السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 13 July 2015

***ஸகாதுல் பித்ர்***


பித்ர் என்றால் நோன்பை விடல்,திறத்தல் என்று பொருள்.நோன்பை விட்டு விட்டு பெருநாள் அன்று இதைக் கொடுப்பது வாஜிபாகுவதால் இதற்கு இப்பெயர் சொல்லப்படும். இது ரமழானைப் போல் ஹிஜ்ரி 2 ல் கடமையாக்கப்பட்டது.
தொழுகையில் ஏற்படும் குறைகளை ஸஜ்தா ஸஹ்வு (மறதிற்காக செய்யும் ஸுஜூத்) எவ்வாறு சீராக்குகின்றதோ,அதேபோல் ரமழான் நோன்பில் ஏற்படும் குறைகளை ஸகாதுல் பித்ர் சீராக்குகின்றது என்று இமாம் வகீ: (رحمة الله عليه) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அதை ஹதீஸும் உறுதிப்படுத்துகின்றது.
ஸகாதுல் பித்ர் சுதந்திரவாதயின் மீது பெருநாள் சூரியன் மறைந்ததிலிருந்து (அதாவது ரமழான் முடிவு பெற்று ஷவ்வால் மாதம் துவக்கம்) வாஜிபாகும். அதாவது ரமழானின் கடைசிப் பகுதியையும், ஷவ்வாலின் துவக்கப் பகுதியையும் எத்துவது கொண்டு வாஜிபாகும். எனவே அன்று சூரியன் மறைந்த பின் பிறந்த குழந்தைக்காக, திருமணம் முடித்த மனைவிக்காக, அதே போன்று ம:ரிபுக்குப் பின் செல்வந்தனாகியவன், இஸ்லாத்திற்கு வந்தவன் மீதும் ஸகாதுல் பித்ர் கடமையாகாது. சுருக்கமாக சொல்வதென்றால் ரமழானையும், ஷவ்வாலையும் எத்துவது கொண்டு தான் வாஜிபாகும். எனவே அன்று (ரமழான் முடிந்து ஷவ்வால் துவக்கம்) சூரியன் மறைந்த பின் இறந்தவன், தலாக் சொல்லப்பட்டவள், ஏழையாகிவிட்டவன் மீதுண்டான கடமை நீங்காது. எனவே அவர்களுக்குண்டான ஸகாதை பொறுப்புதாரிகள் கொடுக்க வேண்டும். ஏழையானவன் வசதி வந்த பிறகு கொடுக்க வேண்டும்.
ஸகாதுல் பித்ர் கொடுபபதற்குன்டான நேரம் அது கடமையான நேரம் முதல் பெருநாளன்று சூரியன் மறையும் வரையிலாகும். எனவே பெருநாள் தினம் சூரியன் மறையும் முன் முஸ்லீம்களில் எவர் மீது அவன் படிவுடை (செலவு) கொடுப்பது வாஜிபாகுமோ, அத்துணை பேரைத் தொட்டும் ஸகாதுல் பித்ர் கொடுப்பது இவன் மீது வாஜிபாகும்.
வசதியான சிறுவனுக்காக தந்தை மீது கடமையாகாது. மாறாக அச்சிறுவனின் பொருளிலிருந்து தான் கொடுக்க வேண்டும். என்றாலும் அவனுக்காக தந்தை கொடுத்தாலும் கூடிவிடும். கொடுக்கும் போது பிள்ளையின் பணத்திலிருந்து திரும்ப பெற்றுக் கொள்வேன் என்று நிய்யத்து வைத்தால் பெற்றுக் கொள்ளலாம்.
விபச்சாரத்தில் பிறந்த குழந்தைக்காக தாயின் மீதே கடமையாகும். சம்பாதிப்பதற்கு சக்தியுள்ள பெரிய மகனுக்காக தந்தை கொடுப்பது வாஜிபில்லை.
எனவே இந்த ஸகாதுல் பித்ர் யார் மீது கடமையோ அவரின், அதேபோன்று அவர் யார் மீது செலவு கொடுப்பது வாஜிபோ ; அவர்களின் அன்றைய (பெருநாள் இரவு ,பகல்) உணவு,ஆடை,வீட்டுச் செலவு(வீடு வாடகை என்றால் அதன் செலவு) ,பணியாளர் செலவு,போக மீதமிருந்தால் தான் ஸகாதுல் பித்ர் வாஜிபாகும். உறுதியான சொல்லின் பிரகாரம் கடன் இருந்தாலும் ஸகாதுல் பித்ர் வாஜிபாகாது. (என்றாலும் கடன் இருந்தாலும் ஸகாதுல் பித்ர் வாஜிபென்று ஒரு கூற்றுள்ளது.)
