السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 11 October 2025

ஹிஷாம் ஃபத்தாஹியின் உண்மைச் செய்தி

 


مفهوم اتباع السنة (4)


ஹிஷாம் ஃபத்தாஹி 


18.04.1447 AH

11.10.2025 CE

••••••••••••••••••••


கண்ணியமான உலமாக்களே, 


பசுத்தோல் போர்த்திய புலிகளை சமூகத்துக்கு தோலுரித்துக் காட்ட வேண்டும், தப்லீக் போர்வையில் மறைந்து கொண்டு வஹ்ஹாபிகளின் கரங்களைப் பலப்படுத்தும் நயவஞ்சக செயலில் ஈடுபடுபவர்களின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும் என்ற நோக்கிலேயே இத்தொடர் பதிவுகள் இடம் பெறுகின்றன. எனவே எமது அகீதாவையும், மத்ஹபையும் உறுதியாக கடைப்பிடிக்க கூடியவர்கள் சூஃபி தரீக்காக்களை மதிக்கக்கூடிய எவரும் இந்த தொப்பியை எடுத்து அவர்களின் தலைகளில் போட்டுக் கொள்ளத் தேவையில்லை.


அகீதா என்பது தீனுடைய ஆணிவேராகும். அதற்கு முரண்படக்கூடிய எந்த தஃவாவுடைய அமைப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாது, அது நிராகரிக்கப்பட வேண்டும். 


இப்பதிவில் நாம் 

التفويض والتاويل 

பற்றி பேசப் போகிறோம். கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பாக பிரபல பேச்சாளர் ஒருவர் "இது அகீதாவில் மிகச் சாதாரண விடயம் என்ற தொனியில் பேசிவிட்டு லாவமாக கடந்து சென்றதை நாம் பார்த்தோம். அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத் என்ற வட்டத்திலிருந்து வழிகெட்ட வஹ்ஹாபிகளை புறந்தள்ளக்கூடிய பிரதான விடயமே இந்த 

التفويض والتاويل 

விவகாரம் தான். இவ்விடயத்தில் சறுக்குபவர்கள் சிலவேளை "காபிர்" ஆகிவிடும் அபாயம் உள்ளது. சர்ச்சைக்குரிய அறிஞரான இப்னு தைமிய்யா என்பவரும், அவரை பின்பற்றக்கூடிய வஹ்ஹாபிகளும் முன்வைக்கின்ற முக்கிய வாதமாவது 

التاويل والتفويض كلاهما باطلان

அதாவது "தஃவீல்", "தஃப்வீழ்" ஆகிய இரண்டும் வழிகேடானது என்பதாகும்.


قال الامام الزركشي في كتابه البرهان في علوم القران: 

"النوع السابع والثلاثون في حكم الآيات المتشابهات الواردة في الصفات وقد اختلف الناس في الوارد منها في الآيات والاحاديث على ثلاث فرق.


١) احدها أنه لا مدخل للتاويل فيها بل تجرى على ظاهرها ولا نؤول شيئا منها وهم المشبهة.

٢) والثاني ان لها تأويلا ولكن نمسك عنه مع تنزيه اعتقادنا عن الشبه والتعطيل ونقول لا يعلمه الا الله وهو قول السلف. 

٣) والثالث أنها مؤولة وأولوها على ما يليق به. 


والأول باطل والاخيران منقولان عن الصحابة."اه (‍2/78)

والامام الشوكاني رحمه الله ايضا قال بمثل هذا في كتابه إرشاد الفحول.


இமாம் Zஸர்கஷீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய "அல் புர்ஹான்" என்ற நூலிலும், இமாம் ஷவ்கானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது "இர்ஷாதுல் ஃபுஹூல்" என்ற நூலிலும் பின்வரும் கருத்தை கூறியுள்ளார்கள். அதாவது : அல்லாஹ் படைப்புகளுக்கு ஒப்பாகுவதைப் போன்ற பொருள் மயக்கத்தை தரக்கூடிய குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்கள் விடயத்தில் முஸ்லிம்கள் மூன்று பிரிவுகளாக பிரிந்தார்கள் . அவையாவன: 

المشبهة والمفوضةوالمؤولة

இவர்களில் மேற்கண்ட வசனங்களை அவற்றின் வெளிப்படையான கருத்துக்களின் அடிப்படையில் விளங்குபவர்கள். அவற்றை அல்லாஹ்வுடைய மாண்புக்கு ஏற்றவாறு " தஃவீல்" வலிந்துரை செய்ய கூடாது என்று கூறுவார்கள். இவர்கள் (தெரிந்தோ தெரியாமலோ அல்லாஹ்வை படைப்பினங்களோடு ஒப்பிடக்கூடிய ") முஷப்பிஹா" எனப்படுவோர் ஆவர். இவர்கள் வழிகேடர்கள். 


