السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 29 February 2024

லயீபான ஹதீஸ் என்றால் ?

 

ழயீஃப் ஹதீஸ் குறித்து அபுத்தலாயில் ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத் அவர்கள் விவாத களத்தில் முன் வைத்த கேள்விகளுக்கு பதில் எங்கே?


இன்று வரை அந்தக் கேள்விகள் கேள்விகளாகத்தானே இருக்கின்றன. 


என் ஹதீஸ் ழயீஃபாக இருந்தால் ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸாவது உள்ளதா? 


ஹதீஸ்கள் ழயீஃப் என்று உங்களுக்கு சொன்னது யார்?


குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோம் என்று கூறிக்கொள்ளும் நீங்கள் ஃபிக்ஹு சார்ந்த இமாம்களை ஏற்றுக் கொள்ளாத நீங்கள் ஹதீஸ் சார்ந்த இமாம்களின் சொல்லை ஏற்றுக் கொண்டு ழயீஃப் ழயீஃப் என்று பேசுவதும் எழுதுவதும்  ஏன்? 


அப்படியானால் ழயீஃப் ஹதீஸ்களைக் கொண்டு அமல் செய்யலாம் என்று சொல்லி இருக்கும் அதே இமாம்களின் கூற்றுகளை என்ன செய்யப் போகிறீர்கள். 


ழயீப் ஹதீஸை ஆதாரமாகக் காட்டி நீங்கள் பேசியதும் எழுதியதும் இல்லையா? 


சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்கள் சுட்டிக்காட்டிய பின்னர் மாற்றிப் பேசியதும் இல்லையா?


நீங்கள் கூறும் ழயீஃப் ஹதீஸில் அந்த அறிவிப்பாளர் இடம்பெறுவதற்கு முன் அந்த ஹதீஸின் தரம் என்ன? 


அந்த அறிவிப்பாளர் இடம்பெறுவதற்கு முன் அந்த ஹதீஸை வைத்து அமல் செய்தோரின் நிலை என்ன? 


இதற்கெல்லாம் முதலில் பதில் சொல்லட்டும்.



Wednesday, 28 February 2024

கூட்டுத் துஆஃ தொடர் 02

 


நேற்று பதிவு செய்த இவ்விஷயத்தில் லிங்க் 


https://www.facebook.com/share/p/eksjrm66gaFHGjhN/?mibextid=oFDknk


சிலருக்கு விஷயம் விளங்கவில்லை என நினைக்கிறேன்..அதில் என்னுடைய நெருங்கிய நண்பர் Ahamed Imthiyas அவர்களுடைய சந்தேகத்திற்கும் இன்னொருவர் Abu Ayzer இருவர்களும் அப்பதிவில் காமன்ட் எழுதியதை ஸ்கிரீன் ஷாட் தருகிறேன்..கிழே ...


#முதலாவது இந்த சந்தேகத்திற்கு பதில் அப்பதிவிலேயே உண்டு..

அதை கொஞ்சம் தெளிவு படுத்துவோமே!


துஆ அங்கீகரிக்கப்படும் நேரம் எது என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்ட போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பர்ழான தொழுகைக்குப் பின் கேட்கப்படும் துஆவும் இரவின் நடுநிசியில் ( தஹஜ்ஜுத்) ல் கேட்கப்படும் துஆவும் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்..


இது திர்மிதியில் வரும் ஹதீஸ்..இதை பலஹீனம் ழயீபானது என்ற குற்றச்சாட்டு உண்டு கூட்டு துஆ எதிர்ப்பாளர்களால்..( பலஹீனம் என்ற விஷயத்தில் அது உஸூலுல் ஹதீஸ் படி மருந்து கொடுக்க இருக்கு இன்னொரு நேரம் வரட்டும்..)


இப்ப ஹதீஸுக்கு வாங்க இந்த ஹதீஸில் أاي الدعاء أسمع என்று #அஸ்மஉ என்ற வார்த்தைக்கு நேரடி கருத்துக்கொடுக்காமல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பதில் சொல்லித்தரும் கருத்தை கவனித்து அதாவது குறிப்பிட்டு இரண்டு நேரங்களை சொல்கிறார்கள் அதனடிப்படையில் துஆ கபூல் ஆகும் நேரம் எது என்று மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன்...( அது சரி பிழை என்ற விஷயத்திற்குள் வந்தால் வேட்டி களரும் என்பதை ஞாபகப்படுத்தியவனாக) 


ஆக இரண்டு நேரத்தில் கேட்கப்படும் துஆ கபூல் ஆகிறது...இன்னொன்றை விளங்கிக்கொள்ளுங்கள் துஆ விஷயத்தில் ஒன்றிற்கீழ் உடனே கபூல் ஆகும்..அல்லது தாமதமாகலாம்..அல்லது கபூல் ஆகாது மறுமையில் அது பிரயோஜனத்தைத் தரும் இந்த மூன்றுமே துஆவில் உள்ளடக்கப்பட்டது..ஆனால் துஆ கபூலே ஆகாது தன்னில் ஹராம் உணவு உடை போன்றவற்றில் கலந்திருந்தால்....


#இப்ப_ஹதீஸுக்கு_வாங்க..


இரண்டு நேரங்களை சொல்லி குறிப்பாக்கப்பட்டுள்ளது..ஆக ஹதீஸ் #காஸ் ( خاص ) 

ஆனால் இங்கு கூட்டாக,தனியாக என்பது பேசப்படவில்லை..

குறிப்பிட்டு பேசப்பட்டால் அச்செயலை குறிப்பிட்ட நேரத்தில் விரும்பியவாறு செய்யலாம் என்பது #காஸ்_خاص_ன் தத்துவம்..

அச் செயல் துஆவை நீங்கள் தனித்தும் கேளுங்கள் கூட்டாகவும் கேளுங்கள் எந்த தடையும் இல்லை..

எப்பொழுது தடை வரவில்லையோ அது ஆகுமானது என்பது பொதுவிதி


ஆனால் சிக்கல் என்னன்டா தனியாக இருந்து துஆ கேட்டாலும் மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள் என்பது ஹதீஸ் இதுதான் ஆப்பு....


ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதி ஸஹாபாக்கள் ஆமீன் சொல்லித்தான் இது காட்டப்பட வேண்டும் என்ற வாதம் மார்க்க அறிவு இல்லாமை..

செயல் மட்டும் தானா...?சொல் மார்க்கமில்லையா..?

அதான் மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள் என்ற சொல் இருக்கே!!!

இதுக்கு என்ன செய்வது..??


அப்ப கூட்டு துஆ என்றால் என்ன..?என்ற .கேள்வி மீண்டும் ஆரம்பத்திற்கே செல்ல வேண்டி வரும்..அதை மேலே லிங்க்ல பார்க்கலாம்..


கூட்டு துஆ என்ற ஒன்று இல்லை என்றால் ஏன் மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் என்ற கேள்வியோடு...


இன்னும் விரிவு வேறு ஹதீஸ்களுக்குள் செல்லவில்லை என்பதை ஞாபகமூட்டியவனாக!!!


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி 

ஏறாவூர் 

+94 77 444 77 57

காலம் மாறலாம்

 

காலம் மாறலாம், காட்சிகளும் மாறலாம்,தெரிந்துகொள்வோம் 

================================


யெமென் அரசர்களில் ஒருவரான வாயில் பின் ஹஜர் அல்ஹழ்ரமி நபிகளார் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்கிறார். யெமெனில் விட்டு வந்திருக்கும் நிலத்திற்கு ஈடாக ஒரு நிலப்பகுதியை அவருக்கு நபிகளார் பரிசாக வழங்கினார்கள்.


அந்த நிலம் எங்கே உள்ளது? என்பது குறித்து வழிகாட்ட, முஆவியா (ரலி) அவர்களை நபிகளார் கூடவே அனுப்பி வைத்தார்கள். அப்போது முஆவியா (ரலி), செருப்பு அணிவதற்குக்கூட வசதியின்றி கடும் ஏழ்மையில் இருந்தார்.


வாயில் ஒட்டகத்தில் பயணிக்க, முஆவியா (ரலி) அருகே நடந்து வருகிறார். இருவருக்கும் நடந்த உரையாடல்...


முஆவியா (ரலி): "ஒட்டகத்தின் பின்னால் என்னையும் அமர வையுங்களேன்''.


வாயில்: "அரசர்களின் பின்னால் அமரும் அளவுக்கு உமக்குத் தகுதி இல்லை''.


முஆவியா (ரலி): "எனில், உமது செருப்பையாவது தாரும்''. 


 வாயில்: "அரசர்களின் செருப்பை அணியும் அளவுக்கு உமக்குத் தகுதியும் இல்லை. வேண்டுமெனில், ஒட்டகத்தின் நிழலில் நடந்து வாரும்''.


காலம் மாறியது. காட்சியும் மாறியது.


தேசத்தின் கலீஃபாவாக முஆவியா (ரலி) மாறுகிறார். வாயிலுக்கு அப்போது 80 வயதிருக்கலாம். முஆவியாவைச் சந்திக்க நாடி சிரியாவுக்கு வருகிறார் வாயில். அவையில் நுழைகிறார். அரியணையில் அமர்ந்து இருந்த முஆவியா (ரலி) எழுந்து வந்து, வாயிலை வரவேற்று, தன்னுடைய அரியணையில் அமர வைத்தார். 


ஒட்டகத்தின் நிழலில் நடக்கச் சொன்ன நிகழ்வை நினைவூட்டி, "அந்த முஆவியாதான் நான்'' என்றார். பின்னர் வெகுமதிகள் வழங்கினார்.


கட்டுப்படுத்த முடியாமல் வழிந்தோடிய கண்ணீர் துளிகளினூடாக வாயில் கூறினார்: "வேண்டாம்! என்னைவிட தகுதி வாய்ந்தவருக்கு இதைக் கொடுங்கள். இருந்தாலும் உமது பொறுமையைப் பார்த்தபின் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்... அந்த நாள் மீண்டும் திரும்பி வந்தால், உம்மை எனது தோள்களில் சுமப்பேன்''.


இங்கே செழிப்பும் நீடிப்பதில்லை. ஏழ்மையும் நீடிப்பதில்லை. பொறுப்பும் நீடிப்பதில்லை. பதவியும் நீடிப்பதில்லை.


எனவே, சுற்றியுள்ள மக்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்! ஏனெனில், உலகம் நிற்காமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. நிலமை எப்போதும் ஒரேபோன்று இருப்பதில்லை.


ஆட்சிகள் மாறலாம். காட்சிகள் மாறலாம். ஆனால் இஸ்லாமிய சகோதரத்துவம்.. மாறவே மாறாது! மாறவும் கூடாது!!


"காலத்தை மக்களிடையே நாம் மாறிமாறி வரச் செய்கின்றோம் (குர்ஆன் 3:140)


நூஹ் மஹ்ழரி 

Nooh Mahlari

Tuesday, 27 February 2024

நாயகத்திற்கு மாறு செய்கின்றோமா?

 

மூத்தா போரின் போது நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜைத் பின் ஹாரிஸா (ரலியல்லாஹு தஆலா அன்ஹு ) அவர்களையும், அவர்கள் ஷஹீத் ஆகிவிட்டால் ஜஅஃபர் இப்னு அபீதாலிப் ( ரலியல்லாஹு தஆலா அன்ஹு ) அவர்களையும், அவர்களும் ஷஹீத் ஆகிவிட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலியல்லாஹு தஆலா அன்ஹு) அவர்களையும் தளபதியாக நியமித்தார்கள் .


மூன்று பேரும் ஷஹீத் ஆகிவிட்டால் நீங்களே ஒருவரை தளபதியாக தேர்தேடுங்கள் அவர்களின் மூலமாக அல்லாஹ் வெற்றியை கொடுப்பான் என்று கூறினார்கள் . 


இதை பார்த்துக்கொண்டிருந்த நும்மான் என்ற யூதர் "இதற்க்கு முன் உண்டான நபிமார்கள் யாரேனும் ஒருவர் கொல்லப்படுவார் என்று கூறினால் அவர் கொல்லப்படுவது உறுதி எனவே உங்கள் நபி கூறிய நீங்களும் கொல்லப்படுவது உறுதி என்று ஹஜ்ரத் ஜைத் பின் ஹாரிஸா (ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களிடம் கூறினார் .

அதற்க்கு ஜைத் (ரலியல்லாஹு தஆலா அன்ஹு) அவர்கள் எப்போது நாயகத்தின் கரத்தை நான் பிடித்தேனோ அப்போதே அவர்கள் சொல்லும் அனைத்தும் உண்மை என்பதை நான் நம்பிக்கை கொண்டவன். நீங்கள் என்ன புதிதாக கண்டுபிடித்துவிட்டீர்கள்? என்றார்கள் .


அந்த யூதர் கொல்லப்படுவோம் என்று தெரிந்துமா போருக்கு செல்கிறீர்கள் என்றார் .


ஜைத் (ரலியல்லாஹு தஆலா அன்ஹு) இதை விட வேறு என்ன சிறப்பு எமக்கு வேண்டும் என்று சொல்லிக்கொண்டே போருக்கு தயாரானார்கள் . 


அனைவரும் போருக்குச் சென்று விட்டார்கள். மறுநாள் வெள்ளிக்கிழமை அன்னலம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ பேருரை நிகழ்த்துகிறார்கள்.


மக்களை பார்க்கும்போது அங்கே அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அமர்திருக்கிறார்கள் .


தொழுகை முடிந்தவுடன் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை அழைத்து "போருக்கு செல்லவில்லையா?" என்று கேட்கிறார்கள்.


"நாயகமே என்னிடம் வேகமாக செல்லும் குதிரை இருக்கிறது. நான் அவர்களோடு சென்று சேர்ந்‌துவிடுவேன். எனக்கு பின் இன்னொரு தளபதி என்று நீங்கள் சொன்னதிலிருந்து இப்போரில் நான் ஷஹீத் ஆகிவிடுவேன் என்று உறுதியாக நம்புகிறேன் எனவே கடைசியாக ஒருமுறை உங்கள் பின் நின்று தொழு வேண்டும் என்ற ஆவலில் இருந்துவிட்டேன் நாயகமே!" என்று கூறினார்கள் .


