السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 31 August 2025

அகங்காரம் (பெருமை)

அகங்காரம் (பெருமை)

 #நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:


"ஒருவருடைய இதயத்தில் ஒரு அணுவளவு அகங்காரம் (பெருமை) இருந்தாலும் அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்."


📖 (சஹீஹ் முஸ்லிம், ஹதீஸ் எண் 91 / 277


“அகங்காரம்” (الكبر) என்றால் என்ன?


#அகங்காரம் என்பது உண்மையை மறுப்பதும் (حق بَطرُ) மக்களை இழிவாகக் காண்பதும் (غَمطُ الناس).


அதாவது ஒருவர் “நான் பெரியவன், எனக்கே அறிவு/செல்வம்/அதிகாரம் உள்ளது, மற்றவர்கள் சிறியவர்கள்” என்று நினைப்பதே கிப்ர்.


ஏன் அகங்காரம் இவ்வளவு ஆபத்தானது?


அல்லாஹ்வுக்கே உரிய மகத்துவத்தை அடிமை தன் மீது எடுத்துக் கொள்வதால்.


அகங்காரம் கொண்டவரின் இதயத்தில் இறை அஞ்சல் (தக்வா) இருக்காது.


அகங்காரம் காரணமாக ஒருவர் உண்மையை ஏற்க மறுக்கலாம் – அதுவே அவரை நரகத்துக்கு அழைத்துச் செல்லும்.


#நபிகள் நாயகம் ﷺ விளக்கமளித்த ஹதீஸ்:


ஒரு ஸஹாபி கேட்டார்கள்:


“யாராவது அழகாக உடை அணிந்தாலும், நல்ல காலணி அணிந்தாலும் அது அகங்காரம் தானா?”


நபி ﷺ கூறினார்கள்:


“இல்லை! அல்லாஹ் அழகானவன்; அழகை விரும்புகிறான்.

அகங்காரம் என்பது உண்மையை மறுப்பதும், மக்களை இழிவாகக் காண்பதும் தான்.”

📖 (சஹீஹ் முஸ்லிம்)


இந்த ஹதீஸ் நம்மை எச்சரிக்கிறது –


 இதயத்தில் சிறிதளவு அகங்காரமும் இருந்தால், அது நம்மை அல்லாஹ்வின் கருணையிலிருந்து விலக்கிவிடும். ஆகவே நம்மை எப்போதும் பணிவுடனும், தாழ்மையுடனும் நடத்திக் கொள்ள வேண்டும்.


@highlight

Saturday, 30 August 2025

பொருள் ஆசை புகழ் ஆசை

 

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَا ذِئْبَانِ جَائِعَانِ أُرْسِلَا فِي غَنَمٍ بِأَفْسَدَ لَهَا مِنْ حِرْصِ الْمَرْءِ عَلَى الْمَالِ وَالشَّرَفِ لِدِينِهِ "  "பசித்திருக்கும் இரண்டு ஓநாய்கள் ஒரு ஆட்டுக் கூட்டத்தில் விடப்பட்டால், அந்த ஆட்டுக்கூட்டத்துக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்று நினைத்தாலும், அதைவிட மிகக் கொடூரமான தீங்கினை ஒருவரின் செல்வ பேராசையும், கீர்த்தி–புகழ் விருப்பமும் அவனது மதத்துக்கு விளைவிக்கின்றது."  என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.  🔹 இந்த ஹதீஸின் உணர்வு:  ஓநாய்கள் ஆட்டுக்கூட்டத்துக்குள் புகுந்தால் ஆடுகளை விரட்டி, கிழித்து, சிதறடித்து பெரும் நாசம் உண்டாக்கும்.  அதைவிட ஆபத்தானது, ஒருவரின் பொருள் ஆசையும் (المال) மற்றும் புகழ்–பதவி விருப்பமும் (الشرف) ஆகும்.  ஏனெனில் இந்த இரண்டு ஆசைகளும் அவனுடைய ஈமான், மத நிலை, தக்வா, இறைபயம் ஆகியவற்றை மிக மோசமாக கெடுக்கின்றன.  ➡️ அதாவது செல்வமும் புகழும் மீதான பேராசை, மதத்தை வீழ்த்தும் மிகப்பெரிய ஆபத்து என நபி ﷺ எச்சரித்தார்கள்.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَا ذِئْبَانِ جَائِعَانِ أُرْسِلَا فِي غَنَمٍ بِأَفْسَدَ لَهَا مِنْ حِرْصِ الْمَرْءِ عَلَى الْمَالِ وَالشَّرَفِ لِدِينِهِ "  "பசித்திருக்கும் இரண்டு ஓநாய்கள் ஒரு ஆட்டுக் கூட்டத்தில் விடப்பட்டால், அந்த ஆட்டுக்கூட்டத்துக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்று நினைத்தாலும், அதைவிட மிகக் கொடூரமான தீங்கினை ஒருவரின் செல்வ பேராசையும், கீர்த்தி–புகழ் விருப்பமும் அவனது மதத்துக்கு விளைவிக்கின்றது."  என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.  🔹 இந்த ஹதீஸின் உணர்வு:  ஓநாய்கள் ஆட்டுக்கூட்டத்துக்குள் புகுந்தால் ஆடுகளை விரட்டி, கிழித்து, சிதறடித்து பெரும் நாசம் உண்டாக்கும்.  அதைவிட ஆபத்தானது, ஒருவரின் பொருள் ஆசையும் (المال) மற்றும் புகழ்–பதவி விருப்பமும் (الشرف) ஆகும்.  ஏனெனில் இந்த இரண்டு ஆசைகளும் அவனுடைய ஈமான், மத நிலை, தக்வா, இறைபயம் ஆகியவற்றை மிக மோசமாக கெடுக்கின்றன.  ➡️ அதாவது செல்வமும் புகழும் மீதான பேராசை, மதத்தை வீழ்த்தும் மிகப்பெரிய ஆபத்து என நபி ﷺ எச்சரித்தார்கள்.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :

" مَا ذِئْبَانِ جَائِعَانِ أُرْسِلَا فِي غَنَمٍ بِأَفْسَدَ لَهَا مِنْ حِرْصِ الْمَرْءِ عَلَى الْمَالِ وَالشَّرَفِ لِدِينِهِ "


"பசித்திருக்கும் இரண்டு ஓநாய்கள் ஒரு ஆட்டுக் கூட்டத்தில் விடப்பட்டால், அந்த ஆட்டுக்கூட்டத்துக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்று நினைத்தாலும்,

அதைவிட மிகக் கொடூரமான தீங்கினை ஒருவரின் செல்வ பேராசையும், கீர்த்தி–புகழ் விருப்பமும் அவனது மதத்துக்கு விளைவிக்கின்றது."


என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


🔹 இந்த ஹதீஸின் உணர்வு:


ஓநாய்கள் ஆட்டுக்கூட்டத்துக்குள் புகுந்தால் ஆடுகளை விரட்டி, கிழித்து, சிதறடித்து பெரும் நாசம் உண்டாக்கும்.


அதைவிட ஆபத்தானது, ஒருவரின் பொருள் ஆசையும் (المال) மற்றும் புகழ்–பதவி விருப்பமும் (الشرف) ஆகும்.


ஏனெனில் இந்த இரண்டு ஆசைகளும் அவனுடைய ஈமான், மத நிலை, தக்வா, இறைபயம் ஆகியவற்றை மிக மோசமாக கெடுக்கின்றன.


➡️ அதாவது செல்வமும் புகழும் மீதான பேராசை, மதத்தை வீழ்த்தும் மிகப்பெரிய ஆபத்து என நபி ﷺ எச்சரித்தார்கள்.

🌹 *முஹத்திஸீன்களது மவ்லித்* 🌹

🌹 *முஹத்திஸீன்களது மவ்லித்* 🌹

 🌹 *முஹத்திஸீன்களது மவ்லித்* 🌹


இமாமுல் ஹதீத் பில் ஹிந்த்,குத்புல் இர்ஷாத்,ஸனதுல் முஹத்திஸீன்,ஜைனுல் புகஹா ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி ஸுபி காதிரி قدس الله سره العزيز அவர்கள் , மக்கா முகர்ரமாவில் நடைபெற்ற மவ்லித் நிகழ்வில் தாம் பங்குபெற்றதைக் குறித்து எழுதுகின்றனர்,


" நான் மக்கா முகர்ரமாவில் இருந்த பொழுது ,ரபீயுல் அவ்வல் அன்று மக்கள் பூமான் நபி ﷺ அவர்கள் மீது ஸலவாத் ஓதி ,அண்ணல் நபி ﷺ அவர்களது பிறப்பின் சிறப்புகளை எடுத்துக் கூறுவர்.அந்த புனித இரவில் பேரொளி தோன்றியதை நான் அனுபவப்பூர்வமாக கண்டேன் "

 


📕 *புயூத் அல் ஹரமைன்,இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி قدس الله سره العزيز*

Friday, 29 August 2025

ஏறாவூர் பிரதான மஸ்ஜிதில் மெளலீத் மஜ்லிஸ்

 

ஏறாவூர் பிரதான மஸ்ஜிதில் மெளலீத் மஜ்லிஸ்

ஏறாவூர் பிரதான மஸ்ஜிதில் மெளலீத் மஜ்லிஸ்

ஏறாவூர் பிரதான மஸ்ஜிதில் மெளலீத் மஜ்லிஸ்

ஏறாவூர் பிரதான மஸ்ஜிதில் மெளலீத் மஜ்லிஸ்


ஏறாவூர் முதலாம் குறிச்சி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயலின் புதிய நிர்வாகத் தெரிவினை தொடர்ந்து புதிய நம்பிக்கையாளர் சபையினால் நம் உயிரினும் மேலான கண்மணி முஸ்தபா நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மாதமான றபிஉல் அவ்வல் மாதத்தினை சிறப்பிக்கும் முகமாக புனித சுப்ஹான மௌலித் ஓதும் நிகழ்வுகள் நிர்வாக உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் ஏற்பாடாகி சிறப்புற நடைபெறுகின்றது.

படைத்தவனுக்கும், படைக்கப்பட்ட படைப்புகளுக்கும்

படைத்தவனுக்கும், படைக்கப்பட்ட படைப்புகளுக்கும்

 கேள்வி:- கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வஸல்லம் அவர்கள்...


படைத்தவனுக்கும், படைக்கப்பட்ட படைப்புகளுக்கும் (و قبلة الواجد و الموجود) கிப்லாவானவர்கள் என ஸுப்ஹான மௌலிதில் ஓர் வாசகம் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே இதற்கான தெளிவான பதில் என்ன?

      ┈┈┈┅◉☆◆☆◉┅┈┈┈

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி, பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி, ஸூபி, நக்ஷபந்தி.

      ┈┈┈┅◉☆◆☆◉┅┈┈┈

பதில்:- இது வெளிப்படையான விடயம் தான்... 

அல்லாஹ்வின் திருச்சமுகம் செல்வதாயின் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் மூலமாகத்தான் செல்லவேண்டும், காபகௌஸைனியின் மத்திய கோட்டில் இருப்பவர்கள் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஆகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  வாஜிதாதாகிய அல்லாஹ்வுக்கு கிப்லாவாக உள்ளார்கள் 


அல்லாஹ் கொடுக்கின்றான் நான் பங்கீடு செய்கின்றேன் என்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள்.


படைப்புக்கு றிஸ்க்கும், றஹ்மத்தும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் மூலமாக கிடைப்பதால்  வாஜிதுக்கும், மௌஜூதுக்கும் கிப்லாவாக இருக்கின்றார்கள்.


ஆகவேதான் படைப்புக்கள் அனைத்திற்கும் அன்னார் நபியாக றஸூலாக உள்ளார்கள், படைப்புக்கள் அனைத்தும் அன்னாரை ஈமான் கொள்கின்றன, 


 இதுதவிர இன்னும் ஆழமான விளக்கங்கள் உள்ளன, 


நாம் கூறியதை நன்கு ஆழமாக சிந்தித்தால் மேலும் பல விளக்கங்களை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.


கௌஸைன் என்பது இரு வில்லுகள், மேற்பகுதி வாஜிது கீழ்பகுதி மௌஜூத் இரண்டையும் பிரிக்கும் மத்திய கோடு நபியவர்களின் மகாம், இதையே காப கௌஸைனி எனப்படும்  இந்தமத்திய கோடு இரண்டுக்கும் கிப்லாவாகும். 


இந்த மத்தியை நட்ட நடு வீடு என்று சில ஸூபிகள் பாடுவார்கள்.

அருள் மணக்கும் மெளலீத்

 


நபிகள் பெருமானாரின் ﷺ மவ்லிதை சிறப்பித்தும் ஆதரித்தும் முற்கால அறிஞர்களால் எழுதப்பட்டுள்ள கிரந்தங்களில் சில..


01)"மவ்லித் அல் ஆருஸ்" – அல் ஹாஃபிழ் அப்துர் ரஹ்மான் இப்ன் அல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 597]


02)"அல் தன்வீர் ஃபீ மவ்லித் அல் பஷீர் அல் நதீர்" – அல் ஹாபிழ் உமர் இப்ன் அலீ இப்ன் திஹ்யா அல் கல்பி ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 633]


03)"மவ்லித் அன் நபி" – அல் ஹாபிழ் இமாதுத்தீன் இஸ்மாயில் இப்ன் கதிர் ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 774]


04)"அல் மவ்ரித் அல் ஹானி ஃபில் மவ்லித் அஸ் ஸானி" – அல் ஹாபிழ் இமாம் ஸைனுத்தீன் அப்துர் ரஹீம் அல் ஈராகி ரஹிமஹுல்லாஹ் [ஹிஜ்ரி 725-806] 


05)"அர்ப் அல் தாரீப் பிஃல் மவ்லித் அல் ஷரீப்" – அல் ஹாபிழ்  இமாம் ஷம்சுத்தீன் முஹம்மத் அல் ஜஸரீ ரஹிமஹுல்லாஹ்  [வபாத் ஹிஜ்ரி 833]


06)"அல் மவ்ரித் அல் ஸாதி ஃபீ மவ்லித் அல் ஹாதி" – அல் ஹாபிழ் ஷம்சுத்தீன் முஹம்மத் இப்ன் அபூ பக்கர் இப்ன் நாசிருத்தீன் அல்திமஷ்கி ரஹிமஹுல்லாஹ் [ஹிஜ்ரி 777-842]


07)"ஜாமிஃ அல் ஆதார் ஃபீ மவ்லித் அல்முக்தார்" – அல் ஹாபிழ் ஷம்சுத்தீன் முஹம்மத் இப்ன் அபூ பக்கர் இப்ன் நாசிருத்தீன் அல்திமஷ்கி ரஹிமஹுல்லாஹ் [777-842]


08)"அல் லப்ழ் அர் ராயிக் ஃபீ மவ்லித் கைர் அல் ஹலாயிக்" – அல் ஹாபிழ் ஷம்சுத்தீன் முஹம்மத் இப்ன் நாசிருத்தீன் அல்திமஷ்கி ரஹிமஹுல்லாஹ் [ஹிஜ்ரி 777-842]


09)"அல் பக்ர் அல் அலாவீ ஃபீஃல் மவ்லித் அன் நபவி" – அல் ஹாபிழ் முஹம்மத் இப்ன் அப்துர்ரஹ்மான் அல் ஸஹாவி ரஹிமஹுல்லாஹ் [ஹிஜ்ரி 831-902]


10)"அல் மவாரித் அல் ஹானிய்யஹ் ஃபீ மவ்லிதி கைர் அல் பரிய்யஹ்" – இமாம் ஸைனுல் ஆபிதீன் அலீ அல் சம்ஹூதி ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 911]


11)"மவ்லித்" – அல் ஹாபிழ் வஜ்ஹுத்தீன் அப்தர்ரஹ்மான் முஹம்மத் அல் ஷைபானி ரஹிமஹுல்லாஹ் (இப்ன் அல்-தாபி) [ஹிஜ்ரி 866-944]


12)"அல் மவ்லித் அல் ராவீ ஃபீல் மவ்லித் அல் நபவி" – இமாம் முஹம்மத் இப்ன் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் (கதீப் ஷிர்பீனி) [வபாத் ஹிஜ்ரி 977]