அடுத்த இரண்டு பிரிவுகளும் நேர்வழி பெற்றவர்கள், அதாவது மேற்கண்ட வசனங்களில் வெளிப்படையான கருத்துக்களை விசுவாசம் கொள்ளாமல் அவற்றுக்கு அல்லாஹ்வுடைய மாண்புக்கு பொருத்தமான சரியான அர்த்தங்கள் உள்ளன, அவை எங்களுக்கு தெரியாது, அதை அல்லாஹ்விடமே சாட்டுகின்றோம்" இவ்வாறு கூறுபவர்கள் இவர்கள் "முஃபவ்விழா" என்று அழைக்கப்படுபவர்கள். 


அடுத்ததாக ( இவ்வாறான குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் ஆகியவற்றின் வெளிப்படையான அர்த்தங்களை நம்பி, படைப்புகளைப் போன்று பரிசுத்தமான அல்லாஹ்வை கற்பனை செய்யக்கூடிய படு பயங்கரமான வழிகேட்டில் பாமரர்கள் விழுந்து விடக்கூடாது என்பதற்காக அரபு மொழியின் இலக்கண, இலக்கிய விதிமுறைகளுக்கு உட்பட்டு) மேற்கண்ட வசனங்களின் வெளிப்படையான கருத்துக்களை தவிர்த்து அல்லாஹ்வுடைய மாண்புக்கு தகுந்த கருத்தை வழங்கக் கூடியவர்கள் அதாவது வலிந்துரை செய்பவர்கள் அவர்கள் "முஅவ்விலா" எனப்படுவோர். ( விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட வழிந்துறைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது)


இறுதியாக கூறப்பட்ட " தஃப்வீழ் - தஃவீல்"ஆகிய இரண்டு நிலைப்பாடுகளும் ஸஹாபாக்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன" என்ற கருத்தை மேற்கூறப்பட்ட இரண்டு இமாம்களும் முன் வைத்துள்ளார்கள். 

சர்ச்சைக்குரிய அறிஞர்களான இப்னு தைமிய்யா, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ஆகியோரின் அடிவருடிகளான வஹ்ஹாபிகள் முதலாவதாக கூறப்பட்ட "முஷப்பிஹா" என்ற வழிகெட்ட பிரிவில் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வுடைய பண்புகள் தொடர்பாக பேசும் போது

بلا تشبيه - بلا كيف

என்ற வார்த்தைகளை அவற்றின் எதார்த்தத்தை உணராது என்னதான் வானை பிளக்கும் அளவுக்கு முழங்கினாலும் அவர்கள் படைப்பினங்களை போன்று அல்லாஹ்வை கற்பனை செய்யக்கூடிய " முஷப்பிஹா" என்பதற்கு அவர்கள் எழுதிய நூல்களே மிகத் தெளிவான சான்றுகளாகும்.


இப்னு தைமிய்யா என்பவரின் வழிகெட்ட சிந்தனைகளை மிக துல்லியமாக விளக்கி எமது சங்கையான இமாம்கள், அறிஞர்கள் எழுதி வைத்துள்ள பெறுமதி மிக்க நூல்களில் இருந்து ஒரு சில துளிகளை அள்ளி எடுத்து 

البركان في الرد على من يثبت لله المكان والاركان 


என்ற நூலை அரபு மொழியில் 2005 ம் ஆண்டு எழுதினேன். காலி கோட்டையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த. புகழ் பூத்த அல் பஹ்ஜத்துல் இப்றாஹீமிய்யா அரபுக் கல்லூரியில் எமது அகீதாவை முறையாக கற்றிருந்தும், வஹ்ஹாபிசம் போன்ற வழிகேடுகளை கடுமையாக எதிர்த்து நின்ற மிகப்பெரிய ஆளுமையின் மகனாக இருந்தும் வஹ்ஹாபியாக மாறிய ஒரு "மதனி"க்கு மறுப்பாக அந்நூல் எழுதப்பட்டது. அல்லாஹ் தவ்பீக் செய்தால் பிழை திருத்தம் செய்து அதன் இரண்டாம் பதிப்பை வெளியிட ஆவலாய் இருக்கின்றேன். அது நடந்தேற துஆ செய்யுங்கள்.


