السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 24 August 2025

முஹம்மத் நபி ஸல்

மீலாத் விழா



 *நானிலம் போற்றும் நபிகள் கோமான் முஸ்தபா ஸல்லல்லாஹு* *அலைஹி வஸல்லம்* .

••••••••••••••••••••••••••••••••••••••••

மௌலவி, பாஸில் , *ஏ.எல். பதுறுத்தீன்* . ஷர்க்கி, பரேலவி, ஸூபி ,காதிரி, நக் ஷபந்தி .

**********"""


உலகத்தில் தோன்றிய அனைத்து நபிமார்களிலும், ஏன் அனைத்து படைப்புக்களிலும் பயகம்பர் நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உயர்ந்தவர்கள், மேலானவர்கள் என்பது முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை சார்ந்த அசைக்க முடியாத முடிவாகும், இதில் எந்த சிறு கருத்து வேறுபாடும் முஃமின்கள் மத்தியில் கிடையாது, இதுபற்றி திருக்குர்ஆன் , திரு நபிமொழி , இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுக்கள் ஆதாரமாக உள்ளன, 


அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளான யூத கைக்கூலிகள் இதில் புதுக்ருத்தை தூவி மக்கள் மனதில் சந்தேகங்களையும் குழப்பத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர், 


 இவர்களின் வாதப்படி, ஹளறத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைவிடச்சிறந்தவர்கள், ஏனெனில் திருக்குர்ஆனில் ஹளறத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாமவர்களை அல்லாஹுத்த ஆலா " கலீலுள்ளாஹ்"அல்லாஹ்வின் நண்பர் என்று கூறியுள்ளான், நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை இவ்வாறு திருக்குர்ஆனில் எங்கும் குறிப்பிட வில்லை , ஆகவே , நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களை விட, ஹளறத் கலீலுள்ளாஹ் செய்யிதுனா இப்றாஹீம் அலை ஹிஸ்ஸலாம் மேலானவர்கள். 


மக்களைக் குழப்பி வழிகெடுப்பதை தனது வாழ்நாள் பணியாகக்கொண்டு செயல்படும் ஒருவரின் வார்த்தைகள் இவை , மேலொட்டமாகப் பார்ப்பவர்கள் இவர் பேச்சில் ஏதோ உண்மையிருப்பதாக சந்தேகிக்கலாம், ஆனால் திருக்குர்ஆன் , திருநபி உள்ளட்டவையை ஆழமாக நோக்குவோருக்கு இது அடிப்படையற்றவை என்பது புரியும், 


மேலும் , குறித்த நபர் முன்வைக்கும் எதுவும் அவர் சொந்தக்கருத்துக்கள் அல்ல! ஏற்கனவே பேசப்பட்டு பதில்கூறப்படு மூடுவிழா செய்யப்பட்டவையையே இப்போது இவருக்குப்பின்னாலிருப்பவர்கள் கிளறிஎடுத்து தொகுத்து வழங்குகின்றனர், உண்மையில் இவர் ஓர் உதுகுழல் மட்டுமே!   


முதலில் , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் சிறப்புக்களை தக்க நியாயத்தோடு முன்வைப்போம், அடுத்து "குல்லத் "பற்றிய விளக்கத்தையும் ஆராய்வோம்.


அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.


تلك الرسل فضلنا بعضهم علي بعض 


இவர்கள் ரசூல்மார்கள் அவர்களில் ஒருவரை மற்றவர்களைக் காண சிறப்பாக யிருக்கின்றோம். 2: 253


சங்கையான நபிமார்கள் ( அலைஹிமுஸ்ஸலாம்) கூட்டத்தில் ஒருவரை விட மற்றவருக்குச் சிறப்புகள் வழங்கப்படுள்ளன, இவர்களுள் நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பல விதங்களில் சிறப்பானவர்கள், உயர்ந்தவர்கள் என்பதற்கு பல நியாயங்கள் உள்ளன, அவை வருமாறு,


ஆதாரம்: 1


1- وما ارسلناك الا رحمة للعلمين.


அகிலத்தார்களுக்கு அருளாகவே அன்றி உம்மை நாம் அனுப்பவில்லை. 21: 107


அகிலமனைத்திற்கும் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் றஹ்மத்தாக இருப்பதாயின், நிச்சயமாக அன்னார் அனைத்து படைப்பினங்களை விடவும் மேலானவராக இருந்தாக வேண்டும்.


 ஆதாரம் : 2-

 அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். 


ورفعنا لك ذكرك 


இன்னும் ,நாம் உமக்காக உமது கீர்த்தியை உயர்த்தினோம். 94: 4


அல்லாஹுத்த ஆலா றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் முபாறக்கான திருப்பெயரை தனது திருநாமத்தோடு திருக்கலிமாவில், அதானில், அத்தஹியாத்தில், சேர்த்துள்ளான், இவ்வாறு ஏனைய நபிமார்களின் திருப்பெயரை இணைக்கவில்ல.


 ஆதாரம் : 3- 


 அல்லாஹ்வுக்கு வழிப்படுவதை றஸூலுக்கு வழிப்படுவதோடு இணைத்துக் கூறியுள்ளான், 


அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். 


من يطع الرسول فقد اطاع الله


எவர் றஸூலின் சட்டத்திற்கு வழிப்பட்டாரோ அவர் அல்லாஹ்வின் சட்டத்திற்கும் வழிப்பட்டார் . 4: 80


நபிகளாரிடம் பைஅத் பெற்றதை தன்னிடம் பைஅத் பெற்றதாகக்கூறியுள்ளான்.


ان الذين يبايعونك انما يبايعون الله يد الله فوق ايديهم.


