السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 30 November 2025

அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃஃபா

 

அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃஃபா

#அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃஃபா ரழியல்லாஹு அன்‌ஹுவின் வீர #வரலாறு


ஒரு முத்தம் முழு யுத்தக் 

கைதிகளையும் விடுவித்தது

***********************************


தொகுப்பு : மெளலவி HMM யூசுப் முஸ்தபி,காதிரி 


#ஹிஜ்ரி 19-ஆம் ஆண்டில், அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் ரழியல்லாஹு அன்‌ஹு ரோமப் படையுடன் போரிட ஒரு படையை அனுப்பினார்கள். அந்தப் படையில் புகழ்பெற்ற சஹாபி அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃஃபா அஸ்-சஹ்மி ரழியல்லாஹு அன்‌ஹு அவர்களும் இருந்தார்கள்.


#ரோமப் பேரரசர் ஹெரக்ளியஸ் (#Heraclius) முஸ்லிம் படையின் வீரமும், ஈமானின் உறுதியும், அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழியில் உயிரை அர்ப்பணிக்கும் மனப்பாங்கும் குறித்து அதிகம் கேள்விப் பட்டிருந்தான். எனவே அவன் தனது படையினருக்கு:


ஒரு முஸ்லிம் மட்டுமே கைதாகினாலும் அவனை உயிருடன் என்னிடம் கொண்டு வா என்று கட்னளயிட்டுருந்தான்.


#போர்க்களமும் கைதும்


#முஸ்லிம் படை ரோம நிலங்களுக்கு சென்றபோது கடும் போர்கள் நடந்தன.

அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃஃபா ரழியல்லாஹு அன்‌ஹு காட்டிய வீரமும் தைரியமும் எதிரிகள் கூடப் பாராட்டும் அளவுக்கு இருந்தது.


அல்லாஹ்வின் தீர்ப்பால் ஒரு போரில் இவர் ரோமர்கள் கையில் கைதாகிவிட்டார். அவரின் வீரத்தை கண்டு ரோமப் படையினரே ஆச்சரியப்பட்டு, அவரை நேரடியாக பேரரசர் ஹெரக்ளியசின் முன்னே கொண்டுவந்தனர்.


#ஹெரக்ளியசின் முதல் சோதனை  “நாசராணியாக மாறுங்கள்..!


ஹெரக்ளியஸ் அவர்களை நீண்ட நேரம் கவனித்து, சொன்னான்:


#நீ நாசராணி மதத்தை ஏற்றுக்கொண்டால் உன் உயிரையும் விடுவிக்கிறேன்; மிகுந்த மரியாதையுடன் வாழவைக்கிறேன்.


அதற்கு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்‌ஹு உறுதியுடன் சொன்னார்கள்.


#எனக்கு மரணம் இதைவிட ஆயிரம் மடங்கு பிரியமானது!


பேரரசர் மீண்டும் கூறினான்:


“என்னுடன் ஆட்சி பகிர்ந்துகொள்; அரையரசன் ஆவாய்”என.


ஆனால் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்‌ஹு சிரித்துக்கொண்டே சொன்னார்கள்:


#நீ கொண்டிருக்கும் அனைத்தையும், அரபர்களும் அஜமியர்களும் வைத்திருப்பதையெல்லாம் எனக்கு அளித்தாலும், நான் நபி முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மதத்தை ஒருசிறு கணம் கூட விட்டு விலகமாட்டேன்.


#ரோமர்களின் கொடூர சோதனை 

#பசியும் தாகமும்


ஹெரக்ளியஸ் அவரை சில நாட்கள் பசித்தும் தாகத்திலும் வைத்தான்.

எதிரில் பன்றி இறைச்சியும், மதுவையும் வைத்தார்.


ஆனால் அவர்கள் ஒன்றையும் சாப்பிடவில்லை.


#மற்றொரு சோதனை #மரண அச்சுறுத்தல்


ஹெரக்ளியஸ் மீண்டும் கூறினான்:


#நாசராணியாகாவிட்டால் உன்னை கொடூரமாக கொன்று விடுவேன்.


