السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 11 November 2025

சீதனக் காணியை – கணவன் தனியே விற்கலாமா? | சட்டமும் நீதியும் சொல்லும் உண்மை

 


சீதனக் காணியை – கணவன் தனியே விற்கலாமா? | சட்டமும் நீதியும் சொல்லும் உண்மை!


“மணமகள் பெற்ற சீதனம் கணவனுக்கு உரிமையா?” இல்லை! அது மனைவியின் உரிமை : சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட சொத்து!


முதலில் புரிந்துகொள்ளுங்கள் :


“சீதனம்” என்பது திருமணத்தின் போது மணமகளின் அவரின் திருமண வாழ்வின் நன்மை கருதி பெற்றோரால் அவளுக்கே வழங்கப்படும் காணி, நகை, பணம், சொத்து ஆகியவற்றை குறிக்கும்.


ஆனால் பலர் தவறாக நினைப்பது என்ன தெரியுமா?

“மணமகனுக்கு இதெல்லாம் சொந்தம்தான்” என்று! அது முழுக்க முழுக்க தவறு...! மணமகனுக்கு அதனை நிர்வகிக்கும் உரிமையும் சீவிய உரித்தும் மட்டுமே இருக்கும்.


சட்டம் என்ன சொல்கிறது?


01. Matrimonial Rights and Inheritance Ordinance (Jaffna Tamils) – No. 1 of 1911


இதன்படி, “Dowry property given to the bride remains her exclusive property.

The husband cannot alienate (sell), mortgage, or gift it without her consent.”


அதாவது –

1. சீதனம் காணி மனைவிக்கே முழு உரிமை

2. அதனை கணவன் விற்க முடியாது

3. அதனை கணவன் அடமானம் வைக்க முடியாது

4. அதனை கணவன் நன்கொடையாக கொடுக்க முடியாது


சீதன ஆதனத்தை கணவன் விற்க முயன்றால் என்ன ஆகும்?

👉 அந்த உறுதி சட்டப்படி செல்லுபடியாகாது (Void Transaction)

👉 குறித்த உறுதி இரத்து செய்யப்படும் (Can be cancelled by court)

👉 அதுவே Fraudulent Deed / Cheating ஏமாற்று/மோசடி உறுதி எனக் கருதப்படும்

👉 கணவனுக்கு எதிராக Civil மற்றும் Criminal Action எடுக்கலாம்


நீதிமன்ற தீர்ப்புகள் இதையே உறுதிசெய்கின்றன:


1. Sinnathurai v. Sinnathurai


“Husband has no right to alienate dowry property without the wife’s consent.”


2. Kanapathipillai v. Kanapathipillai


“The husband is merely a custodian or caretaker of dowry property.”


3. Thangarasa v. Nadarasa


“Even if husband manages the dowry land, ownership remains with the wife.”


இதை மீறினால்?


👉 விற்பனை செய்யப்பட்ட உறுதி (deed) இரத்து செய்யப்படும்!

👉 கணவனும் உறுதி வாங்கியவரும் குற்றவாளிகளாகுவர்...!


விதிவிலக்குகள் (Exceptions):


1. மனைவி எழுத்து வடிவில் சம்மதம் அளித்தால் — விற்கலாம்


2. காணி இருவரின் பெயரில் இருந்தால் இருவரும் இணைந்து விற்கலாம்


3. மனைவி மரணமடைந்த பின் – அதனை பிள்ளைகள் விற்கலாம்


ஆனால் மனைவி உயிருடன் இருந்தபோது அவரது சம்மதமின்றி விற்பது சட்டத்துக்கு புறம்பானது...!


நடைமுறையில் என்ன நடக்கிறது?

பல இடங்களில்,

👉 மனைவியின் பெயரில் உள்ள காணியின் உறுதி, கணவன் கையில் இருக்கும்.

👉 பின்னர் “மனைவி ஒப்புதல் தந்தார்” என்று போலி கையெழுத்து போட்டு விற்றுவிடுகிறார்!

இது நேரடியாக மோசடி (Forgery & Cheating) தண்டனைக்குரிய குற்றம்!


மனைவி செய்யக்கூடிய சட்ட நடவடிக்கைகள்:

1️⃣ District Court-இல் Civil Case — Deed cancellation & Declaration of Ownership

2️⃣ Police Complaint / Magistrate Court Case - Cheating / Forgery

3️⃣ Injunction (நீதிமன்ற தடை) காணியை விற்க / மாற்ற தடை


பெண்களின் உரிமையையும் கண்ணியத்தையும் காப்பது சமூகத்தின் கடமை.

அவளுக்குச் சொந்தமானதை பறிப்பது அநீதி மட்டுமல்ல, சட்ட ரீதியிலும் தண்டனைக்குரிய குற்றம்!


சுருக்கமாக: முடிவாக சொன்னால்...!

1. சீதனக் காணி மனைவிக்கே சொந்தமானது!

2. அதனை கணவன் தனியாக விற்க முடியாது !

3. மனைவியின் சம்மதம் இல்லாமல் உறுதி நிறைவேற்றுவது மோசடி!

4. சீதன காணியில் கணவனுக்கு சீவிய உரித்து மட்டுமே இருக்கும்.


பெண்களே நினைவில் கொள்ளுங்கள்: உங்கள் பெயரில் சீதன உறுதி இருந்தால்,

👉 அதை யாரும் உங்களிடம் இருந்து சம்மதம் இல்லாமல் பெறமுடியாது.

👉 உங்கள் கையெழுத்து இல்லாமல் எதுவும் மாற்றம் செய்ய முடியாது.

👉 அது உங்கள் உரிமை — உங்கள் கண்ணியம்.


இந்த பதிவை பகிருங்கள்

அடுத்த பெண்ணின் உரிமையை காப்பாற்றும் ஒரு முயற்சியாக


முக்கிய குறிப்பு : இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல. மேலும் உங்கள் தனிப்பட்ட வழக்குகள் தொடர்பில் உங்கள் சட்டத்தரணியை அணுகி ஆலோசனை பெறுங்கள்.


(இந்த சட்ட ஏற்பாடுகள் பல விதிமுறைகள், விதிவிலக்குகள், கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றைக் கொண்டது. ஆகவே இந்த சட்டம் சார்ந்து உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினை தொடர்பில் உங்களுடைய சட்டத்தரணியுடன் ஆலோசிக்கவும். மேலும் இந்த பதிவு மட்டும் உங்களுடைய பிரச்சினை தொடர்பில் பொருத்தமான சட்ட ஆலோசனையாக அமையாது என்பதை கருத்தில் கொள்ளவும்.)


நான் சட்டத்தரணி 

குமாரசிங்கம் கம்ஷன் 


#சீதனம் #DowryLaw #WomenRights #LegalAwareness #SriLankaLaw #TamilLaw #LegalEducation #EmpowerWomen