#எல்லா_பித்அத்தும்_வழிகேடே!!
இன்று உலகில் பரவலாக வஹ்ஹாபிய நஜ்திய கர்ணிகளால் மலிவாக விற்பனை செய்யப்படக்கூடிய பொருள் ""பித்அத்,, ""ஷிர்க்,,
மலிவான காரணம் அதன் தராதரம் தெரியவில்லை. ஷிர்க் என்றால் என்ன.? பித்அத் என்றால் என்ன.? என்பது பற்றி தெளிவில்லாத காரணத்தால் கண்டது, தொட்டதெல்லாம் ஷிர்க் பித்அத் என்று கூறி கூவி விற்பனை செய்யும் அங்காடி வியாபாரிகள் போல் மார்க்கம் அங்கீகரித்த நல்ல வழிபாடுகள்,நல் அமற்கள் எல்லாம் பேசு பொறுளாக்கி மார்க்கத்தையே கூறு போட்டு விற்கக்கூடிய நிலையை தான் கண்கூடாக காண்கிறோம்.
இது ஆண்டாண்டு காலமாக அன்று தொட்டு வந்ததல்ல.மாறாக 6 ம் 7 ம் நூற்றாண்டில் உருவாகி 11 ம் 12 ம் நூற்றாண்டில் பரவலாக வெடித்து சிதறிய சிறு சிறு துளிகளே வெடிகுண்டுகளாக உருமாறி ஷிர்க் பித்அத் என்ற ஆயுதமேந்தி தாங்கள் தான் தூய வடிவில் இஸ்லாத்தை பின்பற்றும் தூய்மையான புனிதர்கள் என்று போற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அவ்வரிசையில் இப்புனித ரபிஉல் அவ்வல் மாதத்தில் வஹ்ஹாபிய கர்ணிகளுக்கு மௌலித் வரிகள் மரண ஓலங்களாக ஒலிக்க,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்மாலைகளை செவிசாய்க்க மனமில்லாது ஷைத்தானின் பொறாமை குணத்தை தனதாக்கி உள்ளத்தை மாசுபடுத்தி ""நபி புகழ் வேண்டாம்,, அது பித்அத், வழிகேடு என்று தங்களைத் தாங்களே நரகத்திற்கு தயார் செய்து கொண்டிருப்பதை ஆங்காங்கே காணமுடியும்.
""எல்லா பித்அத்தும் வழிகேடு - வழிகேடு எல்லாம் நரகம் செல்லும்,,
இந்த ஹதீஸ் தான் அவர்களின் சட்டைப்பையில் இருக்கும் மூல மந்திரம்.எனவே
كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار
புதிதாக உருவாக்கூடிய எல்லாமே பித்அத்.எல்லா பித்அத்தும் வழிகேடு.எல்லா வழிகேடும் நரகம் செல்லும்.
என்றால் இதில் ""நல்ல பித்அத்,, بدعة حسنة என்றும் ""கெட்ட பித்அத்,,بدعة سيئة என்றும் நாம் சொல்வது போல் இந்த மார்க்கத்தில் இல்லையா...?
அல்லது வஹ்ஹாபிய கர்ணிகள் சொல்வது போல் அங்கே ( كل ) ""குல்லு,, எல்லாம் என்றால் நல்லது,கெட்டது என்றெல்லாம் இல்லை.எல்லாமே பித்அத்துத்தான் என்று தான் அரகுறையாக விளங்க வேண்டுமா..?
எல்லாம்( அனைத்தும்) كل ""குல்லு,,
இந்த ""குல்லு,, என்பதற்குள் بعض ""பஃழு,, '"சில,, என்ற கருத்து உள் நுழையுமா...?
என்றால் நாம் ஆம் என்று சொல்கிறோம்.
ஆனால் வஹ்ஹாபிய கர்ணிகளின் வாதம் இல்லை என்பதே!எடுத்துக்காட்டாக
كل نفس ذائقة الموت
எல்லா ஆத்மாக்களும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும் என்று அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.
இதில் சில ஆத்மாக்கள் மரணிக்காது,சிலருக்கு மரணமில்லை என்று விளங்க முடியுமா..?
இல்லையே! எல்லா ஆத்மாக்களும் தானே மரணிக்க வேண்டும் என்பது வஹ்ஹாபிய நஜ்திகளில் கிதாப் படித்த ஒரு சிலரின் கருத்து.
