السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 21 December 2018

மனித குணங்களும் பண்புகளும்

மனித குணங்களும் பண்புகளும்
மனித குணங்களும் பண்புகளும் ஆத்மீக பெட்டகமான மஸ்னவிலிருந்து
உண்மையைப் பேசு அல்லது மெளனமாக இருந்துவிடு. அப்போது இறையருள் பொழிவதை கவனி.அதனை வாரிக்கொள்.

தற்புகழ்ச்சி என்பது இறைவனின் அருளைத் தடுத்து விடுகிறது. இறைவனின் கருணையை அது அடியோடு விலக்கி விடுகிறது.

பேராசையும், துயரமும் நிறைந்த மனதின் வேதனையைக் கொண்டு மனிதனுக்குப் பணிவும், வறுமையுமே அமைதியை ஏற்படுத்துவதாக உள்ளது.
பேராசையின் காரணத்தினால் மனநிறைவின் முகத்தை காயப்படுத்திக் கொள்ளதே
ஆணவத்தின் காரணத்தால் பணிவின் முகத்தைக் கீறிக் கொள்ளாதே.
வாக்குறுதியையும், உறுதிமொழியையும் மீறுவது மூடத்தனமாகும்.
சத்தியத்தைக் காப்பதும்,அதை நிறைவேற்றுவதும் பயப்பக்தியுடையோரின் வேலையாகும்.
அறிவீனனிடமிருந்து பெறும் அன்பை விட ஞானியின் விரோதம் மேலானது.
அறிவீனம் எனும் நோய் இறைவனின் கோபத்திற்குரிய தண்டனையாகும்.
பேராசை என்பது குருட்டுத்தனமானது. அது தன்னுடைய குறைகளைப் பார்ப்பதில்லை.மாறாக அது அடுத்தவர்களின் ஒவ்வொரு மயிர்க்கால்களையும் பார்க்கிறது.
ஆண்மகனின் இச்சைகளும் , பேராசைகளும் முன்னேற்றப் பாதையில் இருக்கும்.
ஆண்மையற்றவர்களின் ஆசைகள் யாவும் இழிவுக்குரியதாகவும், கெட்ட நோக்கம் கொண்டதாயும் இருக்கம்.
ஆண்மகன்கள் அதாவது இறைப்பாதையில் ஈடுபட்டுள்ளவர்களின் பேராசைகள் யாவும் முன்னோக்கியதாகவும் இருக்கும.
ஆண்மையற்றவர்கள் அதாவது உலகியலைச் சார்ந்தவர்களின் ஆசைகள் யாவும் பின்னோக்கியதாகவே இருக்கும்.

