السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 3 June 2015

ஒடுக்கப்படும் முஸ்லிம்கள்


ஒடுக்கப்படும் முஸ்லிம்கள்


சத்தியத்தை இவ்வுலகத்தில் நிலைநிறுத்தவே எண்ணற்ற நபிமார்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான். நபித்துவம் எங்கே தோன்றியதோ அங்கே அதற்கான எதிர்ப்பும் முளைக்கிறது. நபி மூஸா அலை அவர்களுக்கு பிர்அவ்னை போலநபி இப்ராஹீம் அலை அவர்களுக்கு நம்ரூதைபோல,நபி ஸல் அவர்களுக்கு அபூ ஜஹ்லை போல,அசத்தியவாதிகள் ஒவ்வொரு காலத்திலும் தோன்றினார்கள்.இறுதியில் அவர்களும்அவர்களின் கொள்கைகளும் தோன்றிய இடத்திலேயே அடையாளம் தெறியாமல் புதைக்கப்பட்டுவிட்டது.

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ 

وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ. (القرآن 2: 124)

(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்து விடலாமென்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும்,வாட்டும் வறுமையிலும்நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க) "அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்எப்பொழுது வரும்?)" என்று கேட்டதற்கு "அல்லாஹ் வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது" என்று (நாம் ஆறுதல்) கூறும் வரையில் அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள்.

துன்புறுத்துதல்:

நபி (ஸல்) அவர்களின் பகிரங்க அழைப்பைத் தொடர்ந்து பல மாதங்கள் எதிரிகள் மேற்கொண்ட தடுப்பு முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவின. தாங்கள் கையாண்ட வழிமுறைகளால் எவ்வித பயனுமில்லை என்று அவர்களின் அறிவுக்கு மெதுவாக உரைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையாக மாற்று வழியைக் கையாண்டனர். அதாவது,ஒவ்வொரு சமூகத்தலைவரும் எஜமானரும் தன்னுடைய ஆளுமையின் கீழுள்ளவர்கள்அடிமைகள்- இவர்களில் யாராவது இஸ்லாமைத் தழுவினால் அவர்களைத் துன்புறுத்த வேண்டும். அவர்களுக்கு இன்னல்கள் விளைவிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.