எவர் உம்மிடம் பைஅத் பெற்றார்களோ அவர் அல்லாஹ்விடமே பைஅத் பெற்றார், அவர்களின் கரங்களுக்கு மேல் அல்லாஹ்வின் கரம் உள்ளது. 

48 : 10


தன்னுடைய கண்ணியத்தோடு றஸூலின் கண்ணியத்தையும் தொடர்படுத்தியுள்ளான்.


ولله العزة ولرسوله 


இன்னும், கண்ணியம் அல்லாஹ்வுக்கும், இன்னும் அவனுடைய றஸூலுக்குமாகும்.

63: 8 


இன்னும் தனது ஹபீபின் பொருத்தத்தோடு தன்னுடைய பொருத்தத்தையும் சேர்த்துள்ளான்.


والله ورسوله احق ان يرضوه 


அவர்கள் திருப்திப் படுவதற்கு மிக்க தகுதியானவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய திருத்தூதருமாகும். 9: 62


இன்னும்,தனது கட்டளை யைச்செயல்படுத்துவதை தனது மஹ்பூபின் கட்டளையைச் செயல்படுவதோடு இணைத்துக்கூறியுள்ளான்.


يا ايها الذين امنوا استجيبوا لله وللرسول 


ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் , இன்னும் அவனுடைய றஸூலின் அழைப்புக்குப் பதில் கூறுங்கள். 8: 24 


ஆதாரம்: 4


 திருக்குர் ஆனில் விரும்பிய எந்த ஓர்அத்தியாயத்திற்கு நிகராக ஓர் அத்தியாயத்தைக்கொண்டுவருமாறு காபிர்களுக்கு சவால் விடுமாறு றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்குக் கட்டளையிட்டுள்ளான்.


அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். 


فاتوا بسوره من مثله 


எனவே, அதுபோன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாரேங்கள். 2 :23 


திருக்குர்ஆனில் மிக ச்சிறிய அத்தியாயம் மூன்று திருவசனங்கள் உள்ள அத்தியாயம் சூறத்துல் கௌதர் ஆகும், திருக்குர்ஆனில் மூன்று திருவசனங்களைப்போன்று கொண்டு வாருங்கள் என்று சவால் விட்டது போன்றுள்ளது.


திருக்குர்ஆனில் ஆறாயிரத்திற்குமதிகமான ஆயத்துக்கள் உள்ளன, இந்த வகையில் திருக்குர்ஆன் ஒரு முஃஜிஸா அல்ல , 2000க்குமதிகமான முஃஜிஸாத்துக்களின் தொகுப்பாகும், இந்தளவு முஃஜிஸாத் எந்த ஒரு நபிக்கும் வழங்கப்படவில்லை , இதன்படி , றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏனைய நபிமார்களை விட மேலானவர்களாகும்.


ஆதாரம் :5 


 நமது நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் இந்த ஒரு முஃஜிஸா ஏனைய ஒவ்வொரு நபியுடைய முஃஜிஸாவையும் விட சிறப்பானதாகும், எனவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஏனைய நபிமார்களை விட மேலானவர்கள் என்பது நிரூபணமாகிவிட்டது.


ஆதாரம் : 6


நபிமார்களின் நிலைகளை விளக்கிக் கூறிய பின், அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.


اولئك الذين هدى الله فبهداهم اقتده 


இவர்கள்தான் அல்லாஹ் ஹிதாயத் செய்த கூட்டத்தினர், எனவே, நீரும் அந்த வழியில் செல்வீராக! 7 : 90



இங்கு முந்திய நபிமார்களைப் பின் தொடருமாறு நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது, தீனின் உஸூலில் அவர்களைப்பின்பற்றுமாறு கட்டளையிடப்பட்டுள்ளதாக பொருள்கொள்வது நபிகளாரின் விடயத்தில் ஆகுமானதல்ல, காரணம் இது தக்லீத் அதாவது அவர்களைப் பின்பற்றுவதாகும், அவர்களின் மார்க்கத்தின் கிளைச்சட்டங்களைப் பின்பற்றுமாறு கட்டளையிடப்பட்டுள்ளதாகக்கூறுவதும் சரியல்ல, ஏனெனில் ஷரீஅத்தே முஹம்மதியா முந்திய அனைத்து ஷரீஅத்துக்களையும் மாற்றிவிட்டது, ஆகவே, அவர்களின் அழகிய நற்குணங்களைஎடுத்துக்கொள்வதுதான் இதன் நோக்கமாகும்,


முந்திய நபிமார்களின் நிலைகளையும், இன்னும் நற்குணங்களையும் அல்லாஹுத்த ஆலா எடுத்துக்கூறிய பின், அவற்றை எடுத்துகொள்ளுமாறு கூறியுள்ளான், இதன் பொருள் யாதெனில், ஏனைய நபிமார்களிடம் தனித்தனியாக சிதறிக்கிடந்த நற்பண்புகள் அனைத்தையும் தனிநபராகிய நீங்கள் சேகரமாக்கிக் கொள்ளுங்கள் என்பதாகும், இதன்படி அனைவரின் தனித்தனியான நற்பண்புகளைத் திரட்டி தன்னகத்தே கொண்ட காரணத்தால் நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏனைய நபிமார்களைவிட மேலாகிவிட்டார்கள்.


ஆதாரம்: 7-:


இறுதி நபியாகிய நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் படைப்புக்கள் அனைத்திற்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள், இதனால் அன்னாரின் பொறுப்பு அதிகமாகும், ஏனைய நபிமார்களை விட கஷ்டங்களும் அதாகமாகும், இதன்படி நபிகள் நாயகம் மேலானவர்களாகும்.


அனைத்து மனிதர்களுக்கும் நபியாக அனுப்பப்பட்டதை அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.