நாயகம் சல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “என்ன காரியம் செய்து விட்டீர்கள் ரவாஹா( ரலியல்லாஹு அன்ஹு)! எப்போது போருக்கு செல்லுங்கள் என்று கூறினேனோ அப்போதே சென்றிருக்க வேண்டாமா?" என்று கேட்டு அனுப்பி வைக்கிறார்கள் .


முஸ்லிம்கள் 3000 பேர் எதிரிகள் 200000 பேர் அன்றைய வல்லரசான ரோமானியப்பேரரசு இப்படிப்பட்ட மிகப்பெரும் படையை திரட்டி இருந்தது .

ஸஹாபா பெருமக்கள் ஆலோசனை செய்தார்கள் .


எதிரிகளின் பலம் தெரியாமல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்முடன் குறைந்த வீரர்களை அனுப்பி இருக்கலாம் இன்னும் சில வீரர்களை நாம் கேட்போம் என்று ஆலோசிக்கிறார்கள்.

காலித் பின் வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உணர்ச்சிகரமான ஒரு உரையை மக்கள் முன் நிகழ்த்துகிறார்கள் .


"அல்லாஹ்வும் ரசூலும் நம்மை சோதிக்கிறார்கள் .

வெற்றி தோல்வியை பற்றி சிந்திப்பது நமது கடமை அல்ல .

போரிடுங்கள் என்று சொன்னால் போரிட வேண்டும் அதுதான் நமது கடமை .

இறைவனுக்காக போரிடுகிறோம். உண்மைக்காக போரிடுகிறோம். வெற்றியும் தோல்வியும் இறைவனின் கையிலல்லவா இருக்கிறது." என்று கூறினார்கள் .


அதன் பிறகு நடந்த போரை மதீனாவில் இருந்துகொண்டு நாயகம் சல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேரடியாக கண் முன்னே நடப்பதை போல (கிட்டத்தட்ட பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நடக்கும் போரை) வர்ணனை செய்கிறார்கள் )

இதோ ஜைத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். அவர்களின் உயிர் தங்க கட்டிலில் வைத்து வானவர்கள் தூக்கி செல்கிறார்கள்.


இப்போது ஜஅஃபர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கரத்தில் இஸ்லாமிய கொடி இருக்கிறது அவர்களும் கொல்லப்பட்டுவிட்டார்கள் அவர்களின் உயிரும் தங்க கட்டிலில் வைத்து வானவர்கள் தூக்கி செல்கிறார்கள் .


அடுத்து இஸ்லாமிய கொடி ரவாஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கரத்தில் இருக்கிறது அவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள் அவர்களின் உயிரும் தங்க கட்டிலில் வைத்து வானவர்கள் தூக்கி செல்கிறார்கள் . ஆனால் அவர்களின் கட்டிலின் ஒரு முனை மட்டும் வளைந்து இருக்கிறது .


அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தவறு செய்யவில்லை. கடைசியாக ஒரே ஒரு முறை நாயகத்தின் பின் நின்று தொழ வேண்டும் என்ற ஆசையினால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன உடனே போருக்கு செல்லவில்லை. அதன் காரணத்தினால் அவர்களின் கட்டிலின் ஒரு முனை மட்டும் வளைந்து இருக்கிறது ."


அப்படியென்றால் தினம் தினம் நாயகத்திற்க்கு எவ்வளவு மாறு செய்கிறோம் நம் நிலமை ??


(ஷைகுத்தஃப்ஸீர் அல்லாமா O.M. அப்துல் காதிர் பாகவி அவர்களின் உரையிலிருந்து..)


-ஹாரிஸ் ஜமாலி நவ்வரல்லாஹு மர்கதஹு


Copy post at #Musthafa_Qasimi

அஸ்டோ நடாத்திய உலமாமாக்களுக்கான பயிற்சிப் பட்பறை 2024

 கல்முனை அஸ்டோ அமையம்  தேசிய ரீதியிலான நடாத்தும் உலமாக்களுக்கான *உளவியல் ஆலோசனை பயிற்சி பட்டறை* 

முதலாவது பயிற்சி பட்டறை நிறைவு


அல்ஹம்துலில்லாஹ்


கல்முனை அஸ்டோ அமையம் நடாத்தும் தேசிய ரீதியிலான நடாத்தும் உலமாக்களுக்கான *உளவியல் ஆலோசனை பயிற்சி பட்டறை* என்ற திட்டத்தின்  முதலாவது பயிற்சி பட்டறை ஏறாவூர்  அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத் உலமா பேரவை மற்றும் ஏறாவூர் ஸதகா பௌண்டேஷனின் அனுசரனையுடன் கடந்த 24-02-2024 அன்று ஏறாவூர் மனாழீருல் மகளீர் அரபுக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.


பயிற்சி பட்டறையை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வை ASSDO மீடியா யுனிட்டின் உறுப்பினர் S.L. றிஸ்கான் நெறிப்படுத்தினார்.


பயிற்சி பட்டறை அல்ஹாபிழ் A.K. M. ஹப்னானின்   கிரா அத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசியக் கீதம் இசைக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து திட்டத்தின் நோக்கம் பற்றி அஸ்டோ அமைப்பின் கௌரவ தலைவர் U.L. றியாழின்  உரை இடம்பெற்றது . தொடந்து ஏறாவூர் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத் உலமா பேரவையின் ஆலோசகர் மௌலவி A.A. இப்ராஹீம்  ( அஸீஸி ) அதிபர் ஏறாவூர் நிழாமிய்யா அரபுக் கல்லூரி  வரவேற்புரை நிகழ்த்தினார்.


தொடர்ந்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது


பயிற்சி பட்டறையை


NM_Nouzath_BA (Dep.in. Counselling, Master Dep.in. Counselling &  Dip.in.Sp.Edu, Senior psychological counselor, Life coach &Trainer)  அவர்களால் சிறப்பாக நடாத்தப்பட்டது.


அதைத் தொடந்து கலந்து கொண்ட உலமாக்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் 

ஏறாவூரின் மூத்த உலமாவும், முன்னாள் காதியாருமான மௌலவி A.C. மஜீட் மிஸ்பாஹி, ஏறாவூர் அஹ்லுஸ்ஸுன்னத்வல் ஜமாத் உலமா பேரவையின் ஆலோசகர் A.A. இப்ராஹீம் ( அஸீஸி ) ஏறாவூர் ஸதக்கா பௌண்டேஸன் சர்பாக மௌலவி U.L. நவாஸ் உஸ்மானி, பயிற்சி பட்டறையின் வளவாளர் ஜனாப் N.M. நௌஸாத், அஸ்டோ அமைப்பின் தலைவர் U.L. றியாழ், உலமாக்கள்,  அஸ்டோ அமைப்பின் பொருளாளர் ரைய்யான், அஸ்டோ நூலக பொறுப்பாளர் அர்சக், அஸ்டோ ஜூனியர் பிரிவின் பொறுபாளர் ஜெசுலி ஹிகம், மற்றும்  Assdo Voice  மீடியா பிரிவின் உறுப்பினர்களான றிஸ்கான்,இன்பாஸ் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


அடுத்து மௌலவி A.S.M.  பர்ஹான்  ஹஸனிய்யி இனால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு 


இறுதியில் யா நபி பைத்துடன் நிறைவு பெற்றது.




















Monday, 26 February 2024

#கூட்டுதுஆ தொடர் 01


 

ஆதாரங்களை அடுக்கி தேடி பித்அத் மார்க்கத்தில் இல்லை என்றெல்லாம் பேச முன்னாடி சிறு நுற்பத்தைப் பார்ப்போம்..


தனித்து துஆ செய்வது தான் உண்டு என்பது மார்க்கத்தில் இல்லவே இல்லை..மறுமை வரை அவகாசம் தனித்துத்தான் துஆ செய்ய வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரம் தாருங்கள்..


#முதல்ல கூட்டுதுஆ என்றால் என்ன..?

"ஒருவர் துஆ ஓத ஏனையவர்கள் ஆமீன் சொல்லுதல்,,

இது தான் கூட்டு துஆ..

இது தொழுகையிலும் உண்டு தொழுகைக்கு வெளியிலும் உண்டு..


நீங்கள் துஆ செய்யும் போது உங்களுக்கு என்று சாட்டப்பட்ட மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள் என்பது தெட்டத்தெளிவான ஸஹீஹ் முஸ்லிமுடைய ஹதீஸ்...


ஆக நீங்க எவ்வளவு தான் தனிய உக்காந்துக்கிட்டு எதைக் கேட்டாலும் யாருக்கு கேட்டாலும் உங்களுக்கென்று சாட்டப்பட்ட மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள்...


அப்ப எங்க தனித்து துஆ இருக்கு..??கூட்டு துஆ தான் இருக்கு..


#வலல்ழால்லீன் எனும் போது ஆமீன் சொல்கிறோமே இது விடயத்தில் #மலாயிக்கத்துமார்களின் ஆமீனோடு ஒன்றுபடுமானால் என்று ஏன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்விடத்தில் மலாயிக்கத்துமார்களை சேர்த்தார்கள்..?

சிந்திக்கவும்..!!


ஆமீன் என்றால் #இஸ்தஜிப் ஏற்றுக்கொள்வாயாக!!!

யகூதிகள் ஆமீனுடைய விடயத்தில் பொறாமை கொண்டது போல் வேறு எதிலும் பொறாமை கொள்ளவில்லை என்பது ஹதீஸ்...

யகூதிகளுக்கு மாறு செய்யுங்கள் என்பதும் ஹதீஸ்..


அப்ப ஆமீன் அதிகரிக்கப்பட வேண்டும்..ஆமீன் அதிகரிக்க துஆக்கள் அதிகரிக்க வேண்டும்...


எனவே தஸ்பீஹ் செய்வது போல சும்மா ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் என்று அதிகமாக சொல்லி யகூதிகளின் பொறாமைக்குணத்திற்கு மாறு செய்வதா..?துஆவுடன் ஆமீன் சொல்லி மாறு செய்வதா..?

இல்ல சும்மா ஆமீன் ஆமீன் ஆமீன் என்று கூறுவதில் என்ன உண்டு.?எதைக் கேட்டு ஆமீன் சொல்வது..?


சாரமாக!!நீங்கள் எவ்வளவு தான் தனியாக கத்தினாலும் கதறினாலும் அல்லாஹ்விடம் இறைஞ்சினாலும் #மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள்...


ஆமீன் சொல்பவர் மனிதனாக இருக்க வேண்டும்.சத்தம் காதில் கேட்க வேண்டும் என்ற குருட்டுத்தனமான விமர்சன நிபந்தனை கடல்லே இல்ல...அப்ப மலக்குமார்களின் ஆமீன் என்பதால் மார்க்கத்தில் கூட்டுதுஆவே தவிர தனித்து துஆவே இல்லை...


ஜனாஸா விடயத்தில் அவர் பற்றியதில் நல்லதையே சொல்லுங்கள் ஏனெனில் மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள் என்பதும் தெட்டத்தெளிவான ஸஹீஹ் முஸ்லிமுடைய ஹதீஸ்..


இப்ப தனியாக அவருக்காக எவ்வளவு துஆ செய்தாலும் மலக்குமார்களின் ஆமீன் உண்டு....ஆக தனித்து துஆ என்பது மார்க்கத்திலேயே இல்லை...


இப்ப அடுத்தகட்டம் வாங்க ஆதாரங்களோடு பேசலாம்..


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி 

ஏறாவூர் 

+94 77 444 77 57

Sunday, 25 February 2024

எல்லா பித்அத்தும் வழிகேடு

 

#எல்லா_பித்அத்தும்_வழிகேடே!!


இன்று உலகில் பரவலாக வஹ்ஹாபிய நஜ்திய கர்ணிகளால் மலிவாக விற்பனை செய்யப்படக்கூடிய பொருள் ""பித்அத்,, ""ஷிர்க்,,

மலிவான காரணம் அதன் தராதரம் தெரியவில்லை. ஷிர்க் என்றால் என்ன.? பித்அத் என்றால் என்ன.? என்பது பற்றி தெளிவில்லாத காரணத்தால் கண்டது, தொட்டதெல்லாம் ஷிர்க் பித்அத் என்று கூறி கூவி விற்பனை செய்யும் அங்காடி வியாபாரிகள் போல் மார்க்கம் அங்கீகரித்த நல்ல வழிபாடுகள்,நல் அமற்கள் எல்லாம் பேசு பொறுளாக்கி மார்க்கத்தையே கூறு போட்டு விற்கக்கூடிய நிலையை தான் கண்கூடாக காண்கிறோம்.


இது ஆண்டாண்டு காலமாக அன்று தொட்டு வந்ததல்ல.மாறாக 6 ம் 7 ம் நூற்றாண்டில் உருவாகி 11 ம் 12 ம் நூற்றாண்டில் பரவலாக வெடித்து சிதறிய சிறு சிறு துளிகளே வெடிகுண்டுகளாக உருமாறி ஷிர்க் பித்அத் என்ற ஆயுதமேந்தி தாங்கள் தான் தூய வடிவில் இஸ்லாத்தை பின்பற்றும் தூய்மையான புனிதர்கள் என்று போற்றிக்கொண்டிருக்கிறார்கள்.


அவ்வரிசையில் இப்புனித ரபிஉல் அவ்வல் மாதத்தில் வஹ்ஹாபிய கர்ணிகளுக்கு மௌலித் வரிகள் மரண ஓலங்களாக ஒலிக்க,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்மாலைகளை செவிசாய்க்க மனமில்லாது ஷைத்தானின் பொறாமை குணத்தை தனதாக்கி உள்ளத்தை மாசுபடுத்தி ""நபி புகழ் வேண்டாம்,, அது பித்அத், வழிகேடு என்று தங்களைத் தாங்களே நரகத்திற்கு தயார் செய்து கொண்டிருப்பதை ஆங்காங்கே காணமுடியும்.


