*விளக்கம்*
••••••••••••••••••••••••••••••••
மௌலவி, பாஸில் ,*ஏ.எல். பதுறுத்தீன்.*
ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.
.•••••••••••••••••••••••••••••••
தொடர் : 14
----------------
وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ ۗ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَٰكِنْ لَا يَعْلَمُونَ
2- 13.- இன்னும் ஏனைய மனிதர்கள் ஈமான் கொண்டிருப்பது போன்று , நீங்களும் ஈமான் கொள்ளுங்கள்! என்று அவர்களுக்குக் கூறப்பட்டா
ல் மூடர்கள் ஈமான்
கொண்டது போன்று நாங்களும்
ஈமான் கொள்ள வேண்டுமா? என்று கேட்கின்றனர்; அறிக!
அவர்கள் தான் மூடர்கள் என்பதை
அவர்கள் அறிந்து கொள்வதில்ல.
••••••••••••••••••••••••••••••••••
தொடர்பு:
இத்திருவசனம் முந்திய திருவச
னங்களோடு சில வகையில் தொடர்பாகின்றது.
1- முந்திய திருவசனத்தில் முனாஃபிக்குகளின் இரு வகையான குறைகள் சுட்டிக் காட்டப்பட்டன, இங்கு மூன்றாவது குறை எடுத்துக்காட்டப்படுகின்றது
படுகிறது;
2- முனாபிக்குகளைக் குழப்பம் விளைவிப்பதிலிருந்து முஸ்லிம்கள் தடுத்தார்கள்,
;அதை
அவர்கள் ஏற்கவில்லை; இத்திருவசனத்தில்
உண்மையான ஈமானின் பக்கம் அழைக்கின்றனர்; இதையும் அவர்கள் ஏற்கவில்லை
முழுமையான பிரச்சாரம் என்பது, வழிகேடர்களைக் கெடுதியிலிருந்து முதலில் தடுக்க வேண்டும், ,அடுத்து நன்மையின் பக்கமாக அழைக்க வேண்டும்; நன்மையின் பக்கம் அழைப்பதை விட, ,தீமையைத் தடுப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற இஸ்லாமியப் பிரச்சாரத்தின் ஒழுங்கு முறையை முஸ்லிம்களுக்கு இங்கு சுட்டிக்காட்டப்படு
கிறது; ஏனெனில்; குழப்பத்திலிருந்து விலகி இருப்பது எதார்த்தமான ஈமானுக்கு நிபந்தனையாகும்.
விளக்கம் : தப்ஸீர்.
ஈமான் கொள்ளுங்கள் என்பதன் மூலம் வாயால் ஈமான் கொள்வது செல்லுபடியாகாது, யார் மீது ஈமான் கொள்ள வேண்டும் என்று இங்கு கூறப்படவில்லை, அடுத்துவரும் திருவசனம் இதைத் தெளிவுபடுத்துகின்றது, எவர்மீது மக்கள் ஈமான் கொண்டுள்ளார்களோ அவர்மீது நீங்களும் ஈமான் கொள்ளுங்கள்
மனிதர்கள் (الناس) என்பதன் நோக்கம் மனித இனமாகும், இதன்படி இத்திருவசனத்தின் பொருள், மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள்
என்பதாகும் இதிலிருந்து சரியான விதத்தில் ஈமான் கொள்ளாதவர்கள் எதார்த்தத்தில் மனிதர்கள் அல்ல,
அவர்கள் மிருகங்களை விடக் கேடு கெட்டவர்கள், அவைகள் தங்களது எஜமானனை அறிந்தாலும் சரி அறியா விட்டாலும் சரி !
அல்லது குறிப்பான மனிதர்கள் நோக்கமாக இருக்கலாம், இதிலும் சில குறிப்பான சாத்தியங்கள் இருக்கின்றன.
1- றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் அன்னாரின் அற்பணிப்புள்ள அனைத்து ஸஹாபாக்கள்,
2- ஊரிலுள்ள இக்லாஸான முஃமின்கள், அல்லது அவர்களின் நெருங்கிய உறவினர்களான ஹளறத் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் றழியல்லாஹு அன்ஹு போன்றவர்கள்,
தப்ஸீர் அஸீஸியில் ஸெய்யிதினா ஹளறத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு மா அவர்களின் அறிவிப்பை எடுத்துக்கூறி " மனிதர்கள்" என்பதன் நோக்கம், ஹளறத் அபூபக்கர் , உமர், உதுமான் , அலி றழியல்லாஹு அன்ஹு ம்
அஜ்ம யீன் ஆவார்கள்,என்று கூறப்பட்டுள்ளது, ஏனெனில் , அந்தக்காலத்தில் இவர்கள்தான் முக்லிஸான முஃமின்கள் என்று அறியப்பட்டிருந்தார்கள், அதனால் இவர்களின் ஈமான் மற்றவர்களின் ஈமானுக்கு அளவுகோலாக இருந்தது, எவருடைய ஈமான் இவர்களின் ஈமானை ஒத்துள்ளதோ அவர் முஃமின், இல்லையேல் முஃமின் அல்ல,
இத்திருவசனத்தின் பொருள் இவ்வாறு கூறுவது போன்று இருக்கின்றது,
முனாபிக்குகளே! நீங்கள் வெளிப்படையாகக் கொண்டிருக்கும் ஈமான் செல்லுபடியற்றது, நீங்கள் உங்களின் நலனை நாடினால் சித்தீக், பாறூக் போன்றோர் போல் ஈமான் கொள்ளுங்கள், தொழிற்சாலையின் முத்திரை இருக்கும் பொருளுக்குத்தான் சந்தையில் பெறுமதி உண்டு, இவ்வாறே மஹப்பத் என்ற சந்தையில் ஈமானில் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் முத்திரையும், சித்தீக், பாறூக் றழியல்லாஹு அன்ஹு மா ஆகியோரின் ஈமானும் இருக்க வேண்டும்,
"முனாபிக்குகள் முஸ்லிம்களை மூடர்கள்' என்று கூறியதற்கு சில காரணங்கள் உள்ளன.
1-அக்காலகட்டத்தில் முஸ்லிம்களில் பெரும்பாலான
வர்கள் ஏழைகளாகவும், வறுமை
யானவர்களாகவும்
இருந்தார்கள் , முனாஃபிக்குகள் வசதி படைத்த குபேரர்களாக இருந்தார்கள்; எனவே, முஸ்லிம்
களை ஏளனப்படுத்த இந்த வார்த்தையைக் கூறினார்கள்;
2-முனாஃபிக்குகள் இஸ்லாத்தை
ப் பிழையான மார்க்கமாகவும், குப்ரை சத்திய மார்க்கமாகவும் கருதினர், ஆகவே, முஸ்லிம்களை மூடர்கள் என்றார்கள்.
3-முஸ்லிம்கள் உலக வாழ்வை விட, மார்க்கத்திற்கு முக்கியத்து
வம் கொடுத்தனர்; உலகத்தின் பயன் உடனடியானது,
மார்க்கத்தின் பயன் மறுமையில் கிடைப்பது; எப்போதோ கிடைக்க
இருப்பதற்காக இப்போதுள்ள
சுகத்தை இழப்பது முட்டாள் தனம் என்பதாகவும் கூறினர்.
4-உலகத்தின் சுகம் நிச்சயமானது மறுமையின் சுகம் கற்பனையா
னது! கற்பனையானதை நம்பி நிச்சயமானதைத் துறப்பது முட்டாள் வேலை என்பதால் அவ்வாறு கூறினார்கள்.
5-மதீனாவில் காபிர்கள் குடியிருந்தார்கள், எதிர்காலத்தி
லும் குடியிருப்பார்கள்,
முஸ்லிம்கள் பரதேசிகள்! இன்று இருக்கின்றார்கள்
; நாளை வேறு ஓர் இடம் செல்லலாம்; இவர்களின்
மார்க்கமும் தொடர்ந்து இருக்குமா? இல்லையா?