وما ارسلناك الا كافة للناس بشيرا ونذيرا 


நேசரே! நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும், சகல மனிதர்களுக்குமான தூதுவத்தைக் கொண்டவராகவே அன்றி உம்மை நாம் அனுப்பவில்லை. 34 : 28


ஆதாரம் : 8


 முஹம்மதுர்றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் மார்க்கம் ஏனைய மார்க்கங்களை விட மேலாகும், இஸ்லாத்தின் மூலமாக ஏனைய அனைத்து மார்க்கங்களையும் மாற்றி விட்டான், மாற்றியது மாற்றப்பட்டதை விட மேல், இந்த வகையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஏனைய நபிமார்களை விட மேலாகும்.


ஆதாரம் 9 


 கடைசி நபியாகியநமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் உம்மத் ஏனைய உம்மத்துக்களை விட மேலாகும், எனவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஏனைய நபிமார்களை விட மேலாங இருப்பது அவசியமாகும்.


முதல் விடயத்திற்கான ஆதாரம் ,


كنتم خير امة اخرجت للناس 


 மக்களுக்காக வெளியாக்கப்பட்ட சமுகங்களில் நீங்கள் மேலானவர்கள். 3 : 110 


இரண்டாவது விடயத்திற்கான ஆதாரம்,


இந்த உம்மத் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைப் பின்பற்றியதனால்தான் மேலானார்கள்என்பதை அல்லாஹுத்த ஆலாவே கூறுகின்றான்.


قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله 


நேசரே ! கூறுங்கள்! மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்வை நண்பனாக ஆக்கிக் கொள்வதாயின், என்னைப்பின்பற்றுங்கள். 3 : 31


பின்பற்றப்படுபவரின் சிறப்பால்தான் பினுபற்றுபவருக்கு சிறப்பு கடமையாகிறது. ஏனைய நபிமார்களைப் பின்பற்றியவர்களைவிட, நபிகள் நாயகத்தைப் பின்பற்றுவோர் அதிகமாகும் , ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மனு , ஜின் இருகூட்டத்தாருக்கும் நபியாக அனுப்பப் பட்டுள்ளார்கள்.


ஆதாரம் :10

 றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


நாளை கியாமத்தில் ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களின் அனைத்து பிள்ளைகளும் எனது கொடியின் கீழால்தான் வருவார்கள், இந்த ஹதீதின் மூலம் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்களின் அனைத்து பிள்ளைகளை விடவும் மேலானவர்கள் என்பது நிரூபணமாகின்றது, 


மேலும் கூறினார்கள்.


நான் ஆதத்தின் அனைத்து பிள்ளைகளுக்கும் தலைவராகும்.


மேலும் கூறினார்கள்.


 நான் முதலில் சொர்க்கம் நுளையும் வரை எந்த ஒரு நபியும் நுளைய மாட்டார்கள், இன்னும், எனது உம்மத் சொர்க்கம் நுளையும் வரை ஏனைய உம்மத்துக்களில் எவரும் நுளைய மாட்டார்கள்.


மேலும் கூறினார்கள்.


கப்றிலிலிருந்து மக்கள் எழும்பும் போது முதன் முதலில் நான்தான் 

எழும்புவேன். மஹ்ஷரில் அல்லாஹ்விடத்தில் மக்கள் சார்பாக நான்தான் பேச்சாளராக இருப்பேன், அவர்கள் நம்பிக்கையிழந்திருக்கும் நேரத்தில் நான்தான் நற் செய்தி கூறுவேன், லிவாஉல் ஹம்து என் கையில்தானிருக்கும், நான் அல்லாஹுத்த ஆலாவின் சன்னிதானத்தில் அனைத்து மனிதர்களலயும் விட, சங்கையும், கண்ணியமும் பொருந்தியவராக இருப்பேன். இதை பெருமைக்காகக் கூறவில்லை. 


ஆதாரம் 11- 


அல்லாஹுத்த ஆலா திருக்குர் ஆனில் ஏனைய நபிமார்களை அவர்களின் பெயரைக் கூறி அழைத்தான் , ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை அன்னாரின் பெயர் கூறி அழைக்காமல் , நபியே, றஸூலே, இன்னும் இதுபோன்று கண்ணியமாகவே விளித்துள்ளான் இது அன்னாரின் சிறப்புக்கான ஆதாரமாகும்.


 இதுபோன்று இன்னும் ஏராளமான ஆதாரங்கள்உள்ளன, விரிவஞ்சி இத்தோடு சுருக்கிக்கொள்கின்றோம், அடுத்து "குல்லத்" பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம், 


இமாம் காழி இயாழ் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களுடைய புகழ் பூத்த " அஷ்ஷிபா " என்ற நூலில் குல்லத், மஹப்பத் பற்றி எழுதியுள்ள விளக்கத்தை அப்படியே அடியிற் தருகின்றேன். 


ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மஹப்பத்,குல்லத் இருப்பதாக ஸஹீஹான ஹதீதுகளில் வந்தும் கூட, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறிப்பாக ஹபிபுல்லா என்று தான் முஸ்லிம்கள் மொழிகின்றனர்.


அபு ஸயீதுல் குத்ரிய்யி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கின்றார்கள்.


அல்லாஹ்வைத் தவிர்த்து மற்றுமொருவரை கலீலாக நான் எடுத்துக் கொள்வதாயின், அபூபக்கரை எடுத்துக் கொள்வேன் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


உங்கள் தோழர் (ஆகிய நான்) அல்லாஹ்வின் கலீல் ஆவேன். என்று கூறியதாக மற்றுமொரு ஹதீதில் பதிவாகியுள்ளது.


ஹளறத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு தஆலா அன்ஹுவின் அறிவிப்பில்,


உங்களின் தோழரை அல்லாஹ் கலீலாக ஆக்கியுள்ளான் என்றுள்ளது.