""எல்லா பித்அத்தும் வழிகேடு - வழிகேடு எல்லாம் நரகம் செல்லும்,, 


இந்த ஹதீஸ் தான் அவர்களின் சட்டைப்பையில் இருக்கும் மூல மந்திரம்.எனவே 

كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار 

புதிதாக உருவாக்கூடிய எல்லாமே பித்அத்.எல்லா பித்அத்தும் வழிகேடு.எல்லா வழிகேடும் நரகம் செல்லும்.

என்றால் இதில் ""நல்ல பித்அத்,, بدعة حسنة என்றும் ""கெட்ட பித்அத்,,بدعة سيئة என்றும் நாம் சொல்வது போல் இந்த மார்க்கத்தில் இல்லையா...?

அல்லது வஹ்ஹாபிய கர்ணிகள் சொல்வது போல் அங்கே ( كل ) ""குல்லு,, எல்லாம் என்றால் நல்லது,கெட்டது என்றெல்லாம் இல்லை.எல்லாமே பித்அத்துத்தான் என்று தான் அரகுறையாக விளங்க வேண்டுமா..?


எல்லாம்( அனைத்தும்) كل ""குல்லு,,


 இந்த ""குல்லு,, என்பதற்குள் بعض ""பஃழு,, '"சில,, என்ற கருத்து உள் நுழையுமா...?

என்றால் நாம் ஆம் என்று சொல்கிறோம்.

ஆனால் வஹ்ஹாபிய கர்ணிகளின் வாதம் இல்லை என்பதே!எடுத்துக்காட்டாக 

كل نفس ذائقة الموت 

எல்லா ஆத்மாக்களும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும் என்று அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.

இதில் சில ஆத்மாக்கள் மரணிக்காது,சிலருக்கு மரணமில்லை என்று விளங்க முடியுமா..?

இல்லையே! எல்லா ஆத்மாக்களும் தானே மரணிக்க வேண்டும் என்பது வஹ்ஹாபிய நஜ்திகளில் கிதாப் படித்த ஒரு சிலரின் கருத்து.

ஏனைய ""குல்லு,, ம் எல்லோரும் மடயர்களே!!


(இதில் ""நப்ஸ்,, பற்றி ""குல்லு,, என்பதை வைத்து பேசினால் நீண்டு விடும்.அதே போல் வஹ்ஹாபிய கர்ணிகள் ""ஜஹ்மிய்யாக்கள்,, வழியிலும் நுழைந்து விடுவார்கள்.அதை வேறு பதிவுகளில் பார்வை இடலாம் இன்ஷா அல்லாஹ்)


காரணம் அல் குர்ஆன் படைக்கப்பட்டது என்று இப்படித்தான் முஃதஸிலாக்கள் வாதிட்டார்கள்.அதனால் தான் நாம் வஹ்ஹாபிகளை முஃதஸிலாக்கள் வழியில் வஹ்ஹாபிய கர்ணிகள் என்று சொல்கிறோம்.

ஏன்....? தங்களைத் தாங்களே 

أهل التوحيد والعدل 

நாங்கள் தான் தவ்ஹீத்வாதிகள்,நாங்கள் தான் நீதவான்கள் என்று இந்த உலகத்தில் தங்களை முதன் முதலில் அறிமுகம் செய்துகொண்டவர்கள் முஃதஸிலாக்கள்.அதே வரிசையில் தான் இந்த வஹ்ஹாபிகளும் உலா வருகிறார்கள்.


அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மஹுல்லாஹ் அவர்களோடு முஃதஸிலாக்கள் அல் குர்ஆன் படைக்கப்பட்டது என்பதை நிரூபிக்க விவாதிக்கும் போது 

أليس الله تعالى يقول الله خالق كل شيئ 

ஸுரத்துஸ் ஸுமர் அத்தியாயத்தில் வரும் 62 வது வனத்தில் ""அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் படைப்பவன்,, என்ற கருத்துள்ள வசனத்தை சொல்லி அல்லாஹ் எல்லாம் படைப்பவன் தானே என்று முஃதஸிலாக்கள் கேள்வி கேட்ட போது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மஹுல்லாஹ் ஆம் என்றார்கள்.

பின்னர் முஃதஸிலாக்கள் ஆம் என்றால் சரி அல் குர்ஆனும் படைக்கப்பட்டதே!! என்று இந்த வஹ்ஹாபிய நஜ்திய கர்ணிகள் போன்று அல்லாஹ் ""குல்லு,, எல்லாம் என்று தானே சொல்கிறான் என்று ""குல்லு,, என்பதற்கு 

عموم المطلق

பொதுவாகவே எல்லாம் பொதிந்து கொள்ளும் அங்கு எந்த நிபந்தனையும் நுழையாது என்ற வாதத்தை வைத்த போது அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மஹுல்லாஹ் முஃதஸிலாக்களின் வாதத்தை அவர்களின் அதே வரிசையில் உடைக்கிறார்கள் 

أوليس الله تعالى يقول في الريح التى أرسلها على عاد 

تدمر كل شيئ بأمر ربها


ஆத் கூட்டத்தினரை காற்றைக் கொண்டு அல்லாஹ் அழித்த விஷயம் சம்மந்தமாக 

""அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்து விடும்,, ( என்று சொல்லப்பட்டது) என்ற கருத்தை தரும் ஸுரதுல் அஹ்காஃப் 25 வது வசனத்தை சொல்லி நீங்கள் சொல்வது போல் அல்லாஹ் வானங்களையும் அழித்தானா.....?

அல்லாஹ் பூமியையும் அழித்தானா...?

இல்லையே!! ஆத் கூட்டத்தினரையும் அவர்களின் இருப்பிடங்கள் அவர்களின் பொருட்கள் இவைகளைத் தானே அழித்தான் என்று இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மஹுல்லாஹ் இங்கு உள்ள ""குல்லு,, என்பது எல்லாம் அல்ல இங்கு 

عموم مقيد 

பொதுவாக உள்ள விஷயத்தில் நிபந்தனையை கொடுத்து அங்கு எல்லாம் அல்ல அவர்களும் அவர்களோடு உள்ளவைகளும் மட்டுமே என்று விளக்கி முஃதஸிலாக்களின் வாதத்தை உடைத்தார்கள் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மஹுல்லாஹ்.


எனவே ""குல்லு,, كل என்பது எல்லா நேரத்திலும் எல்லாம் என்ற முழு விஷயத்தையும் எடுத்துக்கொள்ளாது.

மாற்றமாக ""குல்லு,, என்பது பல கருத்துக்களை பொதிந்துள்ளது.

அதில் ஒன்று عموم ""உமூம்,, பொதுப்படையானது.

அதனால் தான் ""மன்திக்,, منطق கலையில் 

ألفاظ العموم 

பொதுப்படையாக உள்ள வார்த்தைகள் பற்றி விரிவாக பேசுவார்கள்.

எனவே வஹ்ஹாபிய நஜ்திய கர்ணிகளே! முதலில் மார்க்கத்தை சரிவர படியுங்கள்.

அரபி நுனுக்கத்தை பிசகர அறிந்து அதன் ஆழங்களை அறிய பல கலைகள் உண்டு அவைகளை எல்லாம் சரிவர படியுங்கள் தெளிவு கிடைக்கும்.

எடுத்துக்காட்டாக 

أحكام كل وما عليه تدل 

""அஹ்காமு குல்லு வமா அலைஹி ததுல்லு,, 


என்று இமாம் தகியுத்தீன் அஸ் ஸுப்கி அஷ் ஷாபிஇ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் எழுதிய அழகிய கிதாப் உண்டு அதையாவது படியுங்கள்...

இமாம் தகிய்யுத்தீன் அஸ் ஸுப்கி ரஹ்மஹுல்லாஹ் உங்கள் மூத்த தலைவர் இப்னு தைமியாவின் சம காலத்தில் வாழ்ந்தவர்கள் தான்.உங்கள் மூத்த தலைவர் இப்னு தைமியாவின் வழிகெட்ட கருத்துக்களை உடைத்து இப்னு தைமியாவிற்கு பாடம் புகட்டிய மாமேதை தான் இமாம் அவர்கள்.


இப்போ மேலே சொல்லப்பட்ட வஹ்ஹாபிகள் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு உலா வரும் 

""எல்லா பித்அத்தும் வழிகேடு,, 

என்ற மூல மந்திர ஹதீஸுக்கு வாருங்கள்.

மேற்கூறிய விஷயங்களை வைத்து இந்த ஹதீஸை சிந்தித்துப் பாருங்கள் தெளிவு கிடைக்கும்.

அதனால் தான் மேலான இமாம்கள் ரஹ்மஹுமுல்லாஹ் இந்த ஹதீஸின் அடிப்படையை வைத்து பல ஞானங்களை கற்று அறிந்த கலைகளின் ஆழத்தை வைத்து ""பித்அத்,, என்பது எல்லாமே வழிகேடு அல்ல சில பித்அத் நல்லதும் உண்டு என்று விபரித்தார்கள். அந்த வரிசையில் ""முஜ்தஹித் முத்லக்,, ஆன ஹதீஸ் கலைக்கு வித்திட்ட நாற்பெரும் இமாம்களில் இமாமுனா ஷாபிஇ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள்.


""புதிதாக உருவாக்கப்படக்கூடிய காரியங்கள் இரண்டு வகை உண்டு.

01 அல் குர்ஆனுக்கும் அல் ஹதீஸுக்கும் ஸஹாபாக்களின் நடைமுறைகளுக்கும் இஜ்மாவுக்கும் மாற்றமாக உருவாக்கினால் அது 

بدعة ضلالة 

வழிகெட்ட பித்அத் என்றும் 

بدعة مذمومة 

இகழப்பட்ட பித்அத் என்றும் 

அதே சமயம் அல் குர்ஆன் அல் ஹதீஸ் ஸஹாபாக்கள் இஜ்மா இவைகளுக்கு மாற்றமில்லாமல் நலவான காரியங்களாக இருந்தால் அதற்கு 

بدعة محمودة 

بدعة حسنة 

அழகிய புகழப்பட்ட பித்அத் என்றும் சொல்லிக்காட்டுகிறார்கள்,,

இதை இமாம் அல் ஹாபிழ் பைஹகீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ஸஹீஹான ஸனதுடன் 

مناقب الشافعي 

""மனாகிபுஸ் ஷாபிஇ,, என்ற நூலில் பாகம் 01 பக்கம் 469 ல் சொல்லிக்காட்டுகிறார்கள்.


இமாம் பைஹகீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ஸஹீஹான ஸனதுடன் தங்களுடைய அல் மத்கல் - المدخل 

என்ற நூலில் பதிவு செய்கிறார்கள் என்பதை இருவகையாக பிரிக்கப்பட்ட நல்ல பித்அத் கெட்ட பித்அத் இவைகளை ஏற்று உங்களுடைய மூத்த தலைவர் இப்னு தைமியா அவர்களே தன்னுடைய மஜ்மூஃ பதாவா என்ற நூலில் பாகம் 20 பக்கம் 163 ல் பதிவு செய்கிறார்.

அதே போல் 

"" யார் பித்அத்தை நல்ல பித்அத் என்றும் கெட்ட பித்அத் என்றும் பிரித்தார்களோ அவர்கள் அது விரும்பத்தக்க செயல் என்பதற்கு ஷரீஅத்தின் பார்வையில் மேற்கோல் காட்டவும் வேண்டும்.அதே போல் பின்பற்றுவதற்கு தகுதியான இமாம்கள் நல்ல பித்அத் என்று ஆரம்பிக்கப்பட்ட அந்த விஷயம் விரும்பத்தக்கது என்று சொல்லி இருக்க வேண்டும்.,,, என்று அதே உங்கள் மூத்த தலைவர் இப்னு தைமியா அதே ""மஜ்மூஃ பதாவா,,, பாகம் 27 பக்கம் 152 ல் சொல்லிக்காட்டுகிறார்...


அதே போல் இமாம் ஷாபிஇ ரஹ்மஹுல்லாஹ் சொன்ன அதே கருத்தை ஏற்று தானும் தன்னுடைய 

الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان 

" அல் புஃர்கான் பைன அவ்லியாஇர் ரஹ்மான் வ அவ்லியாஇஸ் ஷைத்தான்,, என்ற நூலில் 162 ம் பக்கத்தில் சொல்லிக்காட்டுகிறார்....


மேற்கூறிய 27 ம் பாகத்தில் கூறிய அதே கருத்துக்கமைய இன்னும் சற்று தெளிவாகவே அதே இப்னு தைமியா தன்னுடைய 

قاعدة جليلة في التوسل والوسيلة 

""காஇததுன் ஜலீலா பித் தவஸ்ஸுலி வல் வஸீலா,, 

என்ற நூலில் 44 ம் பக்கத்தில் சொல்லிக்காட்டுகிறார்....


குறிப்பு: வஸீலா பற்றி மார்க்கத்திற்கு முரனான கருத்துக்களை எழுதி வஸீலா தேடுவது ஷிர்க் என்று இந்த கிதாபை எழுதிய காரணத்தால் அன்றைய காழிமார்களின் தீர்ப்பின் படி இப்னு தைமியா எகிப்தில் இரண்டு வாரம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ஹிஜ்ரி 707 -10 - 03 ல் இருந்து 707 - 10 - 18 வரை அடைக்கப்பட்டு மன்னிப்பின் பேரில் விடுதலையானார்...


இறுதியாக டமஸ்கஸ் இல் ஹிஜ்ரி 726 - 08- 06 ல் இருந்து 728 - 11- 20 வரை ஏறத்தாள 2 வருடம் 3 1/2 மாத காலம் வரை ஜெயிலில் அடைக்கப்பட்டு ஜெயிலினுள்ளேயே மரணம் அடைந்து ஜனாஸாவாக வெளியேற்றப்பட்டார்...

