السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 26 June 2015

நபிமார்களின் உடலை மண் அரிக்காது

Qadiriyya Sunnath Wal Jamaath's photo.
பைத்துல் முகத்தஸ் என்ற புனித பள்ளியின் கட்டுமானப் பணியை ஜிங்கள் மூலம் செய்வித்துக் கொண்டிருந்த நபி சுலைமான் அஅலைஹி வஸல்லம் அவர்கள் அதே நிலையில் மரணத்தைத் தழுவி ஓராண்டுக்குப் பின்னும் அவர்களின் உடம்பு எவ்வித மாற்ற்மோ நாற்றமோ ஏற்படாமல் இருந்தது .(அல்குர்ஆன் = 34=14 ) 
நிச்சயமாக நபிமார்களின் மேனிகளை மண் தின்னாது.சிங்கம் புலி போன்றவைகளும் சாப்பிடாது .( அல்கஸாய்ஸுல் குப்ரா=பாகம்=2,பக்கம் =280 ) 
ஹஜரத் உஜைர் நபி அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து நூறு வருடங்கள் வரை அப்படியே இருந்தார்கள் (அல்குர்ஆன்= 2=259 )
ஹஜரத் யூனுஸ் நபி அலைஹி வஸல்லம் அவர்களை மீன் விழுங்கிய பின்பும் சில காலம் வரை மீன் வயிற்றில் அப்படியே இருந்தார்கள். ( அல்குர்ஆன்=37=142,143 )
இறந்தவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள் :
ஸஹாபாப்பெருமக்களில் ஒருவர் ஒரு கப்ரின் மீது அது கப்ரு என்று அறியாமல் கூடாரம் அமைத்துவிட்டார். கப்ருக்குள் ஒரு மனிதர் சூரத்து தபாரக்கல்லதீ ஓதிக்கொண்டிருக்கும் விஷயம் பிறகு தான் வந்தது.இவ்விஷயத்தை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் அறிவித்த போது சுரத்துல் முல்க் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் மனிதனைக் காப்பற்றக்கூடியது என்று கூறினார்கள் ( திர்மீதீ,மிஷ்காத்= பக்கம்=187 )
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் சென்றிருந்த போது ஏழு வானங்களில் உள்ள நபிமார்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை வாழ்த்தினார்கள்.
( முஸ்லீம் பாகம் =1 ,பக்கம்=91 .பாபுல் இஸ்ரா ,மிஷ்காத் =527 )
இறைவன் வகுத்த விதி சம்பந்தமாக ஆதம் நபி அலைஹி வஸல்லம் அவர்களும் மூஸா அலைஹி வஸல்லம் அவர்களும் விவாதித்து இறுதியாக ஆதம் நபி அலைஹி வஸல்லம் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்று பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்
( புகாரி= பாகம்= 1 .பக்கம் =484 , மிஷ்காத்=19 )
இறந்தவர்கள் நம் செயல்களைப் பார்க்கிறார்கள்
முஃமிங்களே அமல் செய்யுங்கள் .ஏனெனில் உங்களுடைய செயல்களை அவனுடைய ரஸூலும் முஃமிங்களும் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் நீங்கள் அவர்களிடம் கூறுங்கள், ( தவ்பா=106 )
மரணித்தவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்கிறார்கள் ; اذا ولي احدكم اخاه فليحسن كفنه فانهم يتزاورون في قبورهم ( ترمذي ,ابن ماجه ا )
இறந்தவர்களுக்கு நல்ல முறையில் கஃபன் உடுத்தாட்டுங்கள். ஏனெனில் அவர்களுடைய கப்ருகளில் அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். ( திர்மிதி ,இப்னுமாஜா )