என்பது கூட நிச்சயமில்லை; ஆகவே, நிச்சய மற்ற
மார்க்கத்தை நம்பி நிச்சயமான நீடித்த மார்க்கத்தைத் துறப்பவன் மடையன் என்று கருதிக் கூறினார்கள்.
முனாபிக்குகள் தங்களைப் "புத்திசாலிகள்" என்று கூறியதற்கான காரணம், நாங்கள் இருதரப்பாருடனும் உறவைப் பேணுகின்றோம், முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தினால் அவர்களுடன் சேர்ந்து கொள்வோம், காபிர்கள் மிகைத்தால் அவர்களோடு ஒட்டிக்கொள்வோம் , இரு தர்ப்பார் களுடனும் சகஜமாக நல்லுறவு கொள்வதுதான் புத்தி ஜீவிகளின் பண்பாகும்,
றப்புத்த ஆலா இவர்களின் பொய்யான கற்பனையை மிகச்சிறந்த விதத்தில் இவ்வாறு கூறி சுக்கு நூறாக்கினான்.
أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ
அறிக! அவர்களே தான் மூடர்கள்,
இதில் உள்ள هم،ان(அவர்கள், நிச்சயமாக) என்பதற்கான விளக்கம் முன்னர் கூறப்பட்டுள்ள
து.
முனாஃபிக்குகளை மூடர்கள் என்று அல்லாஹுத்தஆலா கூறியதற்கு பின்வரும் காரணங்
கள் உள்ளன.
1-அவர்கள் அழியும் சுகத்தை நம்பி நிலையான சுகத்தை விலக்கு
கின்றனர், இவ்வாறு செய்பவன் படு முட்டாள்.
2-பலமான ஆதாரங்களுக்கு முன், தனது குழப்பமான கற்பனைகளி
களில் நம்பிக்கை வைக்கின்றனர்
இவனும் படு முட்டாள்.
3- அவர்களைப் பற்றிய எதார்த்தத்தை முஸ்லிம்கள் அறியாதவரை அவர்களின் சதி செல்லுபடியாகும்,ஆனால், அல்லாஹுத்தஆலா அவர்களை வேரோடு பிடுங்கி முஸ்லிம்களுக் கு முன்னால் நிறுத்தியுள்ளான்,
;அவர்களின் உள்நோக்கத்தை அல்லாஹுத்த ஆலா முஸ்லிம்க
ளுக்கு தெரியப்படுத்தி விட்டான்.
4-அவர்கள் நபிகள் திலகம் ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லமவர்
களுக்கு மாறு செய்தார்கள்,
எதார்த்தத்தில் இது அல்லாஹ்வு க்கு எதிரானதாகும்; ரப்புக்கு மாறு செய்கின்றவன் ஒருபோதும் கண்ணியம் பெற முடியாது; சுகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக
விஷப்பாம்பை கடிக்க வைத்தவ
ன் போன்று இவர்கள் ஆகிவிட்டார் கள்.
முந்திய திருவசனத்தில்,
'"அவர்கள் உணர மாட்டார்கள்"' என்று உணர்வு மறுதலிக்கப்பட்ட து, இத்திரு வசனத்தில் "அறியமாட்டார்கள் " என்று கூறி அறிவு, புரிதல் மறுதலிக்கப்படுகிறது,
இதில் சில நுட்பமான விளக்கங்கள் உள்ளன.
1- முதலில் புலனால் உணரக்கூடிய குழப்பத்தைப்பற்றிக் கூறப்பட்டது, இங்கு புத்தியோடு தொடர்பான முட்டாள்தனத்தைப்பற்றிக்கூறப்படுகின்றது,
2- முனாபிக்குகள் முஸ்லிம்களை முட்டாள்கள் என்றார்கள், அல்லாஹுத்த ஆலா அவர்களை முட்டாள்கள் என்றான்,
3- றப்புத்த ஆலா அவர்களை முட்டாள்கள் என்று கூறி விட்டு அந்த முட்டாள்தனத்தைக்கூட அறியாதவர்களாகவே இருக்கின்றனர் என்கின்றான், ஏனெனில், அறிவு புத்தியால் வருவது, புத்தியே இல்லாமல் போகும்போது அறிவு எப்படி வரும்?