13)"அல் மவ்ரித் அல் ராவீ ஃபீல் மவ்லித் அல் நபவி" – ஷெய்க் நூருத்தீன் முல்லா அலீ இப்ன் சுல்தான் அல் காரி [ வபாத் ஹிஜ்ரி 1014]


14)"இக்த் அல் ஜவ்ஹர் ஃபீ மவ்லித் அன் நபி அல் அஸ்ஹர்" – முஹத்தித்  ஷெய்க் அல் ஜாஃபர் இப்ன் ஹசன் அல்-பர்சன்ஜீ ரஹிமஹுல்லாஹ் [ வபாத் ஹிஜ்ரி 1177] (மவ்லித் பர்சன்ஜீ என்று பிரபலமானது)


15)"அல் ஃபஜ்ர் அல் முனீர் ஃபீ மாவ்லிதில் பஷீர் அல் நதீர்" – ஷெய்க் தாஹா இப்ன் மிஹ்னா ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 1178]


16)"மவ்லித் அன் நபி" – ஷெய்க் ஷிஹாபுத்தீன் அஹ்மத் அல் தர்தீர் ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 1201]


17)"அல் யூம்னு வல் இஸாʻத் பி மவ்லிதி கைர் அல் இபாத்" – ஷெய்க் முஹத்தித்  இமாம் முஹம்மத் இப்ன் ஜாஃபர் அல் கித்தானீ ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 1345]


18)"ஜவாஹிர் அல் நஜ்ம் அல் பதீஃ ஃபீ மவ்லித் அல் ஷஃபீ" – ஷெய்க் யூஸுப் இப்ன் இஸ்மாயில் அல் நப்ஹானி ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 1350]


19)"ஹவுல் அல் இஹ்திபால் பி திக்ரா அல் மவ்லித் அல் நபவி அல் ஷரீப்" – ஷெய்க் ஸையித் முஹம்மத் அலவீ அல் மாலிகீ அல் ஹஸனீ [வபாத் ஹிஜ்ரி 1425]


20)"இதாகத்துல் அதாம் லி மானியி அமல் அல் மவ்லித் வல் கியாம்" – ரயீஸ் அல் முதகல்லிமீன் இமாம் நாகீ அலீ கான் ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 1295]


21)"இகாமதுல் கியாமா அலா தாயினில் கியாமி லி நபிய்யி திஹாமா" – இமாம் அஹமத் ரிழா கான் பரேலவி ரஹிமஹுல்லாஹ் (வபாத் ஹிஜ்ரி 1340)


மார்க்க சட்டதிட்டங்களை திறம்பட கற்றறிந்து பல்வேறு துறைகளில் விற்பன்னர்களாக திகழ்ந்த சன்மார்க்க மேதைகள் ஆதரித்த எம் பெருமானாரின் மவ்லித் ஷரீபை குறைமதியாளர்கள் விமர்சிப்பதை பொருட்படுத்தாது பெருமானாரின் பிறப்பில் புளகாங்கிதமடைவோம்.

Wednesday, 27 August 2025

நபிகள் பெருமானாரின் ﷺ மவ்லிதை

நபிகள் பெருமானாரின் ﷺ மவ்லிதை

நபிகள் பெருமானாரின் ﷺ மவ்லிதை



நபிகள் பெருமானாரின் ﷺ மவ்லிதை

நபிகள் பெருமானாரின் ﷺ மவ்லிதை


நபிகள் பெருமானாரின் ﷺ மவ்லிதை

 

 நபிகள் பெருமானாரின் ﷺ மவ்லிதை சிறப்பித்தும் ஆதரித்தும் முற்கால அறிஞர்களால் எழுதப்பட்டுள்ள கிரந்தங்களில் சில..


01)"மவ்லித் அல் ஆருஸ்" – அல் ஹாஃபிழ் அப்துர் ரஹ்மான் இப்ன் அல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 597]


02)"அல் தன்வீர் ஃபீ மவ்லித் அல் பஷீர் அல் நதீர்" – அல் ஹாபிழ் உமர் இப்ன் அலீ இப்ன் திஹ்யா அல் கல்பி ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 633]


03)"மவ்லித் அன் நபி" – அல் ஹாபிழ் இமாதுத்தீன் இஸ்மாயில் இப்ன் கதிர் ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 774]


04)"அல் மவ்ரித் அல் ஹானி ஃபில் மவ்லித் அஸ் ஸானி" – அல் ஹாபிழ் இமாம் ஸைனுத்தீன் அப்துர் ரஹீம் அல் ஈராகி ரஹிமஹுல்லாஹ் [ஹிஜ்ரி 725-806] 


05)"அர்ப் அல் தாரீப் பிஃல் மவ்லித் அல் ஷரீப்" – அல் ஹாபிழ்  இமாம் ஷம்சுத்தீன் முஹம்மத் அல் ஜஸரீ ரஹிமஹுல்லாஹ்  [வபாத் ஹிஜ்ரி 833]


06)"அல் மவ்ரித் அல் ஸாதி ஃபீ மவ்லித் அல் ஹாதி" – அல் ஹாபிழ் ஷம்சுத்தீன் முஹம்மத் இப்ன் அபூ பக்கர் இப்ன் நாசிருத்தீன் அல்திமஷ்கி ரஹிமஹுல்லாஹ் [ஹிஜ்ரி 777-842]


07)"ஜாமிஃ அல் ஆதார் ஃபீ மவ்லித் அல்முக்தார்" – அல் ஹாபிழ் ஷம்சுத்தீன் முஹம்மத் இப்ன் அபூ பக்கர் இப்ன் நாசிருத்தீன் அல்திமஷ்கி ரஹிமஹுல்லாஹ் [777-842]


08)"அல் லப்ழ் அர் ராயிக் ஃபீ மவ்லித் கைர் அல் ஹலாயிக்" – அல் ஹாபிழ் ஷம்சுத்தீன் முஹம்மத் இப்ன் நாசிருத்தீன் அல்திமஷ்கி ரஹிமஹுல்லாஹ் [ஹிஜ்ரி 777-842]


09)"அல் பக்ர் அல் அலாவீ ஃபீஃல் மவ்லித் அன் நபவி" – அல் ஹாபிழ் முஹம்மத் இப்ன் அப்துர்ரஹ்மான் அல் ஸஹாவி ரஹிமஹுல்லாஹ் [ஹிஜ்ரி 831-902]


10)"அல் மவாரித் அல் ஹானிய்யஹ் ஃபீ மவ்லிதி கைர் அல் பரிய்யஹ்" – இமாம் ஸைனுல் ஆபிதீன் அலீ அல் சம்ஹூதி ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 911]


11)"மவ்லித்" – அல் ஹாபிழ் வஜ்ஹுத்தீன் அப்தர்ரஹ்மான் முஹம்மத் அல் ஷைபானி ரஹிமஹுல்லாஹ் (இப்ன் அல்-தாபி) [ஹிஜ்ரி 866-944]


12)"அல் மவ்லித் அல் ராவீ ஃபீல் மவ்லித் அல் நபவி" – இமாம் முஹம்மத் இப்ன் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் (கதீப் ஷிர்பீனி) [வபாத் ஹிஜ்ரி 977]


13)"அல் மவ்ரித் அல் ராவீ ஃபீல் மவ்லித் அல் நபவி" – ஷெய்க் நூருத்தீன் முல்லா அலீ இப்ன் சுல்தான் அல் காரி [ வபாத் ஹிஜ்ரி 1014]


14)"இக்த் அல் ஜவ்ஹர் ஃபீ மவ்லித் அன் நபி அல் அஸ்ஹர்" – முஹத்தித்  ஷெய்க் அல் ஜாஃபர் இப்ன் ஹசன் அல்-பர்சன்ஜீ ரஹிமஹுல்லாஹ் [ வபாத் ஹிஜ்ரி 1177] (மவ்லித் பர்சன்ஜீ என்று பிரபலமானது)


15)"அல் ஃபஜ்ர் அல் முனீர் ஃபீ மாவ்லிதில் பஷீர் அல் நதீர்" – ஷெய்க் தாஹா இப்ன் மிஹ்னா ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 1178]


16)"மவ்லித் அன் நபி" – ஷெய்க் ஷிஹாபுத்தீன் அஹ்மத் அல் தர்தீர் ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 1201]


17)"அல் யூம்னு வல் இஸாʻத் பி மவ்லிதி கைர் அல் இபாத்" – ஷெய்க் முஹத்தித்  இமாம் முஹம்மத் இப்ன் ஜாஃபர் அல் கித்தானீ ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 1345]


18)"ஜவாஹிர் அல் நஜ்ம் அல் பதீஃ ஃபீ மவ்லித் அல் ஷஃபீ" – ஷெய்க் யூஸுப் இப்ன் இஸ்மாயில் அல் நப்ஹானி ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 1350]


19)"ஹவுல் அல் இஹ்திபால் பி திக்ரா அல் மவ்லித் அல் நபவி அல் ஷரீப்" – ஷெய்க் ஸையித் முஹம்மத் அலவீ அல் மாலிகீ அல் ஹஸனீ [வபாத் ஹிஜ்ரி 1425]


20)"இதாகத்துல் அதாம் லி மானியி அமல் அல் மவ்லித் வல் கியாம்" – ரயீஸ் அல் முதகல்லிமீன் இமாம் நாகீ அலீ கான் ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 1295]


21)"இகாமதுல் கியாமா அலா தாயினில் கியாமி லி நபிய்யி திஹாமா" – இமாம் அஹமத் ரிழா கான் பரேலவி ரஹிமஹுல்லாஹ் (வபாத் ஹிஜ்ரி 1340)


மார்க்க சட்டதிட்டங்களை திறம்பட கற்றறிந்து பல்வேறு துறைகளில் விற்பன்னர்களாக திகழ்ந்த சன்மார்க்க மேதைகள் ஆதரித்த எம் பெருமானாரின் மவ்லித் ஷரீபை குறைமதியாளர்கள் விமர்சிப்பதை பொருட்படுத்தாது பெருமானாரின் பிறப்பில் புளகாங்கிதமடைவோம்.

Monday, 25 August 2025

யாநபி ஸலாம்

யாநபி

 *பெருமானாரின் பேரொளியிலிருந்து வையகம் பிறந்தது*

      ┈┈┈┅◉☆◆☆◉┅┈┈┈

*கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி, பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி, ஸூபி, நக்ஷபந்தி.*

      ┈┈┈┅◉☆◆☆◉┅┈┈┈


வையகக் காரணி, அகிலத்தின் அருட்பிளம்பு நபிகள் கோமான் ஈருலக இரட்சகர் ஏந்தல் நபி முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதல் படைப்பு என்றும், அல்லாஹுத்தஆலா அவர்களின் ஒளியையே முதலில் படைத்தான். இந்த ஒளியிலிருந்தே அனைத்துப் படைப்பினங்களையும் வெளியாக்கினான் என்றும், சுன்னத் வல் ஜமாஅத்தினர் கூறி வருகின்றனர். 


ஸஹாபாக்கள் காலம் முதல் இதுநாள்வரை இக்கருத்து அறிஞர்களால் உரைக்கப்பட்டும், வரையப்பட்டும் வந்துள்ளது. நபிகள் நாயகத்தின் வரலாற்று நூற்களிலும், ஹதீதுப் பெரு நூற்களிலும் திருமறை விரிவுரைகளிலும், மௌலிது நூற்களிலும் இக்கருத்து முக்கியத்துவம் கொடுத்து கூறப்பட்டுள்ளது. 


இக்கருத்து ஹிந்துக்களின் “அத்வைத்“ சித்தாந்தத்தைப் போதிக்கும் பிழையான வாதம் என்றும், இக்கருத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என்றும் சிலர் பகிரங்கமாகக் கூறுகின்றனர். அதனால், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் ஒளியிலிருந்து படைக்கப் பட்டார்கள். அவர்களின் ஒளியிலிருந்துதான் எல்லாம் படைக்கப்பட்டன என்பதை தக்க ஆதாரத்துடன் நிறுவியுள்ளோம். கவனமாகப் படியுங்கள்! உண்மையை தெளிவீர்கள்! 


(1)- நிச்சயமாக அல்லாஹ்விடம் இருந்து பேரொளியும், தெளிவும் உள்ள ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கிறது. 

(அல்குர்ஆன்- 5: 15)  


(2)- அல்லாஹ் வானங்கள் பூமியின் பிரகாசமாக இருக்கின்றான். அவனது பிரகாசத்திற்கு உதாரணம் விளக்கு இருக்கும் ஒரு மாடத்திற்கு ஒப்பாகும். அவ்விளக்கு ஒரு பளிங்குக் கிண்ணத்தில் இருக்கி்ன்றது. அந்தக் கிண்ணமோ முத்தாலாகிய ஒரு நட்சத்திரத்தைப்போல் (பிரகாசித்துக் கொண்டிருக்கிறது).



(3)- நபியே! நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்கு) சாட்சியாகவும், நட்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கின்றோம். மேலும் அல்லாஹ்வின் அனுமதியின்படி (ஜனங்களை நீர்) அவன்பால் அழைப்பவராகவும் ஒளி வீசும் (மணி) விளக்காகவும் (இருக்கின்றீர்கள்). 

(அல்குர்ஆன்- 33: 45,46)


(4)- அல்லாஹ்வுடைய ஒளியை தம் வாய்களால் (ஊதி) அணைத்து விடலாம் என்று இவர்கள் கருதுகின்றனர். அந்நிராகரிப்போர் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை (உலகமெங்கும் ஒளி வீசும்படி) பூர்த்தியாகவே ஆக்கி வைப்பான். 

(அல்குர்ஆன்- 61: 8)



(5).- இவர்கள் தங்கள் வாய்களைக்கொண்டே (ஊதி) அல்லாஹ்வுடைய பிரகாசத்தை அணைத்துவிட விரும்புகின்றனர். எனினும், இந்நிராகரிப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்கப்போவதில்லை

(அல்குர்ஆன்- 9: 32)



முதல் திருவசனத்தில் “நூர்“ என்ற சொல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே குறிக்கும். வெளிச்சமில்லாமல் புத்தகத்தை படிக்க முடியாதது போன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல் இன்றி திருக்குர்ஆனை விளங்க முடியாது.


இரண்டாவது திருவசனத்தில் அல்லாஹ்வுடைய “நூர்“ என்று சுட்டிக்காட்டப்படும் வாக்கியமும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே குறிக்கும். காரணம் அல்லாஹ் ஒப்பு உவமைகளை விட்டும் பரிசுத்தமானவன். ஆனால், இத்திருவசனத்தில் அல்லாஹ்வின் “நூர்“ - (ஒளி)க்கு உவமை கூறப்பட்டுள்ளது. அதனால் இங்கு குறிக்கப்படும் நூர் - ஒளி - றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே குறிக்கும்.


மூன்றாவது திருவசனத்தில் ‘சிறாஜுன் முனீர்‘ பிரகாசிக்கும் தீபம் என்று நாயகமவர்களை அல்லாஹ் குறிப்பிடுகின்றான். திருக்குர்ஆனின் மற்றுமொரு இடத்தில் சூரியனையும் “சிறாஜுன் முனீர்“ என்று குறிப்பிட்டுள்ளான். - ஒளி என்பது தானும் வெளியாகி ஏனையவற்றையும் வெளியாக்குவதற்கு கூறப்படும். சூரியன் தானும் பிரகாசித்து சந்திரன், நட்சத்திரங்கள், உள்ளிட்ட பல்வேறு கிரகங்களையும், தாரகைகளையும் பிரகாசிக்கச் செய்கின்றது.


இவ்வாறு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிரகாசிக்கும் பேரொளியாக இருப்பதுடன், நபிமார்கள் ஸஹாபாக்கள், வலிமார்கள் உள்ளிட்டோரை பிரகாசிக்கச் செய்பவர்களாகவும் விளங்குகின்றார்கள்.