ஹளறத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு மா அவர்களின் அறிவிப்பில்,


சஹாபாக்களில் ஒரு கூட்டத்தினர் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை எதிர்பார்த்து அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர் ,ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேச்சை செவியேற்குமளவு நெருங்கி வரும் போது சஹாபாக்களில் ஒருவர் அல்லாஹுத்தஆலா தனது படைப்பால் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கலீலாக ஆக்கியது வியப்பானதுதான் என்றார்,


ஹளறத் மூசா அலைஹிஸ்ஸலாமவர்களுடன் அல்லாஹ் வசனித்தது இதைவிட ஆச்சரியம் என்றார் மற்றுமொருவர், , ஹளறத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் கலிமா வா(ர்த்தையா)கவும், அவ னுடைய றூஹாக இருப்பதும் ஆச்சரியம்தான் என்றார்வைறு ஒருவர் ; ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட ஸபீஉள்ளாஹ்வாக இருக்கின்றார்கள் என்று பிறிதொருவர் கூறினார்; 


இந்தக் கட்டத்தில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிராக வந்து நின்று அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள்.


நீங்கள் பேசியதையும், நீங்கள் வியந்ததையும் நான் செவியேடுத்தேன், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நிச்சயமாகவே அல்லாஹுத்தஆலா கலீலாக ஆக்கினான்,அதற்கு அவர்கள் தகுதியானவர்கள் தான், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கலீமத்துள்ளாஹ்வாகவும்,, றூஹுல்லாவாகவும் அல்லாஹ் ஆக்கினான்,அதற்கு அவர்கள் தகுதியானவர்தான், ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹுத்தஆலா ஷபீஃஉள்ளாவான நபியாக ஆக்கினான் ; அதற்கும் அவர்கள் தகுதியானவர்கள் தான்;


அறிந்து கொள்ளுங்கள்! நான் அல்லாஹ்வின் ஹபீப் ஆவேன்! இதை பெருமைக்காக கூறவில்லை, கியாமத்து நாளில் பெருமைக்குரிய கொடியை நானே தான் உயர்த்துவேன், இதை பெருமைக்காக நான் கூறவில்லை, முதன் முதலில் ஸஃபாஅத் செய்பவரும், ஒப்புக்கொள்ளப்பட்டவரும் நான்தான், இதில் பெருமை இல்லை, சொர்க்கத்தின் வாசலை தட்டும் முதல் நபரும் நான் தான், அல்லாஹ் எனக்காக சொர்க்கத்தைத் திறந்து என்னை நுழைவிப்பான், முஃமினான ஏழைகள் என்னோடு இருப்பார்கள், இது பெருமை இல்லை! முன்னோர், பின்னோரில் அதி சங்கைக்குரியவர் ஆவேன் இது பெருமையில்லை! ;


சுனன் தாறமி முகத்தமா,பாகம் 1, பக்கம் , 26, திர்மிதி பாகம் 5, பக்கம் 261 .


அபூஹுரைரா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் ஹதீதில் பின்வருமாறு உள்ளது.


நான் உம்மை கலிலாக ஆக்கியுள்ளேன், உமது திருநாமம் தௌராத்தில் ஹபிபுல்லா என்று எழுதப்பட்டுள்ளது என்று அல்லாஹுத்த ஆலா தனது நபிக்கு கூறியுள்ளான்.


காழி அபுல் பழ்லு இயாழ் றஹ்மதுள்ளாஹி அலைஹி அல்லாஹுத்த ஆல் அவருக்குத் தௌபீக் செய்வானாக! கூறுகின்றார்.


குல்லத்தின் விளக்கத்திலும், சொற்பிறப்பிலும். கருத்து வேறு பாடுள்ளது. 


"கலீல் " என்பவர் அனைத்தையும் துறந்து முற்றுமுழுதாக அல்லாஹ்வின் பக்கம் தன்னை ஒப்படைத்தவர்,அவர் (பிறவற்றில்) பயன் பெறுவதிலும்;நேசம் கொள்வதிலும் , எக்குறைவும் வந்து விடாது! என்று சிலரும், 


கலீல் என்பவர் (குல்லத் என்ற பண்பைக்கொண்டு ) தனித்துவமாக்கப்பட்டவர் என்று வேறு சிலரும் கூறுகின்றனர். இக்கருத்தை அதிகமான சான்றோர்கள் தேர்வு செய்துள்ளனர், சிலரின் கூற்றுப்படி, "குல்லத்" என்பதின் அடிப்படை மஹப்பத்தின் பரிசுத்தத்தைத் தேர்வு செய்வதைக் குறிக்கும்.


ஹளறத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நேசமும் , வெறுப்பும் அல்லாஹ்வுக்காகவே இருந்த காரணத்தினால்தான் அவர்களுக்கு கலீலுள்ளாஹ் என்று பெயர் வரக்காரணமாயிற்று, . அல்லாஹ்வின் குல்லத்து(அன்பு)ம், அவனின் உதவியும் அவர்களுக்குக் கிட்டியதோடு பின்னால் வந்தவர்களுக்கு இமாமாகவும் ஆக்கப்பட்டார்கள்.