தப்ஸீர் றூஹுல் பயானில் இந்த இடத்தில் பின்வரும் விளக்கம் கூ றப்பட்டுள்ளது,
ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்ட தும் ஹளறத் ஜிப்ரியீல் அலைஹிஸ்ஸலாம் அறிவு, வெட்கம், புத்தி உள்ளிட்ட மூன்று காணிக்கைகளை ஏந்தியவர்களாக அன்னாரின் சமுகம் வருகை தந்து இவற்றிலிருந்து ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுமாறு கேட்டார்கள், ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் புத்தியைத்தேர்வு செய்தார்கள், ஹளறத் ஜிப்ரியீல் அலைஹிஸ்ஸலாம் அறிவையும் வெட்கத்தையும் திரும்பிச் செல்லுமாறு பணித்தார்கள், அப்போது இவையிரண்டும் நாங்கள் "ஆலமுல் அர்வாஹில் புத்தியோடு சேர்ந்துதான் இருந்தோம், இப்போதும் சேர்ந்துதான் இருப்போம்" என்றன, புத்தி மூளையிலும், அறிவு மனதிலும், வெட்கம் விழிகளிலும் குடிகொண்டன.
பயன்:
இத்திருவசனத்தில் பின்வரும் பிரயோசனங்களைப் பெறுகின்றோம்..
1-மார்க்க விடயங்களில் அல்லாஹ்வின் நல்லடியார்களை ப் பின்பற்றுவது அவசியம், ஏனெனில்; நல்லடியார்களைப் போன்று ஈமான் கொள்ளுமாறு இங்கு கட்டளையிடப்பட்டுள்ளது;
2-அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் அகீதாதான் உண்மையானது! ஏனெனில், இங்கு றஸூலுள்ளா ஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்ளையும்;நல்லடியார் களையும் பின்பற்று மாறு கூறப் பட்டிருக்கிறது.
3-வஹாபி தேவ்பந்தி; மௌதூதி உள்ளிட்ட இயக்க வாதிகள் வழிகேடர்கள்; ஏனெனில், வஹாபிகள் இமாம்களைப் பின்பற்றுவதைக் குறை காண்கின்றார்கள், தேவ்பந்திகள் அகில உலக முஸ்லிம் அறிஞர்கள் நன்மையானவை என்று ஏற்றுக் கொண்டதை ஷிர்க் என்கின்றனர், மௌதூதிகள் இவ்விருவரின் செயல்களையும் ஏற்று வெளிப் படுத்துகின்றனர்.
4-சாலிஹான நல்லடியார்களை குறை காண்பவன் முனாபிக்குக ளின் வழிமுறையிலிருப்பவன், தற்காலத்தில் ஷீஆக்கள் முதல் மூன்று கலீபாக்களையும் , காரிஜி கள் இமாம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும்;
வஹாபிகள்
முஜ்தஹிதான இமாம்களையும்;தேவ்பந்திகள், மௌதூதிகள் வலிமார் களையும், அறிஞர்களையும் காபிர், முஷ்ரிக் என்கின்றனர்;
மீலாத் மௌலிதில் றஸூலுள்ளா ஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைப் புகழ்வதை' ஷிர்க்' என்கிறனர் என்றால், எந்த ஆலிம், வலி இதிலிருந்து தப்ப முடியும்? தக்வியத்துல் ஈமான் என்ற நூலை உற்று நோக்கினால், இஸ்லாத்தையே நம்புவது ஷிர்க்காகத் தெரியவரும்! ந ஊது பில்லாஹ்!
5- இத்திருவசனத்தில் , மார்க்கமற்ற வழிகேடர்கள் தூஷணிப்பையும், ஒதுக்கலையும் பொருட்டாக எடுக்க வேண்டாம், என்று சத்தியத்தில் இருக்கும் ஆலிம்களுக்கு ஆறுதல் கூறப்பட்டுள்ளது, அசத்தியத்திலிருப்பவர்கள் எப்போதும் இந்த நடைமுறையை
யே பின்பற்றுகின்றனர்.
