السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 10 June 2015

திக்ரில் ஆடுதல் அசைதல்

Image result for Sufi digri and break dance very funny
மனித உடலுடன் ஒட்டிக் கொண்ட  இரு வெவ்வேறான சக்திகள்
1.ரூஹ்(ஆத்மா)
2.ஹவா (இச்சை)

“ரூஹ்”எப்போதும் மேல் நோக்கி  உயர்வைத் தேடும்.
“ஹவா”எப்போதும் கீழ் நோக்கி தாழ்வைத் தேடும்.

இவ்விரண்டும்    இசையிலும் இனிமையிலும் மெய்மறக்கக் கூடியவை. ஆகவே ஆசை கூடினாலும்,ஆத்மா மிகைத்தாலும் மனிதன் அவனது பகுத்தரிவினை இழந்துவிடுவான்.

ஆத்மாவின் மேன்மையும்,ஆசையின் சிறுமையும் அவனது உடல் அசைவுகளில் வெளிப்படும்.  ஆகவே  பாட்டு,கும்மாளம் போன்ற தீயவற்றை கேட்கும் போது மனோ இச்சை   தலையை ஆட வைக்கின்றது.

அல்லாஹ்  மனோ   இச்சைக்கு ஆட்பட்டவர்களைப்பற்றி கூறுகின்றான். “நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர்  (குர்ஆனின்  வசனங்களைக்)கேட்கிறார்கள்.அல்லது விளங்கிக் கொள்கிறார்கள்.என்று நீர் எண்ணிக் கொண்டீரோ? அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி  வேறில்லை.அன்றியும் (அவைகளை விட )அவர்கள் பாதையால் மிக வழி  கெட்டவர்கள்.(அல்குர்ஆன் 25:44)

ஆத்மாவின் உயர்வினைப்ப் பற்றி  அல்லாஹ் கூறுகிறான் “உம்முடைய ரப்பு,ஆத்மாவின் மக்களாகிய அவர்களது முதுகுகளிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி வைத்த  போது (அவர்களை நோக்கி)  “நான் உங்களுடைய றப்பு அல்லவா?  (என்று கேட்டான் ) “ஆம்  அதன்  மீது  சாட்சி பகர்கின்றோம்                   (என்று கூறினர்)அல்குர்ஆன்  7:172  

ஏற்கனவே அல்லாஹ்வைக்கண்டு  அவனிடம் சம்பாஷித்த அமைப்பில்  இந்த ஆன்மீக சூழ்நிலையால் உந்தப்படுவதால் குர்ஆன் ஒதுவதை,திக்ரு செய்வதை கேட்கும் ஆத்மா துள்ளி எழுந்து அதன் தாக்கத்தை தலை  அசைவு,உடல் அசைவினால் வெளிப்படுத்துகிறது. இதற்கு மெய்ஞானிகள் வழக்கில் “விஜ்த”முவாஜதா என்று பெயர் வழங்கப்டுகிறது.

அதாவது மனிதனது விருப்பமில்லாமலும் அவனுக்குரிய முயற்சி  இல்லாமலும்  வெளிப்படும் உணர்வே விஜ்தாகும். இதனை விவரித்தும் வலியுறுத்தியும்  அல்லாமா இப்னுல் கய்யும்  ஜவ்ஸீ தனது மதாரிசுல்   ஸாக்கீன் (3:65)                                                                                                      எனும்  நூலில் எழுதுகிறார்.

மேலும் அல்லாஹ_த்தாஆலா கூறுகின்றான்.முஃமின்களுக்கு அவர்களது அவர்களது இதயங்கள் அல்லாஹ_வையும் இறங்கியுள்ள உண்மையான வேதத்ததையும் நினைத்திடும்  போழுது பயந்து நடுங்கும்  நேரம் வர வில்லையா?

அல்லாஹ்வை திக்ர் செய்கின்ற போதும் அருள்மறை ஒதுகின்ற போதும் வெளிப்படுகின்ற இன்ப துன்ப  உணர்வுகள் வெளிப்பட  வேண்டும் என்பதனையும்   அதனால் புறவுடல் மாற்றங்கள் வரும்
 என்பதனையும் அல்லாஹ் கூறுகின்றான்.

தம் ரப்பை யார் பயப்படுகிறார்களோ அவர்களுடைய தோல்(களின் உரோமங்கள்)குர்ஆன் ஓதக் கேட்டவுடன்) சீர்த்து விடுகின்றன. அவர்களடைய தோள்களும் இதயங்களும் அல்லாஹ்வை  நினைவு கூர்வதின்பால் இளங்குகின்றன அல் குர்ஆன் - 39:23)
இந்த இன்ப  உணர்வினால் அஃறினையான உஹது மலையும் தனது மகி;ழ்ச்சியினை வெளிப்படுத்தியது.

ஒரு நாள் நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் உஹது மலையின்  மேல் ஏறிச் சென்றார்கள் அபுபக்கர்  றலியல்லாஹ_ அன்ஹ_ உமர் றலியல்லாஹ_ அன்ஹ_ உத்மான் றலியல்லாஹ_ அன்ஹ_ ஆகிய மூவரும் அண்ணலாருடன் சென்றிருந்தார்கள்.இவர்கள் யாவரும் தன் மீது ஏறி  நின்ற மகிழ்சியினால் உஹது மழல அசைந்தது. உடனே நபி ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்கள் தனது  புனிதப் பாதத்தினால் அதனை மிதித்து விட்டு  கூறினார்கள்
உஹதே அசையாமல் இரு உன்  மீது நபியும் சித்தீக்கும் 2ஷஹீதுகளும் நின்கின்றனர் புகாரி : 2889







sunnath Bidh ath aatharak kalanchiyam  128