السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 2 June 2015

பெருமானாரின் நூர் தான் முதல் படைப்பு என்று ஏற்றுக் கொள்ளும் தேவ்பந்திகள்

கண்மணி நாயகம் அவர்களின் நூர் தான் முதல் படைப்பு என்று ஏற்றுக் கொள்ளும் தேவ்பந்திகளின் 'ஹக்கீமுல் உம்மத் '

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் நம்பிக்கையாகிறது அண்ணலெம் பெருமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நூராகவும் ,பஷராகவும் இருக்கின்றார்கள் என்பது . இந்த நம்பிக்கை அல் குரான்,ஹதீஸ் மற்றும் சத்திய இமாம்களின் இஜ்மாவின் அடிப்படையில் அமைந்த ஒன்று .


எனினும் இவ்விஷயத்தில் தேவ்பந்தி தப்லீக் வஹாபிகள், கைர்  முகல்லிது வஹாபிகளைப் போன்று தம் மனோ இச்சையைப் பின்பற்றி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நூர் என்பதை ஏற்க மறுக்கினர் .


இனி அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் இந்நம்பிக்கைக்கான ஆதாரங்களைப் பார்ப்போம் .


குரான் பறை சாற்றுகின்றது ,


   يَا أَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِّمَّا كُنتُمْ تُخْفُونَ مِنَ الْكِتَابِ وَيَعْفُو عَن كَثِيرٍ ۚ قَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ


வேதத்தையுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம்முடைய ஒரு தூதர் வந்திருக்கிறார். வேதத்தில் நீங்கள் மறைத்துக் கொண்ட பல விஷயங்களை அவர் உங்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கின்றார். மற்றும் பல விஷயங்களை (அவர் அறிந்திருந்தும் உங்களுக்கு கேவலம் உண்டாகக்கூடாது என்பதற்காக அவைகளைக் கூறாது) விட்டுவிடுகின்றார். நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவுமுள்ள ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கின்றது.  


 [ குர் ஆன் - 5:15 ]


பெருமானாரின் நூர் தான் முதல் படைப்பு என்று ஏற்றுக் கொள்ளும் தேவ்பந்திகள்