வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 460
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#மிஃராஜ் #சிந்தனை
அல்லாஹ்வின் தூதர் நமது நபி முஹம்மது (#ﷺ) அவர்கள் இறைவனின் அழைப்பின் பேரில் மேற்கொண்ட பயணமான அல் இஸ்ரா வல் @highlight #மிஃராஜ் இந்த உலகம் முடியும் நாள் வரை வரவுள்ள இந்த உம்மத்திற்கு பல்வேறு பாடங்களையும் படிப்பினைகளையும் சொல்லிக் கொண்டே இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.
அல் இஸ்ரா வல் மிஃராஜை கடந்த கால அறிஞர் பெருமக்களும் சரி சமகால அறிஞர் பெருமக்களும் சரி பல்வேறு கோணங்களில் இந்த உம்மத்தின் கவனத்திற்கு ஆவணப்படுத்தி உள்ளார்கள்.
இஸ்ரா தொடர்பான வசனத்திற்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விரிவுரைகளை முஃபஸ்ஸிரீன்கள் எனும் விரிவுரையாளர்களும்,, மிஃராஜ் தொடர்பான நபிமொழிகளுக்கு விளக்கம் தருகிற முஹத்திஸீன்கள் ஆயிரக்கணக்கான விளக்கங்களையும் பதிவு செய்து இருக்கின்றனர்.
அந்த வகையில் இந்த உம்மத்திற்கு சிறு மற்றும் பெரு நூலாக ஆயிரக்கணக்கான நூல்களை அன்பளித்துள்ளனர்.
அந்த நூல்களை வாசித்துப் பார்த்து அதில் இருந்து பெறப்படும் தலையாய சிந்தனைகளை, கருத்துக்களை சமூக முற்றத்தில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் ஆலிம் பெருந்தகைகள் ஒவ்வொரு ஆண்டும் மிஃராஜ் இரவில் பயான்களின் மூலம் தந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இந்த "அல் இஸ்ரா வல் மிஃராஜ்" தருகிற மகத்தான சிந்தனைகளில் ஒன்று"ஒரு அடியார் அல்லாஹ்விற்கு விருப்பமான அடியாராக ஆகும் போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய சந்திப்பையும், அவனுடன் உரையாடுகிற நற்பேற்றையும், அவனிடத்தில் இருந்து சன்மானங்களையும், வெகுமதிகளையும் பெறுகிற தகுதியையும் அந்த அடியாருக்கு நாளை மறுமையில் வழங்கி கௌரவிப்பான்" என்கிற மகத்தான சிந்தனையைத் தாங்கி நிற்கிறது.
ஆகவே, அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய சந்திப்பின் மீதும் அவனுடன் உரையாடுவதன் மீதும் ஆவல் கொண்டு இந்த உலகில் நாம் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைப்படி மறுமையில் அல்லாஹ்வை பார்ப்பதும், அல்லாஹ்வின் சந்திப்பு என்பதும் உண்மையாகும், இதை மறுப்பது குஃப்ராகும்.
மறுமை நாளிலும் சுவனத்திலும், மூமின்கள் அல்லாஹ்வை அவன் நாட்டத்திற்கேற்ப பார்ப்பார்கள், இதுவே அஹ்லுஸ் சுன்னாஹ்வின் ஒருமித்த கருத்தாகும் (இஜ்மா)
அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:
وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاضِرَةٌ ٢٢
அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌۭ ٢٣
தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.
மேலும் கூறுகிறான்:
۞ لِّلَّذِينَ أَحْسَنُوا۟ ٱلْحُسْنَىٰ وَزِيَادَة وَلَا يَرْهَقُ وُجُوهَهُمْ قَتَرٌۭ وَلَا ذِلَّةٌ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ ٢٦
நன்மை புரிந்தோருக்கு (உரிய கூலி) நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும்; அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது, அவர்கள் தாம் சவனபதிக்கு உரியவர்கள் - அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
இந்த ஆயத்தில் “மேலும் அதிகம் உண்டு” எனும் வாக்கியத்திற்கு, நபி (ﷺ ) அவர்கள் “அல்லாஹ்வை பார்ப்பது” என்று விளக்கம் கூறியுள்ளார்கள். மற்றோர் ஆதாரப்பூர்வமான ஹதீஸில் மூமின்கள் அல்லாஹவை சுவனத்தில் பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார்கள்.
ஏனென்றால் அல்லாஹ்வை பார்பது தான் சுவனவாசிகள் பெருகிற இன்பங்களிலேயே மிகப்பெரிய இன்பமாகும்.
حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنِي الأَعْمَشُ، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ سَيُكَلِّمُهُ رَبُّهُ، لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ وَلاَ حِجَابٌ يَحْجُبُهُ
رواه البخاري 7443
உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமைநாளில் தனித் தனியாகப்) பேசாமலிருக்க மாட்டான். அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையே எந்த மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார்; தடுக்கின்ற திரையும் இருக்காது” என்று அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)நூல்: புகாரி 7443
وَزِيَادَةٌ ﴾ [يونس: 26]، فروى مسلمٌ في تفسيرها عن صُهيْبٍ: أنَّ رسولَ الله - صلَّى الله عليْه وسلَّم - تلا هذه الآية: {لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ} وقال: ((إذا دخل أهْلُ الجنَّةِ الجنَّة، وأهلُ النَّار النَّار، نادى منادٍ: يا أهلَ الجنَّة، إنَّ لكم عنْدَ الله موعدًا يُريد أن يُنْجِزَكُمُوه، فيقولون: وما هو؟ ألَم يُثقِّل موازينَنا، ويبيِّض وجوهَنا، ويدخلْنا الجنَّة، ويزحزِحْنا من النَّار؟ قال: فيكشف لَهم الحجاب، فينظرون إليه، فواللَّهِ، ما أعْطاهمُ الله شيئًا أحبَّ إليْهِم من النَّظر إليْه، ولا أقرَّ لأعيُنِهم)).
நபி (ﷺ) அவர்கள், “நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமாகவும் உண்டு” என்ற (10:26) வசனத்தை ஓதினார்கள். “சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்ததும், “சுவனவாசிகளே! (இதுவரை) உங்களுக்கு அளிக்கப்படாத ஒரு வாக்குறுதி உங்களுக்குக் காத்திருக்கின்றது” என்று அழைப்பு விடுக்கப்படுவர். “அவன் எங்களது முகங்களை வெண்மையாக்கி, எங்களை சுவனத்தில் நுழையச் செய்யவில்லையா?” என்று அவர்கள் பதிலளிப்பார்கள். மீண்டும், “(இதுவரை) அளிக்கப்படாத வாக்குறுதி ஒன்று உங்களுக்குக் காத்திருக்கின்றது” என்று அவர்களிடம் கூறப்படும். அவர்கள் அதே போன்று பதிலளிப்பார்கள். அப்போது, பாக்கியமிக்கவனும் உயர்ந்தோனுமான அவர்களது இறைவன் “அப்போது அவன் திரையை விலக்குவான். அவர்கள் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த தங்களுடைய இறைவனின் முகத்தை அவர்கள் பார்ப்பார்கள். அவனைப் பார்ப்பதை விட வேறெதுவும் அவர்களுக்கு விருப்பமானதாகவும் கண்களுக்குக் குளிர்ச்சியானதாகவும் இருக்காது. அதிகம் என்பது இது தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்.
மேலும் , இது தான், “நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமாகவும் உண்டு” என்ற (10:26) அல்லாஹ்வின் சொல்லாகும் என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: சுஹைப் (ரலி), நூல்: முஸ்னத் அல்பஸ்ஸார் 328
في أخبار داود عليه السلام يا داود أبلغ أهل أرضي أني حبيب من أحبني، وجليس من جالسني، ومؤنس لمن أنس بذكري، وصاحب لمن صاحبني، ومختار لمن اختارني، ومطيع لمن أطاعني، ما أحبني أحد أعلم ذلك يقينا من قلبه إلا قبلته لنفسي، وأحببته حبا لا يتقدمه أحد من خلقي، من طلبني بالحق وجدني ومن طلب غيري لم يجدني فارفضوا يا أهل الأرض ما أنتم عليه من غرورها، وهلموا إلى كرامتي ومصاحبتي ومجالستي ومؤانستي، وآنسوني أؤنسكم، وأسارع إلى محبتكم.
தாவூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஜபூரிலே கூறிய கருத்தை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
தாவூத் அவர்களே!பூமியில் உள்ள எனது அடியார்களுக்கு நீங்கள் சொல்லுங்கள்.
யார் என்னை நேசிப்பார்களோ நான் அவர்களுடைய நேசன் ஆக இருக்கிறேன்.
யார் என்னோடு பேச விரும்புகிறார்களோ நான் அவர்களோடு பேசுகிறேன்.
யார் என்னுடைய நினைவில் மனமகிழ்ச்சியை காண்கிறார்களோ அவர்களுடைய மனதை நான் மகிழ்விப்பேன்.
யார் என்னோடு நட்பு வைக்க விரும்புகிறார்களோ நான் அவர்களுடைய நண்பனாக இருக்கின்றேன்.
யார் என்னை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்களோ நான் அவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்.
யார் எனக்கு கட்டுப்படுவார்களோ அவர்களுடைய கோரிக்கைகளை நான் நிறைவேற்றுவேன்.
என்னுடைய அடியான் என்னை நேசிக்கிறான் என்று தெரிந்துவிட்டால், நான் அவனை எனக்காக ஏற்றுக் கொள்கிறேன்.நானும் அவனை நேசிக்கிறேன்.என்னுடைய நேசத்தை போன்று அவனுக்கு வேண்டப்பட்டவர்களில் யாரும் அவனை நேசிக்க முடியாது.
உண்மையில் யார் என்னைத் தேடுகிறானோ அவன் என்னை பெற்றுக் கொள்வான்.
யார் என்னை விட்டு விட்டு உலகத்தை தேடுகின்றானோ அவன் ஒருக் காலும் என்னை அடைய முடியாது.