***ஸகாதுல் பித்ரின் அளவு :
ஸகாதுல் பித்ரின் அளவு ஒரு "ஸாஃ" ஆகும். அதாவது நான்கு முத்துகளாகும். ஒரு முத்தின் அளவு மிகவும் பெரிதுமில்லாத மிகவும் சிறிதுமில்லாத நடுத்தரமான இரண்டு கைகளைக் கொண்டு (உணவை) அல்லும் அளவாகும். எனவே இவ்வாறான நான்கு அள்ளுதல் ஸகாதுல் பித்ரின் அளவாகும்.
எனவே வழங்கப்படும் ஊரில் மிகுதியாக உண்ணப்படும் உணவாக ஸகாதுல் பித்ர் இருக்க வேண்டும். அவ்வாரில்லாதவைகளை கொடுக்க முடியாது. அதேபோல் கொடுப்பவரின் பெருன்பான்மை உணவாகவோ அல்லது கொடுப்பவரின் ஊரின் பெருன்பான்மை உணவாகவோ, இருந்தாலும் கூடாது. ஏனெனில் அதை பெறுவதற்கு தகுதியானவர்கள் அவ்வூரின் பெருன்பான்மை உணவையே எதிர் பார்க்கின்றனர். இதனடிப்படையில் யாருக்காக கொடுக்கப் படுகின்றதோ, அவனின் ஊரில் உள்ள ஏழைகளுக்கே ஸகாதுல் பித்ர் கொடுப்பது வாஜிபாகும்.
ஓடிப் போனவன் அவன் எங்குள்ளான் என்று தெரியாத நிலையில் அவனுக்கு உடனே ஸகாதுல் பித்ர் கொடுக்க வேண்டும் என்றும் , அவன் திரும்ப வந்த பின் தான் வாஜிப் என்றும் ,எதுவுமே வாஜிபில்லை என்றும் பல கருத்துக்கள் உண்டு.
ஸகாதுல் பித்ரை உணவாகத் தான் கொடுக்க வேண்டும். அதன் கிரயத்தை (பணத்தை) கொடுக்கக் கூடாது. அதேபோன்று குறை உள்ளதை, புழு அறித்ததை, ஈரமானதை அதை பெறுபவர்கள் ஈரமான உணவை பயன்படுத்தக் கூடியவர்களாக இருந்தாலும் கொடுக்கக் கூடாது. ஆனால் ஈரமான அவ்வுணவு பின்பு காய்ந்து உண்பதற்கும், தங்கரீகம் பண்ணி வைப்பதற்கும் தகுதியானதாக ஆகிவிட்டால் பரவாயில்லை. இவ்வாறு குறையுள்ளது, அல்லது ஈரமானதைத் தவிற வேறு ஒன்றும் இல்லை என்றால் இவைகளை கொடுக்கலாம். அதில் பரவாயில்லை. அது அப்போது ஆகுமானதே.
பணம் இப்போது (தொலைவில்) கை வசம் இல்லாதிருப்பது அல்லது ஸகாதுல் பித்ரைப் பெறுவதற்கு தகுதியானார்கள் இல்லாதிருப்பது போன்ற ஏதும் தங்கடமில்லாமல் ஸகாதுல் பித்ரை பெருனாளுடைய பகலை விட்டும் பிற்படுத்துவது ஹராமாகும். ம:ரிப் வரையிளும் நிறைவேற்ற வில்லையென்றால் விரைவாக கலா செய்ய வேண்டும்.
ஸகாதுல் பித்ரை ரமழானுடைய துவக்கத்திலிருந்தே கொடுப்பது ஆகுமானது. அதை பெருநாள் தொழுகையை விட்டும் பிற்படுத்தாமலிருப்பது ஸுன்னத்தாகும். அவ்வாறு பிற்படுத்துவது மகரூஹாகும். எனினும் சொந்தத்தில் உள்ள ஏழை, அண்டை வீட்டுக்கார ஏழை போன்றோரை எதிர்பார்த்து பிற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் சூரியன் மறையாமலிருக்கும் வரை அவ்வாறு பிற்படுத்துவது ஸுன்னத்தாகும். சூரியன் மறைய முன் வழங்கிட வேண்டும்.
(மூலம் - பத்ஹுள் முஈன் )
by : Muhammed Aadil