மார்க்க உபதேசம் செய்யும் ஒரு ஆசிரியை, பெண்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார்.
அப்பெண் கூறினார்: "ஒரு நல்ல மனைவி, தன் கணவனுக்கு பல திருமணம் செய்து கொள்ளும் "சுன்னத்" நடைமுறையை வாழ வைக்க உதவியாக இருக்க வேண்டும்" என்றார்.
பாடம் முடிந்த பிறகு, பாடத்தைக் கேட்டுக் கொண்டிருந்த "ரபீஆ" என்ற ஒரு பெண் எழுந்து ஆசிரியையைக் கட்டித் தழுவி கூறினார்: "அல்லாஹ் உங்களுக்கு அருள் பாளிப்பானாக!
ஆசிரியையே, நீங்க ஒரு நல்ல கணமுள்ளவர், நீண்ட காலமாக உங்களிடம் இதை எப்படிச் சொல்வேன் என்று தெரியாமல் இருந்தேன்.
அல்ஹம்துலில்லாஹ் நீங்கள் மிகவும் புரிந்து கொள்ளக்கூடியவர் என்று இப்பொழுது தெரிந்து கொண்டேன்.
நான் "ரபீஆ", நான்கு வருடங்களுக்கு முன் உங்கள் கணவனைத் திருமணம் செய்து கொண்டுள்ளேன். உங்களிடம் சொல்ல முடியாமல் இருந்தோம்."
மத வழிகாட்டியான ஆசிரியை அதிர்ச்சியடைந்தார், இது எப்படி முடியும் என கத்தினார், குழப்பமடைந்தார், மயக்கமடைந்து விழுந்தார்.
உடனே அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ரபீஆயும் அவருடன் சென்றார்.
ஆசிரியை மயக்கம் தெளிந்த பிறகு, ரபீஆ அவரிடம் கூறினார்: "அல்லாஹ்வின் மேல் சத்தியம்! உங்கள் கணவனை நான் அறிந்ததே இல்லை, அவரை ஒருபோதும் பார்த்ததே இல்லை.
ஆனால் உங்களுக்கு ஒரு அறிவுரை கூருகிறேன்:
"உங்கள் உபதேசங்களை தொழுகை, நோன்பு, பெற்றோருக்கு பணிவிடை செய்தல் போன்ற விஷயங்களை மட்டும் வரம்பாக வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்!
எனினும் உபதேசம் செய்த மெடம் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை!!
Source From : Arabic
Copied from : மனிசிட வாட்சப் மெசேஜ் 😊