பூமியில் உள்ளவர்களே! இந்த உலகத்தை கொண்டு ஏமாந்து இருப்பவர்களே! இதை நீங்கள் தூக்கி எறியுங்கள்.
என்னுடைய கண்ணியத்தின் பக்கம் ஓடோடி வாருங்கள்.என்னோடு நட்புக் கொள்வதற்கு ஓடோடி வாருங்கள்.என்னோடு பேசுவதற்கு ஓடோடி வாருங்கள்.
தனிமையில் அமர்ந்து என்னுடைய நினைவில் இன்பம் காணுவதற்கு ஓடோடி வாருங்கள்.நான் உங்களுக்கு இன்பத்தை தருகிறேன்.
உங்களை நேசிப்பதற்கு நான் விரைந்து வருகிறேன்.
( நூல்: இத்ஹாபுஸ் ஸாதத்தில் முத்தகீன்-ஷரஹ் இஹ்யா உலூமித்தீன்)
இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்: "அல்லாஹ் உன்னுடன் உரையாட வேண்டும் என்று நீ விரும்பினால் குர்ஆன் ஓதுவதை நீ வழமையாக்கிக் கொள்!
நீ அல்லாஹ் உடன் உரையாட விரும்பினால் துஆ கேட்பதை வழமையாக்கிக் கொள்!
நீ அல்லாஹ்வுடனும், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உன்னுடனும் உரையாட வேண்டும் என்று விரும்பினால் (உபரியாக) தொழுவதை வழமையாக்கிக் கொள்!
இப்னு ஜாபிர் (ரஹ்) அறிவிக்கின்றார்கள்:- அப்துல்லாஹ் இப்னு அபூ ஜகரிய்யா (ரஹ்) அவர்கள் சொல்வார்களாம் "அல்லாஹ்வின் வணக்க வழிபாடுகளோடு நூறு வயது வரை வாழ்வது அல்லது வாழ்வின் இந்த நொடியிலேயே மரணிப்பது இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு இஷ்டம் தரப்பட்டால் அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில், அல்லாஹ்வின் தூதரை, ஸாலிஹீன்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இன்றே, இந்த நொடியே மரணித்து விடும் வாய்ப்பையே தேர்ந்தெடுப்பேன்" என்று. ( நூல்: தஹ்தீபுல் கமால் )
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் ரப்புல் ஆலமீனை பார்க்க வேண்டும், சந்திக்க வேண்டும் என்று ஆவல் கொண்டவர்களாக இருந்தார்கள் என்று அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
وَلَمَّا جَآءَ مُوْسٰى لِمِيْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ قَالَ رَبِّ اَرِنِىْۤ اَنْظُرْ اِلَيْكَ قَالَ لَنْ تَرٰٮنِىْ وَلٰـكِنِ انْظُرْ اِلَى الْجَـبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰٮنِىْ فَلَمَّا تَجَلّٰى رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰى صَعِقًا فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَيْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِيْنَ
நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார். ( அல்குர்ஆன்: 7:143 )
மேலும், அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கூடுதலாக நேரம் எடுத்து பேசும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்று அல்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகின்றான்.
وَمَا تِلْكَ بِيَمِيْنِكَ يٰمُوْسٰى
“மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?” (என்றும் அல்லாஹ் கேட்டான்.)
قَالَ هِىَ عَصَاىَۚ اَتَوَكَّؤُا عَلَيْهَا وَاَهُشُّ بِهَا عَلٰى غَـنَمِىْ وَلِىَ فِيْهَا مَاٰرِبُ اُخْرٰى
(அதற்கவர்) “இது என்னுடைய கைத்தடி; இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன்; இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன்; இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன” என்று கூறினார்.
قَالَ اَلْقِهَا يٰمُوْسٰى
அதற்கு (இறைவன்) “மூஸாவே! அதை நீர் கீழே எறியும்” என்றான்.
فَاَلْقٰٮهَا فَاِذَا هِىَ حَيَّةٌ تَسْعٰى
அவ்வாறே அவர் அதனைக் கீழே எறிந்தார்; அப்போது அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று.
قَالَ خُذْهَا وَلَا تَخَفْ سَنُعِيْدُهَا سِيْرَتَهَا الْاُوْلٰى
(இறைவன்) கூறினான்: “அதைப் பிடியும்; பயப்படாதீர்; உடனே நாம் அதை அதன் பழைய நிலைக்கே மீட்டுவோம்.” ( அல்குர்ஆன்: 20: 17 - 21 )
அல்லாஹ்வை சந்திக்கும் மகத்தான பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்கப் பெறுதில்லை. மாறாக, யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கமலும், நல்ல அமல்களைச் செய்பவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களுக்குத் தான் முதலாவதாக இந்த அருட்பாக்கியம் கிடைக்கும்.
“நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் இறைவன் ஒரே ஒரு இறைவனே! என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்‘ என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 18:110)
இணை வைக்காமலும் நல்ல அமல்களைச் செய்பவர்களாகவும், இருந்தால் மட்டும் போதாது. மேலும், தொழுகைகளைப் பேணித் தொழுபவர்களாகவும் இருக்க வேண்டும்.
@followers
தொடரும்........