எதார்த்தத்தில், கலீல் என்பவர் தேவையுள்ள பகீர் ஆவார் அத்தோடு அல்லாஹ் தவிர்ந்த யாவற்றையும் துண்டித்துக் கொண்டவருமாவார்; "கலீல்" என்ற சொல் " கல்லத்" என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்தது 

இதன் பொருள், கடுமையான அவசியத் தேவை என்று சிலர் பொருள் பிரிக்கின்றனர்; 


இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் தங்களுடைய அனைத்து தேவைகளையும் அல்லாஹ்வின் மீது சாட்டி வைத்திருந்தார்கள், அவன் பக்கமாகவே அவர்களுடைய முழு நாட்டமும் குவிந்திருந்தது ;அவனல்லாத எவரிடமும் , எத்தொடர்பும் அவர்களுக்கு இருக்கவில்லை; அன்னாரை அக்கினிக் குண்டத்தில் வீசுவதற்காக கவ்வானில்( ஏவுதளத்தில்) நிறுத்தப்பட்டபோது ,ஹளறத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் முன் தோன்றி உங்களுக்கு ஏதும் தேவை உண்டா? என்று கேட்டதற்கு, அடியானுக்குத் தேவை உண்டு! ஆனால், அது உங்களிடமிருந்து கிடையாது! என்று விடை பகிர்ந்தார்கள்; ஆகவே தான் ஹளறத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குகலீல் என்ற இப்பெயர் குறிப்பாக்கப்பட்டுள்ளது. .


ஹில்யா அபூ நுஐம்

 பாகம் 1- பக்கம் 20 .


அபூபக்கர் இப்னு பூறக் றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்.


الخلة ،صفاء الموددة التي توجب الاختصاص بتخلل الاسرار 


"குல்லத்"என்பது, (இன்பத்திலும்,துன்பத்திலும் பரமஇரகசியமாகப்பேணக்கூடி அப்பழுக்கில்லாத தூய நேசத்திற்கான பெயராகும்.


அடிப்படையில் "குல்லத்" என்பது, மஹப்பத்தையே குறிக்கும்! இதன் பொருள், அவசர உதவி, கருணை; உயர்பதவி; மற்றும் சிபாரிசு செய்தல் உள்ளிட்டவையாகும் என்று சிலர் கூறுகின்றனர்.


 இக்கருத்தை அல்லாஹுத்தஆலா தனது திருமறையில் இவ்வாறு இயம்புகிறான்.


قالت اليهود والنصاري نحن ابناء الله واحباؤه قل فلم يعذبكم بذنوبكم  


 நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகள், இன்னும் அவனின் நேசர்கள் என்று யஹுதிகளும், நஸாராக்களும் கூறுகின்றனர்; அப்படியாயின், தங்களின் பாவங்களுக்காக உங்களை எதற்காக தண்டிக்கிறான் என்று நபியே கூறுவீராக! 5 : 14


. ஆகவே ,நேசர்களின் குற்றங்களுக்காக குற்றம் பிடிக்காதிருப்பது நேசர்களுக்கு கடமையும் அவசியமுமாகும்.என்று மேற்கண்ட திருவசனத்தில் சிலேடையாகக் கூறுகின்றான்:


குல்லத் ( நேசம் ) என்பது பிள்ளைகளை விடப் பலமானதாகும் ஏனெனில் சிலவேளை பிள்ளைகளிலும் பகைமை வருவதுண்டு என்பது நினைவில் கொள்ளுமாறு அல்லாஹுத்தஆலா கூறுகிறான்.,


ان من ازواجكم واولادكم عدو لكم فاحذروهم ،


நிச்சயமாக உங்களுடைய சில மனைவிமார்களும், இன்னும் உங்களுடைய சில பிள்ளைகளும் உங்களின் பகைவர்கள் ஆவார்கள்; எனவே, அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள். 

                                             64. : 14


நட்பும் , பகைமையும் ஒன்றாக சேர்ந்திருப்பது ஒருபோதும் சாத்தியமாகாது! ஆகவே,


ஹஜரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உள்ளிட்டோருக்கு நட்பு, நேசம் உள்ளிட்ட பெயர் வைத்திருப்பது, ஒன்றில், அல்லாஹ்வின் பக்கம் முழுமையாக தங்களை ஒப்படைத்ததற்காக வேண்டியும், தங்களின் முழு தேவைகளையும் அவன் பக்கமாகவே ஆக்கிக் கொண்டதனாலும்; அவன் அல்லாதவரிடமிருந்து அனைத்து காரணிகளையும், தொடர்புகளையும் முழுமையாக அறுத்துக் கொண்டதனாலுமாகும்.


அல்லது, அவ்விருவருக்கும் அல்லாஹ்விடத்தில் இருக்கும் விஷேடமான அதிக தனித்துவத்தினால்,அல்லது, அவ்விருவர் மீதிலும் இருக்கும் மறைமுகமான கருணை ; இன்னும், அவ்விருவருடைய இதயங்களிலும் வேறு எவருக்கும் இடமில்லாத தெய்வீக இரகசியங்கள்; இன்னும் இரகசியமான ரப்பானியத் தான மறைவுகள்; ஹக்கானியத்தான மஃரிபாக்கள் உள்ளிட்ட காரணிகளினாலாகும்.


அல்லது, அவ்விருவருடைய இதயங்களையும் தனக்காக அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொண்டான், அவர்களின் இதயங்களை தன்ன ல்லாதவர்களிருந்து பரிசுத்தமாக்கியுள்ளான், இதில் வேறு எவவருக்குமான நேசத்திற்கு எவ்விதமான வாய்ப்பும் கிடையாது.


இவ்வாறான காரணங்களுக்காகவே தான் கலீலுல்லாஹ் என்பவர் அல்லாஹ் அல்லாதவருக்கு உள்ளத்தில் இடம் கொடுக்காதவர் என்று கூறினார்கள் ‌.


"நான் எவரையாவது கலீலாக ஏற்பதாயின், அபூபக்கரை கலீலாக ஏற்பேன், எனினும்; அவர் எனது இஸ்லாமிய சகோதர ஆவார்" என்ற நபிமொழிக்கு இப் பொருளையே அவர்கள்வழங்குகின்றனர்.