( தப்ஸீர் மதாரிக்)
உலமாக்கள் சன்மார்க்கத்தின் காவலர்கள், திருடன் முதலில் காவலாளி மீதுதான் தாக்குதல் நடத்துவான், காவலாளிகள் பலமாக இருந்தால் திருட முடி யாது, ஆகவேதான் இப்போதும் வழிகேடர்களான வஹாபிகள் தீனின் காவலர்களான இமாம்
கள் ,வலி மார்கள், உலமாக்கள்
உள்ளிட்டோரை குறை கூறி
இழிவுபடுத்துகின்றனர்,
மக்கள் மத்ஹபு , தரீக்கா வழியில் பற்றுள்ளவர்களாக இருக்கும் வரை முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் மார்க்கத்தைத் திருட முடியாது என்பதை அவர்கள் நன்கு விளங்கி வைத்திருக்கின்றனர், அரசாங்கத்தின் ராஜ்ய காவாலா
ளிகள் மீது அரச்சாங்கத்தின் முழுக் கவனமும் இருப்பது போன்று , சன்மார்க்கத்தின் காவலாளிகளான சத்திய உலமாக்களுக்கு முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் உதவிக்கரமும், மலக்குகளின் பாதுகாப்பும் இருந்து கொண்டே இருக்கும், ஆகவேதான் வழிகேடர்களின் அணியிலிருந்து பெரும் கொண்ட உலமாக்கள் பல கூறுகளாக சிதறி முகவரியே இல் லாமல் போய்விட்டனர்,
சத்திய உலமாக்களின் கண்ணியம் , மகத்துவம் மறைந்தும் மங்காமல் வளர்ந்து கொண்டே இருக்கின்றன, ஆகவே உலமாக்கள் உளத்தூய்மையோடு மார்க்கத்திற்கு ஊழியம் செய்ய வேண்டும், இதை தனது முழு நேரக் கடமையாக எடுத்துக்
கொள்ள வேண்டும், இவர்கள் உலகத்தைத்தேட வேண்டியதி
ல்லை, உலகம் இவர்கள் காலடி
க்கு வந்து இவர்களின் பாதத்தை முத்தமிடும்.
6- அல்லாஹுத்த ஆலா வின் நல்லடியார்களின் விரோதி உண்மையில் அல்லாஹுத்த ஆலா வின் விரோதியாவான், பாருங்கள்! முனாபிக்குகள் முஸ்லிம்களை முட்டாள்கள் என்றார்கள், அல்லாஹுத்த ஆலாவே இவர்களுக்குப் பதிலாக "அவர்கள்தான் முட்டாள்கள்" என்று கூறினான்.
7- ஸஹாபாக்களைக் குறைகூறுவது முனாபிக்கு
களின் வேலையாகும், இவர்கள் ஸஹாபாக்களை முட்டாள்கள் என்று கூறி தூஷணித்தார்கள்.
ஸூபிஸ விளக்கம்:
மனிதன் உலகத்தில் பிரயாணியின் அந்தஸ்த்தில் இருக்கின்றான், தனது சொந்த தேசமான ஆலமுல் அர்வாஹி விருந்து தனது எஜமானிடம் சில உடன்படிக்கைகளைச் செய்து கொண்டு சம்பாதிப்பதற்காக பரதேசியாக இவ்வுலகம் வந்தான், இங்குள்ள நந்தவனங் களையும், எழில்மிகு நீரோடைகளையும் கண்டு அதில் மதிமயங்கி தனது தாய் நாட்டையும், தனது உண்மையான நோக்கத்தையும் மறந்து விட்டான்,
தாய் நாட்டிலிருந்து தொடர்ந்து அஞ்சல்கள் , தகவல்கள் தூதர்கள் மூலமாக , பரதேசியே! அவசரமாக சம்பாதித்து தனது தாய் நாட்டிற்கு அனுப்பிக் கொண்டே இரு! இந்த வாய்ப்பு மீண்டும் கைக்கு எட்டாது , ஆகவே கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு தாய்நாட்டுக்கு செல்வத்தை அனுப்பு என்று தகவல் வந்து கொண்டே இருக்கின்றது.