தகுதியற்றவன் பொருளையும், பதவியையும் அடைய ஆசைப்படுவதென்பது அவதூறைத் தானாக சென்று அடைய விருப்பப்படுவதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்; அறிவாளி என்பவன் இறைவனை அறிந்து கொண்டவனும், இறைவனின் பக்கம் அழைத்து செல்பவனும் ஆவான்.
அறிவீனன் அதாவது முட்டாளாக இருப்பவன் உலகமே நிலையானதென்று எண்ணி அதிலேயே மூழ்கிக் கிடப்பவன்.
சகிப்பும், புரிதலும், பாதுகாப்பும், ஞாபகச்சக்தியும் அறிவுக்குள்ளே தான் உண்டு. ஏனெனில் அறிவு அதனை உயர்த்தி உள்ளது.
சோர்வு, கருமிதனம், தன்னலம் மற்றும் அகங்காரத்தின் காரணத்தினால் நீ கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றாய். உன்னை நீயே தலைவனாக்கிக் கொற்கிறாய்.
வன்மம் பாராட்டாதே, வன்மத்தின் காரணத்தினாலேயே மக்கள் வழிதவறிச் சென்றுக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் புதைக்குழியும் வன்மம் பாராட்டுபவர்களின் பக்கத்திலேயே அமைக்கப்படும். அதாவது நயவஞ்சக உள்ளம் கொண்டவர்களை புதைகுழியும் விலக்கி வைக்கப்படுகின்றது.
உள்ளப்பகைமையின் விளைவு நரகமே ஆகும். உன்னுடை இந்த வன்மமானது நரகத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு பிரிவே தான்.எனவே நரகத்தை விட்டுத் தப்ப வேண்டுமானால் முதலில் இந்த வன்மத்தை விட்டுத் தப்புங்கள்.இதுவே உங்கள் மார்க்கத்திற்கும் எதிரியாகும்.
நயவஞ்சகனின் நாவிலோ இறைவனின் திருப்பெயர்கள் ஓடிக்கொண்டிருக்கும்.ஆனால் ஆன்மாவிலோ இறைமறுப்பின் அசுத்தங்கள் படிந்திருக்கும் .அதில் இறைவிசுவாசத்தின் ஒரு சிறு அறிகுறியும் தென்படாது.
அந்த நயவஞ்சகனின் இறைதியானமானது குப்பையிலே பிறக்கும் பசுமையைப் போன்றது. மலம் கழிக்கும் இடத்திலே பூக்கின்ற அல்லிப்பூ மற்றும் மலர்களைப் போன்றது.
தந்திரத்தாலும், தகாத திறனாலும் அபகரிக்கப்பட்ட பொன்னும் பொருளும் இறுதி தீர்ப்பு நாளன்று அவனத் கழுத்துக்கே சுமையாகி நிற்க்கும்.
புகழும் பெருமையும் பெறுவதற்கு அவமானத்தையும் ஏற்றுக்கொள்ள முன் வருகின்றனர்.பெருமையை அடையும் நம்பிக்கையில் இழிநிலையில் அகமகிழ்நதுள்ளனர்.
மனநிறைவைக் கொண்டதால் யாரும் இதுவரை இறந்ததில்லை. பேராசைக் கொள்வதால் யாரும் இதுவரை அரசப்பதவியை அடைந்ததில்லை.
சந்தேகம் கொள்பவன் எப்போதும் தீயவனாகவே இருப்பான்.
பயனற்ற ஆசைகளினால் துன்பங்களே உருவடைகின்றன. ஷைத்தானுக்கு அடிபணிந்து மனிதன் அதனைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளான்.
நீ மனங்களிலே கோபத்தின் நெருப்பை மூட்டி விட்டாய். அதுவே நரக நெருப்பின் மூலதனமாகி விட்டது.
இங்கே உனது நெருப்பு (கோபம்) மனிதர்களை எரித்து விடுவதாக இருந்தது.
அதே போல அங்கேயும் அந்த நெருப்பு உன்னை எரித்து விடுவதாக அமைந்திடும்.
கோபத்தை அடக்குவது எப்படியெனில் கோபத்தை வெளியிடக்கூடாது.அப்போது தான் அதற்கு பதிலாக இனிமையான விஷயங்கள் வெளிவரும்.
இங்கே உன்னுடைய பேச்சுக்கள் பாம்பாகவும் தேளாகவும் கொட்டுகிறது.
அங்கே அதே பேச்சுக்கள் பாம்பாகவும், தேளாகவும் மாறி உன் குரள்வளையைத் திருகிவிடும்.
உணவை உட்கோள்வதால் எப்போதும் பெறாமையும்,சூழ்ச்சியும்,அறிவீனமும்,அலட்சிய மனப்பான்மையும் ஏற்படுகிறது என்றால் அந்த உணவு ஹராமான உணவென்று கருது.
ஏனெனில் ஹலாலான உணவால் தீயகுணங்கள் பிறப்பதில்லை.
பசி என்பது இறைவனுக்கு மிக நெருங்கியவர்களின் உணவாகும்.
தியாகமும்,ஈகைத்தனமும் உன் கரங்களால் விளைந்தெழும்போது அதே கைகளால் அவன் பேரீச்சப்பழ மரங்களை மறுமையிலே விதைக்கிறான்.
உனது பொறுமையின் தண்ணீர் சொர்க்க ஓடையின் தண்ணீராகும்.சுவனத்திலே பாய்ந்தோடும் பாலானது உனது அன்பும் நட்புமாகும்.
சகோதரரே பொறுமையினைக் கடைபிடியுங்கள் ,பொறுமையே பொக்கிஷம்.ஆதலால் பழைய கவலைகளெல்லாம் தீர்ந்து விடக்கூடும்.
பொறுமை தெளிவு ஏற்படுவதற்கு சாவியாகும்.
பொறுமை கசப்பானது.ஆனால் அதன் கனி மிகவும் இனிமையானது. பொறுமை என்பது எல்லா வித இகசியங்களையும் திறக்கக்கூடிய வழிகாட்டியாகும்.
அல்லாஹுத்தஆலா நேர்மையாளர்களை நன்னெறிகளின் பக்கம் இழுக்கிறான்.
தீயவையான வழிகள் தீயவர்களை தன் பக்கம் இழுக்கிற