இரண்டு வருடம் ஜெயிலில் அடைக்கக் காரணம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸியாரத்திற்காக செய்யும் பயணம் பாவமான காரியம் தொழுகையை கூட சுருக்கித் தொழலாகாது என்று சொன்ன காரணத்தினால் அடைக்கப்பட்டார்.....


எனவே இப்னு தைமியாவில் இருந்து தான் ஊற்றெடுத்து இப்னு அப்துல் வஹ்ஹாப் அந் நஜ்தியில் காலத்தில் வெடித்து சிதறியது...


இப்பொழு சொல்லுங்கள் நஜ்திய வஹ்ஹாபிய கர்ணிகளே!!உங்கள் மூத்த தலைவருக்கு பித்அத் விஷயத்தில் உங்கள் தீர்ப்பு என்ன...?


எங்கள் இமாம்களின் கிதாபுகளைத்தான் நீங்கள் பார்ப்பதில்லை.ஏற்றுக்கொள்வதும் இல்லை என்று பார்த்தால் உங்கள் மூதாதையர்களின் கிதாபுகளையாவது பார்ப்பதில்லையா....?

முதலில் இப்னு தைமியாவின் எல்லா கிதாபுகளையும் நன்றாக வாசியுங்கள்..இப்னு தைமியாவின் எல்லாக் கிதாபுகளும் என்னிடம் உண்டு.தேவையா அனுப்பித் தருகிறேன்.முதலில் உங்கள் மூத்த தலைவரின் கிதாபை சரி வர படியுங்கள் உங்களுக்கு இன்னும் ஆப்பு அங்கு காத்துக்கொண்டிருக்கிறது..

அப்பொழுதே ஷைகுல் இஸ்லாம் என்று சொல்வதை விட்டுவிட்டு எங்கள் இமாம்களை தூற்றுவது போல் இப்னு தைமியாவிற்கும் தூற்றுவீர்கள்...ஏன் உங்களுக்கு தோதுவானதை மட்டும் மக்களிடம் சொல்கிரீர்கள்...?ஏனையவைகளை சொன்னால் நாடக மேடை உடைந்து விடும் என்பதினாலா....?


இப்னு தைமியா எங்களுக்கு ஒரு பொறுட்டே அல்ல.இவைகளை பதிவு செய்தது பித்அத்தின் வகைகளை ஏற்றுக் கொண்ட உங்கள் மூதாதை இப்னு தைமியாவிற்கு என்ன தீர்ப்பு.....?


இன்னும் நிறையவே நல்ல பித்அத் கெட்ட பித்அத் பற்றி இமாம்கள் ஆதாரத்தோடு தெளிவு படுத்தி இருக்கிறார்கள்.இன்ஷா அல்லாஹ் வேறு பதிவுகளில் பார்க்கலாம்....


இறுதியாக மேலே """ குல்லு,, பற்றி சொன்னதில் "" எல்லா பித்அதும் வழிகேடு,, என்பதை விளங்கி இருப்பீர்கள்..இன்னும் அதில் விரிவான தெளிவுகளும் உண்டு.இன்ஷா அல்லாஹ் பின் பார்க்கலாம்....


எங்கள் இமாம்கள் சொன்னதை உங்களால் எற்றுக்கொள்ளமுடியவில்லை.ஆனால் உங்கள் மூத்த தலைவர் இப்னு தைமியா சொன்னதை ஏற்றுக்கொள்கிரீர்கள்..


என்றால் தவ்ஹீத் 3 வகை 

தவ்ஹீத் ருபூபிய்யத் 

தவ்ஹீத் உலூஹிய்யத் 

தவ்ஹீத் அஸ்மாஉ வஸ் ஸிபாத் என்று எந்த குர்ஆனில் ஹதீஸில் இருந்து இந்த 3 வகை தவ்ஹீதை எடுத்தீர்கள் வஹ்ஹாபிய நஜ்திகளே....??


இது இப்னு தைமியா பிரித்தது தானே!!!

இமாம் ஷாபிஇ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் சொன்ன நல்ல பித்அத் கெட்ட பித்அத் என்ற இருவகை பித்அத்தை ஏற்க மறுக்கும் உங்கள் மனது தவ்ஹீத் 3 வகை என்று சொன்ன இப்னு தைமியாவின் கருத்தை ஏற்றுக்கொள்கிறது என்றால் மக்களிடம் நீங்கள் எதை நிலைநாட்ட முற்படுகிரீர்கள்......??


சரி இமாம் ஷாபிஇ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் சொன்ன இருவகை பித்அத்தை உங்கள் மூத்த தலைவர் இப்னு தைமியா ஏற்றுக்கொண்டார் தானே!!!

இதற்கு உங்கள் தீர்வு தான் என்ன.....??


ஆக நீங்கள் மார்க்க வியாபாரிகள் என்பது மட்டும் தெளிவு....


விரிவை அஞ்சி சிறு துளியோடு நிறைவு செய்கிறேன்.


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி 

ஏறாவூர்

+94 77 444 77 57

பராஅத் ரொட்டி

 









பராத் இரவு
Night of Baraath or Nisb Shahban

உலகில் பல நாடுகளிலும் வாழும் சமூகங்கள் தமக்கென்று அடையாளங்களை கொண்டிருக்கின்றன. 

பாரசீகர்களும் மத்திய ஆசியர்களும் ஆப்கானியர்களும் மார்ச் மாதத்தில் நவ்ரூஸ் என்ற புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.

 துருக்கியர்கள் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஒரு வகை புடினை தயாரிக்கிறார்கள். நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்தஆலா பெரும் வெள்ளத்தில் இருந்து பாதுகாத்தமைக்காக நன்றி கூறும் வகையில் அவர்கள் இந்த புடினை தயாரித்து பரிமாறுவார்கள். இதனை நபி நூஹின் புடின் என்று அழைப்பர். 

கலாசாரங்களும் பாரம்பரிய அடையாளங்களும் எமது இன அடையாளத்தின் தனித்துவ அம்சங்களாகும். மார்க்கதிற்கு முரண்படாத வகையிலான கலாசாரங்களையோ பண்பாடுகளையோ இஸ்லாம் எதிர்க்கவில்லை. கலாசாரத்துடன் சமயத்தை குழப்பிக்கொண்டு சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்த வேண்டிய எந்த தேவைகளும் கிடையாது. ஹம்ஸா யூசுப் பேராசிரியர் ஆரிப் அலி நாயித்,டாக்டர் மஹதீர் முஹம்மத், மலேசியாவின் ஜோஹார் மாநிலத்தின் மன்னர் சுல்தான் இப்றாஹீம் இஸ்கந்தர் போன்றவர்களும் இதனையே  வலியுறுத்தியிருக்கிறார்கள்

 இஸ்லாமிய சட்டவாக்கத்தில் உர்ப் அதாவது வழக்காறுகள் என்ற தனியான பிரிவு காணப்படுகிறது. ரோம டச்சு சட்டத்தில் கூட பாரம்பரியங்களும் வழக்காறுகளும் முக்கிய சட்டப் பிரிவாக அமைந்திருக்கின்றன. 

உதாரணமாக உலகின் பெரும்பால இடங்களில் நிஸ்புஷ் ஷஃபான் அனுஷ்டிக்கப்படுகிறது. ஊர் வழக்கத்தில் இதனை பராஆத் இரவு என்கிறார்கள். இந்த இரவில் மனிதனின் செயல்கள் விஷேடமாக இறைவனால் அவதானிக்கப்படுவதாக முன்சென்ற நல்லவர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள்.

உஸ்மானிய கிலாபத்தில் சுல்தான் முஹம்மத் பாதிஹ், முராத் கான், ஸலீம் அல் அவ்வல், அப்துல் ஹமீத் ஸானி போன்ற இறைநேசர்களாகவும் இருந்த சுல்தான்களின் ஆட்சியின் போது நிஸ்புஷ் ஷஃபான் அல்லது பராஅத் உடைய இரவில் பள்ளிவாசல்களும் பள்ளிவாசல்களுக்கு வெளியேயும் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும்.ஸ்தான்பூல் பாதிஹ் கொன்யா இஸ்மிர் போன்ற பிரதான நகரங்களில் உள்ள வீதிகளும் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பள்ளிவாசல்கள் அதிகாலை வரை திறந்திருக்கும்.

1923ம் ஆண்டி கிலாபத் ஒழிக்கப்பட்டு முஸ்தபா கமால் துருக்கியை குடியரசாக பிரகடனப்படுத்திய பின்னர் இந்த வழக்காறு இடைநிறுத்தப்பட்டது. மீண்டும் இந்த முறைமை துருக்கியில் இடம்பெறுவதைக் இப்போது காணமுடியும்.

 இலங்கையில் நிஸ்புஷ் ஷஃபான் / பராத் இரவில் வீடுகளிலிலும் பள்ளிவாசல்களிலும் ஒன்று சேர்ந்து ஆயுளை நீடிக்கவும், பலாய் முஸீபத்துக்களில் இருந்து தம்மை பாதுகாக்கவும் பிற மனிதர்களிடம் தங்கி வாழ்வதில் இருந்து தம்மை பாதுகாக்கவும் கோரி சூறா யாசீனை ஒதி துஆ செய்து ரொட்டி போன்ற உணவுகளை பரிமாறும் பழக்கம் மிக நீண்டகாலமாக பாரம்பரியமாக இலங்கையில் இருந்து வருகிறது. 

இது போன்ற நல்ல பழக்கங்களும் மரபுகளும் எமது சமூகத்தில் இருந்து இன்று மிக வேகமாக மங்கி வருகின்றன. பித்அத் சிர்க்கு போன்ற சொற்களால் நல்ல பாரம்பரிய நடைமுறைகளைக் கூட நாம் இழந்துவருகிறோம். பெரும்பாலானவற்றை இழந்துவிட்டோம். இவற்றை பேசினால் இணை வைத்தவர்களாக சமூகத்தில் இனங்காட்டப்படுவோம் ஹுப்புகள் என்றும் பிற்போக்குவாதிகள் எனவும் முத்திரைகுத்தப்படுகிறோம். 

ரசூலுல்லாஹிஸல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது வார்த்தைகளை, சங்கை மிக்க சஹாபாக்கள் நல்லடியார்களின் வாழ்வியலை  கண்ணியம் செய்து ஏற்று நடப்பதற்குப் பதிலாக அவற்றை லஈப் என்றும் மௌலூஃ என்றும் கூறி ஒதுக்கிவிடுதில் அதிகம் கரிசனை காட்டுகிறோம். இவ்வாறான போக்குகள் தொடருமாயின்  வரட்சியான பாண்பாடுகள் அற்ற சமூகமாகவே பயணிக்க வேண்டியிருக்கும் என்ற ஆதங்கம் அதிகமாகவே காணப்படுகிறது.

Berat Gecesi Münasebetiyle Fukaraya Dağıtılmak Üzere Atiyye İtası, 1908

படம் : உஸ்மானிய பேரரசில்  வசிக்கும் ஏழை மக்களுக்கு பராத் இரவு அன்று விஷேட பணத்தொகையை வழங்கும் வழக்கம் உஸ்மானிய ஆட்சியாளர்களிடம் இருந்து வந்தது. பராத் இரவன்று ஏழைகளுக்கு விஷேட பணத்தொகையை வழங்குமாறு 1908ம் ஆண்டில் வெளியிடப்பட்ட விஷேட சுற்றுநிருபம் (gazette)

பஸ்ஹான் நவாஸ்


Wednesday, 14 February 2024

ஏறாவூரில் புஹாரி தமாம்

 

இன்று ஏறாவூர் அப்துர் ரஹ்மான் மாவத்தையில் அமைந்துள்ள அப்துுர் ரஹ்மான் மஸ்ஜிதில் 30 நாட்களாக ஓதப்பட்டு வந்த பரக்கத் பொருந்திய புனித புஹாரி மஜ்லிஸ் இன்று மிகவும் சிறப்பான முறையில் தமாம் செய்யப்பட்டு மார்க்க உபதேசமும் விஷேட துஆஃ பிரார்த்தனையும் நடை பெற்றது.


 இந்நிகழ்வினைச் சிறப்பித்து நடாத்திய ஜமாத்தார்களுக்கும் உலமாக்களுக்கும் மத்ரஸா மாணவர்களுக்கும் தபர்ருக் வழங்கி வைக்கப்பப்டது. 


இதனை ஏற்பாடு செய்த அம்மஸ்ஜித் நிருவாகிகள், கலந்து கொண்டோர்,பங்களிப்பு செய்தோர்,30 நாட்களும் மார்க்க உபதேசம் செய்த உலமாக்கள் அனைவருக்கும் இம்மஜ்லிஸின் பொருட்டினால் அல்லாஹ் பர்கத் செய்வானாக இஸ்லாத்தின் கடமைகளை கடைபிடிக்கக்கூடிய நல்லடியார்களாக்கி வைப்பானாக ஆமீன்.

 புஹாரியுடை பரக்கத்தை பெற்றுக்கொண்ட நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக ஆமீன்
















Thursday, 8 February 2024

மிஃராஜ் நோன்பு மார்க்கத்தில் உண்டா?

 


  மௌலவி எம். ஏ. எம் அஸ்மிகான் (முஅய்யிதி)


றஜப் மாதம் பிறை இருபத்தி ஏழில் நோற்கப்படும் நோன்புக்கே மிஃறாஜ் நோன்பு எனப்படுகிறது. ஹதீஸ்களில் மிஃறாஜ் நோன்பு என நேரடியாக கூறப்படாவிட்டாலும் றஜப் மாதம் பிறை 27ல் நோன்பு நோற்கும் படி பல ஹதீஸ்கள் கூறப்பட்டுள்ளன. மக்கள் அது மிஃறாஜ் இடம்பெற்ற நாளாக இருப்பதால் அதனை மிஃறாஜ் நோன்பு என அழைக்கின்றனர்.


அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:


யார் றஜப் மாதம் இருபத்தி ஏழாவது நாள் நோன்பு நோற்கிறாரோ அவருக்கு அல்லாஹு தஆலா 60 மாதங்கள் நோன்பு நோற்ற நன்மையை எழுதுகிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


இந்த ஹதீஸை இமாம் அபூ மூஸா அல் மதீனி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அவர்களது 'பழாயிலுல்லயாலி வல் அய்யாமி' என்ற நூலில் ஷஹ்ர் இப்னு ஹவ்ஸப் வாயிலாக பதிவு செய்திருப்பதாக அல் ஹாபில் இறாகி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தஹ்ரீஜுல் இஹ்யா (2:209)ல் கூறியிருக்கிறார்கள்.


இந்த ஹதீஸ் ஹஸனுன் லிதாதிஹீ தரத்தைச் சார்ந்த ஆதாரபூர்வமான ஹதீஸாகும் என அபூ உமர் அஸ்ஸுலைமானி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மிஃறாஜ்

 


வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 460

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

#மிஃராஜ் #சிந்தனை


அல்லாஹ்வின் தூதர் நமது நபி முஹம்மது (#ﷺ) அவர்கள் இறைவனின் அழைப்பின் பேரில் மேற்கொண்ட பயணமான அல் இஸ்ரா வல் @highlight #மிஃராஜ் இந்த உலகம் முடியும் நாள் வரை வரவுள்ள இந்த உம்மத்திற்கு பல்வேறு பாடங்களையும் படிப்பினைகளையும் சொல்லிக் கொண்டே இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.


அல் இஸ்ரா வல் மிஃராஜை கடந்த கால அறிஞர் பெருமக்களும் சரி சமகால அறிஞர் பெருமக்களும் சரி பல்வேறு கோணங்களில் இந்த உம்மத்தின் கவனத்திற்கு ஆவணப்படுத்தி உள்ளார்கள்.


இஸ்ரா தொடர்பான வசனத்திற்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விரிவுரைகளை முஃபஸ்ஸிரீன்கள் எனும் விரிவுரையாளர்களும்,, மிஃராஜ் தொடர்பான நபிமொழிகளுக்கு விளக்கம் தருகிற முஹத்திஸீன்கள் ஆயிரக்கணக்கான விளக்கங்களையும் பதிவு செய்து இருக்கின்றனர்.


அந்த வகையில் இந்த உம்மத்திற்கு சிறு மற்றும் பெரு நூலாக ஆயிரக்கணக்கான நூல்களை அன்பளித்துள்ளனர்.


அந்த நூல்களை வாசித்துப் பார்த்து அதில் இருந்து பெறப்படும் தலையாய சிந்தனைகளை, கருத்துக்களை சமூக முற்றத்தில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் ஆலிம் பெருந்தகைகள் ஒவ்வொரு ஆண்டும் மிஃராஜ் இரவில் பயான்களின் மூலம் தந்து கொண்டிருக்கின்றனர்.


அந்த வகையில் இந்த "அல் இஸ்ரா வல் மிஃராஜ்" தருகிற மகத்தான சிந்தனைகளில் ஒன்று"ஒரு அடியார் அல்லாஹ்விற்கு விருப்பமான அடியாராக ஆகும் போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய சந்திப்பையும், அவனுடன் உரையாடுகிற நற்பேற்றையும், அவனிடத்தில் இருந்து சன்மானங்களையும், வெகுமதிகளையும் பெறுகிற தகுதியையும் அந்த அடியாருக்கு நாளை மறுமையில் வழங்கி கௌரவிப்பான்" என்கிற மகத்தான சிந்தனையைத் தாங்கி நிற்கிறது.


ஆகவே, அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய சந்திப்பின் மீதும் அவனுடன் உரையாடுவதன் மீதும் ஆவல் கொண்டு இந்த உலகில் நாம் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.


அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைப்படி மறுமையில் அல்லாஹ்வை பார்ப்பதும், அல்லாஹ்வின் சந்திப்பு என்பதும் உண்மையாகும், இதை மறுப்பது குஃப்ராகும்.


மறுமை நாளிலும் சுவனத்திலும், மூமின்கள் அல்லாஹ்வை அவன் நாட்டத்திற்கேற்ப பார்ப்பார்கள், இதுவே அஹ்லுஸ் சுன்னாஹ்வின் ஒருமித்த கருத்தாகும் (இஜ்மா)

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்: 

وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاضِرَةٌ ۝٢٢

அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்

إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌۭ ۝٢٣

தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.

மேலும் கூறுகிறான்:

۞ لِّلَّذِينَ أَحْسَنُوا۟ ٱلْحُسْنَىٰ وَزِيَادَة وَلَا يَرْهَقُ وُجُوهَهُمْ قَتَرٌۭ وَلَا ذِلَّةٌ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ ۝٢٦

நன்மை புரிந்தோருக்கு (உரிய கூலி) நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும்; அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது, அவர்கள் தாம் சவனபதிக்கு உரியவர்கள் - அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.


இந்த ஆயத்தில் “மேலும் அதிகம் உண்டு” எனும் வாக்கியத்திற்கு, நபி (ﷺ ) அவர்கள் “அல்லாஹ்வை பார்ப்பது” என்று விளக்கம் கூறியுள்ளார்கள். மற்றோர் ஆதாரப்பூர்வமான ஹதீஸில் மூமின்கள் அல்லாஹவை சுவனத்தில் பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார்கள்.


ஏனென்றால் அல்லாஹ்வை பார்பது தான் சுவனவாசிகள் பெருகிற இன்பங்களிலேயே மிகப்பெரிய இன்பமாகும். 


حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنِي الأَعْمَشُ، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ سَيُكَلِّمُهُ رَبُّهُ، لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ وَلاَ حِجَابٌ يَحْجُبُهُ

رواه البخاري 7443


உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமைநாளில் தனித் தனியாகப்) பேசாமலிருக்க மாட்டான். அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையே எந்த மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார்; தடுக்கின்ற திரையும் இருக்காது” என்று அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)நூல்: புகாரி 7443


 وَزِيَادَةٌ ﴾ [يونس: 26]، فروى مسلمٌ في تفسيرها عن صُهيْبٍ: أنَّ رسولَ الله - صلَّى الله عليْه وسلَّم - تلا هذه الآية: {لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ} وقال: ((إذا دخل أهْلُ الجنَّةِ الجنَّة، وأهلُ النَّار النَّار، نادى منادٍ: يا أهلَ الجنَّة، إنَّ لكم عنْدَ الله موعدًا يُريد أن يُنْجِزَكُمُوه، فيقولون: وما هو؟ ألَم يُثقِّل موازينَنا، ويبيِّض وجوهَنا، ويدخلْنا الجنَّة، ويزحزِحْنا من النَّار؟ قال: فيكشف لَهم الحجاب، فينظرون إليه، فواللَّهِ، ما أعْطاهمُ الله شيئًا أحبَّ إليْهِم من النَّظر إليْه، ولا أقرَّ لأعيُنِهم)).


நபி (ﷺ) அவர்கள், “நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமாகவும் உண்டு” என்ற (10:26) வசனத்தை ஓதினார்கள். “சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்ததும், “சுவனவாசிகளே! (இதுவரை) உங்களுக்கு அளிக்கப்படாத ஒரு வாக்குறுதி உங்களுக்குக் காத்திருக்கின்றது” என்று அழைப்பு விடுக்கப்படுவர். “அவன் எங்களது முகங்களை வெண்மையாக்கி, எங்களை சுவனத்தில் நுழையச் செய்யவில்லையா?” என்று அவர்கள் பதிலளிப்பார்கள். மீண்டும், “(இதுவரை) அளிக்கப்படாத வாக்குறுதி ஒன்று உங்களுக்குக் காத்திருக்கின்றது” என்று அவர்களிடம் கூறப்படும். அவர்கள் அதே போன்று பதிலளிப்பார்கள். அப்போது, பாக்கியமிக்கவனும் உயர்ந்தோனுமான அவர்களது இறைவன் “அப்போது அவன் திரையை விலக்குவான். அவர்கள் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த தங்களுடைய இறைவனின் முகத்தை அவர்கள் பார்ப்பார்கள். அவனைப் பார்ப்பதை விட வேறெதுவும் அவர்களுக்கு விருப்பமானதாகவும் கண்களுக்குக் குளிர்ச்சியானதாகவும் இருக்காது. அதிகம் என்பது இது தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்.


மேலும் , இது தான், “நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமாகவும் உண்டு” என்ற (10:26) அல்லாஹ்வின் சொல்லாகும் என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: சுஹைப் (ரலி), நூல்: முஸ்னத் அல்பஸ்ஸார் 328


في أخبار داود عليه السلام يا داود أبلغ أهل أرضي أني حبيب من أحبني، وجليس من جالسني، ومؤنس لمن أنس بذكري، وصاحب لمن صاحبني، ومختار لمن اختارني، ومطيع لمن أطاعني، ما أحبني أحد أعلم ذلك يقينا من قلبه إلا قبلته لنفسي، وأحببته حبا لا يتقدمه أحد من خلقي، من طلبني بالحق وجدني ومن طلب غيري لم يجدني فارفضوا يا أهل الأرض ما أنتم عليه من غرورها، وهلموا إلى كرامتي ومصاحبتي ومجالستي ومؤانستي، وآنسوني أؤنسكم، وأسارع إلى محبتكم.


தாவூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஜபூரிலே கூறிய கருத்தை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


தாவூத் அவர்களே!பூமியில் உள்ள எனது அடியார்களுக்கு நீங்கள் சொல்லுங்கள்.


யார் என்னை நேசிப்பார்களோ நான் அவர்களுடைய நேசன் ஆக இருக்கிறேன்.


யார் என்னோடு பேச விரும்புகிறார்களோ நான் அவர்களோடு பேசுகிறேன்.


யார் என்னுடைய நினைவில் மனமகிழ்ச்சியை காண்கிறார்களோ அவர்களுடைய மனதை நான் மகிழ்விப்பேன்.


யார் என்னோடு நட்பு வைக்க விரும்புகிறார்களோ நான் அவர்களுடைய நண்பனாக இருக்கின்றேன்.


யார் என்னை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்களோ நான் அவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்.


யார் எனக்கு கட்டுப்படுவார்களோ அவர்களுடைய கோரிக்கைகளை நான் நிறைவேற்றுவேன்.


என்னுடைய அடியான் என்னை நேசிக்கிறான் என்று தெரிந்துவிட்டால், நான் அவனை எனக்காக ஏற்றுக் கொள்கிறேன்.நானும் அவனை நேசிக்கிறேன்.என்னுடைய நேசத்தை போன்று அவனுக்கு வேண்டப்பட்டவர்களில் யாரும் அவனை நேசிக்க முடியாது.


உண்மையில் யார் என்னைத் தேடுகிறானோ அவன் என்னை பெற்றுக் கொள்வான்.


யார் என்னை விட்டு விட்டு உலகத்தை தேடுகின்றானோ அவன் ஒருக் காலும் என்னை அடைய முடியாது.


       பூமியில் உள்ளவர்களே! இந்த உலகத்தை கொண்டு ஏமாந்து இருப்பவர்களே! இதை நீங்கள் தூக்கி எறியுங்கள்.


       என்னுடைய கண்ணியத்தின் பக்கம் ஓடோடி வாருங்கள்.என்னோடு நட்புக் கொள்வதற்கு ஓடோடி வாருங்கள்.என்னோடு பேசுவதற்கு ஓடோடி வாருங்கள்.


       தனிமையில் அமர்ந்து என்னுடைய நினைவில் இன்பம் காணுவதற்கு ஓடோடி வாருங்கள்.நான் உங்களுக்கு இன்பத்தை தருகிறேன்.


       உங்களை நேசிப்பதற்கு நான் விரைந்து வருகிறேன்.

 ( நூல்: இத்ஹாபுஸ் ஸாதத்தில் முத்தகீன்-ஷரஹ் இஹ்யா உலூமித்தீன்)


இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்: "அல்லாஹ் உன்னுடன் உரையாட வேண்டும் என்று நீ விரும்பினால் குர்ஆன் ஓதுவதை நீ வழமையாக்கிக் கொள்! 


நீ அல்லாஹ் உடன் உரையாட விரும்பினால் துஆ கேட்பதை வழமையாக்கிக் கொள்!   


நீ அல்லாஹ்வுடனும், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உன்னுடனும் உரையாட வேண்டும் என்று விரும்பினால் (உபரியாக) தொழுவதை வழமையாக்கிக் கொள்!


இப்னு ஜாபிர் (ரஹ்) அறிவிக்கின்றார்கள்:- அப்துல்லாஹ் இப்னு அபூ ஜகரிய்யா (ரஹ்) அவர்கள் சொல்வார்களாம் "அல்லாஹ்வின் வணக்க வழிபாடுகளோடு நூறு வயது வரை வாழ்வது அல்லது வாழ்வின் இந்த நொடியிலேயே மரணிப்பது இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு இஷ்டம் தரப்பட்டால் அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில், அல்லாஹ்வின் தூதரை, ஸாலிஹீன்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இன்றே, இந்த நொடியே மரணித்து விடும் வாய்ப்பையே தேர்ந்தெடுப்பேன்" என்று. ( நூல்: தஹ்தீபுல் கமால் )


நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் ரப்புல் ஆலமீனை பார்க்க வேண்டும், சந்திக்க வேண்டும் என்று ஆவல் கொண்டவர்களாக இருந்தார்கள் என்று அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.


وَلَمَّا جَآءَ مُوْسٰى لِمِيْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ قَالَ رَبِّ اَرِنِىْۤ اَنْظُرْ اِلَيْكَ‌ قَالَ لَنْ تَرٰٮنِىْ وَلٰـكِنِ انْظُرْ اِلَى الْجَـبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰٮنِىْ‌ فَلَمَّا تَجَلّٰى رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰى صَعِقًا‌ فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَيْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِيْنَ‏


நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார். ( அல்குர்ஆன்: 7:143 )


                               மேலும், அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கூடுதலாக நேரம் எடுத்து பேசும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்று அல்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகின்றான்.