ஏனைய ""குல்லு,, ம் எல்லோரும் மடயர்களே!!
(இதில் ""நப்ஸ்,, பற்றி ""குல்லு,, என்பதை வைத்து பேசினால் நீண்டு விடும்.அதே போல் வஹ்ஹாபிய கர்ணிகள் ""ஜஹ்மிய்யாக்கள்,, வழியிலும் நுழைந்து விடுவார்கள்.அதை வேறு பதிவுகளில் பார்வை இடலாம் இன்ஷா அல்லாஹ்)
காரணம் அல் குர்ஆன் படைக்கப்பட்டது என்று இப்படித்தான் முஃதஸிலாக்கள் வாதிட்டார்கள்.அதனால் தான் நாம் வஹ்ஹாபிகளை முஃதஸிலாக்கள் வழியில் வஹ்ஹாபிய கர்ணிகள் என்று சொல்கிறோம்.
ஏன்....? தங்களைத் தாங்களே
أهل التوحيد والعدل
நாங்கள் தான் தவ்ஹீத்வாதிகள்,நாங்கள் தான் நீதவான்கள் என்று இந்த உலகத்தில் தங்களை முதன் முதலில் அறிமுகம் செய்துகொண்டவர்கள் முஃதஸிலாக்கள்.அதே வரிசையில் தான் இந்த வஹ்ஹாபிகளும் உலா வருகிறார்கள்.
அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மஹுல்லாஹ் அவர்களோடு முஃதஸிலாக்கள் அல் குர்ஆன் படைக்கப்பட்டது என்பதை நிரூபிக்க விவாதிக்கும் போது
أليس الله تعالى يقول الله خالق كل شيئ
ஸுரத்துஸ் ஸுமர் அத்தியாயத்தில் வரும் 62 வது வனத்தில் ""அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் படைப்பவன்,, என்ற கருத்துள்ள வசனத்தை சொல்லி அல்லாஹ் எல்லாம் படைப்பவன் தானே என்று முஃதஸிலாக்கள் கேள்வி கேட்ட போது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மஹுல்லாஹ் ஆம் என்றார்கள்.
பின்னர் முஃதஸிலாக்கள் ஆம் என்றால் சரி அல் குர்ஆனும் படைக்கப்பட்டதே!! என்று இந்த வஹ்ஹாபிய நஜ்திய கர்ணிகள் போன்று அல்லாஹ் ""குல்லு,, எல்லாம் என்று தானே சொல்கிறான் என்று ""குல்லு,, என்பதற்கு
عموم المطلق
பொதுவாகவே எல்லாம் பொதிந்து கொள்ளும் அங்கு எந்த நிபந்தனையும் நுழையாது என்ற வாதத்தை வைத்த போது அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மஹுல்லாஹ் முஃதஸிலாக்களின் வாதத்தை அவர்களின் அதே வரிசையில் உடைக்கிறார்கள்
أوليس الله تعالى يقول في الريح التى أرسلها على عاد
تدمر كل شيئ بأمر ربها
ஆத் கூட்டத்தினரை காற்றைக் கொண்டு அல்லாஹ் அழித்த விஷயம் சம்மந்தமாக
""அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்து விடும்,, ( என்று சொல்லப்பட்டது) என்ற கருத்தை தரும் ஸுரதுல் அஹ்காஃப் 25 வது வசனத்தை சொல்லி நீங்கள் சொல்வது போல் அல்லாஹ் வானங்களையும் அழித்தானா.....?
அல்லாஹ் பூமியையும் அழித்தானா...?
இல்லையே!! ஆத் கூட்டத்தினரையும் அவர்களின் இருப்பிடங்கள் அவர்களின் பொருட்கள் இவைகளைத் தானே அழித்தான் என்று இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மஹுல்லாஹ் இங்கு உள்ள ""குல்லு,, என்பது எல்லாம் அல்ல இங்கு
عموم مقيد
பொதுவாக உள்ள விஷயத்தில் நிபந்தனையை கொடுத்து அங்கு எல்லாம் அல்ல அவர்களும் அவர்களோடு உள்ளவைகளும் மட்டுமே என்று விளக்கி முஃதஸிலாக்களின் வாதத்தை உடைத்தார்கள் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மஹுல்லாஹ்.