ஸஹீஹுல் புகாரி ,கிதாபுஸ் ஸலாத் பக் 84 ஸஹி முஸ்லிம் பாகம்: 4 பக்கம் 1854


இவ்விரண்டில் குல்லத்தா? அல்லது மஹப்பத்தா தகுதியில் கூடியது? என்பதில் சங்கையான அறிஞர்கள், ஆத்மீக ஞானிகளான ஸூபியாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது.


இவ்விரண்டும் சமத்துவமானவை, கலீல்தான் ஹபீப்! ஹபீப்தான் கலீல்! என்று சிலர் கூறுகின்றனர், ஆயினும், ஹளறத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் குல்லத்தோடும் , ஹளறத் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்மஹப்பத்தோடும் குறிப்பாக்கப்பட்டுள்ளார்கள்; குல்லத்திற்கான தகுதி வேறானது என்று சிலர் கூறுகின்றனர்; "


 நான் அல்லாஹ் அல்லாத ஒருவரை கலீலாக ஏற்பதாயின்,....... என்ற நபி மொழியை ஆதாரமாகக் கொண்டு இக்கருத்தைக் கூறுகின்றனர்; 


ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ் அல்லாத எவரையும் கலீலாக ஏற்கவில்லை, அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்கள் திருமகள் பாத்திமா ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களின் திருநிறைச் செல்வார்களான ஹளறத்களான ஹசன், ஹுசைன் மற்றும்உஸாமா பின் ஸைத் ரலியல்லாஹு அன்ஹும் உள்ளட்டோரை மஹபத் வைத்துள்ளார்கள்.


ஸுனன் திர்மிதி, கிதாபுல் மனாகிப்.

பாகம் 5 பக்கம் ,362,

முஸ்லிம் , கிதாபுல் பழாயிலுஸ் ஸஹாபா பாகம் 4 பக்கம் 1886.


மஹப்பத் என்பது , குல்லத்தை மிகைத்த பதவி என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர் , ஏனெனில், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பதவியாகிய ஹபீப் ஹளறத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாமவர்களின்பதவியாகிய கலீலை விட உயர்வானதாகும்.


واصل المحبة الميل الي ما يوافق المحب ، ولكن هذا في حق من يصح الميل منه والانتفاع بالوفق وهي درجة المخلوق فاما الخالق فمنزه عن الاغراض فمحبته لعبده تمكينه من سعادته، وعصمته ، وتوفيقه ، وتهيئة اسباب القرب ، افاضة رحمته عليه ، وقصواها كشف الحجب عن قلبه حتي يراه وينظر اليه ببصيرته فيكون كما قال في الحديث فاذا احببته كنت سمعه الذي يسمع به .....

மஹப்பத்தின் அடிப்படை நேசனின் அனைத்து விருப்பங்களிலும் உடன் படுவதாகும், இந்த உடன்பாடு சரியான விதத்தில் , உடன்படுவதாலும், இந்த உடன்பாட்டால் பயன் பெறுவதால் மட்டுமே சரியாக சாத்தியமாகும் ; இந்தப் பதவி படைப்புக்கு மட்டுமே சாத்தியமாகும் ; ஆயினும் , படைத்தவன் இப்படியான நோக்கங்களிலிருந்து பரிசுத்தமானவன்‌; 


அல்லாஹுத்தஆலா தன் அடியானை நேசித்தல் என்பது (அவனை வணங்குவதற்கான ஆற்றலை வழங்கும்) பாக்கியத்தையும், ( பாவங்களிலிருந்து) பாதுகாப்பையும்; ( நன்மை செய்வதற்கும், பாவங்களிலிருந்து தவிர்ப்பதற்கும்) நல்லுதவி செய்வது; (இறை) நெருக்கத்திற்கான காரணங்களை தயார் படுத்துவது; இன்னும் , அவன் மீது தனது றஹ்மத்தின் அருளினால் கண்ணியம் வழங்குவதுஉள்ளிட்டவையைக் குறிக்கும்.


அவனுடைய கல்பின் திரைகளை அகற்றுவதால் தனது கல்பை தானே பார்ப்பதும், தனது அகப்பார்வையால் அவனின் பக்கம் தனது பார்வையைச் செலுத்துவதும் மஹப்பத்தின் உச்சமாகும்; நான் அவனை நேசித்து விட்டால், அவன் கேட்கும் கேள்வியாக அவன் பார்க்கும் பார்வையாக... என்று ஹதீதில் குறிப்பிட்டுள்ளவாறு அவன் ஆகிவிடுவான்.


இவ்வாறானவர் அவனைத்தவிரவுள்ளதைக் கேட்கமாட்டார்,அவர் முற்றுமுழுதாக அல்லாஹ்வுக்குரியவராகிவிடுவார், (இந்த நிலையில்) அல்லாஹ் அல்லாத அனைத்தையும் புறக்கணித்து விடுவார் ; அல்லாஹ்வுக்காக மனம் தெளிந்திருக்கும் ; அவரின் அனைத்து அசைவுகளும் அல்லாஹ்வுக்காக என்றாகி விடும்.


ஸஹீஹுல் புகாரி , கிதாபுர் றிகாக் , பாகம் 3 பக் 89 


உம்முல் முஃமினீன் ஆயிஷா சித்திக்கா ரலியல்லாஹு தஆலா அன்ஹா கூறியது போன்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் நற்குணம் திருக்குர்ஆனாக இருந்தது, அவனுடைய பொருத்தத்தில் திருப்தி! அவனுடைய கோபத்தில் கோபம்! இந்த விதத்தில் தான் சிலர் குல்லத்திற்கும் விளக்கம்பகர்கின்றனர்.


ஸஹீஹுல் புகாரி கிதாபுர் றிகாக் பாகம் 3 பக்கம் 89


ஒரு புலவர் பாடுகிறார்.


