கேள்வி:- கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வஸல்லம் அவர்கள்...
படைத்தவனுக்கும், படைக்கப்பட்ட படைப்புகளுக்கும் (و قبلة الواجد و الموجود) கிப்லாவானவர்கள் என ஸுப்ஹான மௌலிதில் ஓர் வாசகம் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே இதற்கான தெளிவான பதில் என்ன?
┈┈┈┅◉☆◆☆◉┅┈┈┈
கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி, பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி, ஸூபி, நக்ஷபந்தி.
┈┈┈┅◉☆◆☆◉┅┈┈┈
பதில்:- இது வெளிப்படையான விடயம் தான்...
அல்லாஹ்வின் திருச்சமுகம் செல்வதாயின் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் மூலமாகத்தான் செல்லவேண்டும், காபகௌஸைனியின் மத்திய கோட்டில் இருப்பவர்கள் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஆகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாஜிதாதாகிய அல்லாஹ்வுக்கு கிப்லாவாக உள்ளார்கள்
அல்லாஹ் கொடுக்கின்றான் நான் பங்கீடு செய்கின்றேன் என்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள்.
படைப்புக்கு றிஸ்க்கும், றஹ்மத்தும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் மூலமாக கிடைப்பதால் வாஜிதுக்கும், மௌஜூதுக்கும் கிப்லாவாக இருக்கின்றார்கள்.
ஆகவேதான் படைப்புக்கள் அனைத்திற்கும் அன்னார் நபியாக றஸூலாக உள்ளார்கள், படைப்புக்கள் அனைத்தும் அன்னாரை ஈமான் கொள்கின்றன,
இதுதவிர இன்னும் ஆழமான விளக்கங்கள் உள்ளன,
நாம் கூறியதை நன்கு ஆழமாக சிந்தித்தால் மேலும் பல விளக்கங்களை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
கௌஸைன் என்பது இரு வில்லுகள், மேற்பகுதி வாஜிது கீழ்பகுதி மௌஜூத் இரண்டையும் பிரிக்கும் மத்திய கோடு நபியவர்களின் மகாம், இதையே காப கௌஸைனி எனப்படும் இந்தமத்திய கோடு இரண்டுக்கும் கிப்லாவாகும்.
இந்த மத்தியை நட்ட நடு வீடு என்று சில ஸூபிகள் பாடுவார்கள்.