ந்தது,, என்ற கருத்தை அபூ ஹய்யான் அல் அந்துலுஸீ ரஹ்மஹுல்லாஹ் தங்கள் தப்ஸீர் #அல்_பஹ்ருல்_முஹீத் 9/ 7 அதே போல் அக்கருத்தை ஏற்று இமாம் இப்னு அதிய்யா அல் அந்துலுஸீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய #அல்_முஹர்ரருல்_வஜீஸ் 3/ 435-436 ல் பதிவு செய்கிறார்கள்..


அதே போல் இப்னு குதைபா ரஹ்மஹுல்லாஹ் ( இப்னு குதைபா என்று ஷீஆ இயக்கத்திலும் ஒருவர் இருக்கிறார் அதே பெயர் அதே பெயர் கொண்ட கிதாப் அதனால் அதில் விழிப்பாக இருக்க வேண்டும்..யார் என்றே கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ஷீஆக்கள் இதோ உங்கள் இமாம் தானே சொல்கிறார் என்று சொல்வார்கள்.. எச்சரிக்கை!!) இமாம் இப்னு அப்துல் பர் அல் மாலிகி ரஹ்மஹுல்லாஹ் அவர்களும் இதே கருத்தை(  ரஜப் ) என்று தான் சொல்கிறார்கள்..அதை இமாம் கஸ்தலானீ ரஹ்மஹுல்லாஹ் தங்களுடைய #அல்_மவாஹிபுல்_லதுன்னிய்யா 2/ 70 ம் அதே போல் #தாரீக்ஃ_கமீஸ் 1/ 307 ம் பதிவு செய்கிறார்கள்..


மேற் சொன்னது போல் இஸ்ராஃ மிஃறாஜ் ரஜப் 27 ல் தான் நிகழ்ந்தது என்பதில் அதிகப்படியான இமாம்களின் கருத்தும் ஏகோபித்த முடிவும் அது தான் என்பதையும் அதன் படி தான் முஸ்லீம்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை இமாம் அல் ஹாபிழ் அபுல் பரஜ் இப்னுல் ஜவ்ஸீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய 

المنتظم في تاريخ الملوك والامم 3/26 

என்ற நூலில் சொல்லிக்காட்டுகிறார்கள்..


#மிஃறாஜ்_நோன்பு 


  من صام يوم سبع وعشرين من رجب كتب له صيام ستين شهرا

யார் ரஜப் மாதம் பிறை 27 வது நாள் நோன்பு நோற்கிறாரோ  60 மாதம் நோன்பு நோற்ற நன்மை அவருக்கு எழுதப்படுகிறது என்று ஒரு ஹதீஸ் உண்டு. 


இந்த ஹதீஸை இமாம் அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய 

#தப்யீனுல்_அஜப்_பிமா_வரத_பீ_ஷஹ்ரி_ரஜப் 

تبيين العجب بما ورد في شهر رجب 

என்ற நூலில் கொண்டுவந்திருக்கிறார்கள்..


இந்த ஹதீஸிக்கு கீழ் அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் 

وهذا موقوف ضعيف الاسناد 

இது #மவ்கூப் ஆன செய்தி..அதாவது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை அறிவிப்பாளர் வரிசை செல்லாது.ஸஹாபாக்களின் சொல் செயல் அங்கீகாரத்தோடு தொடர்புடையது..ஸஹாபாக்கள் வரை அத்தொடர் செல்லக்கூடியது..

இதை நாம் #மவ்கூபான_ஹதீஸ் என்போம்..

குராஸானியீன்களின் ஹதீஸ் கலை வல்லுனர்களின் சொல் வழக்கத்தில் இதை #அதர் என்று சொல்வார்கள்..

மவ்கூபான ஹதீஸைப் பற்றி பேசுவதென்றால் நிறைய பேசலாம்...தனித்தனி கிதாபுகளே உண்டு..இன்னொரு சமயம் பார்க்கலாம்..


மவ்கூபான ஹதீஸ் சில சமயம் ஸஹீஹான ஹதீஸாகவும்  ஹஸனான ஹதீஸாகவும் மாறுவதற்கு வழி உண்டு...அந்த சட்டமும் இப்போ தேவையேற்படாது இன்னொரு சமயம் பார்க்கலாம்...

இங்கே #இஸ்னாத் பலஹீனம் என்பதையும் அல் ஹாபிழ் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் சொல்லிக்காட்டுகிறார்கள்..