புத்திசாலி கிடைக்கும் தகவலைக் கேட்டதும் உடனே உஷாரடைந்து விடுகின்றான், முட்டாள் இங்குள்ள போலியான எழில்களிலும், சுகங்களிலும் சொக்கி விடுகின்றான், தாய் நாட்டிலிருந்து வந்த தகவல்கள் எதுவும் அவனின் கண்களைத்திற க்கவில்லை, எவராவது ஒருவர் அவனைச்சந்தித்து இன்னின்ன ஆளைப்போன்று சம்பாதித்து தாய் நாட்டிற்கு ப் பயணம் மேற்கொள்ள தயாறாகு! என்று கூறினால், அதை உபகாரமாகக்
கருதுவதற்கு மாறாக அவனை நையாண்டி பண்ணி ஏளனம் செய்கின்றான்,
இதயக்கண் திறந்தவர்களை பைத்தியம் என்கின்றனர், பரதேசியாக இங்கு வந்தவர்கள் , தனது தாய் நாட்டைப் பற்றிய எந்த விதமான சிந்தனையுமற்றவர்களாக இவவ்வுக இன்பத்தில் மூழ்கி விட்டனர், இறை நேசர்களின் அழுக்கடைந்த கிழிந்த ஆடையையும், தூஷிபடிந்த மஞ்சணித்த முகத்தையும் பார்க்கி
ன்றார்களே தவிர, அவர்களின் உள்ளத்தின் ஒளியையும் ,
நெஞ்சில் நிறைந்திருக்கும் கருவூலங்க
ளையும் காண்பதில்லை, ,
உண்மையில் அவர்கள் கதிரவன், சந்திரன் போன்றவர்கள், தூஷிகளும், புளுதிகழும் நிறைந்த வேற்றார்கள் மத்தியில் அவர்கள் மறைந்து வாழ்கின்றார்
கள்..
ஸூபியாக்களின் பார்வையில் , அறிவு இருவகைப்படும்.
1- வெளிப்படையான அறிவு.
2- லதுன்னியான இறையருள் அறிவு.
இதற்கான காரணம் யாதெனில், கல்புக்கு இரு வாசல்கள் உள்ளன,
1- புறமானது.
2- அகமானது,
புறமான வாசல் ஐம்பொறிகள், இவை மூலமாகவே கல்புக்கு புறமான அறிவு கிடைக்கின்றது, அகமான வாசல் இல்ஹாம் ( உள்ளுணர்வு) ஆகும், இதன் மூலமாகவே அகவியல் ஞானம் கிடைக்கின்றது, எவராவது ஒருவர் புற ஞானத்தின் வாசலை திறந்து கொண்டு அகவியல் வாசலை அடைப்பாராயின், அவர் எத்துணை எழுத்தறிவுள்ள மேதையாக
இருந்தாலும் ஜாஹிலாகவே இருப்பார்,
இந்த முனாபிக்குகள் உலகத்
தை நன்கு புரிந்து வைத்திருக்கும் சிறந்த சாமர்தியமானவர்கள் , ஆனால், இறையறிவு இல்லாத காரணத்தால் வீணர்கள், ஆகவேதான்:لَا يَعْلَمُونَ அறிவற்ற வர்கள் என்று கூறப்பட்டது,
வெளிப்படையான அறிவின் பரிபாஷை களைப்படமாக்கியவரின் கல்பின் வாசல் திறக்கப்படவில்லை யாயி
ன், அவர் அறிவின் பிரகாசங்களைவிட்டும் நிராசை
யானவராவார், அநேகமாக
அவர்கள் பாடமாக்கிய
அதே அறிவுதான் அவர்களுக்கு திரையாகவும் அமையும்