وَمَا تِلْكَ بِيَمِيْنِكَ يٰمُوْسٰى‏

“மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?” (என்றும் அல்லாஹ் கேட்டான்.)

قَالَ هِىَ عَصَاىَ‌ۚ اَتَوَكَّؤُا عَلَيْهَا وَاَهُشُّ بِهَا عَلٰى غَـنَمِىْ وَلِىَ فِيْهَا مَاٰرِبُ اُخْرٰى‏


(அதற்கவர்) “இது என்னுடைய கைத்தடி; இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன்; இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன்; இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன” என்று கூறினார்.   

قَالَ اَلْقِهَا يٰمُوْسٰى‏


அதற்கு (இறைவன்) “மூஸாவே! அதை நீர் கீழே எறியும்” என்றான்.

فَاَلْقٰٮهَا فَاِذَا هِىَ حَيَّةٌ تَسْعٰى‏


அவ்வாறே அவர் அதனைக் கீழே எறிந்தார்; அப்போது அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று.


قَالَ خُذْهَا وَلَا تَخَفْ‌ سَنُعِيْدُهَا سِيْرَتَهَا الْاُوْلٰى‏


(இறைவன்) கூறினான்: “அதைப் பிடியும்; பயப்படாதீர்; உடனே நாம் அதை அதன் பழைய நிலைக்கே மீட்டுவோம்.” ( அல்குர்ஆன்: 20: 17 - 21 )


அல்லாஹ்வை சந்திக்கும் மகத்தான பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்கப் பெறுதில்லை. மாறாக, யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கமலும், நல்ல அமல்களைச் செய்பவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களுக்குத் தான் முதலாவதாக இந்த அருட்பாக்கியம் கிடைக்கும்.


“நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் இறைவன் ஒரே ஒரு இறைவனே! என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்‘ என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 18:110)


இணை வைக்காமலும் நல்ல அமல்களைச் செய்பவர்களாகவும், இருந்தால் மட்டும் போதாது. மேலும், தொழுகைகளைப் பேணித் தொழுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

@followers 

தொடரும்........

Tuesday, 6 February 2024

குழப்பம் செய்வது அவர்களின் கொள்கை


 மீலாதுன் நபி கொண்டாட்டத்தின் போது ரபிய்யுள் அவ்வல் 12 இலேதான் நபிகளார் பிறந்தார்ளா என்றும் அது அவர்கள் மரணித்த நாள் என்று கூறி வஹ்ஹாபிகள் அந்த தினத்தை கொண்டாடமல் விடுவதற்கும் மீலாது கூடாது என்று கூறுவதற்கும் படாத பாடு படுத்துவார்கள் இது யஹூதிகளின் சதித்திட்டம் என்பதைக்கூட இவர்கள் அறியவில்லை


அதேபோல் மிஃராஜ் இரவு ரஜப் மாதம் 27 இல் தான் நபிகளார் மிஃராஜ் சென்றதற்கு பலமான ஆதாரமில்லை என்று கூறி இந்த தினத்தில் முஸ்லிம்களால் முஃமின்களால்

கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற நல்லமல்களில் மண்ணை அள்ளி போட பல பிராயத்தணங்களை இந்த யஹூதி நஸாராக்களது கைக்கூலிகளான வஹ்ஹாபிச வழிகேடர்களால் மேற்கொண்டு வருகின்றனர்.


இதேபோல் தான் ஷஃபான் மாதம் 15 ஆம் நாளில் பராஅத் இரவு ஒன்று இல்லை என்றும் நபிகளார் அப்படி அந்த தினத்தில் விசேட வழிபாடுகள் எதையும் காட்டி தரவில்லை என்றும் கூறி குறித்த தினத்தில் முஸ்லிம்களால் முஃமின்களால் செய்து வருகின்ற தர்மம் செய்தல் நோன்பு நோற்றல் போன்ற நல்லமல்களில் மண்ணை அள்ளி போட படாத பாடு படுத்துகிறார்கள்.


ஆனால் ரபிய்யுள் அவ்வலில் ஏதோ ஒரு தினத்தில் நபிகளார் பிறந்திருந்தாலும் அந்த பிறப்பை கொண்டாடுவது அந்த ரஹ்மதுல் லில் ஆலமீனை அருளாக எடுத்து அவர்கள் மீது மீலாது விழா கொண்டாடுவதை ஏன் இந்த வழிகேட்டு வஹ்ஹாபிச கொள்கை வாதிகள் தடுக்க வேண்டும்? நபிகளார் காலத்தில் அது செய்யவில்லை ஆகவே நபிகளாரின் மீலாதும் கொண்டாட தேவையில்லை என்று கூறுவதாக இருந்தால் நபிகளாரின் காலத்தில் இல்லாத கூட்டு தறாவீஹ்,கூட்டு ஸகாத் வசூலிப்பு,குர்ஆனை ஒன்று திரட்டியமை,தர்ஜுமதுல் குர்ஆன்,ஸஹீஹா ல் ஈபா என ஹதீஸ்களை தரம்பிரித்தரியும் முறை, ஹதீஸ் கிரந்தங்கள், விரிவுரை நூற்கள்,முபஸ்ஸிரீன்கள்,வீடியோ பயான்கள், பளிங்கு கல் ஸஜ்தாக்கள், காற்சட்டை தொழுகைகள்,மதீனா யுனிவர்ஸிட்டிகள், குளிரூட்டப்பட்ட. பள்ளிவாசல்கள், குளிரூட்டப்பட்ட மார்க்கம் சார்ந்த மற்றும் மார்க்கம் சாராத வகுப்பறைகள்,யூடியூப் மூலமாக பயான்கள் எதுவுமே நபிகளாரின் காலத்தில் காணப்படவில்லை அப்படியானால் இதுவும் புதிதாக உருவாக்கப்பட்டது தானே அப்படியானால் இவற்றை பின்பற்றி வருபவர்கள் எல்லோரும் நரகவாசிகள் என்றால் இப்படி பேசபவர்களின் நிலையும் அதுவாக தானே இருக்க முடியும்?


ஆகவே நல்லதொரு விடயத்தை செய்வதற்கான ஆதரவும்,வரவேற்பும் உற்சாகமூட்டலும் இமாம்களின் தீர்ப்பும் மார்க்க பெரியார்களின் வழிகாட்டுதல்களும் முன்மாதிரிகளும் இருக்கும் என்றால் அதை அப்படியே செய்து விட்டு செல்வது தான் நமக்குள்ள வேலையும் கடமையும் என்றிருந்தால் யஹுதிகளது குழப்பத்தை நாம் தலையில் போட்டு தானும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்பத்துக்குள்ளாக்க வேண்டிய அவசியம் இருக்காது.


ரஜப் மாதத்தில் ஏதோ ஒரு நாளில் நபிகளார் மிஃராஜ் சென்றார்கள் என்று எடுத்து கொண்டு அந்த நிகழ்வையும் அந்த மாதத்தை கண்ணியம் செய்யும் பொருட்டும் முன்னோர்களான மார்க்கத்தின் வழிகாட்டுதல்களை சிறப்பாக எடுத்து கூறிய இமாம்களது தீர்ப்பு க்களை வைத்து அந்த தினத்தை ரஜப் மாதம் 27 இல் வைத்து அதில் நல்லமல்கள் செய்வதை ஏன் இந்த வழிகேட்டு வஹ்ஹாபிகள் தவிர்க்கவும் தடுக்கவும் முற்பட வேண்டும்?

யஹுதிகளுக்குதான் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் விண்ணுலக பயணம் எரிச்சலாகவும் ,கேலியாகவும்,மதிக்காத ஒரு நிகழ்வாகவும் இருக்கும் மாறாக முஸ்லிம்களுக்கும்,முஃமின்கள்,நல்லடியார்களுக்கும் அது மகத்தான சாதனை புரிந்த நாளாகும் அல்லாஹ் அண்ணலாரை கௌரலித்த நிகழ்வாகும் மேலும் முஸ்லிம்களுக்கே இந்த ரஜப் மாதம் முக்கியத்துவமானனதாகும் இதை இல்லாமல் செய்ய திகதிகளில் சர்ச்சையை ஏற்படுத்தி அந்த சர்ச்சையை மக்கள் மத்தியில் நுழைத்து நபிகளாரின் கௌரவத்தை அவமதிப்பதற்காக யஹூதிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த சதிகளில் ஏன் தான் இந்த முஸ்லிம் பெயர் தாங்கிகளும் சிக்குண்டாகி அதை விமர்சிக்க வேண்டும்?


ரஜப் 20 ஆக இருந்தால் என்ன ரஜப் 25 ஆக இருந்தால் என்ன ரஜப் 27 ஆக இருந்தால் என்ன எந்த திகதி என்று சரியாக அறியப்படவில்லை என்றால் அந்த திகதி ரஜப் 27 என்று இமாம்கள் குறிப்புணர்த்தி இருந்தால் அதை எடுப்பது தான் சரியான அனுகு முறையே தவிர அதை நாமே சந்தேகத்துக்குள்ளாக்கி எந்த ஒரு தினத்திலும் அந்த மாதத்தில் நல்லமல்கள் எதுவும் செய்யாமல் தானும் தவிர்த்து பிறரையும் தடுப்பதல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.


உதாரணமாக பழைய காலத்தில் வீடுகளிலேயே குழந்தை பிரசவம் நடைபெறும் அப்போது அவர்களுக்கு சரியான பிறப்பு சான்றிதழ் பத்திரங்கள் கூட இருக்கவில்லை இந்த நிலையில் தற்காலத்தில் அவர்களின் பிறந்த நாள் இதுதான் என்று ஊகத்தின் அடிப்படையில் அரச கொடுப்பனவுகள் ஆட்பதிவுகளுக்கு ஏதோ ஒரு எடுகோள் மதிப்பின் படி பிறந்த நாள் ஒன்றை போட்டு உரிய ஆளடையாள அட்டையையும்,ஆவணங்களையும் செய்கிறோமா இல்லையா? எத்தனை பழைய மக்கள் இப்படி செய்து ஹஜ் உம்ரா கடமைகளை செய்து வருகின்றனர்.


இந்த விடயத்தை பிழைகண்டு சர்ச்சையை ஏற்படுத்தி கொண்டு இருந்தால் எந்த முயற்சியும் செய்யமுடியாமல் குறித்த விடயம் பிழையானது என கூறி கொண்டு தனக்கு தானே பத்வாக்களை வழங்கி கொண்டு அவர்களது ஹஜ் உம்ரா கடமைகளை கூட செய்யாமல் செய்ய விடாமல் இத்தகைய வாதங்களை முன்வைத்து கொண்டு யஹூதி நஸாராக்களது எதிர் பார்ப்புக்களை நிறைவேற்றி கொடுப்பவர்களாக இருக்க வேண்டியிருக்கும்.


ஆனால் இது விடயத்தில் இவ்வாறு செய்வதில்லை ஏனெனில் இப்படி செய்வதால் மக்கள் மத்தியில் தமது மூடத்தனம் இன்னும் தெளிவாக விளங்கிவிடும் அதனால் அவர்களிடம் கொள்கைப்பிழைப்பு நடத்த முடியாது என்ற பயம்தான்.


அதேபோல் தான் ஷஃபான் மாதத்தில் பதினைந்தாவது நாள் நோன்பு நோற்பது ஸுன்னத்து என்றால் அதை எந்த பெயரை வைத்து கொண்டு நோன்பு நோற்றாலும் எந்த பெயரை வைத்து கொண்டு இரவில் நல்லமல்கள் புரிந்தாலும் அந்த தினத்தை கண்ணியப்படுத்தியவர்களாகவே நாம் ஆகிவிடுவோம் மாறாக இஸ்லாம் ஹறாமாக்கிய ஒன்றையோ வேண்டாம் என தெளிவாக தடுத்த ஒன்றையோ தவிர்த்து ஏனைய நல்லமல்கள் செய்வதற்கான பொதுவான ஏவல் அனுமதி அடிப்படையில் தான் அவைகள் செய்யப்படுகின்றன.மேலும் மார்க்க வழிகாட்டிகளான இமாம்கள் இப்படித்தான் வழிகாட்டி இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொண்டு முன்னோர்களின் வழியில் சென்று அதன் மூலம் நல்லமல்கள் செய்து அந்த தினத்தில் அல்லாஹ்வும் அவனது தூதரும் வழிகாட்டிய விடயங்களை செய்வது தான் நமக்குள்ள கடமையும் பொறுப்பும் ஆகும்.


ஆழ்கடலில் நாம் திக்கு திசை தெரியாமல் தவிக்கும் போது அங்கே வருட காலமாக கடல் பயணத்தில் இருக்கும் மற்றும் ஒரு படகின் சாரதி நமக்கு சரியான திசையும் வழியும் காட்டுவார்கள் என்று நம்பிக்கை கொண்டு அவனை பின்பற்றி எப்படி கரையை அடைய முடியும் என நம்பலாமோ அதேபோல் மார்க்கத்தை விளங்கி அதை ஆராய்ந்து எமக்கான வாழ்வியல் பாதைகளை வழிகாட்டி வரும் இமாம்களையும், ஹக்கான இஸ்லாமிய அறிஞர்களையும் நம்பினால் அவர்கள் காட்டிய பிரகாரம் எமது மார்க்க விடயங்களை கடைப்பிடித்தால் நாமும் வழி தவற மாட்டோம் என்பதே வெள்ளிடை மலையாகும்.


சரியான அனுகு முறையாகும் மாறாக தடி எடுத்தவன் எல்லாம் வேட்டை காரணாக போய்விடுவதால் தான் மார்க்கத்தின் பெயரால் இவ்வளவு பிரிவுகளும் பிரிவினைகளும் பித்னாக்களும் ஆகும் என்பதை இனிமேலாவது சிந்தனை செய்து யஹூதி நஸாராக்களது சதிகளில் சிக்கி ஈமானை இழந்த கூட்டத்தில் சேராமல் இருப்பதற்கு வல்லவன் அல்லாஹ் நம்மனைவருக்கும் அருள் புரிவானாகவும் ஆமீன்.


எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்

7/2/2024

Sunday, 4 February 2024

இலங்கையின் சுதந்திரத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்புக்கள்

 


இலங்கைக்கு கி.பி. 1505ஆம் ஆண்டு போர்த்துக்கேயரின் வருகை முதல் 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடையும் வரை, அதாவது ஏறத்தாள 443 வருடங்கள் மூன்று பலம்வாய்ந்த மேற்கத்தைய நாடுகளின் கலானித்துவத்தின் கீழ் இலங்கை இருந்தது. இலங்கையின் சுதந்திரப் போராட்டங்கள் பற்றி நோக்கும்போது போர்த்துக்கேயர் முதல் ஆங்கிலேயர் காலம் வரையில் நடைபெற்ற நிகழ்வுகளை கருத்தில் கொள்வதே பொருத்தமானதாகும். இலங்கையில் போர்த்துக்கேயரின் வருகையினைத் தொடர்ந்து இலங்கைக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் முற்றாக பாதிப்படைந்தன. போர்த்துக்கேய காலனித்துவத்தின் போது முஸ்லிம்களின் மதரீதியான உரிமைகள் மறுக்கப்பட்டன. இலங்கையின் கரையோரப் பகுதிகளின் காணப்பட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிவாசல்களும், இஸ்லாமிய அடையாளச் சின்னங்களும் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டன என்று சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 


போர்த்துக்கேயரின் வருகையின் பின்னர், கோட்டே இராச்சியம் மூன்றாகப் பிரிந்தது. இது வரலாற்றில் 'விஜயபா கொள்ளய' என்று அறியப்படுகின்றது. கோட்டை இராச்சியத்துடன் நெருக்கமான தொடர்புகளை பேணிவந்த போர்த்துக்கேயரின் உத்தரவுக்கு அமைய கோட்டை இராச்சிய மன்னனால் அங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். இதுவே இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட முதலாவது நிகழ்வாகும். கோட்டை இராச்சியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு சீதாவக்கை இராச்சியத்தின் மன்னர் மாயாதுன்ன தனது இடங்களில் குடியேறுவதற்கு உதவிசெய்தார். மேலும், போர்த்துக்கேய காலனித்துவவாதிகளுடன் யுத்தம் செய்வதற்காக கேரளாவின் ஸமோரின் இராச்சியத்தின் கடற்படைத்தளபதியான குஞ்சாலி மரிக்கார் அவர்களின் படையின் உதவியை மாயதுன்னை அரசன் கோரினான். அதன் அடிப்படையில் முதலாவது குஞ்சாலி மரிக்காரான குட்டியலி மரிக்கார் அவர்களின் தலைமையிலான படை இலங்கைக்கு நான்கு தடவைகள் வந்து போர்த்துக்கேயருக்கு எதிரான யுத்தங்களில் ஈடுபட்டு போர்த்துக்கேய படையினருக்கு எதிராக பெருமளவான சேதங்களை ஏற்படுத்தியது. இறுதியாக புத்தளம் கடல் பகுதியில் இடம்பெற்ற போரின் போது போர்த்துக்கேயப்படையினரின் தாக்குதலால் முதலாவது குஞ்சாலி மரிக்கார் ஷஹீதாக்கப்பட்டார். அவர்களின் உடல் சிலாபம் மலே பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. போர்த்துக்கேயர் தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு வந்த காலப்பகுதியில் இலங்கையிலும், தென்னிந்தியாவில் இஸ்லாமிய பிரச்சாரங்களில் ஈடுபட்டு இஸ்லாத்தை பாதுகாத்தவர்களாக நாகூர் சாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அறியப்படுகின்றார். காதிரி வழியமைப்பைச் சேர்ந்த சாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மாணவராக முதலாவது குஞ்சாலி மரிக்கார் (குட்டியலி மரிக்கார்) இருந்தார்கள். மேலும், சாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கு 404 மாணவர்கள் காணப்பட்டார்கள் இவர்கள் போர்த்துக்கேய காலனித்துவத்திற்கு எதிராக போராடிய சுதந்திர வீரர்கள் ஆவார்கள். நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 404 சீடர்களில் ஒருவரான காயல்பட்டிணத்தைச் சேர்ந்த செய்ஹ் ஸதக் இப்ராஹீம் மரிக்கார் அவர்கள் குஞ்சாலி மரிக்காரினது படையின் தளபதிகளில் ஒருவராக காணப்பட்டதோடுஇ போர்த்துக்கேயருக்கு எதிராக இந்தியாவின் தென்கடலில் நடந்த யுத்தமொன்றில் 'மெனுவல் டீ சூசா' என்ற போர்த்துக்கேய தளபதியின் கப்பலை மூழ்கடித்தார்.


கி.பி 1630 ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி போர்த்துக்கேயருக்கும் இரண்டாம் ராஜசிங்க மன்னனுக்கும் இடையில் மெனராகலை மாவட்டத்தில் உள்ள வெல்லவாய பகுதியில் யுத்தம் இடம்பெற்றது. இதில் இலங்கை முஸ்லிம்களும் அரபிகளும் ஓட்டகத்தில் ஏறி போர்த்துக்கேயருக்கு எதிராக யுத்தம் செய்தார்கள். இந்தப் படை ஒட்டு பலகாய ඔටු හමුදාව (ஒட்டகப் இராணுவம்) என்று அழைக்கப்பட்டது. வெல்லவாய யுத்தத்தில் முஸ்லிங்கள் வழங்கிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் நுவரெலிய ஹங்குராங்கெத்த தேவாலயத்தின் சுவரில் முஸ்லிங்களின் ஒட்டகப் படையை சித்தரிக்கும் வகையில் ஒரு சித்திரம் வரையப்பட்டுள்ளது. இந்த ஒட்டகப்படையினரே போர்த்துகேயருக்கு எதிராகப் போராடினார்கள். இவர்கள் அரேபியாவில் இருந்து ஒட்டகங்களை மன்னார் துறைமுகத்திற்கு எடுத்துவந்ததாகவும் இதன் போது பெருக்கமரம் எனப்படும் ஒட்டகங்கள் சாப்பிடும் 'Baobab' என்ற மரத்தை மன்னார் நகரில் நாட்டினார்கள் என்றும் வரலாற்று ஆசிரியர் ஹென்ரி கொரயா அவர்கள் குறிப்பிடுகிறார்கள். 


ஆங்கிலேய காலனித்துவத்திற்கு எதிராக செயற்பட்ட கிழக்கு மாகணத்தைச் சேர்ந்த ஏழு முஸ்லிம்கள் 1804ஆம் ஆண்டு பிரித்தானியாவின் பகைவர்களாக பிரகடணப்படுத்தப்பட்டனர். அவர்களில் நால்வர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், மூவர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 

2017ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஆங்கிலேய காலனித்துவத்திற்கு எதிராக செயற்பட்டு பிரித்தானியாவின் பகைவர்களாக அறிவிக்கப்பட்டிருந்த 19பேர், தேசிய வீரர்களாக வர்த்தமானியின் மூலம் அறிவிக்கப்பட்டது, ஆனால் பிரித்தானிய காலனித்துவத்திற்கு எதிராகச் செயற்பட்டு பகைவர்களாக அறிவிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட 7 முஸ்லிம்களின் பெயர்கள் அதில் உள்ளடக்கப்படவில்லை என்பது

கவலைக்குரிய விடயமாகும்.


19ஆம் நூற்றாண்டு என்பது இலங்கை மக்களின் ஆன்மீக, கல்வி மற்றும் சமூக மறுமலர்ச்சிக்குரிய நூற்றாண்டு என்று குறிப்பிட முடியும். ஏனெனில் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த அறிஞர்கள் தமது மக்களின் ஆன்மீக, கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்கான சேவைகளை மேற்கொண்டார்கள். இக்காலப் பகுதியிலேயே இலங்கையில் பாடசலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இக்காலப் பகுதியில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பல அறிஞர்கள் ஆன்மீக, கல்வி மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கு பங்களிப்புச் செய்தார்கள். அதில் முதன்மையானவர்களாக இமாமமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களை குறிப்பிட முடியும். இவர்கள் இலங்கையில் 350இற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களையும், கல்விக்கூடங்களையும் அமைத்தார்கள். யெமனில் இருந்து இலங்கைக்கு வருகைதந்த அஹ்மத் இப்கு முபாரக் மௌலானா (ரஹிமஹுல்லாஹ்) மற்றும் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (ரஹிமஹுல்லாஹ்) இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக மற்றும் கல்வித்துறைக்கு பங்களிப்புச் செய்தார்கள். காதிரிய்யா வழியமைப்பின் செய்ஹாக இருந்த அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மாணவர்களாக அறிஞர் சித்திலெப்பை மற்றும் வாப்பிச்சி மரிக்கார் ஆகியோர் இருந்தார்கள். அக்காலப் பகுதியில் எகிப்தில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட எகிப்தின் விடுதலை வீரர் ஒராபி பாட்சா அவர்களின் வருகை இவர்கள் இருவருக்கும் இலங்கையின் பல இடங்களில் முஸ்லிம்களுக்கான பாடசலைகளை அமைப்பதற்கு உறுதுணையாக அமைந்ததது. அதேபோல் செய்கு முஸ்தபா (ரஹிமஹுல்லாஹ்), கசாவத்தை

ஆலிம் புலவர் போன்றவர்களும் இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக மறுமலர்ச்சிக்கு பங்களிப்புச் செய்தார்கள்.  


1945ஆம் ஆண்டு இலங்கையின் முஸ்லிம்கள் சார்பாக சோல்பரி ஆணைக்குழுவின் முன்னால் டி. பி. ஜாயா அவர்கள் சாட்சியம் அளித்தார்கள். அதன்போது, அடுத்த சமூகங்களைப் போலவே இலங்கை முஸ்லிம்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றபோதும், தமது மக்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைப்பதைவிட இலங்கை சுதந்திரம் அடைவதேயே தாம் விரும்புவதாக அவர்கள் குறிப்பிட்டார்கள். எனவேதான், டி.பி. ஜாயா அவர்கள் இலங்கையின் சுதந்திர வீரர்களுள் முக்கியமான ஒருவராக கருதப்படுகின்றார்கள். இவர்கள் போன்றே பல முஸ்லிம் தலைவர்கள் இலங்கையின் சுதந்திரம் அடைவதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களிப்புச் செய்துள்ளார்கள். எனவே, இன்று 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேலையில், எமது முன்னோர்கள் எமது நாட்டிற்கும், சமூகத்திற்கும் செய்துள்ள சேவைகளை ஞாபகப்படுத்துவதுடன், அவர்களின் சரிதங்களில் இருந்து படிப்பினைகளை பெற்றுக்கொள்வோம். 


தொகுப்பு : இப்ஹாம் நவாஸ்  

Saturday, 3 February 2024

இஸ்ராவும் மிஃராஜும்

 

#ரஜப்_பிறை_27_ல்_இஸ்ராவும்_மிஃறாஜும்_மிஃறாஜ்_நோன்பும்


உம்மத்தே முஹம்மதிய்யா என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமுதாயத்தினர் என்று பெருமையாக பேசுகிறார்கள் ஆனால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த திகதி தெரியவில்லை.ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃறாஜ் எனும் விண்ணுலக யாத்திரை எப்போது போனார்கள் என்பது தெரியவில்லை..


என்றால் இந்த ஷரீஅத்திற்கு சொந்தமான ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி எப்படி போதிக்கிரீர்கள்..?

எப்படி பெருமையாக உம்மத்தே முஹம்மதிய்யா என்று சொல்லிக்கொள்கிரீர்கள்..?என்பதே வினோதம்!!


மார்க்க கல்வியை சரிவர ஆழ படித்தால் ஏன் இந்த குழப்பம்.?ஹதீஸில் வரக்கூடிய ஓர் அறிவிப்பாளரின் தரவுகளை எப்படி பெற்றீர்கள்..?உதாரணமாக ஒருவரைப் பற்றி சில ஹதீஸ் கலை வல்லுனர்கள் #குறை சொல்கிறார்கள்.பலர் #நிறைவாக பேசுகிறார்கள் எனும் போது இதில் என்ன தீர்ப்பை எடுப்பது.? இன்னும் தெளிவாக சொல்லப்போனால் அல் ஹாபிழ் இமாம் ஹாகிம் ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ஒரு ஹதீஸை ஸஹீஹ் என்பார்கள்.அதே ஹதீஸை அல் ஹாபிழ் இமாம் தஹபி ரஹ்மஹுல்லாஹ் ழயீப் என்பார்கள்..இதை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது..?


இதே அடிப்படையில் நேர்கோட்டில் வாருங்கள்...


ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினம் ரபிஉல் அவ்வல் பிறை 12 என்று நாம் சொல்கிறோம்.ஆனால் வேறு திகதிகளையும் சொல்லிக்காட்டுகிறார்கள்...இது வரலாற்று ஆசிரியர்களிடத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடு.


அஸ்ஸீரதுன் நபவிய்யா இப்னு ஹிஷாம் ரஹ்மஹுல்லாஹ் அல் பிதாயா வன் நிஹாயா இமாம் அல் ஹாபிழ் இப்னு கதீர் ரஹ்மஹுல்லாஹ் அஸ்ஸீரதுல் ஹலபிய்யா நூருத்தீன் அல் ஹலபி ரஹ்மஹுல்லாஹ் அஸ்ஸீரதுன் நபவிய்யா இமாம் அல் ஹாபிழ் இப்னு கதீர் ரஹ்மஹுல்லாஹ் இப்படி பல வரலாற்று நூற்களைப் பாருங்கள் வரக்கூடிய கருத்துக்களை சொல்லிவிட்டு அதில் #பிரபலமான_சொல் #அதிகப்படியான_இமாம்களிடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல் ரபிஉல் அவ்வல் பிறை 12 என்பதே!!

இருக்கா..?இல்லியா..?என்பதை பாருங்கள்..இது தவிர பிறை 12 ல் தான் பிறந்தார்கள் என்பதற்கு வேறு பல செய்திகளையும் நாம் சொல்வோம் அதுவல்ல இப்பதிவு....