அதற்கு அவரகள்:


உன் கையில் இருக்கும் இது ஒரு மாமிசம் மட்டுமே; அது நாசமாகும். என் ஆத்துமா அல்லாஹ்வின் கையில் உள்ளது.


என்றார்கள்


#எண்ணெய் கொதிக்கும் பொக்கில் வீசும் தண்டனை


ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் கொதிக்க வைத்தனர்.

முன் இரண்டு முஸ்லிம் கைதிகள் அதில் வீசப்பட்டனர்.

அவர்கள் எலும்புகள் தெரியும் வரை எண்ணெய் கொதித்தது.


பின்னர் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்‌ஹுவை அதில் வீச அழைத்தனர்.


அவர்கள் அழுதார்கள்.


ஹெரக்ளியஸ் நினைத்தது  “இவர்கள் பயந்துவிட்டார்கள் என்று.”


அவர்களை மீண்டும் அழைத்து:


ஏன் அழுதாய்? நாசராணியாகிறாயா?


என்று கேட்டான்.


அதற்கு அவர்கள் கூறியது இந்த வரலாற்றின் உச்சமான சொல்:


“எனக்கு ஒரு உயிரே உள்ளது. நான் விரும்பியது  என் உடலில் உள்ள ஒவ்வொரு முடிக்கும் ஒரு உயிர் இருக்க வேண்டும்; ஒவ்வொன்றும் அல்லாஹ்வுக்காக இந்தக் கொதிக்கும் பாத்திரத்தில் விழுந்து ஷஹாதத் பெற வேண்டும் என்பதற்காக!”


ரோமப் பேரரசன் அதிர்ச்சியடைந்தான். மனதளவில் தோற்றுவிட்டான்.


#முடிவு 


#ஒரு மன்னரின் தலையை முத்தமிட்ட சஹாபி


அதன் பின் ஹெரக்ளியஸ் சொன்னான்:


என் #தலையை #முத்தமிடு; உனையும், உன்னுடன் உள்ள அனைத்து முஸ்லிம் கைதிகளையும் விடுவிக்கிறேன். என்று


அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்‌ஹு யோசித்தார்கள்:


 “என் #முத்தம் நம்முடைய முஸ்லிம் சகோதரர்களை விடுவிக்க உதவும் என்றால் இது ஒரு பெரிய நன்மை!”


அவர்கள் சொன்னார்கள்:


#என் நிபந்தனை  அனைத்து முஸ்லிம் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.


ஹெரக்ளியஸ் ஒப்புக் கொண்டான்.

அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்‌ஹு அவரது தலையை முத்தமிட்டார்கள்.


ஒரே முத்தத்தால் வந்துபோக முடியாத நூற்றுக்கணக்கான முஸ்லிம் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.


#உமர் ரழியல்லாஹு அன்‌ஹுவின் சொல்**


#மதீனா திரும்பியபோது உமர் இப்னு அல்-கத்தாப் ரழியல்லாஹு அன்‌ஹு முழு மக்களின் முன்னிலும் சொன்னார்கள்:


#“ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃஃபாவின் தலைக்கு முத்தமிடுவது கடமையாகும்.

நான் முதலில் முத்தமிடுகிறேன்.


இவ்வாறு அவர் தலையை முத்தமிட்டார்.


#ஆதாரங்கள்


இந்தச் சம்பவம் கீழ்க்கண்ட முக்கிய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது:


#சீரு அஃலாமின் நுபலா இமாம் ஸஹபி

#தாரிக் தமஷ்க்  இப்னு அஸாகிர்

#அஸத் அல்-ஃகாபா  இப்னு அதீர்

#அல்-இஸாபா — இப்னு ஹஜர் அஸ்கலானி

#தபகாத் அல்-குப்ரா — இப்னு ஸஅத்

#பலாதுரி — ஃபுதூஹுல் பல்தான்

#தலாயில் அந்நுபுவ்வா 


எனக்காகவும் எனது குடும்பத்திற்காகவும் ஆபிfயத்துக்காக  துஆஃ செய்யுங்கள்.