நான்காவதும், ஐந்தாவதும் திருவசனங்களில் குறிப்பிடப்படுகின்ற “நூர்“ ஒளி என்பது றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே குறிக்கும். காபிர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அழித்து விட பகீரதப்பிரயத்தனம் செய்தனர். ஆனால் அல்லாஹுத்தஆலா பெருமானாரின் அனைத்துப் பணிகளையும் தடையின்றி பூர்த்தியாக்கினான்.


முதல் திருவசனத்தில் வரும் “நூர்“ என்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் குறிக்கும் என்று தப்ஸீர் ஜலாலைன் விளக்கம் சொல்கிறது.


“தப்ஸீர் ஜலாலைன்“ இன் விரிவுரைத் தப்ஸீரான தப்ஸீர் ஸாவியில் “நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நூர் - ஒளி என்று குறிப்பிடக் காரணம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பார்வைகளை ஒளி பெறச்செய்கிறார்கள். மேலும், வெற்றியின் பக்கம் அவற்றுக்கு வழிகாட்டுகிறார்கள். மேலும், புறப்புலன்களால் பார்க்கப்படும் காட்சிக்கும், அகப்புலன்களால் அறியப்படும் அறிவுக்கும், நபியவர்கள் அஸலாக -  மூலமாக விளங்குகின்றார்கள் என்றும் வரைந்துள்ளார்கள்.“


இதே கருத்தையே தப்ஸீர் பைழாவி, தப்ஸீர் மதாரிக், தப்ஸீர் காஸின் உள்ளிட்ட அநேக தப்ஸீர்கள் கூறுகின்றன. இவற்றுள் தப்ஸீர் ஜலாலைன், தப்ஸீர் ஸாவி, தப்ஸீர் பைழாவி, தப்ஸீர் மதாரிக் ஆகிய தப்ஸீர்கள் அறபு மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருப்பது ஈண்டு கவனிக்கத்தக்கது.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் எதார்த்தம் “ஒளி“ என்பதை ஹதீது நூற்கள் தெளிவாக பறைசாற்றுகின்றன. பின்வரும் விளக்கத்தை கவனியுங்கள்.


(01)- இமாம் அப்துர்ரஸ்ஸாக் அபூபக்கர் பின் ஹுமாம் ரலியல்லாஹு அன்ஹு, இமாம் மாலிக் றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மாணவரும், இமாம் அஹமது இப்னு ஹன்பல் றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஆசிரியரும், இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் றஹ்மத்துல்லாஹி அலைஹிமா ஆகியோரின் ஆசிரியரி்ன் ஆசிரியருமாவார். இவர்களின் பிரசித்தி பெற்ற ஹதீதுப் பெருநூல் “முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக்“ என்பதாகும். இதில் ஹளரத் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீது இடம்பெற்றுள்ளது. அது வருமாறு.


ஹளரத் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்.


அல்லாஹ்வின் திருத்தூதரே!


என்தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அனைத்திற்கும் முதல் அல்லாஹுத்தஆலா படைத்த முதல் படைப்பு எது? என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள் நீண்ட விடை பகர்ந்தார்கள்.


அல்லாஹுத்தஆலா முதலில் தன் ஒளியிலிருந்து உமது நபியின் ஒளியை படைத்தான். பின்னர், அந்த ஒளி அல்லாஹ் நாடிய விதத்தில் அவன் சக்தியால் சுற்றிக்கொண்டிருந்தது. அதுவேளை லௌஹுல் மஹ்பூழ் என்ற பலகை, கலம், சொர்க்கம், நரகம், சூரியன், வானம், பூமி, சந்திரன், ஜின், மனித இனம் எதுவும் இருக்கவில்லை.


அல்லாஹுத்தஆலா படைப்பை படைக்க நாடியபோது அந்த ஒளியை நான்காக பங்கிட்டான். அதில் ஒரு பகுதியிலிருந்து கலத்தையும், மறுபகுதியிலிருந்து லௌஹுல் மஹ்பூழையும் மூன்றாவதிலிருந்து அர்ஷையும் படைத்தான். எஞ்சிய நான்காவது பாகத்தை நான்காக பங்கிட்டான்.


அதன் முதற்பகுதியிலிருந்து அர்ஷை சுமக்கும் மலக்குகளையும், இரண்டாம் பகுதியிலிருந்து குர்ஷியையும், மூன்றாம் பகுதியிலிருந்து ஏனைய மலக்குகளையும் படைத்தான். மிஞ்சிய ஒரு பகுதியை மேலும் நான்கு பாகங்களாக்கினான். அதன் முதற்பாகத்திலிருந்து வானத்தையும், இரண்டாம் பாகத்திலிருந்து பூமியையும், மூன்றாம் பாகத்திலிருந்து சுவர்க்கத்தையும் படைத்தான். எஞ்சிய நான்காவது பாகத்தை மேலும் நான்கு பாகங்களாக்கினான். இப்படி ஹதீது நீன்று கொண்டே செல்கிறது.


மேற்கண்ட ஹதீதை இமாம் பைஹகீ அவர்கள் தலாயிலுன் நுபுவ்வத்திலும், புகாரி ஷரீபுக்கு விரிவுரை எழுதிய அல்லாமா கஸ்தலானி அவர்கள் மவாஹிபிலும், இமாம் இப்னு ஹஜர் மக்கி அவர்கள், அப்ழலுல் குறா, பதாவா ஹதீஸியா என்ற நூற்களிலும், அல்லாமா பாஸி அவர்கள், மதாலி உல் மஸர்ராத் என்ற நூலிலும், இமாம் ஸர்க்கானி அவர்கள் ஷறஹ் மவாஹிபுல் லதுன்னியாவிலும், ஷைய்கு முஹக்கிக் அப்துல் ஹக் முஹத்திது திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹிம் மதாரிஜுன் நுபுவ்வத்திலும், இன்னும் ஏராளமான இமாம்களும், முஹத்திஸ்களும் இந்த ஹதீதின் ஸனதை - உறுதி செய்து இது ஸஹீஹான ஹதீதுதான் என்று கட்டியம் கூறியுள்ளார்கள்.


இமாம் முல்லா அலிகாரி றஹ்மத்துல்லாஹி அலைஹி “மிஷ்காத்“ என்ற ஹதீதுத் தொகுப்பு நூலுக்கு பிரசித்தி பெற்ற “மிர்காத்“ என்ற ஒரு விரிவுரையை எழுதிய அறிஞர். இவர் இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகளைத் தொகுத்து “மௌலுஆத்துல் கபீர்“ என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். இந்த நூலில் “அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரொளி கிழக்கிலும், மேற்கிலும் மிகத் தெளிவாக படர்ந்திருந்தது. அல்லாஹுத்தஆலா முதன்முதலில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஒளியைத்தான் படைத்தான். அவன் (அல்லாஹ்) தனது திருமறையில் அவர்களுக்கு நூர் - ஒளி என்ற திருநாமத்தை சூட்டியுள்ளான் என்று எழுதியுள்ளார்கள்.


புகாரி ஷரீபுக்கு விளக்கம் எழுதிய இமாம் அஹ்மது கஸ்தலானி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறினார்கள்.


“அல்லாஹுத்தஆலா சிருஷ்டிகளை வெளியாக்க நாடியதும்” “அஹதிய்யத்“ என்ற நிலையில் ஸமதிய்யத் என்ற பேரொளியிலிருந்து ஹகீகத்தே முஹம்மதிய்யாவை வெளிப்படுத்தினான். இதில் (ஹகீகத்தே முஹம்மதிய்யாவில்) இந்த மேலுலகம், கீழுலகம் உள்ளி்ட்ட அனைத்து உலகங்களையும் வெளிப்படுத்தினான்.


ஆதாரம்: மவாஹிபுல்லதுன்னியா பாகம்- 01, பக்கம்- 55


அல்லாமா ஸர்க்கானி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மவாஹிபுல்லதுன்னியாவின் விரிவுரையில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.


“அஹதிய்யத்“ என்ற நிலை அல்லாஹ்வின் தாத்தின் முதற்குறிப்பாகும். அதன் வெளிப்பாட்டில் முதல் நிலையாகும். இந்த நிலையில் அல்லாஹ்வின் தாத்திற்கு வேறானது எதுவுமில்லை.


“அல்லாஹ் தனியாக இருந்தான், அவனுடன் எவரும் இருக்கவில்லை“ என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழி இந்த நிலையையே சுட்டிக் காட்டுகின்றது. இதனை “அல்காஷானி“ றஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிட்டுள்ளார்கள்.


ஆதாரம்: ஷரஹு ஷர்க்கானி பாகம் - 1 பக்கம் - 27



“மிஷ்காத்“ என்ற ஹதீதுப் பெரு நூலுக்கு அறபியிலும், பாரசீகத்திலும் “லம்ஆத்“ “அஷிஃஅத்துல்லம் ஆத் - என்று விரிவுரை எழுதிய உலகப் புகழ்பெற்ற ஹதீதுத்துறை பேரறிஞர் ஷெய்கு முஹக்கிக் அப்துல் ஹக் முஹத்திதுத் திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.


“நபிமார்கள் அல்லாஹ்வின் தாத்தி்ன் திருநாமங்களிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். வலிமார்கள் ஸிபத்துக்களின் திருநாமங்களிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். ஏனைய படைப்புக்கள் ஸிபத்தின் செயற்பாடுகளினால் படைக்கப்பட்டுள்ளனர். 


றஸூல்மார்களின் நாயகரான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்  தாத்தே ஹக்கிலிருந்து படைக்கப்பட்டுள்ளார்கள். நபிகள் நாயகத்தின் ஹக்கி்ன் வெளிப்பாடு (ழுஹுர்) தாத்திலிருந்தாகும்.


ஆதாரம்: மதாரிஜுன் நுபுவ்வத் பாகம் - 2, பக்கம் - 609


“தலாயிலுல்கைறாத்“ என்ற பிரபலமான ஸலவாத் தொகுப்பு நூலுக்கு அல்லாமா அஷ்ஷெய்கு பாஸி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய “மதாலிஉல்மஸர்ராத்“ என்ற நூலில் எழுதுகின்றார்கள்.


“இமாம் அஷ்அரி (சுன்னத் வல் ஜமாஅத்தின் அகீதாவுக்குரிய இமாம்) கூறகின்றார்கள்.


அல்லாஹ் பேரொளியானவன். ஏனைய ஒளிகளைப் போன்று அல்ல. நபியவர்களின் பரிசுத்த றூஹுடைய பிரகாசமானது அல்லாஹ்வின்  பேரொளியிலிருந்து உள்ளதாகும். மலக்குகள் அந்தப் பேரொளியின் சிதறல்களாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.


அல்லாஹுத்தஆலா முதன் முதலில் எனது றூஹைப் படைத்தான். எனது றூஹிலிருந்துதான் ஏனைய படைப்பினங்களை வெளிப்படுத்தினான்.


ஆதாரம்: மதாலிஉல் மஸர்ராத் பக்கம் - 265


உலகப் புகழ்பெற்ற பேரறிஞர் ஷாஹ் வலியுல்லாஹ் றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் தந்தை ஷாஹ் அப்துர் ரஹீம் முஹத்தித் திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் “அன்பாஸே ரஹீமிய்யா“ என்ற நூலில் எழுதுகின்றார்கள்.


“பர்ஷ்” என்ற பூமியின் ஆழ்நிலத்திலிருந்து அர்ஷ்வரை உயர் மலக்கிலிருந்து தாழ்ந்த இனம் வரை அனைத்தும் “ஹகீகத்தே“ முஹம்மதிய்யாவிலிருந்து வெளியாயின. நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.


“முதன் முதலில் அல்லாஹுத்தஆலா என்னுடைய ஒளியையே படைத்தான். நீங்கள் இல்லாவிட்டால் நான் வானங்களைப் படைத்திருக்க மாட்டேன் நான் எனது றுபூபிய்யத்தையும் வெளியாக்கியிருக்கமாட்டேன் என அல்லாஹ் திருவுளமானான்.


தேவ்பந்திகளாலும், தப்லீக் ஜமாஅத்தினராலும் “ஹகீமுல் உம்மத்“ என்று சிறப்புப்பெயரால் அழைக்கப்படுபவர். மௌலவி அஷ்ரப் அலி தானவி ஆவார். இவர் தனது “நஷ்ரூத்திப்ஃபிதிக்ரின் நபிய்யில் ஹபீப்“ என்ற நூலில் முதல் அத்தியாயமான நூரே முஹம்மதிய்யா என்ற தலைப்பில் எழுதுகின்றார்.


 முதன் முதலில் எனது நூரைத்தான் அல்லாஹுத்தஆலா படைத்தான். என்ற ஹதீதிலிருந்து முதல் படைப்பு நூரே முஹம்மதிய்யா என்பது நிரூபணம் ஆகின்றது. ஏனெனில், அறிவிப்புக்களில் எப்பொருளைப்பற்றி முதற்படைப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோ, அவை நூரே முஹம்மதை வி்ட பிந்தியவையே என்பது இந்த ஹதீதிலிருந்து தெளிவாக்கப்பட்டுள்ளது.


தேவ்பந்து உலமாக்களில் மிக முக்கியமானவராக கருதப்படும் மௌலவி ஹுசைன் அஹ்மது மதனி என்பவர் “அஷ்ஷிஹாபுத்தாகிப்“ என்ற நூல் பக்கம் 50இல் பின்வருமாறு எழுதுகின்றார்.


நம்முடைய முன்னோர்களான நமக்கு வழிகாட்டியாகச்சென்ற பெரியார்களி்ன் கொள்கைகளையும், கூற்றுக்களையும் சற்று கவனத்தில் எடுத்துக்கொண்டு பாருங்கள்! இவர்கள் அனைவருமே பேரொளி சிந்தும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தூய உள்ளமைப்பை பொருட்டாக்கி இறைவனின் அருட்கொடைகளையும், அவனது எல்லையற்ற பேருதவியையும் தொடர்ந்து பெற்று வந்திருக்கிறார்கள். இதையே தங்களது ஈடேற்றத்திற்குரிய சாதனமாகவும் நம்பியிருந்தனர். இவர்கள் அனைவரின் கொள்கையும் மிகத்தெளிவாக இருந்தது.


ஆதியிலிருந்து இந்த அண்ட கோளங்களில் அருல்மாரி பொழிந்து கொண்டிருந்த, இனியும் பொழியப்போகின்ற இறைவனின் பெரும் கருணை அது.


அது இவ்வுலகத்தையே உண்டாக்குவதாக இருந்தாலும் சரி! அல்லது வேறுவிதமான கருணையாக இருந்தாலும் சரி! இவை அனைத்திலுமே எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரிசுத்த “தாத்“ என்னும் உள்ளமை அமைந்திருக்கிறது. அது சூரியனின் பேரொளி முதலில் சந்திரனுக்கு வருகிறது. தொடர்ந்து சந்திரனிலிருந்து எண்ணில் அடங்கா கண்ணாடிகளில் பிரதிபலிக்கிறது. அதாவது,


“ஹகீகத்தே“ முஹம்மதிய்யா அண்ட கோளங்கள் மற்றும், அதில் வாழும் படைப்பினங்கள் அனைத்திலிருந்தும் வெளியாகின்ற ஆற்றல்களுக்கு மூலமாக இருக்கின்றது.


இந்தப் பொருளிலேயே “நபியே! நீங்கள் இல்லாவிட்டால் இந்த அண்ட கோளங்களை நான் படைத்திருக்க மாட்டேன்“ என அல்லாஹ்வும், “முதன்முதல் அல்லாஹ் படைத்தது என் நூரைத்தான் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். "நான் நபிமார்களுக்கெல்லாம் நபியாவேன்" என்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பகர்ந்துள்ளார்கள். 


ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தாத்தொளியிலிருந்து படைக்கப்பட்டார்கள் என்பதினால் மஆதல்லாஹ் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பது போல், ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்வின் தாத் மூலமாகிவிட்டது என்பது பொருளாகாது. அல்லாஹ்வின் தாத்தின் ஒரு பகுதி, அல்லது தாத் அனைத்தும் நபியவர்களி்ன் தாத்தாக ஆகிவிட்டது என்று கருதக்கூடாது. இப்படிக் கூறுவதிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக! 