 قد تخللت مسلك الروح مني 

وبذا سمي الخيل خليلا 


நிச்சயமாக உயிர் (உடலில்) இரண்டரக் கலந்திருப்பது போன்று, நீர் என்னில் இரண்டறக் கலந்துள்ளாய் !ஆகவே தான் கலீலுக்கு கலீல் என்று பெயர் சூட்டப்பட்டது.


فاذا ما نطقت كنت حديثي 

واذا ما سكت كنت الغليلا 


எனவே, நான் பேசினால் நீ என் பேச்சாகி விடுவாய்! இன்னும், நான் மௌனித்தால் நீ என்மனதிலாகி விடுவாய்!


 எனவே,நமது நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு குல்லத்தில் அதிகரிப்பும், இன்னும், மஹப்பத்தின் தனித்துவமும் இருக்கவே செய்கின்றது; இதுபற்றி ஸஹிஹான, மஷ்ஹுரான ஹதீதுகளும்; உம்மத்தின் ஒட்டுமொத்த கருத்துக்களும் அறிவிப்புச் செய்கின்றன என்பதற்கு அடுத்து வரும் அல்லாஹ்வின் திருவசனம் போதுமான சான்றாகும்.

 

قل ان كنتم تحبون الله ....


நேசரே கூறுங்கள் ! மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்வை நண்பனாக ஆக்கிக் கொள்வதாயின், என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை நண்பனாக ஆக்கிக் கொள்வான். 3: 30


நஸாராக்கள் ஹளரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வணங்கத்தக்க ஒருவராக ஆக்கிக் கொண்டது போன்று, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தன்னை ஒரு கடவுளாக ஆக்கிக் கொள்ள விரும்புகின்றார் என்று காபிர்கள் கூறிய போது, மேற்கண்ட திருவசனம் இறங்கியது, 


அல்லாஹுத்தஆலா அவர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தியும், அவர்களின் உளறல்களுக்கு மறுப்புக் கொடுத்தும் இத்திரு வசனத்தை இறக்கி அருளினான் என்று முபஸ்ஸிரீன்கள் கூறுகின்றனர்.


அல்லாஹுத்தஆலா கூறுகின்றா


قل اطيعوا الله والرسول ,


நபியே கூறுவீராக! அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள் இன்னும் ரசூலுக்கும்.. 3 : 320


 அல்லாஹுத்தஆலா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழிப்படுமாறு கூறி அன்னாரின் கண்ணியத்தை அதிகரிக்கச் செய்துள்ளான்,பின்னர்,


فان تولوا فان الله لا يحب الكافرين 


பின்னர், நீங்கள் புறக்கணித்தால், அல்லாஹ் காபிர்களில் மகிழ்ச்சி அடைவதில்லை.3 :31.


என்று கூறி வழிபட மறுப்பவர்களை எச்சரிக்கின்றான்.


இமாம் பூரக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி சில முதகல்லிமீன் (இறையியலாளர்) களிடமிருந்து திட்டமாக அறிவித்துள்ளார்கள்,


குல்லத்தை விட, மஹபத் சிறப்பானது ! என்ற அவர்களின் விளக்கம் நீண்டு செல்கிறது அவற்றிலிருந்து சிலவற்றை அடுத்து வரும் நோக்கத்திற்கு வழிகாட்டும் விதமாக சுருக்கமாக நாம் எடுத்துக் கூறுகின்றோம்;  


 கலீல்- خليل:

  ஒன்றின் ஆணையோடு சேருவார்..


அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.


وكذلك نري ابراهيم ملكو ت السموات والارض، 


இவ்வாறு வானங்களினதும் பூமியுடையதுமான ஆட்சிகளை இப்ராஹிமுக்கு நாம் காட்டினோம்.


ஹபீப்- حبيب :


எது வித துணையும் இன்றி போய்ச் சேருவார் .


அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.


فكان قاب قوسين او ادني 


இரு வில்லின் அளவு மட்டும் எனினும், அதைவிடக் குறைவான தூரத்தில் சென்றார்.

.

ஓர் அறிவிப்பில் ,


கலீல் خليل என்பவரின் மன்னிப்பு மேலெண்ணத்தில் இருக்கும் .


உ+மாக,


والذي اطمع ان يغفر لي خطيئتي يوم الدين


கியாமத்து நாளில் எனது தவறுகளை மன்னிப்பான் என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.

                                                  26: 82 .


  ஹபீப் حبيب என்பவர்: மன்னிப்பில் உறுதியான நம்பிக்கையில் இருப்பார்.


ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر 


உம்முடைய முந்தியதும், இன்னும், உம்முடைய பிந்தியதுமான பாவத்தை உம்முடைய காரணத்தால் உமக்கும் மன்னிப்பதற்காகவும்.

                                                     48: 2


கலீல் خليل கூறுகின்றார்..


ولا تخزني يوم يبعثون 


கபரிலிருந்து எழுப்பப்படும் நாளில் என்னை கேவலப்படுத்தி விடாதே! 26: 82


ஹபீப் حبيب விடயத்தில் கூறப்பட்டது,


 لا يخزي الله النبي 


அந்த ( கியாமத்) நாளில் அல்லாஹ் நபியை கேவலப்படுத்த மாட்டான்.

                                                   66: 8


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கேட்பதற்கு முன்பே சுப செய்தி கூறப்பட்டுள்ளது.


கலீல் خليل சோதனையான நேரத்தில், حسبي الله


அல்லாஹ் எனக்குப் போதுமானவன் என்று கூறுவார்.


ஹபீப் حبيب அவர்களுக்கு. حسبك الله 

 அல்லாஹ் உமக்குப் போதுமானவன்என்று கூறப்பட்டது.


