. *நான் கண்ணீர் சிந்திய சம்பவம்*
(வரலாறு தந்த பாடம்)
உமர் ரலியல்லாஹு அன்ஹு கடைசி காலத்தில் நயவஞ்சகமாக கத்தியால் குத்தப்பட்டு குற்றுயிராக கிடந்த,அந்த நேரத்தில்,ஹுதைஃபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து கேட்டார்கள்.,
*நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள், உங்களிடத்தில்,கூறிய,முனாஃபிக்குகள் என்னும் நயவஞ்சகர்கள் பட்டியலில் என் பெயரும் இருக்கிறதா அல்லாஹ்வுக்காக சொல்லுங்கள்*
இதைக் கேட்ட ஹுதைஃபா ரலியல்லாஹு அன்ஹு அழுதவாறு ரகசியத்தை உங்களிடம் எப்படி நான் சொல்ல முடியும். *நபி என்னை நம்பி என்னிடத்தில்,தகவல்கூறியுள்ளார்கள்* என்று கேட்டார்கள்
நான் எனது கடைசி காலத்தில் இருக்கிறேன் என் பெயரும் அந்த முனாஃபிக்குகள் பட்டியலில் இருக்கிறதா என்று கொஞ்சம் சொல்லுங்கள்,என்றுமீண்டும்மீண்டும்,கேட்டபொழுது,சொன்னார்கள்
உங்கள் பெயர் அந்தப் பட்டியலில் இல்லை இனி யாருக்கும் நான் தகவல் சொல்ல மாட்டேன் என்று
ஹுதைஃபா ரலியல்லாஹு அன்ஹு
கண்ணீர் மல்க பதிலளித்தார்கள்.
பிறகு தனது மகன் அப்துல்லாஹ் பின்,உமர்ரலியல்லாஹுஅன்ஹுவை அழைத்து எனக்கு இன்னுமொரு தேவை உள்ளது அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று உமர் உங்களிடம் அனுமதி கேட்கிறார் *அமீருல் முஃமினீன் ஜனாதிபதிகேட்கிறார்,என்று,சொல்லாதே,உமர் உங்களிடம் கேட்கிறார்*
*"நீங்கள் அனுமதி அளித்தால்
அவரது தோழர்களோடு அடக்கம் செய்யப்பட அவர் விரும்புகிறார்"*
என்று கேள் என்றார்கள்,உமர் ரலியல்லாஹு அன்ஹு.
அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹுசென்று,அனுமதிகேட்டபோது எனக்காக,அந்தஇடத்தை,வைத்திருந்தேன் எனினும் *உமருக்காக அதை விட்டுத் தருகிறேன்* என்று பதிலளித்தார்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.
பிறகு உமர் ரலியல்லாஹு அன்ஹுதனதுமகனிடம்,சொன்னார்கள்,எனதுஜனாசாவை,தொழவைப்பதற்காக நபியின் உடைய மஸ்ஜிதில் கொண்டு செல்லும்போது.., *ஹுதைஃபா ரலியல்லாஹுஅன்ஹு எனது ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்கிறார்களா என்று பார்
ஏனெனில்,என்மீதுள்ள,கண்ணியத்தால் நான் முனாஃபிக் என்று அவர் சொல்லாமல் விட்டிருக்கலாம்*.
அவர்கள் கலந்து கொண்டால் எனது ஜனாசாவை நபியின் ரவ்ளாவுக்கு அருகிலே கொண்டு செல்.
மீண்டும்,மையத்தை வீட்டுக்கு வெளியில் வைத்துவிட்டு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் அனுமதி கேள் *உங்களது மகன் உங்களது வீட்டில் அடக்கம் செய்யப்பட விரும்புகிறார்* என்று கேள்.நான் *அமீருல் முஃமினீன், ஜனாதிபதியாக* இருப்பதால் மறுப்பதற்கு தயங்கியிருக்கலாம்
அவர்கள் அனுமதி அளித்தால்நபிக்கு அருகிலேயே அடக்கம் செய்,அனுமதி மறுத்துவிட்டால்,பொதுகபரஸ்தானில் என்னை அடக்கம் செய்து விடு
என்று வஸிய்யத் செய்தார்கள்
உமர் ரலியல்லாஹு அன்ஹு.
அதேபோன்று ஹுதைஃபா ரலியல்லாஹ் ஜனாஸாவில் கலந்து கொண்டதைப்பார்த்து,சந்தோஷமடைந்த அப்துல்லாஹ் ரலியல்லாஹ் ஆயிஷா ரலியல்லாஹ்விடம் அனுமதி பெற்று அண்ணல் நபி மற்றும்அபூபக்கர்ரலியல்லாஹ்வோடு உமர் ரலியல்லாஹ் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
*'சுப்ஹானல்லாஹ்*
எவ்வளவு பெரிய ஸஹாபீ
நீதமான ஆட்சியால் உலகைஈர்த்தவர்
அல்லாஹ்வுடைய அச்சத்தில் நிரம்பியவர்கள் *சுவனவாசி* என்று நபியின் புனித நாவால் நன்மாறாயம் பெற்றவர்,*ஷஹீத் - உயிர்த்தியாகி* என்று நபியிடம் அந்தஸ்து பெற்றவர்
இரண்டாம் கலீபா.இவ்வளவு ஏராளமானசிறப்புகளுக்கு,சொந்தக்காரர் *நான் ஒரு முனாஃபிக் ஆக இருப்பேனோ* எனது அமல்கள் தியாகங்கள் எல்லாம்அல்லாஹ்விடம் ஏற்கப்படாமல் வீணாகி விடுமோ
என்று பயந்து நடுங்கியுள்ளார்கள்
நான் இதில் எம்மாத்திரம்..?
நமது ஈமானைக் குறித்து எவ்வளவு அஞ்ச வேண்டும்..?
அந்த சத்திய ஸஹாபாக்களை ரப்புல் ஆலமீன் பொருந்திக் கொள்வானாக
எனது கடைசி நிலை என்னவாகும்
நான் உண்மையில் முஸ்லிம் தானா.?
*அல்லாஹ்வே எங்களை மன்னித்து விடு.!*
*அல்லாஹ்வே எங்களை முஸ்லிம்களாக மரணிக்க வை..!*
*நல்லோர்களோடு சேர்த்து விடு...!*
பிராத்தனையுடன்....!
✍️ மதுரை.,இஸ்மாயில்.