அதே சமயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வபாத் ஆனது தான் ரபிஉல் அவ்வல் பிறை 12 அதில் மாற்றுக்கருத்து இல்லை.தெளிவான ஆதாரம் அது என்று சொல்கிரீர்கள்..அப்ப நீங்க கிதாப் வாசிக்கல்ல...நுனிப்புல் மேய்ந்த எருமை மாடுகள் என சொல்லலாம்....


ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வபாத் ஆன திகதி விஷயத்தில் இமாம் அல் ஹாபிழ் இப்னு கதீர் ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய அல் பிதாயா வன் நிஹாயா வை பாருங்கள்  என்ன சொல்கிறார்கள் என்பது தெரிய வரும்....


அதே போல் #இஸ்ரா எனும் பயணம் அதாவது கஃபா ஷரீபில் இருந்து பலஸ்தீன் மஸ்ஜிதுல் அக்ஸா வரை #மிஃறாஜ் எனும் பயணம் அதாவது பலஸ்தீன் மஸ்ஜிதுல் அக்ஸாவில் இருந்து விண்ணுலகம் வரை நடந்த இந்த நிகழ்வுக்கு வாருங்கள்..


விண்ணுலக யாத்திரை ரஜப் பிறை 27 ல் நிகழவில்லை என்றொரு வியாதி..அப்படி என்றால் மிஃறாஜ் எப்போது நிகழ்ந்தது.?சரியான திகதி நாள் இல்லையாம்..இதென்ன புதிர்...?


#மிஃறாஜ்_விண்ணுலக_யாத்திரை


மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவாக மிஃறாஜ் எனும் விண்ணுலக யாத்திரை ரஜப் பிறை 27 ல் நிகழ்ந்தது என்பதையும் அவ்விரவு #லைலதுல்_மிஃறாஜ் என்றும் சொல்கிறார்கள்.


இமாம் ஙஸ்ஸாலி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ( ஹிஜ்ரி 450 - 505)  தங்களுடைய #இஹ்யாஉ_உலூமுத்தீன் 1/ 361 

அல் ஹாபிழ் இமாம் அபுல் பரஜ் இப்னுல் ஜவ்ஸி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ( 510 - 597 ) தங்களுடைய #அல்_வபா_பிதஃரீபி_பழாஇலில்_முஸ்தபா 1/ 162 


இமாம் இமாதுத்தீன் அல் அஸ்பஹானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ( 519 - 597 ) தங்களுடைய #அல்_பத்ஹுல்_குஸ்ஸீ_பில்_பத்ஹில்_குத்ஸீ 

பக்கம் 73

பதிவு நீண்டு செல்கிறது என்பதால் சுருங்க சொல்கிறேன்..

عمدة القاري شرح صحيح البخاري 4/39

لمحات الانوار ونفحات الازهار 3/1329 

النوادر السلطانية 135

روضة الطالبين  10/ 206 

وفيات الأعيان 7 / 179

مرآة الجنان وعبرة اليقظان 3/ 344 

البداية والنهاية 14/ 228 

الأنس الجليل بتاريخ القدس والخليل  2 /33

الإقناع في حل ألفاظ ابي شجاع 2/ 556 

مغني المحتاج 6 /3 

تفسير روح البيان 5/ 103 

لوامع الانوار البهية 2/ 280 

تحفة الحبيب 2/ 10 

حاشية الطحطاوي على مراقي الفلاح 1/ 114

حاشية ابن عابدين 1/ 352 

نهاية الايجاز في سيرة ساكن الحجاز 1/ 138 

الآثار المرفوعة في أخبار الموضوعة 1/ 77

إظهار الحق 4/ 1017 

رحمة للعالمين 1/ 64 


இன்னும் நிறைய கிதாப்களில் மிஃறாஜ் எனும் விண்ணுலக யாத்திரை ரஜப் பிறை 27 ல் நிகழ்ந்தது என்பதை எழுதிக்காட்டுகிறார்கள்..


அதே சந்தர்ப்பம் இஸ்ராஃ மிஃறாஜ் என்பது ரஜப் மாதத்தில் தானா. ?நிகழ்ந்தது என்பது பற்றியும் கருத்து வேறுபாடுகள் உண்டு.

அதில் 15 விதமான கருத்துக்களை சொல்லி மிகப் பிரபலமானதும் ஏகோபித்ததும் ரஜப் மாதத்தில் தான் என்பதை அல்லாமா அல் ஹாபிழ் இமாம் ஜலாலுத்தீன் அஸ் ஸுயூதி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய 

#அல்_ஆயதுல்_குப்றா_பீ_ஷரஹி_கிஸ்ஸதில்_இஸ்ரா என்ற நூலில் சொல்லிக்காட்டுகிறார்கள்..


ஹழ்ரத் ஆயிஷா ஸித்தீக்கா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் கருத்தை "ஹிஜ்ரத்திற்கு ஒன்றரை வருடத்திற்கு முன் ரஜப் மாதத்தில் நிகழ்ந்தது,, என்ற கருத்தை அபூ ஹய்யான் அல் அந்துலுஸீ ரஹ்மஹுல்லாஹ் தங்கள் தப்ஸீர் #அல்_பஹ்ருல்_முஹீத் 9/ 7 அதே போல் அக்கருத்தை ஏற்று இமாம் இப்னு அதிய்யா அல் அந்துலுஸீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய #அல்_முஹர்ரருல்_வஜீஸ் 3/ 435-436 ல் பதிவு செய்கிறார்கள்..


அதே போல் இப்னு குதைபா ரஹ்மஹுல்லாஹ் ( இப்னு குதைபா என்று ஷீஆ இயக்கத்திலும் ஒருவர் இருக்கிறார் அதே பெயர் அதே பெயர் கொண்ட கிதாப் அதனால் அதில் விழிப்பாக இருக்க வேண்டும்..யார் என்றே கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ஷீஆக்கள் இதோ உங்கள் இமாம் தானே சொல்கிறார் என்று சொல்வார்கள்.. எச்சரிக்கை!!) இமாம் இப்னு அப்துல் பர் அல் மாலிகி ரஹ்மஹுல்லாஹ் அவர்களும் இதே கருத்தை(  ரஜப் ) என்று தான் சொல்கிறார்கள்..அதை இமாம் கஸ்தலானீ ரஹ்மஹுல்லாஹ் தங்களுடைய #அல்_மவாஹிபுல்_லதுன்னிய்யா 2/ 70 ம் அதே போல் #தாரீக்ஃ_கமீஸ் 1/ 307 ம் பதிவு செய்கிறார்கள்..


மேற் சொன்னது போல் இஸ்ராஃ மிஃறாஜ் ரஜப் 27 ல் தான் நிகழ்ந்தது என்பதில் அதிகப்படியான இமாம்களின் கருத்தும் ஏகோபித்த முடிவும் அது தான் என்பதையும் அதன் படி தான் முஸ்லீம்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை இமாம் அல் ஹாபிழ் அபுல் பரஜ் இப்னுல் ஜவ்ஸீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய 

المنتظم في تاريخ الملوك والامم 3/26 

என்ற நூலில் சொல்லிக்காட்டுகிறார்கள்..


#மிஃறாஜ்_நோன்பு 


  من صام يوم سبع وعشرين من رجب كتب له صيام ستين شهرا

யார் ரஜப் மாதம் பிறை 27 வது நாள் நோன்பு நோற்கிறாரோ  60 மாதம் நோன்பு நோற்ற நன்மை அவருக்கு எழுதப்படுகிறது என்று ஒரு ஹதீஸ் உண்டு. 


இந்த ஹதீஸை இமாம் அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய 

#தப்யீனுல்_அஜப்_பிமா_வரத_பீ_ஷஹ்ரி_ரஜப் 

تبيين العجب بما ورد في شهر رجب 

என்ற நூலில் கொண்டுவந்திருக்கிறார்கள்..


இந்த ஹதீஸிக்கு கீழ் அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் 

وهذا موقوف ضعيف الاسناد 

இது #மவ்கூப் ஆன செய்தி..அதாவது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை அறிவிப்பாளர் வரிசை செல்லாது.ஸஹாபாக்களின் சொல் செயல் அங்கீகாரத்தோடு தொடர்புடையது..ஸஹாபாக்கள் வரை அத்தொடர் செல்லக்கூடியது..

இதை நாம் #மவ்கூபான_ஹதீஸ் என்போம்..

குராஸானியீன்களின் ஹதீஸ் கலை வல்லுனர்களின் சொல் வழக்கத்தில் இதை #அதர் என்று சொல்வார்கள்..

மவ்கூபான ஹதீஸைப் பற்றி பேசுவதென்றால் நிறைய பேசலாம்...தனித்தனி கிதாபுகளே உண்டு..இன்னொரு சமயம் பார்க்கலாம்..


மவ்கூபான ஹதீஸ் சில சமயம் ஸஹீஹான ஹதீஸாகவும்  ஹஸனான ஹதீஸாகவும் மாறுவதற்கு வழி உண்டு...அந்த சட்டமும் இப்போ தேவையேற்படாது இன்னொரு சமயம் பார்க்கலாம்...

இங்கே #இஸ்னாத் பலஹீனம் என்பதையும் அல் ஹாபிழ் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் சொல்லிக்காட்டுகிறார்கள்..


எனவே பலஹீனமான ஹதீஸை வைத்து அமல் செய்யலாமா.?என்பது பற்றி ஏலவே ஓர் ஹதீஸ் பற்றி பேசுகையில் நான்கு தொடராக எழுதியதில் பார்வையிடலாம் அதன் லிங்க் இதோ!!


https://m.facebook.com/story.php?story_fbid=961990015500862&id=100050696177320&mibextid=Nif5oz


மட்டுமல்ல எகிப்தின் பத்வா குழு #தாருல்_இப்தாஉல்_மிஸ்ரிய்யாவினால் மேற்கூறிய ஹதீஸ் அடிப்படையில் பலஹீனமானாலும் அமல் செய்யலாம் என்ற உஸூலின் பிரகாரம் ரஜப் பிறை 27 ல் நோன்பு நோற்பது விரும்பத்தக்கது என்ற பத்வாவையும் சொல்லி இருக்கிறார்கள்..


அதே சமயம் மார்க்க சட்டமேதைகளான #புகஹாக்களின் பக்கம் கவனத்தை செலுத்தினால் அங்கே 


#ஹாஷியதுல்_பர்மாவி_அலா_ஷரஹி_இப்னு_காஸிம் 


#இஆனதுத்_தாலிபீன்

#ஹாஷியதுல்_பாஜூரி

#ஹாஷியதுல்_ஜமல்

#அல்_ஙுன்னிய்யா

#இஹ்யாஉ_உலூமுத்தீன்

#பத்ஹுல்_அல்லாம்

#பதாவா_அஷ்ஷாலியாதீ 


போன்ற நூற்களில் எல்லாம் #சவ்முல்_மிஃறாஜ் மிஃறாஜுடைய நோன்பு நோற்பது விரும்பத்தக்கது என்று சொல்லி இருக்கிறார்கள்..


அது மட்டுமல்ல இமாமுல் அஃழம் இமாம் அபூ ஹனீபா ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் மிஃறாஜுடைய நோன்பு நோற்பது முஸ்தஹப்பானது என்று சொல்லி இருக்கிறார்கள் என்று இமாம் ஷிஹாபுத்தீன் அல் கராபீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய #அத்தகீரா ( الذخيرة ) என்ற நூலில் 2/ 532 ல் சொல்லிக்காட்டுகிறார்கள்..

அல்லாமா கலீல் ரஹ்மஹுல்லாஹ் தங்களுடைய #அத்_தவ்ழீஹ் ( التوضيح ) என்ற நூலிலும் 2/ 461 ல் மிஃறாஜுடைய நோன்பு நோற்பதை முஸ்தஹப் என்று சொல்லிக்காட்டுகிறார்கள்..


அதே சமயம் இமாம் அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் மேற்கூறிய ஹதீஸின் பின் இன்னொரு விஷயத்தை சொல்கிறார்கள் 

وهو أمثل ما ورد في هذا المعنى 

என்று சொல்கிறார்கள்...


ஹதீஸ் கலை அறிஞர்களிடம் இதே போல் வேறு வார்த்தைகளை உபயோகப்படுத்துவது கனிஷமாக உண்டு.அதை அதிகமாக ஸுனனுத் திர்மிதியில் இமாம் திர்மிதி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் 

هذا أصح شيئ في الباب 

என்று பாவித்திருப்பார்கள்..

இதை உபயோகப்படுத்தியதால் அந்த ஹதீஸ் #ஸஹீஹ் என்று கருத்தல்ல..அல் ஹாபிழ் இமாம் நவவீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் கூட அதற்கு நல்ல விளக்கம் ஒன்று சொல்வார்கள்...

அவைகளை எல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்...

எனவே இமாம் அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் உபயோகித்த வார்த்தையின் எதார்த்தம் என்ன...?என்பதை திறந்த மனதோடு தேடுங்கள் பதில் கிடைக்கும் குழப்பமும் வராது...


அதே சமயம் #மப்ஹும்_முகாலபா #மப்ஹும்_முவாபகா  ( مفهوم مخالفة - مفهوم موافقة ) 

இப்படி இரண்டு விதமான விளக்கங்கள் உண்டு....

சான்றோடு தெளிவோடு தேடுங்கள் சரியான தெளிவு கிடைக்கும்....


#இறுதியாக_பொது_விதி ஒன்றுக்கு வாருங்கள் 


மேற்கூறிய வெவ்வேறு கருத்துக்களில் ""ஸலபுகளிடம் இவ்வாறு வெவ்வேறு கருத்துக்கள் காணப்பட்டால் இது தான் #தர்ஜீஹ் ஆனது என்பது நிருவப்படவில்லை என்றால் அவ்வமல் எதன் பக்கம் சேர்க்கப்படும்....??என்ற கேள்வியோடு......


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி ஏறாவூர் 

+94 77 444 77 57