அல்லாஹ்வின் ஒரு பகுதி ஏதாவது ஒன்றுடன் சேர்வது அல்லது, ஒரு பொருளில் இறங்குவது - ஹுலுல் -  இத்திஆத் ஆகியவைகளை விட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன். ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் ஒரு பகுதி என்றோ, ஒரு படைப்புக்கு அல்லாஹ்வி்ன் தாத் தன்னே மூலமாக இருக்கின்றது என்றோ நம்புவது குப்றாகும்.


நபிகள் நாயகத்தின் படைப்பின் எதார்த்தத்தை அதன் பொருளை அல்லாஹ்வும், அவனது திருத்தூதருமே நன்கு அறிவார்கள். ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்,


“அபூபக்கரே! எனது ஹகீகத்தை அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு எவரும் அறியமாட்டார்கள்“.


ஆதாரம் மதாலிஉல் மஸர்ராத் பக்கம்- 129



அனைத்துப் படைப்பினங்களும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பொருட்டினால், அவர்களி்ன் மூலமாக அல்லாஹ்வின் தாத்திலிருந்து படைக்கப்பட்டுள்ளன. இதனால், நபியவர்கள் அல்லாஹ்விடமிருந்து தனது வுஜுதைப் பெற்றுக் கொண்டார்கள். ஏனைய படைப்பினங்களுக்குரிய வுஜுதை நபியவர்கள் வழங்கினார்கள் என்பது இதன் பொருள் அல்ல.


றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஒளி ஏதும் ஒரு துணைகொண்டு படைக்கப்படவி்ல்லை. அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு எந்த ஊடகமும் இல்லை. அவர்கள் எதுவித ஊடகமும் இன்றி நேரடியாக அல்லாஹ்வின் தாத்திலிருந்தே படைக்கப்பட்டுள்ளார்கள்.


இமாம் ஷர்க்கானி கூறுகின்றார்கள்,


பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஒளி அல்லாஹ்வின் தாத்திலிருந்தே படைக்கப்பட்டது. அதனால், பெருமானாரின் படைப்புக்கு அல்லாஹ்வின் “தாத்“ மூலப்பொருளாக ஆகிவிட்டது என்பது பொருளல்ல. அல்லாஹ்வின் நாட்டம் பெருமானாரின் வுஜுதில் எந்த விதமான பொருளில் தொடர்பும் இன்றி கொளுகிவிட்டது என்பதே பொருளாகும். இதனை ஒரு எளிய பின்வரும் உதாரணத்தின் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.


பிரமாண்டமான, அழகான, தெளிவான கண்ணாடி சூரியனுக்கெதிராக வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கண்ணாடியில் விழுந்த சூரியனின் பிரதி விம்பத்தின் மூலம் எதிரிலிருந்த கண்ணாடி, நீர், காற்று உள்ளிட்டவைகளில் தெறித்து பிரபஞ்சம் முழுவதும் பிரகாசமாகிவிட்டது. கண்ணாடி நீர்த்தடாகம் போன்றவற்றில் சூரியனின் சுடர் பிரதி விம்பத்தோடு மட்டுமன்றி அவற்றின் தெளிவுக்குத்தக்க விதத்தில் பிரகாசிக்கக் கூடியதாகவும் மாறிவிட்டது. கண்ணாடியில் பட்டுத்தெறித்த சுடர் சுவரில் பட்டு சுவர் சூடேறிவிட்டது.


முதல் கண்ணாடி சூரியனிலிருந்து நேரடியாக ஒளியைப் பெறுகின்றன. ஏனைய கண்ணாடிகள் நீர்த்தடாகங்கள் முதல் கண்ணாடியில் இருந்து ஒளியைப்பெறுகின்றன.  சுவரும் ஏனையவைகளும் ஊடகத்தின் மூலம் பிரகாசம் பெறுகின்றன. முதற் கண்ணாடியில் பிரபிம்பித்த ஒளி சூரியனின் நேரடி ஒளியாகும். இதனால் சூரியனின் ஒளியில் ஒரு பகுதியாக கண்ணாடி ஆகி விட்டது என்றோ, சூரியன் கண்ணாடியில் இறங்கிவிட்டது. என்றோ பொருள் ஆகாது. ஆனால், ஒரு உண்மை யாதெனில் முதல் கண்ணாடியிலிருந்து சுவரை சூடேற்றிய ஒளிவரை அனைத்தும் சூரியனின் ஒளியேயாகும். இதுபோன்றுதான்,


இந்த உண்மையை எளிதில் புரிந்து கொள்வதற்காகத்தான் அல்லாஹுத்தஆலா தனது ஒளிக்கு உதாரணம், மாடக்குழியில் இருக்கும் விளக்கைப் போன்றுள்ளது.... என்று குறிப்பிட்டுள்ளான்.


இயற்கை நியதிப்படி பன்மை என்பது ஒருமையில் இருந்து உண்டாகிறது. பன்மைக்குச் சிறப்பு ஒருமையிலிருந்தே கிடைக்கின்றது. ஒருமைக்குப் பெருமை தரும் ஒரு பிறப்பிடம் இருக்கின்றது. வானத்தில் கணக்கற்ற விண்மீன்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் சூரியனின் ஒளியிலிருந்தே ஒளியைப் பெற்று பிரகாசிக்கின்றன.


மரத்தின் இலைகளும், பூக்களும் காய் கனிகளும் வேரில் இருந்தே உணவைப் பெற்று பலன் பெறுகின்றன. மனிதனின் பௌதீகத்தின் மூலம் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களில் இருந்து தொடங்குகின்றது. மனிதனின் அனைத்து உறுப்புக்களும் ஒரு இதயத்திலிருந்தே பயன்பெற்று இயக்கமடைகின்றது. ஆக,


ஒவ்வொரு பன்மையிலும் ஒருமையின் பயன் ஊடுருவிக்கொண்டே இருக்கி்ன்றது என்பது தெளிவாகின்றது. எனவே, படைப்பினங்கள் அனைத்தும் ஏதோ ஒருமையிலிருந்தே உருவாகியிருக்க வேண்டும். பன்மைக்கு உதாரணமாக இருக்கும் படைப்பினங்கள் ஓர் ஒருமையிலிருந்தே பயன்பெற்றிருக்க வேண்டும்.


இந்த மூலப் பிறப்பிடத்தை “பையாழு“ என்றுரைக்கின்றனர். இதனையே ஹகீகத்தே முஹம்மதிய்யா என்றும், நூரே முஹம்மதிய்யா என்றும் குறிப்பிடுகின்றனர்.


றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒளியாக இருப்பதினால் அவர்கள் மனிதர் அல்ல என்பது பொருளாகாது. நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வி்ன் றூஹ் என்பதினால் அவர் மனிதரில்லை என்றாகுமா?


வானவர் கோமான் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியவர்களிடம் வஹி கொண்டுவரும்போது அதிகமாக “ஹளரத் திஹ்யத்துல் கல்பி“ என்ற ஸஹாபியின் கோலத்தி்ல் வருவார்கள். இதனைக் கண்ணுற்றவர்கள் ஹளரத் திஹ்யத்துல் கல்பி என்ற ஸஹாபியுடன்தான் நபியவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைப்பார்கள். இதனால் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனித கோலத்தில் இருக்கும்போது மலக்கு என்ற நிலையிலிருந்து நீங்கி விடுவார்களா?


பல நபிமார்களிடத்தில் மலக்குகள், மனித கோலத்தில் சமூகம் கொடுத்துள்ளனர். எனவே, மனிதத் தன்மையும், ஒளித்தன்மையும் ஒன்ரோடொன்று முரண்பட்டதல்ல. இரண்டு தன்மைகளும் பிரியாமல் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் இருக்க முடியும்.


இந்த வகையில், நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சடரீதியாகவும், ஆத்மீக ரீதியாகவும் ஒளியாக இருக்கின்றார்கள். சடரீதியாகவும் அவர்கள் ஒளியாக இருப்பதினால்தான் அன்னாரின் திருமேனிக்கு நிழல் விழுவதில்லை.


அன்னார் ஆதமீக ரீதியாகவும் ஒளியாக இருப்பதினால்தான் ஒளியின் உச்ச வேகம்கொண்ட புறாக்கிலேறி விண்ணுலகப் பயணத்தை மேற்கொண்டார்கள். அல்லாஹ்வை புறக்கண்ணால் தரிசித்து  உரையாடினார்கள். 


எனவே, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் ஒளி என்பதும், அவர்களிலிருந்து பிரபஞ்சம் படைக்கப்பட்டுள்ளது என்று நம்புவதும் திருக்குர்ஆனினது, திருநபி மொழிகளினதும் ஷரீஅத்தை சரியாக விளங்கிய சான்றோர்களினதும் உறுதிக் கூற்றாகும்.


இதில் ஷரீஅத்திற்கு விரோதமானவைகளோ, ஹி்ந்து கிரேக்க தத்துவங்களோ, ஏதும் கிடையாது.


இஸ்லாத்தின் தூய அறிவுப் பகுதியாகிய ஆத்மீக ஞானத்தை கிரேக்க, ஹிந்து தத்துவத்தோடு தொடர்புபடுத்தி இஸ்லாத்தின் பெறுமதிமிக்க பகுதியை கேவலப்படுத்துகின்ற படலம் வரலாற்றின் நீண்ட காலமாக தொடர் கதையாக இருந்து வருகின்றது. இதன் மூலம் முஸ்லிம்களை ஆத்மீகத்தில் ஆர்வமற்றவர்களாக ஆக்குவதோடு பெறுமதிமிக்க அறிவுக் கருவூலங்களையும், ஆத்மீக வாதிகளையும் முஸ்லிம் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்துகின்ற சதி வேலையினை இவர்கள் செய்கின்றனர்.


இஸ்லாம் வெறும் சடவாத சமயமல்ல. இஸ்லாத்தின் பெறுமதிமிக்க பகுதி ஆத்மீகமாகும். இதன் மூலம்தான் முஸ்லிம்கள் கண்ணியம் பெற்றார்கள். உலகை வென்றார்கள். முஸ்லிம்களின் பெரு வளர்ச்சியும், இஸ்லாத்தின் பெறுமதியும் ஆத்மீகத்தில்தான் தங்கியுள்ளது என்பதை இஸ்லாத்தின் விரோதிகள் மிகத் தெளிவாக விளங்கியுள்ளனர். அதனால், தங்களுக்குச் சவாலாக இருக்கின்ற ஆத்மீக சக்திகளை நசுக்குவதற்கும் இஸ்லாத்தின் அறிவுக் கருவூலங்களை மக்கள் பார்வையிலிருந்து மறைப்பதற்கும் எடுக்கப்படுகின்ற சதியின் ஒரு பகுதிதான் சூபிசம் கிரேக்க, ஹிந்து தத்துவத்தின் மறுபகுதி என்ற புரளியாகும். இதனை நன்கு விளங்கி இஸ்லாத்தின் விரோதிகளின் ஏஜென்டுகளின் துர்ப்பிரசாரத்தின் அபாயத்தை விளங்கி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அனைத்து முஸ்லிம்களி்ன் இன்றியமையாத கடமையாகும். கருணையுள்ள ரஹ்மான் றஹ்மதுன் லில்ஆலமீன் ஆகிய உயிரிலும் மேலான கண்மனி நாயகத்தின் பேரொளியில் எங்களது கல்புகளை வெளிச்சமாக்கி வைப்பானாக!


- ஆமீன் -

Sunday, 24 August 2025

முஹம்மத் நபி ஸல்

மீலாத் விழா



 *நானிலம் போற்றும் நபிகள் கோமான் முஸ்தபா ஸல்லல்லாஹு* *அலைஹி வஸல்லம்* .

••••••••••••••••••••••••••••••••••••••••

மௌலவி, பாஸில் , *ஏ.எல். பதுறுத்தீன்* . ஷர்க்கி, பரேலவி, ஸூபி ,காதிரி, நக் ஷபந்தி .

**********"""


உலகத்தில் தோன்றிய அனைத்து நபிமார்களிலும், ஏன் அனைத்து படைப்புக்களிலும் பயகம்பர் நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உயர்ந்தவர்கள், மேலானவர்கள் என்பது முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை சார்ந்த அசைக்க முடியாத முடிவாகும், இதில் எந்த சிறு கருத்து வேறுபாடும் முஃமின்கள் மத்தியில் கிடையாது, இதுபற்றி திருக்குர்ஆன் , திரு நபிமொழி , இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுக்கள் ஆதாரமாக உள்ளன, 


அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளான யூத கைக்கூலிகள் இதில் புதுக்ருத்தை தூவி மக்கள் மனதில் சந்தேகங்களையும் குழப்பத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர், 


 இவர்களின் வாதப்படி, ஹளறத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைவிடச்சிறந்தவர்கள், ஏனெனில் திருக்குர்ஆனில் ஹளறத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாமவர்களை அல்லாஹுத்த ஆலா " கலீலுள்ளாஹ்"அல்லாஹ்வின் நண்பர் என்று கூறியுள்ளான், நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை இவ்வாறு திருக்குர்ஆனில் எங்கும் குறிப்பிட வில்லை , ஆகவே , நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களை விட, ஹளறத் கலீலுள்ளாஹ் செய்யிதுனா இப்றாஹீம் அலை ஹிஸ்ஸலாம் மேலானவர்கள். 


மக்களைக் குழப்பி வழிகெடுப்பதை தனது வாழ்நாள் பணியாகக்கொண்டு செயல்படும் ஒருவரின் வார்த்தைகள் இவை , மேலொட்டமாகப் பார்ப்பவர்கள் இவர் பேச்சில் ஏதோ உண்மையிருப்பதாக சந்தேகிக்கலாம், ஆனால் திருக்குர்ஆன் , திருநபி உள்ளட்டவையை ஆழமாக நோக்குவோருக்கு இது அடிப்படையற்றவை என்பது புரியும், 


மேலும் , குறித்த நபர் முன்வைக்கும் எதுவும் அவர் சொந்தக்கருத்துக்கள் அல்ல! ஏற்கனவே பேசப்பட்டு பதில்கூறப்படு மூடுவிழா செய்யப்பட்டவையையே இப்போது இவருக்குப்பின்னாலிருப்பவர்கள் கிளறிஎடுத்து தொகுத்து வழங்குகின்றனர், உண்மையில் இவர் ஓர் உதுகுழல் மட்டுமே!   


முதலில் , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் சிறப்புக்களை தக்க நியாயத்தோடு முன்வைப்போம், அடுத்து "குல்லத் "பற்றிய விளக்கத்தையும் ஆராய்வோம்.


அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.


تلك الرسل فضلنا بعضهم علي بعض 


இவர்கள் ரசூல்மார்கள் அவர்களில் ஒருவரை மற்றவர்களைக் காண சிறப்பாக யிருக்கின்றோம். 2: 253


சங்கையான நபிமார்கள் ( அலைஹிமுஸ்ஸலாம்) கூட்டத்தில் ஒருவரை விட மற்றவருக்குச் சிறப்புகள் வழங்கப்படுள்ளன, இவர்களுள் நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பல விதங்களில் சிறப்பானவர்கள், உயர்ந்தவர்கள் என்பதற்கு பல நியாயங்கள் உள்ளன, அவை வருமாறு,


ஆதாரம்: 1


1- وما ارسلناك الا رحمة للعلمين.


அகிலத்தார்களுக்கு அருளாகவே அன்றி உம்மை நாம் அனுப்பவில்லை. 21: 107


அகிலமனைத்திற்கும் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் றஹ்மத்தாக இருப்பதாயின், நிச்சயமாக அன்னார் அனைத்து படைப்பினங்களை விடவும் மேலானவராக இருந்தாக வேண்டும்.


 ஆதாரம் : 2-

 அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். 


ورفعنا لك ذكرك 


இன்னும் ,நாம் உமக்காக உமது கீர்த்தியை உயர்த்தினோம். 94: 4


அல்லாஹுத்த ஆலா றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் முபாறக்கான திருப்பெயரை தனது திருநாமத்தோடு திருக்கலிமாவில், அதானில், அத்தஹியாத்தில், சேர்த்துள்ளான், இவ்வாறு ஏனைய நபிமார்களின் திருப்பெயரை இணைக்கவில்ல.


