السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 12 December 2018

ஷரீஅத் பகுத்தறிவுள்ள மனிதனா?

ஷரீஅத் பகுத்தறிவுள்ள மனிதனா?

ஷரீஅத் பகுத்தறிவுள்ள மனிதனா?"

விளக்கம்:

பகுத்தறிவுள்ள மனிதன் மட்டும்தான் மற்றொருவரிடம் முறையிட முடியும்,பகுத்தறிவில்லாத ஷரீஅத் எப்படி முறையிடும் என்பது அவரது சந்தேகம்.

பகுத்தறிவில்லாத பேரிச்ச மரமட்டை கண்மணி நாயகம்صل الله عليه وسلم அவர்களிடம் முறையிட்டது. பகுத்தறிவில்லாத குடும்ப உறவு அல்லாஹ்விடம் முறையிட்டது.
ஸஹுஹான ஹதீஸ்களில் வந்த செய்தி கள் இவை.

ஜாபிர் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

நபி صلى الله عليه وسلم அவர்கள் நின்று குத்பா ஓதிய ஒரு பேரிச்ச மரத்தின் அடித்தூண் இருந்தது புதிய மிம்பர் வைக்கப்பட்ட போது.(கர்ப்பிணி ஒட்டகைகளிலிருந்து வெளிப்படுவது போன்ற) அழுகுரலை நாங்கள் அந்தப்பேரீச்சைத் தூணிலிருந்து கேட்டோம்.அப்போது நபிصل الله عليه وسلم அவர்கள் இறங்கி வந்து தமது கையை அதன் மீது வைத்தார்கள்
(புஹாரி,எண்:918)

அபூ ஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹுத்தஆலா படைப்புகளைப் படைத்து முடித்த போது குடும்பம் உறவு எழுந்தது.'என் உறவை விட்டும் விலகிவிடுவதைப் பற்றி உன்னிடம் காவல் தேடும் நேரம் இது என்றது.
'உன்னை இணைத்தவர்களை நானும் இணைப்பதும்,உன்னைத் துண்டித்தவர்களை நானும் துண்டிப்பதும் உனக்கு திருப்தி தானே!
என்று அல்லாஹ் பதிலுரைத்தான்"
(பஹாரி,எண் 5987).

பகுத்தறிவில்லாத பேரீத்த மரக்கட்டையும்,குடும்ப உறவும் முறையிடும் போது அறிவுகளின் சங்கமமான ஷரீஅத் முறையிடுவதில் என்ன ஆச்சரியம்?
தான் கேட்டும்; அறிந்தும் மட்டும்தான் உண்மை என்ற இறுமாப்பினால் வந்த வினைதான் இவை போன்ற விமர்சனங்கள்


ஷரீஅத் பகுத்தறிவுள்ள மனிதனா?