கலீல் கூறுகிறார் .


واجعل لي لسان صدق 


உண்மையான நாவை எனக்காக ஆக்கி அருள்வாயாக! 


ورفعنا لك ذكرك 


நாம் உம்முடைய புகழை உமக்காக உயர்த்தினோம்.

என்று ஹபீபுக்குக் கூறப்பட்டது. 94: 4


கலீல் கூறுகிறார்.


واجنبني وبني ان نعبد الاصنام 


என்னையும், எனது பிள்ளைகளையும் ;சிலைகளை வணங்குவதை விட்டும் பாதுகா ப்பாயாக! 14: 35.


انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت 


நபிகளின் இல்லத்தார்களே! உங்களிலிருந்து சகல அசிங்கங்களை அகற்றுவதையும், இன்னும், உங்களை சுத்தப்படுத்தி சிறப்பாக பரிசுத்தப்படுத்துவதையும் அவன் நாடுகின்றான். 33: 33 


நாம் விளக்கிய இவை குல்லத், மஹபத் பற்றி கூறியவர்களின் கூற்றுக்களுக்கும், நிலைகளுக்குமான சிறப்பின் மீதுள்ள ஒரு பீடிகையாகும், ஒவ்வொருவரும் அவர்களின் வழியின் மீது காரிய மாற்றுகின்றனர்; எனவே , யார் நேர் வழியில் இருக்கிறார்கள் என்பதுபற்றி உமது ரப்புதான் அதிகம் அறிந்தவன்.

இத்தோடு ஷிஃபா என்ற நூலில் உள்ள இவ்விடயம் முற்றுப் பெற்றது,


இப்போதுள்ள பூகோள அரசியலில் யூத , கிறிஸ்த்தவ உலகம் முஸ்லிம்களை அரசியல் ரீதியாகவும், மார்க்க ரீதியாகவும் பலவீனப்படுத்தி அடிமைப்படுத்துவதில் தந்திரமாக செயல்படுகின்றது, இவர்களின் இச்சதித் திட்டத்தை சதிகள் மூலம் சாதிப்பதிலேயே அவர்கள் வெற்றி பெற்று வருகின்றனர்.


முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு பொருள் மோகத்தையும், பதவி வெறியையும், காமக் கிளர்ச்சிகளுக்கு தீனி போட்டும் அரசியலில் சாதித்தனர், சில முஸ்லிம் பெயரிலுள்ள முனாபிக்கு ஆலிம்களுக்கும், அவர்களின் அடிவருடிகளான சில அரைகுறைகளுக்கும் பணம் கொடுத்து றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களையும் , இறை நேசச்செல்வர்களையும் , உலமாக்களையும் தரம்தாழ்திப்பேசவைத்தும், மார்க்கத்தில் சந்தேகங்களை உருவாக்கி மார்க்கத்திலும் தங்களின் உயிரிலும் மேலான நபியிலும், அல்லாஹ்வின் நேசர்களிலும் உள்ள மரியாதையை இழக்கச்செய்தனர்.


இவ்விரு காரணிகளாலும் முஸ்லிம்கள் ஈமானில்லாத பெயரில் மட்டும் சாறில்லாத சக்கையாகவும், எடுப்பார் கைப்பிள்ளைகளாகவும் ஆனார்கள். இவ்விரு சதிவேலைகளையும் சாதிப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதான் வஹாபிஸ இயக்கமாகும்,


 இவ்வியக்கம்தான் இன்று இஸ்லாமிய உலகத்தை சீரழிக்கின்றது, இந்த இயக்கம் மக்களை வழிகெடுக்க காலத்திற்குக் காலம் பல்வேறு பெயர்களால் அறிமுகமாயுள்ளது, இன்னும் புதிதுபுதிதாக அறிமுகமாகிக்கொண்டுமிருக்கின்றது, 


 இன்று. புற்றீசல் போன்று பரவிக்கிடக்கும் அத்தனை இயக்கங்களுக்கும் , குழப்பங்களுக்கும் தாய்வீடு வழிகெட்ட வஹாபிஸம்தான் என்பதை எவரும் மறுக்கவோ , மறைக்கவோ முடியாது , இந்த இயக்கம்தான் உலகில் தோன்றிய அனைத்து வழிகெட்ட இயக்கங்களிலும் படுமோசமான இயக்கமாகும், இறுதியாக தஜ்ஜாலைச்சந்திக்கும் இயக்கமும் இதுதான் என்பதை இமாம் ஸைனி தஹலான் உள்ளிட்ட அறிஞர்கள் கூறியுள்ளனர், இதை நிரூபிக்கும் வகையில் தற்போது வஹாபிஸ நாடுகள் இஸ்ரேலுடன் நெருங்கிய உறவைப் பேணுவதும் , முஸ்லிம்களை கண்டும் காணாதவாறு இருப்பது கண்கூடு ! 


எனவே, சோதனைகள் சூழ்ந்துள்ள இக்காலத்தில் ஈமானின் மூல வேராதிய வேந்தர் மதீனத்து நாதராகிய மஹப்பத்துரஸூலை மனதில் ஆழமாகப்பதித்த ஈமானைப் பாதுக்காக்க வேண்டும்  


 வழிகெட்ட சகல, இயக்கங்கள் அனைத்திலிருந்தும் ஒதுங்கி நமது முன்னோர் நடந்த அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத் என்ற நல்வழியில் சென்று இறை நெருக்கத்தையும் , அவன் பொருத்தத்தையும் பெறுவதற்கு முயற்சிப்போமாக! வல்ல நாயன் அதற்கான தௌபீக் கை நம்மனை வருக்கும் தந்தருள்வானாக! ஆமீன் யாறப்பல் ஆலமீன்