 ஆதாரம் : 3- 


 அல்லாஹ்வுக்கு வழிப்படுவதை றஸூலுக்கு வழிப்படுவதோடு இணைத்துக் கூறியுள்ளான், 


அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். 


من يطع الرسول فقد اطاع الله


எவர் றஸூலின் சட்டத்திற்கு வழிப்பட்டாரோ அவர் அல்லாஹ்வின் சட்டத்திற்கும் வழிப்பட்டார் . 4: 80


நபிகளாரிடம் பைஅத் பெற்றதை தன்னிடம் பைஅத் பெற்றதாகக்கூறியுள்ளான்.


ان الذين يبايعونك انما يبايعون الله يد الله فوق ايديهم.


எவர் உம்மிடம் பைஅத் பெற்றார்களோ அவர் அல்லாஹ்விடமே பைஅத் பெற்றார், அவர்களின் கரங்களுக்கு மேல் அல்லாஹ்வின் கரம் உள்ளது. 

48 : 10


தன்னுடைய கண்ணியத்தோடு றஸூலின் கண்ணியத்தையும் தொடர்படுத்தியுள்ளான்.


ولله العزة ولرسوله 


இன்னும், கண்ணியம் அல்லாஹ்வுக்கும், இன்னும் அவனுடைய றஸூலுக்குமாகும்.

63: 8 


இன்னும் தனது ஹபீபின் பொருத்தத்தோடு தன்னுடைய பொருத்தத்தையும் சேர்த்துள்ளான்.


والله ورسوله احق ان يرضوه 


அவர்கள் திருப்திப் படுவதற்கு மிக்க தகுதியானவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய திருத்தூதருமாகும். 9: 62


இன்னும்,தனது கட்டளை யைச்செயல்படுத்துவதை தனது மஹ்பூபின் கட்டளையைச் செயல்படுவதோடு இணைத்துக்கூறியுள்ளான்.


يا ايها الذين امنوا استجيبوا لله وللرسول 


ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் , இன்னும் அவனுடைய றஸூலின் அழைப்புக்குப் பதில் கூறுங்கள். 8: 24 


ஆதாரம்: 4


 திருக்குர் ஆனில் விரும்பிய எந்த ஓர்அத்தியாயத்திற்கு நிகராக ஓர் அத்தியாயத்தைக்கொண்டுவருமாறு காபிர்களுக்கு சவால் விடுமாறு றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்குக் கட்டளையிட்டுள்ளான்.


அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். 


فاتوا بسوره من مثله 


எனவே, அதுபோன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாரேங்கள். 2 :23 


திருக்குர்ஆனில் மிக ச்சிறிய அத்தியாயம் மூன்று திருவசனங்கள் உள்ள அத்தியாயம் சூறத்துல் கௌதர் ஆகும், திருக்குர்ஆனில் மூன்று திருவசனங்களைப்போன்று கொண்டு வாருங்கள் என்று சவால் விட்டது போன்றுள்ளது.


திருக்குர்ஆனில் ஆறாயிரத்திற்குமதிகமான ஆயத்துக்கள் உள்ளன, இந்த வகையில் திருக்குர்ஆன் ஒரு முஃஜிஸா அல்ல , 2000க்குமதிகமான முஃஜிஸாத்துக்களின் தொகுப்பாகும், இந்தளவு முஃஜிஸாத் எந்த ஒரு நபிக்கும் வழங்கப்படவில்லை , இதன்படி , றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏனைய நபிமார்களை விட மேலானவர்களாகும்.


ஆதாரம் :5 


 நமது நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் இந்த ஒரு முஃஜிஸா ஏனைய ஒவ்வொரு நபியுடைய முஃஜிஸாவையும் விட சிறப்பானதாகும், எனவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஏனைய நபிமார்களை விட மேலானவர்கள் என்பது நிரூபணமாகிவிட்டது.


ஆதாரம் : 6


நபிமார்களின் நிலைகளை விளக்கிக் கூறிய பின், அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.


اولئك الذين هدى الله فبهداهم اقتده 


இவர்கள்தான் அல்லாஹ் ஹிதாயத் செய்த கூட்டத்தினர், எனவே, நீரும் அந்த வழியில் செல்வீராக! 7 : 90



இங்கு முந்திய நபிமார்களைப் பின் தொடருமாறு நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது, தீனின் உஸூலில் அவர்களைப்பின்பற்றுமாறு கட்டளையிடப்பட்டுள்ளதாக பொருள்கொள்வது நபிகளாரின் விடயத்தில் ஆகுமானதல்ல, காரணம் இது தக்லீத் அதாவது அவர்களைப் பின்பற்றுவதாகும், அவர்களின் மார்க்கத்தின் கிளைச்சட்டங்களைப் பின்பற்றுமாறு கட்டளையிடப்பட்டுள்ளதாகக்கூறுவதும் சரியல்ல, ஏனெனில் ஷரீஅத்தே முஹம்மதியா முந்திய அனைத்து ஷரீஅத்துக்களையும் மாற்றிவிட்டது, ஆகவே, அவர்களின் அழகிய நற்குணங்களைஎடுத்துக்கொள்வதுதான் இதன் நோக்கமாகும்,


முந்திய நபிமார்களின் நிலைகளையும், இன்னும் நற்குணங்களையும் அல்லாஹுத்த ஆலா எடுத்துக்கூறிய பின், அவற்றை எடுத்துகொள்ளுமாறு கூறியுள்ளான், இதன் பொருள் யாதெனில், ஏனைய நபிமார்களிடம் தனித்தனியாக சிதறிக்கிடந்த நற்பண்புகள் அனைத்தையும் தனிநபராகிய நீங்கள் சேகரமாக்கிக் கொள்ளுங்கள் என்பதாகும், இதன்படி அனைவரின் தனித்தனியான நற்பண்புகளைத் திரட்டி தன்னகத்தே கொண்ட காரணத்தால் நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏனைய நபிமார்களைவிட மேலாகிவிட்டார்கள்.


ஆதாரம்: 7-:


இறுதி நபியாகிய நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் படைப்புக்கள் அனைத்திற்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள், இதனால் அன்னாரின் பொறுப்பு அதிகமாகும், ஏனைய நபிமார்களை விட கஷ்டங்களும் அதாகமாகும், இதன்படி நபிகள் நாயகம் மேலானவர்களாகும்.


அனைத்து மனிதர்களுக்கும் நபியாக அனுப்பப்பட்டதை அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.


وما ارسلناك الا كافة للناس بشيرا ونذيرا 


நேசரே! நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும், சகல மனிதர்களுக்குமான தூதுவத்தைக் கொண்டவராகவே அன்றி உம்மை நாம் அனுப்பவில்லை. 34 : 28


ஆதாரம் : 8


 முஹம்மதுர்றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் மார்க்கம் ஏனைய மார்க்கங்களை விட மேலாகும், இஸ்லாத்தின் மூலமாக ஏனைய அனைத்து மார்க்கங்களையும் மாற்றி விட்டான், மாற்றியது மாற்றப்பட்டதை விட மேல், இந்த வகையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஏனைய நபிமார்களை விட மேலாகும்.


ஆதாரம் 9 


 கடைசி நபியாகியநமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் உம்மத் ஏனைய உம்மத்துக்களை விட மேலாகும், எனவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஏனைய நபிமார்களை விட மேலாங இருப்பது அவசியமாகும்.


முதல் விடயத்திற்கான ஆதாரம் ,


كنتم خير امة اخرجت للناس 


 மக்களுக்காக வெளியாக்கப்பட்ட சமுகங்களில் நீங்கள் மேலானவர்கள். 3 : 110 


இரண்டாவது விடயத்திற்கான ஆதாரம்,


இந்த உம்மத் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைப் பின்பற்றியதனால்தான் மேலானார்கள்என்பதை அல்லாஹுத்த ஆலாவே கூறுகின்றான்.


قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله 


நேசரே ! கூறுங்கள்! மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்வை நண்பனாக ஆக்கிக் கொள்வதாயின், என்னைப்பின்பற்றுங்கள். 3 : 31


பின்பற்றப்படுபவரின் சிறப்பால்தான் பினுபற்றுபவருக்கு சிறப்பு கடமையாகிறது. ஏனைய நபிமார்களைப் பின்பற்றியவர்களைவிட, நபிகள் நாயகத்தைப் பின்பற்றுவோர் அதிகமாகும் , ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மனு , ஜின் இருகூட்டத்தாருக்கும் நபியாக அனுப்பப் பட்டுள்ளார்கள்.


ஆதாரம் :10

 றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


நாளை கியாமத்தில் ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களின் அனைத்து பிள்ளைகளும் எனது கொடியின் கீழால்தான் வருவார்கள், இந்த ஹதீதின் மூலம் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்களின் அனைத்து பிள்ளைகளை விடவும் மேலானவர்கள் என்பது நிரூபணமாகின்றது, 


மேலும் கூறினார்கள்.


நான் ஆதத்தின் அனைத்து பிள்ளைகளுக்கும் தலைவராகும்.


மேலும் கூறினார்கள்.


 நான் முதலில் சொர்க்கம் நுளையும் வரை எந்த ஒரு நபியும் நுளைய மாட்டார்கள், இன்னும், எனது உம்மத் சொர்க்கம் நுளையும் வரை ஏனைய உம்மத்துக்களில் எவரும் நுளைய மாட்டார்கள்.


மேலும் கூறினார்கள்.


கப்றிலிலிருந்து மக்கள் எழும்பும் போது முதன் முதலில் நான்தான் 

எழும்புவேன். மஹ்ஷரில் அல்லாஹ்விடத்தில் மக்கள் சார்பாக நான்தான் பேச்சாளராக இருப்பேன், அவர்கள் நம்பிக்கையிழந்திருக்கும் நேரத்தில் நான்தான் நற் செய்தி கூறுவேன், லிவாஉல் ஹம்து என் கையில்தானிருக்கும், நான் அல்லாஹுத்த ஆலாவின் சன்னிதானத்தில் அனைத்து மனிதர்களலயும் விட, சங்கையும், கண்ணியமும் பொருந்தியவராக இருப்பேன். இதை பெருமைக்காகக் கூறவில்லை. 


ஆதாரம் 11- 


அல்லாஹுத்த ஆலா திருக்குர் ஆனில் ஏனைய நபிமார்களை அவர்களின் பெயரைக் கூறி அழைத்தான் , ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை அன்னாரின் பெயர் கூறி அழைக்காமல் , நபியே, றஸூலே, இன்னும் இதுபோன்று கண்ணியமாகவே விளித்துள்ளான் இது அன்னாரின் சிறப்புக்கான ஆதாரமாகும்.


 இதுபோன்று இன்னும் ஏராளமான ஆதாரங்கள்உள்ளன, விரிவஞ்சி இத்தோடு சுருக்கிக்கொள்கின்றோம், அடுத்து "குல்லத்" பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம், 


இமாம் காழி இயாழ் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களுடைய புகழ் பூத்த " அஷ்ஷிபா " என்ற நூலில் குல்லத், மஹப்பத் பற்றி எழுதியுள்ள விளக்கத்தை அப்படியே அடியிற் தருகின்றேன். 


ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மஹப்பத்,குல்லத் இருப்பதாக ஸஹீஹான ஹதீதுகளில் வந்தும் கூட, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறிப்பாக ஹபிபுல்லா என்று தான் முஸ்லிம்கள் மொழிகின்றனர்.


அபு ஸயீதுல் குத்ரிய்யி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கின்றார்கள்.


அல்லாஹ்வைத் தவிர்த்து மற்றுமொருவரை கலீலாக நான் எடுத்துக் கொள்வதாயின், அபூபக்கரை எடுத்துக் கொள்வேன் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


உங்கள் தோழர் (ஆகிய நான்) அல்லாஹ்வின் கலீல் ஆவேன். என்று கூறியதாக மற்றுமொரு ஹதீதில் பதிவாகியுள்ளது.


ஹளறத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு தஆலா அன்ஹுவின் அறிவிப்பில்,


உங்களின் தோழரை அல்லாஹ் கலீலாக ஆக்கியுள்ளான் என்றுள்ளது.


ஹளறத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு மா அவர்களின் அறிவிப்பில்,


சஹாபாக்களில் ஒரு கூட்டத்தினர் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை எதிர்பார்த்து அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர் ,ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேச்சை செவியேற்குமளவு நெருங்கி வரும் போது சஹாபாக்களில் ஒருவர் அல்லாஹுத்தஆலா தனது படைப்பால் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கலீலாக ஆக்கியது வியப்பானதுதான் என்றார்,


ஹளறத் மூசா அலைஹிஸ்ஸலாமவர்களுடன் அல்லாஹ் வசனித்தது இதைவிட ஆச்சரியம் என்றார் மற்றுமொருவர், , ஹளறத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் கலிமா வா(ர்த்தையா)கவும், அவ னுடைய றூஹாக இருப்பதும் ஆச்சரியம்தான் என்றார்வைறு ஒருவர் ; ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட ஸபீஉள்ளாஹ்வாக இருக்கின்றார்கள் என்று பிறிதொருவர் கூறினார்; 


இந்தக் கட்டத்தில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிராக வந்து நின்று அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள்.


நீங்கள் பேசியதையும், நீங்கள் வியந்ததையும் நான் செவியேடுத்தேன், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நிச்சயமாகவே அல்லாஹுத்தஆலா கலீலாக ஆக்கினான்,அதற்கு அவர்கள் தகுதியானவர்கள் தான், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கலீமத்துள்ளாஹ்வாகவும்,, றூஹுல்லாவாகவும் அல்லாஹ் ஆக்கினான்,அதற்கு அவர்கள் தகுதியானவர்தான், ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹுத்தஆலா ஷபீஃஉள்ளாவான நபியாக ஆக்கினான் ; அதற்கும் அவர்கள் தகுதியானவர்கள் தான்;


அறிந்து கொள்ளுங்கள்! நான் அல்லாஹ்வின் ஹபீப் ஆவேன்! இதை பெருமைக்காக கூறவில்லை, கியாமத்து நாளில் பெருமைக்குரிய கொடியை நானே தான் உயர்த்துவேன், இதை பெருமைக்காக நான் கூறவில்லை, முதன் முதலில் ஸஃபாஅத் செய்பவரும், ஒப்புக்கொள்ளப்பட்டவரும் நான்தான், இதில் பெருமை இல்லை, சொர்க்கத்தின் வாசலை தட்டும் முதல் நபரும் நான் தான், அல்லாஹ் எனக்காக சொர்க்கத்தைத் திறந்து என்னை நுழைவிப்பான், முஃமினான ஏழைகள் என்னோடு இருப்பார்கள், இது பெருமை இல்லை! முன்னோர், பின்னோரில் அதி சங்கைக்குரியவர் ஆவேன் இது பெருமையில்லை! ;


சுனன் தாறமி முகத்தமா,பாகம் 1, பக்கம் , 26, திர்மிதி பாகம் 5, பக்கம் 261 .


அபூஹுரைரா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் ஹதீதில் பின்வருமாறு உள்ளது.


நான் உம்மை கலிலாக ஆக்கியுள்ளேன், உமது திருநாமம் தௌராத்தில் ஹபிபுல்லா என்று எழுதப்பட்டுள்ளது என்று அல்லாஹுத்த ஆலா தனது நபிக்கு கூறியுள்ளான்.


காழி அபுல் பழ்லு இயாழ் றஹ்மதுள்ளாஹி அலைஹி அல்லாஹுத்த ஆல் அவருக்குத் தௌபீக் செய்வானாக! கூறுகின்றார்.


குல்லத்தின் விளக்கத்திலும், சொற்பிறப்பிலும். கருத்து வேறு பாடுள்ளது. 