எனவே ""குல்லு,, كل என்பது எல்லா நேரத்திலும் எல்லாம் என்ற முழு விஷயத்தையும் எடுத்துக்கொள்ளாது.
மாற்றமாக ""குல்லு,, என்பது பல கருத்துக்களை பொதிந்துள்ளது.
அதில் ஒன்று عموم ""உமூம்,, பொதுப்படையானது.
அதனால் தான் ""மன்திக்,, منطق கலையில்
ألفاظ العموم
பொதுப்படையாக உள்ள வார்த்தைகள் பற்றி விரிவாக பேசுவார்கள்.
எனவே வஹ்ஹாபிய நஜ்திய கர்ணிகளே! முதலில் மார்க்கத்தை சரிவர படியுங்கள்.
அரபி நுனுக்கத்தை பிசகர அறிந்து அதன் ஆழங்களை அறிய பல கலைகள் உண்டு அவைகளை எல்லாம் சரிவர படியுங்கள் தெளிவு கிடைக்கும்.
எடுத்துக்காட்டாக
أحكام كل وما عليه تدل
""அஹ்காமு குல்லு வமா அலைஹி ததுல்லு,,
என்று இமாம் தகியுத்தீன் அஸ் ஸுப்கி அஷ் ஷாபிஇ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் எழுதிய அழகிய கிதாப் உண்டு அதையாவது படியுங்கள்...
இமாம் தகிய்யுத்தீன் அஸ் ஸுப்கி ரஹ்மஹுல்லாஹ் உங்கள் மூத்த தலைவர் இப்னு தைமியாவின் சம காலத்தில் வாழ்ந்தவர்கள் தான்.உங்கள் மூத்த தலைவர் இப்னு தைமியாவின் வழிகெட்ட கருத்துக்களை உடைத்து இப்னு தைமியாவிற்கு பாடம் புகட்டிய மாமேதை தான் இமாம் அவர்கள்.
இப்போ மேலே சொல்லப்பட்ட வஹ்ஹாபிகள் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு உலா வரும்
""எல்லா பித்அத்தும் வழிகேடு,,
என்ற மூல மந்திர ஹதீஸுக்கு வாருங்கள்.
மேற்கூறிய விஷயங்களை வைத்து இந்த ஹதீஸை சிந்தித்துப் பாருங்கள் தெளிவு கிடைக்கும்.
அதனால் தான் மேலான இமாம்கள் ரஹ்மஹுமுல்லாஹ் இந்த ஹதீஸின் அடிப்படையை வைத்து பல ஞானங்களை கற்று அறிந்த கலைகளின் ஆழத்தை வைத்து ""பித்அத்,, என்பது எல்லாமே வழிகேடு அல்ல சில பித்அத் நல்லதும் உண்டு என்று விபரித்தார்கள். அந்த வரிசையில் ""முஜ்தஹித் முத்லக்,, ஆன ஹதீஸ் கலைக்கு வித்திட்ட நாற்பெரும் இமாம்களில் இமாமுனா ஷாபிஇ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள்.
""புதிதாக உருவாக்கப்படக்கூடிய காரியங்கள் இரண்டு வகை உண்டு.
01 அல் குர்ஆனுக்கும் அல் ஹதீஸுக்கும் ஸஹாபாக்களின் நடைமுறைகளுக்கும் இஜ்மாவுக்கும் மாற்றமாக உருவாக்கினால் அது
بدعة ضلالة
வழிகெட்ட பித்அத் என்றும்
بدعة مذمومة
இகழப்பட்ட பித்அத் என்றும்
அதே சமயம் அல் குர்ஆன் அல் ஹதீஸ் ஸஹாபாக்கள் இஜ்மா இவைகளுக்கு மாற்றமில்லாமல் நலவான காரியங்களாக இருந்தால் அதற்கு
بدعة محمودة
بدعة حسنة
அழகிய புகழப்பட்ட பித்அத் என்றும் சொல்லிக்காட்டுகிறார்கள்,,
இதை இமாம் அல் ஹாபிழ் பைஹகீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ஸஹீஹான ஸனதுடன்
مناقب الشافعي
""மனாகிபுஸ் ஷாபிஇ,, என்ற நூலில் பாகம் 01 பக்கம் 469 ல் சொல்லிக்காட்டுகிறார்கள்.