எனவே பலஹீனமான ஹதீஸை வைத்து அமல் செய்யலாமா.?என்பது பற்றி ஏலவே ஓர் ஹதீஸ் பற்றி பேசுகையில் நான்கு தொடராக எழுதியதில் பார்வையிடலாம் அதன் லிங்க் இதோ!!


https://m.facebook.com/story.php?story_fbid=961990015500862&id=100050696177320&mibextid=Nif5oz


மட்டுமல்ல எகிப்தின் பத்வா குழு #தாருல்_இப்தாஉல்_மிஸ்ரிய்யாவினால் மேற்கூறிய ஹதீஸ் அடிப்படையில் பலஹீனமானாலும் அமல் செய்யலாம் என்ற உஸூலின் பிரகாரம் ரஜப் பிறை 27 ல் நோன்பு நோற்பது விரும்பத்தக்கது என்ற பத்வாவையும் சொல்லி இருக்கிறார்கள்..


அதே சமயம் மார்க்க சட்டமேதைகளான #புகஹாக்களின் பக்கம் கவனத்தை செலுத்தினால் அங்கே 


#ஹாஷியதுல்_பர்மாவி_அலா_ஷரஹி_இப்னு_காஸிம் 


#இஆனதுத்_தாலிபீன்

#ஹாஷியதுல்_பாஜூரி

#ஹாஷியதுல்_ஜமல்

#அல்_ஙுன்னிய்யா

#இஹ்யாஉ_உலூமுத்தீன்

#பத்ஹுல்_அல்லாம்

#பதாவா_அஷ்ஷாலியாதீ 


போன்ற நூற்களில் எல்லாம் #சவ்முல்_மிஃறாஜ் மிஃறாஜுடைய நோன்பு நோற்பது விரும்பத்தக்கது என்று சொல்லி இருக்கிறார்கள்..


அது மட்டுமல்ல இமாமுல் அஃழம் இமாம் அபூ ஹனீபா ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் மிஃறாஜுடைய நோன்பு நோற்பது முஸ்தஹப்பானது என்று சொல்லி இருக்கிறார்கள் என்று இமாம் ஷிஹாபுத்தீன் அல் கராபீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய #அத்தகீரா ( الذخيرة ) என்ற நூலில் 2/ 532 ல் சொல்லிக்காட்டுகிறார்கள்..

அல்லாமா கலீல் ரஹ்மஹுல்லாஹ் தங்களுடைய #அத்_தவ்ழீஹ் ( التوضيح ) என்ற நூலிலும் 2/ 461 ல் மிஃறாஜுடைய நோன்பு நோற்பதை முஸ்தஹப் என்று சொல்லிக்காட்டுகிறார்கள்..


அதே சமயம் இமாம் அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் மேற்கூறிய ஹதீஸின் பின் இன்னொரு விஷயத்தை சொல்கிறார்கள் 

وهو أمثل ما ورد في هذا المعنى 

என்று சொல்கிறார்கள்...


ஹதீஸ் கலை அறிஞர்களிடம் இதே போல் வேறு வார்த்தைகளை உபயோகப்படுத்துவது கனிஷமாக உண்டு.அதை அதிகமாக ஸுனனுத் திர்மிதியில் இமாம் திர்மிதி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் 

هذا أصح شيئ في الباب 

என்று பாவித்திருப்பார்கள்..

இதை உபயோகப்படுத்தியதால் அந்த ஹதீஸ் #ஸஹீஹ் என்று கருத்தல்ல..அல் ஹாபிழ் இமாம் நவவீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் கூட அதற்கு நல்ல விளக்கம் ஒன்று சொல்வார்கள்...

அவைகளை எல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்...

எனவே இமாம் அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் உபயோகித்த வார்த்தையின் எதார்த்தம் என்ன...?என்பதை திறந்த மனதோடு தேடுங்கள் பதில் கிடைக்கும் குழப்பமும் வராது...


அதே சமயம் #மப்ஹும்_முகாலபா #மப்ஹும்_முவாபகா  ( مفهوم مخالفة - مفهوم موافقة ) 

இப்படி இரண்டு விதமான விளக்கங்கள் உண்டு....

சான்றோடு தெளிவோடு தேடுங்கள் சரியான தெளிவு கிடைக்கும்....


#இறுதியாக_பொது_விதி ஒன்றுக்கு வாருங்கள் 


மேற்கூறிய வெவ்வேறு கருத்துக்களில் ""ஸலபுகளிடம் இவ்வாறு வெவ்வேறு கருத்துக்கள் காணப்பட்டால் இது தான் #தர்ஜீஹ் ஆனது என்பது நிருவப்படவில்லை என்றால் அவ்வமல் எதன் பக்கம் சேர்க்கப்படும்....??என்ற கேள்வியோடு......


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி ஏறாவூர் 

+94 77 444 77 57