"கலீல் " என்பவர் அனைத்தையும் துறந்து முற்றுமுழுதாக அல்லாஹ்வின் பக்கம் தன்னை ஒப்படைத்தவர்,அவர் (பிறவற்றில்) பயன் பெறுவதிலும்;நேசம் கொள்வதிலும் , எக்குறைவும் வந்து விடாது! என்று சிலரும், 


கலீல் என்பவர் (குல்லத் என்ற பண்பைக்கொண்டு ) தனித்துவமாக்கப்பட்டவர் என்று வேறு சிலரும் கூறுகின்றனர். இக்கருத்தை அதிகமான சான்றோர்கள் தேர்வு செய்துள்ளனர், சிலரின் கூற்றுப்படி, "குல்லத்" என்பதின் அடிப்படை மஹப்பத்தின் பரிசுத்தத்தைத் தேர்வு செய்வதைக் குறிக்கும்.


ஹளறத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நேசமும் , வெறுப்பும் அல்லாஹ்வுக்காகவே இருந்த காரணத்தினால்தான் அவர்களுக்கு கலீலுள்ளாஹ் என்று பெயர் வரக்காரணமாயிற்று, . அல்லாஹ்வின் குல்லத்து(அன்பு)ம், அவனின் உதவியும் அவர்களுக்குக் கிட்டியதோடு பின்னால் வந்தவர்களுக்கு இமாமாகவும் ஆக்கப்பட்டார்கள்.


எதார்த்தத்தில், கலீல் என்பவர் தேவையுள்ள பகீர் ஆவார் அத்தோடு அல்லாஹ் தவிர்ந்த யாவற்றையும் துண்டித்துக் கொண்டவருமாவார்; "கலீல்" என்ற சொல் " கல்லத்" என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்தது 

இதன் பொருள், கடுமையான அவசியத் தேவை என்று சிலர் பொருள் பிரிக்கின்றனர்; 


இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் தங்களுடைய அனைத்து தேவைகளையும் அல்லாஹ்வின் மீது சாட்டி வைத்திருந்தார்கள், அவன் பக்கமாகவே அவர்களுடைய முழு நாட்டமும் குவிந்திருந்தது ;அவனல்லாத எவரிடமும் , எத்தொடர்பும் அவர்களுக்கு இருக்கவில்லை; அன்னாரை அக்கினிக் குண்டத்தில் வீசுவதற்காக கவ்வானில்( ஏவுதளத்தில்) நிறுத்தப்பட்டபோது ,ஹளறத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் முன் தோன்றி உங்களுக்கு ஏதும் தேவை உண்டா? என்று கேட்டதற்கு, அடியானுக்குத் தேவை உண்டு! ஆனால், அது உங்களிடமிருந்து கிடையாது! என்று விடை பகிர்ந்தார்கள்; ஆகவே தான் ஹளறத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குகலீல் என்ற இப்பெயர் குறிப்பாக்கப்பட்டுள்ளது. .


ஹில்யா அபூ நுஐம்

 பாகம் 1- பக்கம் 20 .


அபூபக்கர் இப்னு பூறக் றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்.


الخلة ،صفاء الموددة التي توجب الاختصاص بتخلل الاسرار 


"குல்லத்"என்பது, (இன்பத்திலும்,துன்பத்திலும் பரமஇரகசியமாகப்பேணக்கூடி அப்பழுக்கில்லாத தூய நேசத்திற்கான பெயராகும்.


அடிப்படையில் "குல்லத்" என்பது, மஹப்பத்தையே குறிக்கும்! இதன் பொருள், அவசர உதவி, கருணை; உயர்பதவி; மற்றும் சிபாரிசு செய்தல் உள்ளிட்டவையாகும் என்று சிலர் கூறுகின்றனர்.


 இக்கருத்தை அல்லாஹுத்தஆலா தனது திருமறையில் இவ்வாறு இயம்புகிறான்.


قالت اليهود والنصاري نحن ابناء الله واحباؤه قل فلم يعذبكم بذنوبكم  


 நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகள், இன்னும் அவனின் நேசர்கள் என்று யஹுதிகளும், நஸாராக்களும் கூறுகின்றனர்; அப்படியாயின், தங்களின் பாவங்களுக்காக உங்களை எதற்காக தண்டிக்கிறான் என்று நபியே கூறுவீராக! 5 : 14


. ஆகவே ,நேசர்களின் குற்றங்களுக்காக குற்றம் பிடிக்காதிருப்பது நேசர்களுக்கு கடமையும் அவசியமுமாகும்.என்று மேற்கண்ட திருவசனத்தில் சிலேடையாகக் கூறுகின்றான்:


குல்லத் ( நேசம் ) என்பது பிள்ளைகளை விடப் பலமானதாகும் ஏனெனில் சிலவேளை பிள்ளைகளிலும் பகைமை வருவதுண்டு என்பது நினைவில் கொள்ளுமாறு அல்லாஹுத்தஆலா கூறுகிறான்.,


ان من ازواجكم واولادكم عدو لكم فاحذروهم ،


நிச்சயமாக உங்களுடைய சில மனைவிமார்களும், இன்னும் உங்களுடைய சில பிள்ளைகளும் உங்களின் பகைவர்கள் ஆவார்கள்; எனவே, அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள். 

                                             64. : 14


நட்பும் , பகைமையும் ஒன்றாக சேர்ந்திருப்பது ஒருபோதும் சாத்தியமாகாது! ஆகவே,


ஹஜரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உள்ளிட்டோருக்கு நட்பு, நேசம் உள்ளிட்ட பெயர் வைத்திருப்பது, ஒன்றில், அல்லாஹ்வின் பக்கம் முழுமையாக தங்களை ஒப்படைத்ததற்காக வேண்டியும், தங்களின் முழு தேவைகளையும் அவன் பக்கமாகவே ஆக்கிக் கொண்டதனாலும்; அவன் அல்லாதவரிடமிருந்து அனைத்து காரணிகளையும், தொடர்புகளையும் முழுமையாக அறுத்துக் கொண்டதனாலுமாகும்.


அல்லது, அவ்விருவருக்கும் அல்லாஹ்விடத்தில் இருக்கும் விஷேடமான அதிக தனித்துவத்தினால்,அல்லது, அவ்விருவர் மீதிலும் இருக்கும் மறைமுகமான கருணை ; இன்னும், அவ்விருவருடைய இதயங்களிலும் வேறு எவருக்கும் இடமில்லாத தெய்வீக இரகசியங்கள்; இன்னும் இரகசியமான ரப்பானியத் தான மறைவுகள்; ஹக்கானியத்தான மஃரிபாக்கள் உள்ளிட்ட காரணிகளினாலாகும்.


அல்லது, அவ்விருவருடைய இதயங்களையும் தனக்காக அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொண்டான், அவர்களின் இதயங்களை தன்ன ல்லாதவர்களிருந்து பரிசுத்தமாக்கியுள்ளான், இதில் வேறு எவவருக்குமான நேசத்திற்கு எவ்விதமான வாய்ப்பும் கிடையாது.


இவ்வாறான காரணங்களுக்காகவே தான் கலீலுல்லாஹ் என்பவர் அல்லாஹ் அல்லாதவருக்கு உள்ளத்தில் இடம் கொடுக்காதவர் என்று கூறினார்கள் ‌.


"நான் எவரையாவது கலீலாக ஏற்பதாயின், அபூபக்கரை கலீலாக ஏற்பேன், எனினும்; அவர் எனது இஸ்லாமிய சகோதர ஆவார்" என்ற நபிமொழிக்கு இப் பொருளையே அவர்கள்வழங்குகின்றனர்.


ஸஹீஹுல் புகாரி ,கிதாபுஸ் ஸலாத் பக் 84 ஸஹி முஸ்லிம் பாகம்: 4 பக்கம் 1854


இவ்விரண்டில் குல்லத்தா? அல்லது மஹப்பத்தா தகுதியில் கூடியது? என்பதில் சங்கையான அறிஞர்கள், ஆத்மீக ஞானிகளான ஸூபியாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது.


இவ்விரண்டும் சமத்துவமானவை, கலீல்தான் ஹபீப்! ஹபீப்தான் கலீல்! என்று சிலர் கூறுகின்றனர், ஆயினும், ஹளறத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் குல்லத்தோடும் , ஹளறத் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்மஹப்பத்தோடும் குறிப்பாக்கப்பட்டுள்ளார்கள்; குல்லத்திற்கான தகுதி வேறானது என்று சிலர் கூறுகின்றனர்; "


 நான் அல்லாஹ் அல்லாத ஒருவரை கலீலாக ஏற்பதாயின்,....... என்ற நபி மொழியை ஆதாரமாகக் கொண்டு இக்கருத்தைக் கூறுகின்றனர்; 


ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ் அல்லாத எவரையும் கலீலாக ஏற்கவில்லை, அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்கள் திருமகள் பாத்திமா ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களின் திருநிறைச் செல்வார்களான ஹளறத்களான ஹசன், ஹுசைன் மற்றும்உஸாமா பின் ஸைத் ரலியல்லாஹு அன்ஹும் உள்ளட்டோரை மஹபத் வைத்துள்ளார்கள்.


ஸுனன் திர்மிதி, கிதாபுல் மனாகிப்.

பாகம் 5 பக்கம் ,362,

முஸ்லிம் , கிதாபுல் பழாயிலுஸ் ஸஹாபா பாகம் 4 பக்கம் 1886.


மஹப்பத் என்பது , குல்லத்தை மிகைத்த பதவி என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர் , ஏனெனில், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பதவியாகிய ஹபீப் ஹளறத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாமவர்களின்பதவியாகிய கலீலை விட உயர்வானதாகும்.


واصل المحبة الميل الي ما يوافق المحب ، ولكن هذا في حق من يصح الميل منه والانتفاع بالوفق وهي درجة المخلوق فاما الخالق فمنزه عن الاغراض فمحبته لعبده تمكينه من سعادته، وعصمته ، وتوفيقه ، وتهيئة اسباب القرب ، افاضة رحمته عليه ، وقصواها كشف الحجب عن قلبه حتي يراه وينظر اليه ببصيرته فيكون كما قال في الحديث فاذا احببته كنت سمعه الذي يسمع به .....

மஹப்பத்தின் அடிப்படை நேசனின் அனைத்து விருப்பங்களிலும் உடன் படுவதாகும், இந்த உடன்பாடு சரியான விதத்தில் , உடன்படுவதாலும், இந்த உடன்பாட்டால் பயன் பெறுவதால் மட்டுமே சரியாக சாத்தியமாகும் ; இந்தப் பதவி படைப்புக்கு மட்டுமே சாத்தியமாகும் ; ஆயினும் , படைத்தவன் இப்படியான நோக்கங்களிலிருந்து பரிசுத்தமானவன்‌; 


அல்லாஹுத்தஆலா தன் அடியானை நேசித்தல் என்பது (அவனை வணங்குவதற்கான ஆற்றலை வழங்கும்) பாக்கியத்தையும், ( பாவங்களிலிருந்து) பாதுகாப்பையும்; ( நன்மை செய்வதற்கும், பாவங்களிலிருந்து தவிர்ப்பதற்கும்) நல்லுதவி செய்வது; (இறை) நெருக்கத்திற்கான காரணங்களை தயார் படுத்துவது; இன்னும் , அவன் மீது தனது றஹ்மத்தின் அருளினால் கண்ணியம் வழங்குவதுஉள்ளிட்டவையைக் குறிக்கும்.


அவனுடைய கல்பின் திரைகளை அகற்றுவதால் தனது கல்பை தானே பார்ப்பதும், தனது அகப்பார்வையால் அவனின் பக்கம் தனது பார்வையைச் செலுத்துவதும் மஹப்பத்தின் உச்சமாகும்; நான் அவனை நேசித்து விட்டால், அவன் கேட்கும் கேள்வியாக அவன் பார்க்கும் பார்வையாக... என்று ஹதீதில் குறிப்பிட்டுள்ளவாறு அவன் ஆகிவிடுவான்.


இவ்வாறானவர் அவனைத்தவிரவுள்ளதைக் கேட்கமாட்டார்,அவர் முற்றுமுழுதாக அல்லாஹ்வுக்குரியவராகிவிடுவார், (இந்த நிலையில்) அல்லாஹ் அல்லாத அனைத்தையும் புறக்கணித்து விடுவார் ; அல்லாஹ்வுக்காக மனம் தெளிந்திருக்கும் ; அவரின் அனைத்து அசைவுகளும் அல்லாஹ்வுக்காக என்றாகி விடும்.


ஸஹீஹுல் புகாரி , கிதாபுர் றிகாக் , பாகம் 3 பக் 89 


உம்முல் முஃமினீன் ஆயிஷா சித்திக்கா ரலியல்லாஹு தஆலா அன்ஹா கூறியது போன்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் நற்குணம் திருக்குர்ஆனாக இருந்தது, அவனுடைய பொருத்தத்தில் திருப்தி! அவனுடைய கோபத்தில் கோபம்! இந்த விதத்தில் தான் சிலர் குல்லத்திற்கும் விளக்கம்பகர்கின்றனர்.


ஸஹீஹுல் புகாரி கிதாபுர் றிகாக் பாகம் 3 பக்கம் 89


ஒரு புலவர் பாடுகிறார்.


 قد تخللت مسلك الروح مني 

وبذا سمي الخيل خليلا 


நிச்சயமாக உயிர் (உடலில்) இரண்டரக் கலந்திருப்பது போன்று, நீர் என்னில் இரண்டறக் கலந்துள்ளாய் !ஆகவே தான் கலீலுக்கு கலீல் என்று பெயர் சூட்டப்பட்டது.


فاذا ما نطقت كنت حديثي 

واذا ما سكت كنت الغليلا 


எனவே, நான் பேசினால் நீ என் பேச்சாகி விடுவாய்! இன்னும், நான் மௌனித்தால் நீ என்மனதிலாகி விடுவாய்!


 எனவே,நமது நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு குல்லத்தில் அதிகரிப்பும், இன்னும், மஹப்பத்தின் தனித்துவமும் இருக்கவே செய்கின்றது; இதுபற்றி ஸஹிஹான, மஷ்ஹுரான ஹதீதுகளும்; உம்மத்தின் ஒட்டுமொத்த கருத்துக்களும் அறிவிப்புச் செய்கின்றன என்பதற்கு அடுத்து வரும் அல்லாஹ்வின் திருவசனம் போதுமான சான்றாகும்.

 

قل ان كنتم تحبون الله ....


நேசரே கூறுங்கள் ! மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்வை நண்பனாக ஆக்கிக் கொள்வதாயின், என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை நண்பனாக ஆக்கிக் கொள்வான். 3: 30


நஸாராக்கள் ஹளரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வணங்கத்தக்க ஒருவராக ஆக்கிக் கொண்டது போன்று, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தன்னை ஒரு கடவுளாக ஆக்கிக் கொள்ள விரும்புகின்றார் என்று காபிர்கள் கூறிய போது, மேற்கண்ட திருவசனம் இறங்கியது, 


அல்லாஹுத்தஆலா அவர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தியும், அவர்களின் உளறல்களுக்கு மறுப்புக் கொடுத்தும் இத்திரு வசனத்தை இறக்கி அருளினான் என்று முபஸ்ஸிரீன்கள் கூறுகின்றனர்.


அல்லாஹுத்தஆலா கூறுகின்றா


قل اطيعوا الله والرسول ,


நபியே கூறுவீராக! அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள் இன்னும் ரசூலுக்கும்.. 3 : 320


 அல்லாஹுத்தஆலா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழிப்படுமாறு கூறி அன்னாரின் கண்ணியத்தை அதிகரிக்கச் செய்துள்ளான்,பின்னர்,


فان تولوا فان الله لا يحب الكافرين 


பின்னர், நீங்கள் புறக்கணித்தால், அல்லாஹ் காபிர்களில் மகிழ்ச்சி அடைவதில்லை.3 :31.


என்று கூறி வழிபட மறுப்பவர்களை எச்சரிக்கின்றான்.