இமாம் பைஹகீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ஸஹீஹான ஸனதுடன் தங்களுடைய அல் மத்கல் - المدخل
என்ற நூலில் பதிவு செய்கிறார்கள் என்பதை இருவகையாக பிரிக்கப்பட்ட நல்ல பித்அத் கெட்ட பித்அத் இவைகளை ஏற்று உங்களுடைய மூத்த தலைவர் இப்னு தைமியா அவர்களே தன்னுடைய மஜ்மூஃ பதாவா என்ற நூலில் பாகம் 20 பக்கம் 163 ல் பதிவு செய்கிறார்.
அதே போல்
"" யார் பித்அத்தை நல்ல பித்அத் என்றும் கெட்ட பித்அத் என்றும் பிரித்தார்களோ அவர்கள் அது விரும்பத்தக்க செயல் என்பதற்கு ஷரீஅத்தின் பார்வையில் மேற்கோல் காட்டவும் வேண்டும்.அதே போல் பின்பற்றுவதற்கு தகுதியான இமாம்கள் நல்ல பித்அத் என்று ஆரம்பிக்கப்பட்ட அந்த விஷயம் விரும்பத்தக்கது என்று சொல்லி இருக்க வேண்டும்.,,, என்று அதே உங்கள் மூத்த தலைவர் இப்னு தைமியா அதே ""மஜ்மூஃ பதாவா,,, பாகம் 27 பக்கம் 152 ல் சொல்லிக்காட்டுகிறார்...
அதே போல் இமாம் ஷாபிஇ ரஹ்மஹுல்லாஹ் சொன்ன அதே கருத்தை ஏற்று தானும் தன்னுடைய
الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان
" அல் புஃர்கான் பைன அவ்லியாஇர் ரஹ்மான் வ அவ்லியாஇஸ் ஷைத்தான்,, என்ற நூலில் 162 ம் பக்கத்தில் சொல்லிக்காட்டுகிறார்....
மேற்கூறிய 27 ம் பாகத்தில் கூறிய அதே கருத்துக்கமைய இன்னும் சற்று தெளிவாகவே அதே இப்னு தைமியா தன்னுடைய
قاعدة جليلة في التوسل والوسيلة
""காஇததுன் ஜலீலா பித் தவஸ்ஸுலி வல் வஸீலா,,
என்ற நூலில் 44 ம் பக்கத்தில் சொல்லிக்காட்டுகிறார்....
குறிப்பு: வஸீலா பற்றி மார்க்கத்திற்கு முரனான கருத்துக்களை எழுதி வஸீலா தேடுவது ஷிர்க் என்று இந்த கிதாபை எழுதிய காரணத்தால் அன்றைய காழிமார்களின் தீர்ப்பின் படி இப்னு தைமியா எகிப்தில் இரண்டு வாரம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஹிஜ்ரி 707 -10 - 03 ல் இருந்து 707 - 10 - 18 வரை அடைக்கப்பட்டு மன்னிப்பின் பேரில் விடுதலையானார்...
இறுதியாக டமஸ்கஸ் இல் ஹிஜ்ரி 726 - 08- 06 ல் இருந்து 728 - 11- 20 வரை ஏறத்தாள 2 வருடம் 3 1/2 மாத காலம் வரை ஜெயிலில் அடைக்கப்பட்டு ஜெயிலினுள்ளேயே மரணம் அடைந்து ஜனாஸாவாக வெளியேற்றப்பட்டார்...
இரண்டு வருடம் ஜெயிலில் அடைக்கக் காரணம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸியாரத்திற்காக செய்யும் பயணம் பாவமான காரியம் தொழுகையை கூட சுருக்கித் தொழலாகாது என்று சொன்ன காரணத்தினால் அடைக்கப்பட்டார்.....
எனவே இப்னு தைமியாவில் இருந்து தான் ஊற்றெடுத்து இப்னு அப்துல் வஹ்ஹாப் அந் நஜ்தியில் காலத்தில் வெடித்து சிதறியது...
இப்பொழு சொல்லுங்கள் நஜ்திய வஹ்ஹாபிய கர்ணிகளே!!உங்கள் மூத்த தலைவருக்கு பித்அத் விஷயத்தில் உங்கள் தீர்ப்பு என்ன...?