அடுத்த விடயத்தை தொடர்வதற்கு முன்பாக முக்கியமான ஒரு சம்பவத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக அம்பாறை மாவட்டத்தில் மாவடிப் பள்ளி என்ற ஊரிலே ஒரு வெள்ளிக்கிழமை நாள் ஜும்ஆ பிரசங்கத்தில் வஹ்ஹாபி அறிஞர் ஒருவர் அல்லாஹ்வுக்கு கால் என்ற உறுப்பு இருப்பதாக ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவிக்க தொழுகை முடிந்த பிறகு மௌலவி அரபாத் (ஸஃதி) என்பவர் அக்கருத்தை கண்டித்து பேசியபோது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்தது. இது விடயமாக தெளிவு கேட்டு மௌலவி அரபாத் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதற்கான தீர்வை பெற்றுக் கொள்வதற்காக ஜம்இய்யாவில் ஒரு கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டது. அந்த கலந்துரையாடல் ஒரு விவாதம் போன்றே நடைபெற்றது. எங்களுடைய தரப்பில் நானும், மௌலவி அஸ்மீர் ஹஸனி அவர்களும் கலந்து கொண்டோம் அதில் வஹ்ஹாபி அறிஞர்களான ஐந்து "மதனி"கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பக்கபலமாக தப்லீக் போர்வையில் மறைந்து கொண்டு, இப்னு தைமிய்யாவின் வழிகெட்ட சிந்தனைகளுக்கு உயிர் கொடுக்கும் ஃபலாஹி (a golden child blessed by the lifelong leader) ஒருவரும் கலந்து கொண்டு வஹ்ஹாபிகளையே மிஞ்சுகின்ற அளவு எங்களுக்கு எதிராக கடும் விவாதம் புரிந்தார். 


சடம், உருவம், உறுப்புகள், இடம், திசை. உட்காருதல், இறங்குதல், அசைதல், உயர்ந்து நிலை பெறல் போன்ற சிருஷ்டிகளின் பண்புகள் அல்லாஹ்வுக்கு இருப்பதைப் போன்ற பொருள் மயக்கத்தை தரக்கூடிய " அல் முதஷாபிஹ்" எனப்படும் குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் விடயத்தில் ஷரீஆவின் நிலைப்பாடு என்ன? என்பதை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் ஈடுபடாமல் நடப்பதை அவதானித்துக் கொண்டிருந்த முக்கியமான நான்கு உலமாக்களும் இருந்தார்கள். இந்த வஹ்ஹாபி அறிஞர்கள்

عقيدة السلف - الإثبات

 என்ற பெயரில் தான் சர்ச்சைக்குரிய அறிஞர் இப்னு தைமிய்யா என்பவரின் விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். எனவே முதல் மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்த சங்கையான "ஸலப்" எனப்படும் ஸஹாபாக்கள், தாபிஊன்ங்கள்,தபஉத் தாபிஈன்கள் ஆகியோரின் நிலைப்பாடு பற்றி முதலில் நாம் ஆராய்வோம் என்ற கருத்தை நாம் முன் வைத்தோம். நாம் "ஸலப்"களுடைய நிலைப்பாட்டை ஆதாரப்பூர்வமாக முன் வைத்தோம் "முதஷாபிஹ்" விடயத்தில் அவர்கள் அனைவரும் அதன் வெளிப்படையான அர்த்தத்தை நாடாமல், அதன் உண்மையான விளக்கத்தை அல்லாஹ்விடமே சாட்டியுள்ளார்கள் என்பதை நிரூபித்தோம். எதிர்த்தரப்பிலிருந்த ஆறு அறிஞர்களில் ஒருவரேனும் ஒரு கூற்றைக் கூட முன் வைக்கவில்லை என்பது மிகப்பெரிய பரிதாபம். ஏனென்றால் அவர்கள் இதுவரை காலமும் ""ஸலப்" உடைய அகீதா என்று கூறி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சர்ச்சைக்குரிய அறிஞரான இப்னு தைமிய்யா என்பவருடைய வழிகெட்ட சிந்தனைகளையே பரப்பி வந்துள்ளனர்.


நான் "அல் புர்கான்" என்ற நூலை எந்த வஹ்ஹாபி அறிஞருக்கு மறுப்பாக 2005 ஆம் ஆண்டு எழுதினேனோ அவரும் அந்த அமர்வில் கலந்து கொண்டிருந்தார் விவாதம் சூடாக நடந்து கொண்டிருந்த போது இடை நடுவே நழுவி சென்றுவிட்டார் அன்று நடுநிலை வகித்த நான்கு அறிஞர்களும் இந்நிகழ்வுக்கு சாட்சிகள் ஆகும். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் நாங்கள் இருவரும் கூறிய முறைப்படியே பதில் கடிதம் தயாரிக்கப்பட்டது ஆனாலும் துரதிஷ்டவசமாக கடிதம் வஹ்ஹாபி அறிஞர்களைக் கவராத ஒரே காரணத்தினால் அது குப்பை கூடையில் போடப்பட்டு அந்த விவகாரம் வேறு விதமாக டீல் செய்யப்பட்டது. 


அன்று நாம் முன்வைத்த சங்கைமிக்க "ஸலப்"களின் பெறுமதி வாய்ந்த கூற்றுக்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் தருகிறோம். அல்லாஹ் நம் அனைவரையும் நேரான பாதையில் நிலை நிறுத்தி வைப்பானாக.