இமாம் பூரக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி சில முதகல்லிமீன் (இறையியலாளர்) களிடமிருந்து திட்டமாக அறிவித்துள்ளார்கள்,


குல்லத்தை விட, மஹபத் சிறப்பானது ! என்ற அவர்களின் விளக்கம் நீண்டு செல்கிறது அவற்றிலிருந்து சிலவற்றை அடுத்து வரும் நோக்கத்திற்கு வழிகாட்டும் விதமாக சுருக்கமாக நாம் எடுத்துக் கூறுகின்றோம்;  


 கலீல்- خليل:

  ஒன்றின் ஆணையோடு சேருவார்..


அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.


وكذلك نري ابراهيم ملكو ت السموات والارض، 


இவ்வாறு வானங்களினதும் பூமியுடையதுமான ஆட்சிகளை இப்ராஹிமுக்கு நாம் காட்டினோம்.


ஹபீப்- حبيب :


எது வித துணையும் இன்றி போய்ச் சேருவார் .


அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.


فكان قاب قوسين او ادني 


இரு வில்லின் அளவு மட்டும் எனினும், அதைவிடக் குறைவான தூரத்தில் சென்றார்.

.

ஓர் அறிவிப்பில் ,


கலீல் خليل என்பவரின் மன்னிப்பு மேலெண்ணத்தில் இருக்கும் .


உ+மாக,


والذي اطمع ان يغفر لي خطيئتي يوم الدين


கியாமத்து நாளில் எனது தவறுகளை மன்னிப்பான் என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.

                                                  26: 82 .


  ஹபீப் حبيب என்பவர்: மன்னிப்பில் உறுதியான நம்பிக்கையில் இருப்பார்.


ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر 


உம்முடைய முந்தியதும், இன்னும், உம்முடைய பிந்தியதுமான பாவத்தை உம்முடைய காரணத்தால் உமக்கும் மன்னிப்பதற்காகவும்.

                                                     48: 2


கலீல் خليل கூறுகின்றார்..


ولا تخزني يوم يبعثون 


கபரிலிருந்து எழுப்பப்படும் நாளில் என்னை கேவலப்படுத்தி விடாதே! 26: 82


ஹபீப் حبيب விடயத்தில் கூறப்பட்டது,


 لا يخزي الله النبي 


அந்த ( கியாமத்) நாளில் அல்லாஹ் நபியை கேவலப்படுத்த மாட்டான்.

                                                   66: 8


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கேட்பதற்கு முன்பே சுப செய்தி கூறப்பட்டுள்ளது.


கலீல் خليل சோதனையான நேரத்தில், حسبي الله


அல்லாஹ் எனக்குப் போதுமானவன் என்று கூறுவார்.


ஹபீப் حبيب அவர்களுக்கு. حسبك الله 

 அல்லாஹ் உமக்குப் போதுமானவன்என்று கூறப்பட்டது.


கலீல் கூறுகிறார் .


واجعل لي لسان صدق 


உண்மையான நாவை எனக்காக ஆக்கி அருள்வாயாக! 


ورفعنا لك ذكرك 


நாம் உம்முடைய புகழை உமக்காக உயர்த்தினோம்.

என்று ஹபீபுக்குக் கூறப்பட்டது. 94: 4


கலீல் கூறுகிறார்.


واجنبني وبني ان نعبد الاصنام 


என்னையும், எனது பிள்ளைகளையும் ;சிலைகளை வணங்குவதை விட்டும் பாதுகா ப்பாயாக! 14: 35.


انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت 


நபிகளின் இல்லத்தார்களே! உங்களிலிருந்து சகல அசிங்கங்களை அகற்றுவதையும், இன்னும், உங்களை சுத்தப்படுத்தி சிறப்பாக பரிசுத்தப்படுத்துவதையும் அவன் நாடுகின்றான். 33: 33 


நாம் விளக்கிய இவை குல்லத், மஹபத் பற்றி கூறியவர்களின் கூற்றுக்களுக்கும், நிலைகளுக்குமான சிறப்பின் மீதுள்ள ஒரு பீடிகையாகும், ஒவ்வொருவரும் அவர்களின் வழியின் மீது காரிய மாற்றுகின்றனர்; எனவே , யார் நேர் வழியில் இருக்கிறார்கள் என்பதுபற்றி உமது ரப்புதான் அதிகம் அறிந்தவன்.

இத்தோடு ஷிஃபா என்ற நூலில் உள்ள இவ்விடயம் முற்றுப் பெற்றது,


இப்போதுள்ள பூகோள அரசியலில் யூத , கிறிஸ்த்தவ உலகம் முஸ்லிம்களை அரசியல் ரீதியாகவும், மார்க்க ரீதியாகவும் பலவீனப்படுத்தி அடிமைப்படுத்துவதில் தந்திரமாக செயல்படுகின்றது, இவர்களின் இச்சதித் திட்டத்தை சதிகள் மூலம் சாதிப்பதிலேயே அவர்கள் வெற்றி பெற்று வருகின்றனர்.


முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு பொருள் மோகத்தையும், பதவி வெறியையும், காமக் கிளர்ச்சிகளுக்கு தீனி போட்டும் அரசியலில் சாதித்தனர், சில முஸ்லிம் பெயரிலுள்ள முனாபிக்கு ஆலிம்களுக்கும், அவர்களின் அடிவருடிகளான சில அரைகுறைகளுக்கும் பணம் கொடுத்து றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களையும் , இறை நேசச்செல்வர்களையும் , உலமாக்களையும் தரம்தாழ்திப்பேசவைத்தும், மார்க்கத்தில் சந்தேகங்களை உருவாக்கி மார்க்கத்திலும் தங்களின் உயிரிலும் மேலான நபியிலும், அல்லாஹ்வின் நேசர்களிலும் உள்ள மரியாதையை இழக்கச்செய்தனர்.


இவ்விரு காரணிகளாலும் முஸ்லிம்கள் ஈமானில்லாத பெயரில் மட்டும் சாறில்லாத சக்கையாகவும், எடுப்பார் கைப்பிள்ளைகளாகவும் ஆனார்கள். இவ்விரு சதிவேலைகளையும் சாதிப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதான் வஹாபிஸ இயக்கமாகும்,


 இவ்வியக்கம்தான் இன்று இஸ்லாமிய உலகத்தை சீரழிக்கின்றது, இந்த இயக்கம் மக்களை வழிகெடுக்க காலத்திற்குக் காலம் பல்வேறு பெயர்களால் அறிமுகமாயுள்ளது, இன்னும் புதிதுபுதிதாக அறிமுகமாகிக்கொண்டுமிருக்கின்றது, 


 இன்று. புற்றீசல் போன்று பரவிக்கிடக்கும் அத்தனை இயக்கங்களுக்கும் , குழப்பங்களுக்கும் தாய்வீடு வழிகெட்ட வஹாபிஸம்தான் என்பதை எவரும் மறுக்கவோ , மறைக்கவோ முடியாது , இந்த இயக்கம்தான் உலகில் தோன்றிய அனைத்து வழிகெட்ட இயக்கங்களிலும் படுமோசமான இயக்கமாகும், இறுதியாக தஜ்ஜாலைச்சந்திக்கும் இயக்கமும் இதுதான் என்பதை இமாம் ஸைனி தஹலான் உள்ளிட்ட அறிஞர்கள் கூறியுள்ளனர், இதை நிரூபிக்கும் வகையில் தற்போது வஹாபிஸ நாடுகள் இஸ்ரேலுடன் நெருங்கிய உறவைப் பேணுவதும் , முஸ்லிம்களை கண்டும் காணாதவாறு இருப்பது கண்கூடு ! 


எனவே, சோதனைகள் சூழ்ந்துள்ள இக்காலத்தில் ஈமானின் மூல வேராதிய வேந்தர் மதீனத்து நாதராகிய மஹப்பத்துரஸூலை மனதில் ஆழமாகப்பதித்த ஈமானைப் பாதுக்காக்க வேண்டும்  


 வழிகெட்ட சகல, இயக்கங்கள் அனைத்திலிருந்தும் ஒதுங்கி நமது முன்னோர் நடந்த அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத் என்ற நல்வழியில் சென்று இறை நெருக்கத்தையும் , அவன் பொருத்தத்தையும் பெறுவதற்கு முயற்சிப்போமாக! வல்ல நாயன் அதற்கான தௌபீக் கை நம்மனை வருக்கும் தந்தருள்வானாக! ஆமீன் யாறப்பல் ஆலமீன்

Friday, 22 August 2025

மரியாதை ,கொளரவம்

 


ஒரு இரவு, மவ்லானா ஜலாலுதீன் ரூமி ﷺ தனது எஜமானர் ஹஸ்ரத் ஷம்சுதீன் தப்ரிஸி ﷺ அவர்களை தனது வீட்டிற்கு அழைத்தார்.


ஷம்ஸ் ﷺ வந்தார். அனைத்து உணவுகளும் தயாரிக்கப்பட்டிருந்தன, பின்னர் ஷம்ஸ் ﷺ ரூமி ﷺ அவர்களிடம் கேட்டார்:

“எனக்கு குடிக்க கொஞ்சம் மது கொண்டு வர முடியுமா?”


ரூமி ﷺ ஆச்சரியப்பட்டார்:

“என் எஜமானரும் மது குடிக்கிறாரா?”


ஷம்ஸ் ﷺ பதிலளித்தார்: “ஆம், நிச்சயமாக.”


ரூமி ﷺ கூறினார்: “என்னை மன்னியுங்கள், எனக்கு இது தெரியாது.”


ஷம்ஸ் ﷺ கூறினார்: “இப்போது உங்களுக்குத் தெரியும், மதுவைக் கொண்டு வாருங்கள்.”


ரூமி ﷺ கேட்டார்: “இந்த தாமதமான நேரத்தில் நான் அதை எங்கே பெற முடியும்?”


ஷம்ஸ் ﷺ கூறினார்: “உங்கள் ஊழியர்களில் ஒருவரை அனுப்புங்கள்.”


ரூமி ﷺ கூறினார்: “என் ஊழியர்களுக்கு முன்னால் என் மரியாதை கெட்டுவிடும்.”


 ஷம்ஸ் ﷺ பதிலளித்தார்: “அப்படியானால் நீங்களே போங்கள்.”


ரூமி ﷺ தயங்கினார்: “முழு நகரமும் என்னை அறிந்திருக்கிறது. நான் எப்படி மது வாங்கப் போவது?”


ஷம்ஸ் ﷺ கூறினார்:

“நீங்கள் உண்மையிலேயே என் சீடராக இருந்தால், நான் சொல்வது போல் செய்யுங்கள். இல்லையெனில், இன்று நான் சாப்பிடவோ, பேசவோ, தூங்கவோ மாட்டேன்.”


தனது எஜமானர் மீதுள்ள அன்பு மற்றும் கீழ்ப்படிதலால், ரூமி ﷺ தன்னை ஒரு போர்வையால் மூடிக்கொண்டு, பாட்டிலை மறைத்து, கிறிஸ்தவ சுற்றுப்புறத்தை நோக்கிச் சென்றார்.


💠 வழியில், யாரும் அவரை சந்தேகிக்கவில்லை. ஆனால் அவர் கிறிஸ்தவ பகுதிக்குள் நுழைந்தவுடன், மக்கள் ஆச்சரியப்பட்டு அவரைப் பின்தொடரத் தொடங்கினர்.


ரூமி ﷺ மதுக்கடைக்குச் சென்று பாட்டிலை வாங்கி, அதை தனது போர்வையின் கீழ் மறைத்து வைத்திருப்பதை அனைவரும் பார்த்தார்கள். அவர் திரும்பி வந்தபோது, இன்னும் அதிகமான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து மசூதிக்குச் சென்றனர்.


மசூதி வாசலில், ஒருவர் கத்தினார்:

“ஓ மக்களே! உங்கள் இமாம், ஷேக் ஜலாலுதீன் ரூமி ﷺ, கிறிஸ்தவ சுற்றுப்புறத்திலிருந்து மதுவுடன் வருகிறார்!”


 அவர்கள் ரூமியின் மேலங்கியைக் கழற்றி, அனைவருக்கும் முன்பாக பாட்டிலை வெளிப்படுத்தினர்.


கூட்டம் கோபமடைந்து, அவர் மீது துப்பியது, அவரை அடித்தது, மேலும் அவரது தலைப்பாகையைக் கூட கழற்றியது.


ரூமி ﷺ அமைதியாக இருந்தார்; அவர் தன்னைத் தற்காத்துக் கொள்ளவில்லை.


மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நம்பினர், அவரைக் கொல்லவும் நினைத்தார்கள்.


🔊 அந்த நேரத்தில், ஷம்ஸ் தப்ரிஸி ﷺ தனது குரலை உயர்த்தினார்:

“ஓ வெட்கமற்ற மக்களே! ஒரு அறிஞரும் சட்ட வல்லுநருமான மது அருந்தியதாக நீங்கள் குற்றம் சாட்டியுள்ளீர்கள். இந்தப் பாட்டிலில் மது இல்லை, வினிகர் உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்!”


ஒருவர் கூறினார்: “அவர் மதுக்கடையிலிருந்து அதைக் கொண்டு வருவதை என் கண்களால் பார்த்தேன்.”


ஷம்ஸ் ﷺ பாட்டிலைத் திறந்து, வாசனைக்காக மக்களின் கைகளில் சில துளிகளை ஊற்றினார். அனைவரும் ஆச்சரியப்பட்டனர்: அது உண்மையில் வினிகர் தான்!


உண்மை என்னவென்றால், ஷம்ஸ் ﷺ ஏற்கனவே மதுக்கடைக்குச் சென்று, ரூமி ﷺ வந்தால் மதுவுக்குப் பதிலாக வினிகரைக் கொடுக்குமாறு கடைக்காரரிடம் அறிவுறுத்தினார்.


 மக்கள் வருத்தத்தில் தலையில் அடித்துக் கொள்ளத் தொடங்கினர், ரூமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள், மன்னிப்பு கேட்டார்கள், அவரது கைகளை முத்தமிட்டார்கள், படிப்படியாக கலைந்து சென்றனர்.


ரூமி ﷺ ஷம்ஸிடம் ﷺ கூறினார்:

“இன்று நீங்கள் என்னை இவ்வளவு பெரிய சோதனையில் ஆழ்த்தினீர்கள், அங்கு என் மரியாதையும் கண்ணியமும் என் சீடர்களுக்கு முன்பாக நசுக்கப்பட்டன. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?”


ஷம்ஸ் ﷺ கூறினார்:

“மக்களின் மரியாதையும் நற்பெயரும் வெறும் மாயைகள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவர்களின் மரியாதை எப்போதும் நிலைத்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஒரு பாட்டிலின் வெறும் சந்தேகத்தின் பேரில், அவர்கள் உங்கள் எதிரிகளாக மாறினர், உங்கள் மீது துப்பினார்கள், உங்களை அடித்தார்கள், கிட்டத்தட்ட உங்கள் உயிரைப் பறித்தார்கள்.


நீங்கள் பெருமையாகக் கருதிய மரியாதை இது, இது ஒரு கணத்தில் மறைந்து போனது!


இன்று முதல், மக்களின் மரியாதையை நம்பாதீர்கள். உண்மையான மரியாதை அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது, அது காலப்போக்கில் ஒருபோதும் மாறாது அல்லது மங்காது. யார் உண்மையிலேயே மரியாதைக்குரியவர், யார் பொய் மரியாதையைத் தேடுகிறார்கள் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். எனவே, அல்லாஹ்வின் மீது மட்டுமே உங்கள் கண்களை வைத்திருங்கள்.”

Wednesday, 20 August 2025

ஏழையின் தர்மம்

 

#ஒரு நாள், ஒரு முதிய பெண் ரூமி நாயகத்திடம் வந்தாள்.

அவள் மிகவும் வறுமையில் இருந்தாள்,

ஆனால் அவள் கையில் ஒரு பழைய துணிக்கம்பளி இருந்தது.


அவள் கூறினாள்:

“உஸ்தாத்! நான் மிக ஏழையாக இருக்கிறேன்.

ஆனால் உங்களின் அறிவும் ஞானமும் எனக்கு மிகப்பெரிய அருள்.


"என்னிடமுள்ள சிறிய கம்பளியை உங்களுக்குக் கொடுக்க வந்துள்ளேன்.

இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.”