எங்கள் இமாம்களின் கிதாபுகளைத்தான் நீங்கள் பார்ப்பதில்லை.ஏற்றுக்கொள்வதும் இல்லை என்று பார்த்தால் உங்கள் மூதாதையர்களின் கிதாபுகளையாவது பார்ப்பதில்லையா....?
முதலில் இப்னு தைமியாவின் எல்லா கிதாபுகளையும் நன்றாக வாசியுங்கள்..இப்னு தைமியாவின் எல்லாக் கிதாபுகளும் என்னிடம் உண்டு.தேவையா அனுப்பித் தருகிறேன்.முதலில் உங்கள் மூத்த தலைவரின் கிதாபை சரி வர படியுங்கள் உங்களுக்கு இன்னும் ஆப்பு அங்கு காத்துக்கொண்டிருக்கிறது..
அப்பொழுதே ஷைகுல் இஸ்லாம் என்று சொல்வதை விட்டுவிட்டு எங்கள் இமாம்களை தூற்றுவது போல் இப்னு தைமியாவிற்கும் தூற்றுவீர்கள்...ஏன் உங்களுக்கு தோதுவானதை மட்டும் மக்களிடம் சொல்கிரீர்கள்...?ஏனையவைகளை சொன்னால் நாடக மேடை உடைந்து விடும் என்பதினாலா....?
இப்னு தைமியா எங்களுக்கு ஒரு பொறுட்டே அல்ல.இவைகளை பதிவு செய்தது பித்அத்தின் வகைகளை ஏற்றுக் கொண்ட உங்கள் மூதாதை இப்னு தைமியாவிற்கு என்ன தீர்ப்பு.....?
இன்னும் நிறையவே நல்ல பித்அத் கெட்ட பித்அத் பற்றி இமாம்கள் ஆதாரத்தோடு தெளிவு படுத்தி இருக்கிறார்கள்.இன்ஷா அல்லாஹ் வேறு பதிவுகளில் பார்க்கலாம்....
இறுதியாக மேலே """ குல்லு,, பற்றி சொன்னதில் "" எல்லா பித்அதும் வழிகேடு,, என்பதை விளங்கி இருப்பீர்கள்..இன்னும் அதில் விரிவான தெளிவுகளும் உண்டு.இன்ஷா அல்லாஹ் பின் பார்க்கலாம்....
எங்கள் இமாம்கள் சொன்னதை உங்களால் எற்றுக்கொள்ளமுடியவில்லை.ஆனால் உங்கள் மூத்த தலைவர் இப்னு தைமியா சொன்னதை ஏற்றுக்கொள்கிரீர்கள்..
என்றால் தவ்ஹீத் 3 வகை
தவ்ஹீத் ருபூபிய்யத்
தவ்ஹீத் உலூஹிய்யத்
தவ்ஹீத் அஸ்மாஉ வஸ் ஸிபாத் என்று எந்த குர்ஆனில் ஹதீஸில் இருந்து இந்த 3 வகை தவ்ஹீதை எடுத்தீர்கள் வஹ்ஹாபிய நஜ்திகளே....??
இது இப்னு தைமியா பிரித்தது தானே!!!
இமாம் ஷாபிஇ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் சொன்ன நல்ல பித்அத் கெட்ட பித்அத் என்ற இருவகை பித்அத்தை ஏற்க மறுக்கும் உங்கள் மனது தவ்ஹீத் 3 வகை என்று சொன்ன இப்னு தைமியாவின் கருத்தை ஏற்றுக்கொள்கிறது என்றால் மக்களிடம் நீங்கள் எதை நிலைநாட்ட முற்படுகிரீர்கள்......??
சரி இமாம் ஷாபிஇ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் சொன்ன இருவகை பித்அத்தை உங்கள் மூத்த தலைவர் இப்னு தைமியா ஏற்றுக்கொண்டார் தானே!!!
இதற்கு உங்கள் தீர்வு தான் என்ன.....??
ஆக நீங்கள் மார்க்க வியாபாரிகள் என்பது மட்டும் தெளிவு....
விரிவை அஞ்சி சிறு துளியோடு நிறைவு செய்கிறேன்.
மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி
ஏறாவூர்
+94 77 444 77 57