#ரூமி நாயகம் அந்த கம்பளியைப் பார்த்து சிரித்தார்.

அவர் சீடர்களிடம் சொன்னார்:

“இந்தக் கம்பளி தங்கத்திற்கும் மேலானது.

ஏன் தெரியுமா?

ஏழையிடமிருந்து வரும் கொடை,

அவன் உள்ளத்தின் அன்பில் மூழ்கியிருக்கும்.


ஒரு ராஜா ஆயிரம் தங்கக் காசுகளை கொடுத்தாலும்,

அதில் பெருமை கலந்து இருந்தால் அது குறைந்த மதிப்பு உடையது.

ஆனால் இந்த பெண் தனது வறுமையிலேயே

முழு இதயத்துடன் கொடுக்கிறாள்.


إنَّما الأعْمالُ بالنِّيّاتِ 


மெளலவீ:- அப்துல் மலிக் { நஜாஹீ }


2025.08.21

இலகுவாக உணவு கிடைத்தால்

 


உணவு, தண்ணீர், தங்குமிட வசதிகளுடன், இயற்கை அனர்த்த தாக்குதல் எதுவுமின்றி எலிகளை ஓரிடத்தில் வைத்தால் என்னவாகும்?


இந்த யோசனை அமெரிக்க உயிரியலாளர் ஜான் கால்ஹவுனுக்குத் தோன்றியது. 1970-ஆம் ஆண்டு இந்த பரிசோதனையைத் தொடங்கினார்.


ஏராளமான உணவு, நீர் மற்றும் வசதிமிக்க ஓரிடத்தை உருவாக்கினார். பின்னர் அங்கு நான்கு எலிகளை (இரண்டு ஆண், இரண்டு பெண்) வைத்தார்.


முதலில் எலிகள் வியக்கத்தக்க விகிதத்தில் இனப்பெருக்கம் செய்தன, அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் 315 நாட்களுக்குப் பிறகு, இனப்பெருக்க விகிதம் கணிசமாகக் குறையத் தொடங்கியது.


எலிகளின் எண்ணிக்கை தோராயமாக 600-ஐ எட்டியபோது, அவற்றுக்கு இடையே புதிய மாற்றங்கள் தோன்றின. அந்த மாற்றங்கள் மிக மோசமானவையாக இருந்தன.


பெரிய எலிகள் பலவீனமானவற்றைத் தாக்கத் தொடங்கின. இது ஆண்களிடையே உளவியல் ரீதியான சரிவுக்கு வழிவகுத்தது. 


இதற்கிடையில், சில பெண் எலிகள் குட்டிகளைப் பராமரிப்பதை கைவிட்டன. மேலும் எந்த காரணமும் இல்லாமல் மற்ற பெண்களின் குட்டிகளைத் தாக்கத் தொடங்கின.


காலப்போக்கில், இளம் எலிகளிடையே இறப்பு விகிதம் அதிகரித்து, பிறப்பு விகிதம் பூஜ்ஜியமாகக் குறைந்தது.


ஏராளமான உணவு இருந்தபோதிலும்; ஒருபால் உறவு, காட்டுமிராண்டித்தனம், மற்ற எலிகளை கடித்து உண்ணுதல் போன்ற விசித்திரமான நடத்தைகளும் தோன்றின.


சோதனை தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கடைசி எலி 1973-ல் பிறந்தது. 


கைசேதம் என்னவென்றால் "யுனிவர்ஸ் 25" என்று அழைக்கப்பட்ட இந்த சோதனையின் முடிவில் அனைத்து எலிகளும் இறந்தன.


வினோதம் என்னவென்றால் இதே சோதனை 25 முறை மீண்டும் மீண்டும் செய்யப்பட்டது, ஒவ்வொரு முறையும் அதே முடிவு. அதே சரிவு. அதே அழிவு. 


கால்ஹவுன் கூறுகிறார்: சமூகங்களுக்கு - எலிகளோ மனிதர்களோ - முயற்சி அல்லது சவால் இல்லாமல் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டால்; அவற்றின் பண்புகள் நாசமாகி அழிவு நிச்சயம் ஏற்படும்.


1450 ஆண்டுகளாக அல்குர்ஆன் இதைத்தான் கூறிக்கொண்டு இருக்கிறது: 


‌"அல்லாஹ் தன் அடியார்கள் அனைவருக்கும் தாராளமாக வாழ்வாதாரத்தை வழங்கியிருந்தால், அவர்கள் பூமியில் அராஜகப் புயலை பரவச் செய்திருப்பார்கள். ஆகவே அவன் ஒரு கணக்குப்படி, தான் விரும்புகிற அளவில் இறக்கி வைக்கின்றான். திண்ணமாக, அவன் தன் அடிமைகள் பற்றி நன்கு புரிந்தவனாகவும், அவர்களைக் கவனிப்பவனாகவும் இருக்கின்றான்”. 

(42:27)


✍️ நூஹ் மஹ்ழரி

Wednesday, 13 August 2025

இறந்தவர் ஆத்மா இல்லம் வருமா?

 


*இறந்தவர் ஆத்மா இல்லம் வருமா?*

      *═════* *✥.❖.✥ ═════*

*கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,*     

  *மௌலவி பாஸில் ஷெய்கு*       

   *ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*

  *பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.*

           *B.A (Hon) அவர்கள்*

       *═════* *✥.❖.✥ ═════*

புனித இரவுகளில் மரணித்தவர்களின் றூஹுகள் வாழ்ந்த இடங்களுக்கு வருவதாக நீண்டகாலமாக மக்கள் நம்புகின்றனர். அதனால், இருட்டானதும் வீட்டில் மணமேற்றி அவர்கள் பெயரில் யாஸீன் சூறாக்கள் ஓதுகின்றனர். அவர்களுக்காக தர்மம் செய்கின்றனர். துஆக் கேட்கின்றனர். இந்த நல்ல நடைமுறையால் உயிருள்ளவர்களுக்கும் மரணித்தவர்களுக்குமான உறவு பேணப்பட்டு வந்தது.


இந்த நம்பிக்கை நலிந்து இந்த நடைமுறையும் அருகிவிட்டது. மரணித்தவர்களின் நினைவும் மங்கிவிட்டது. இதற்கு பிரதான காரணம் வஹாபிகளின் தீய தீவிர பிரச்சாரமாகும்.


ஒருவர் மரணித்தால் அவரின் றூஹ் வெளியே வரமாட்டாது. அது சொர்க்கத்தில் அல்லது நரகத்தில் முடங்கிக்கிடக்கும் என்று இவர்கள் வாதிக்கின்றனர்.


இவர்களின் வாதம் ஆதாரமற்றது. ஹதீஸ் ஆதாரங்களும், அறிஞர்களின் தீர்ப்பும் இவர்களுக்கு எதிராகவே உள்ளன. இதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் பொறுக்கிக் கீழே தரப்பட்டுள்ளன.


01. இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் றஹிமஹுமுல்லாஹ் ஆகிய இருவரின் ஆசிரியர்களான இமாம் அபூபக்கர் இப்னு ஷைபாவும், இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாறக் றஹிமஹுமுல்லாஹ் ஆகிய இருவரும் ஹளரத் அம்றுப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹுவைத் தொட்டும். இமாம் அஹ்மத், முஸ்னதிலும் இமாம் தப்றானி முஃஜமுல் கபீறிலும், இமாம் ஹாகீம் சஹிமுஸ்தத்றக்கிலும், இமாம் அபூநுஐம், ஹில்யாவில் சஹீஹான சனதுடன் அறிவிக்கின்றனர்.


றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள்,


உலகம் காபிர்களுக்கு சொர்க்கம் முஃமின்களுக்கு சிறை. ஒரு முஃமினின் றூஹ் உடலிலிருந்து வெளியேறினால், ஒரு மனிதன் சிறையிலிருந்து வெளியேறியவனைப் போலாவான். சிறையிலிருந்து விடுதலை பெற்றவன் பூமியின் எப்பகுதிக்கும் சென்று வரும் உரிமையைப் பெறுவான்.


ஆதாரம் : கிதாபுஸ் ஸுஹ்து, இமாம் இப்னு முபாறக், ஹதீது எண் 597, பக்கம் 211


இமாம் அபூபக்கர் இப்னு ஷைபா அவர்களின் அறிவிப்பில்,


ஒரு முஸ்லிம் மரணித்தால் அவரின் றூஹ் விடுதலை அடைகின்றது. அதுவிரும்பிய இடம் செல்லும்.


ஆதாரம் : முஸன்னப் இப்னு ஷைபா, கிதாபுஸ்ஸுஹ்து,

ஹதீது எண் 16571, பாகம் 13, பக்கம்355


இமாம் இப்னு அபீதுன்யா அவர்களும், இமாம் பைஹகீயும், ஹளரத் ஸஈத் இப்னு முஸய்யிப் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோரைத் தொட்டும் அறிவிக்கப்படுகின்றது,


ஒரு தினம் ஹளரத் ஸல்மான் பாரிஸி அவர்களும், ஹளரத் அப்துல்லாஹ் இப்னு ஸலாமும் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகிய இருவரும் சந்தித்து எம்மில் முதல் மரணிப்பவர் அங்கே நடப்பவற்றைத் தெரிவிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டனர். அப்போது உயிருள்ளவர்கள் மரணித்தவர்களை சந்திப்பார்களா? என்று ஒரு கேள்வி எழுந்தது.


ஆம் முஃமின்கள் மரணித்ததும் அவர்களின் றூஹு சொர்க்கம் செல்லும். அது விரும்பிய இடம் செல்லும் என்று விடை பகரப்பட்டது.


ஆதாரம் : ஷுஃபுல் ஈமான், ஹதீது எண் 1355, பாகம் 2, பக்கம் 141


ஹளரத் இப்னுல் முபாறக், கிதாபுஸ் ஸுஹ்திலும், இமாம் அபூபக்கர் இப்னு அபீத்துன்யா, இப்னு முன்தா ஆகியோர் ஹளரத் ஸல்மானுல் பாரிஸி ரழியல்லாஹு அன்ஹுவைத் தொட்டும் அறிவிக்கின்றனர்,


முஃமின்களின் றூஹுகள் புவியில் பர்ஸஹ் என்ற உலகில் இருக்கும். அது விரும்பிய இடம் செல்லும். காபிர்களின் றூஹ் ஸிஜ்ஜின் என்ற நரகில் இருக்கும்


ஆதாரம் : கிதாபுஸ்ஸுஹ்து, ஹதீஸ் எண் 429, பக்கம் 144


ஹாபிழ் இமாம் ஜலாலுத்தின் ஸுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹியின் ஸறஹுஸ்ஸுதூர் என்ற நூலில் வருகின்றது,


இமாம் அபூஅம்று இப்னு அப்துல் பர்ரு கூறுகின்றார்கள்,


மிகத்தேர்வான (றாஜிஹான) கருத்து இதுதான். ஷுஹதாக்களின் றூஹுகள் சொர்க்கத்திலும், ஏனையவர்களின் றூஹுகள் அவர்களின் கப்றுகளிலுமிருக்கும்.


ஆதாராம் : ஸரஹுஸ்ஸுதூர், பக்கம் 98


அல்லாமா மனாவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தைஸீர், ஸறஹ்ஜாமிஉஸ்ஸஈர் என்ற நூலில் கூறுகின்றார்கள்.


நிச்சயமாக றூஹ் உடற்கூட்டிலிருந்து கழன்று மரணத்தின் மூலம் அதன் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெறுகின்றது. பின் அது விரும்பிய இடம் செல்கின்றது.


         ஆதாரம் : தைஸீர்,     

    ஷரஹ்ஜாமிஉஸ்ஸஈர், 

      பாகம் 01, பக்கம் 420


காழிதனாஉல்லாஹ் கூறுகின்றார்கள்,


வலிமார்கள் மற்றும் றூஹுகள், பூமி, வானம், சொர்க்கம் இவற்றில் விரும்பிய இடங்களுக்கு செல்வார்கள்.


ஆதாரம் : ததிக்கிறத்துல் மௌத்தா, பக்கம் 75,76


கஸானாத்துர் றிவாயாத் என்ற நூலில் வருகின்றது. முஹக்கிகான உலமாக்களில் சிலர் கூறுகின்றனர். வெள்ளி இரவில் றூஹுகளுக்கு விடுமுறை கிடைக்கின்றது. அவை வெளியே வருகின்றன. முதலில் தனது கப்றுக்கும், பின் அவர்களின் இல்லங்களுக்கும் செல்கின்றன.


                ஆதாரம் : 

    கஸானாத்துர் றிவாயாத்


இமாம் அபீதுன்யா ஹளரத் மாலிக் இப்னு அனஸ் ரழியல்லாஹு அன்ஹுவைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள்,


முஃமின்களின் றூஹுகள் சுதந்திரமாக விரும்பிய இடம் சென்று வரும் என்று எனக்கு ஹதீது கிடைத்துள்ளது.


                   ஆதாரம் : 

  ஸறஹுஸ்ஸுதூர், பக்கம் 98


முஃமின்களின் றூஹுகள் ஒவ்வொரு வெள்ளி இரவும், பெருநாள், ஆஷுறா தினங்களிலும், பறாஅத் இரவிலும் தங்களது வீடுகளுக்கு வெளியே வந்து நின்று கொண்டு கவலை தோய்ந்த குரலில், வீட்டில் உள்ளோரே! என் பிள்ளைகளே! என் இன பந்துக்களே! தர்மம் செய்து எங்களுக்கு இரங்குங்கள் என்று கூறும்.


                 ஆதாரம் : 

    கஷ்புல் அதா, பக்கம் 66


இமாம் ஷைய்கு முஹக்கிக் அப்துல் ஹக் முஹத்திதுத் திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹி மிஷ்காத்தின் விரிவுரையான அஷிஃஅத்துல்லம்ஆத் என்ற நூலில் கூறுகின்றார்கள்,


ஒரு மையித் அடக்கம் செய்யப்பட்டதிலிருந்து ஏழு தினங்கள் வரை மையித்திற்காக தர்மம் செய்வது ஸுன்னத் ஆகும். மைய்யித்திற்காகச் செய்யப்படும் சதகா - தர்மம் நிச்சயம் பயனளிக்கும். இதில் அறிஞர்கள் மத்தியில் எதுவித கருத்துவேறுபாடும் கிடையாது. இது தெடர்பாக ஸஹீஹான ஹதீதுகள் வந்துள்ளன. குறிப்பாக தர்மமாக தண்ணீர் புகட்டுதல் பற்றி வந்துள்ளன.


மையித்திற்கு ஸதகா, துஆ ஆகியவற்றின் நன்மைகள் மட்டுமே வரும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். சில அறிவிப்புக்களில்,


ஜும்ஆ இரவில் றூஹ் வீடு வருகின்றது. அதற்கு யாராவது தர்மம் செய்கின்றார்களா? என்று அது எதிர்பார்த்து நிற்கின்றது என்று வந்துள்ளது.


                  ஆதாரம் : 

     அஷிஃஅத்துல்லம்ஆத், 

     பாகம் 1, பகக்ம் 716, 717


மரணித்தவர்களின் றூஹுகள் புனித நாட்களிலும், இரவுகளிலும் வீடு வரும் என்ற நம்பிக்கையில் ரொட்டி சுட்டு ஏழைகளுக்கு தர்மம் செய்தல், கத்தம் ஓதுதல், துஆக் கேட்டல் உள்ளிட்ட காரியங்களை நமது முன்னோர் செய்து வந்த நற்பழக்கங்களைத் தொடர்ந்து செய்து வந்தால், மரணித்தவர்களின் துஆவைப் பெறமுடியும். பெற்றோர் உள்ளிட்டோருக்கு நன்றி உபகாரம் செய்த நற்கூலி கிடைக்கும்.


நாம் செய்தால்தான் நமது பிள்ளைகள் நாம் மரணித்த பின் நமக்குச் செய்வர். எம்மை நினைவு கூர்வர். அதனால் இந்த நல்ல வழக்கத்தை வீடுகளில் இருப்பிடங்களில் புத்துயிர் பெறச்செய்து நல்லருளைப் பெறமுயலுவோம்.