السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 14 November 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 212

மீலாதுன் நபி (ﷺ) சிறப்புப்பார்வைதொடர்கிறது ஆயிரக்கணக்கானோர் திரண்டு உறுதிமிக்க நெஞ்சோடு மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒரு மாவீரனின் முன்னால் நின்று கொண்டிருந்த பரபரப்பான தருணம் அது. ஆம்! குபைப் (ரலி) அவர்கள் கழுமரத்தில் ஏற்றப்பட்டு மக்காவின் முக்கியமான ஒரு தலைவரின் வருகைக்காக காத்திருந்தது அந்தக் கூட்டம். எதிர்பார்த்த அந்த தலைவர் அங்கே வருகை புரிந்தார். மக்கள் அமைதியானார்கள். ஆம்! மக்காவின் பெரும் தலைவராக பொறுப்பேற்று இருந்த அபூசுஃப்யான்...

Tuesday, 13 November 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 213

மீலாதுன் நபி ( ﷺ) சிறப்புப்பார்வைதொடர்கிறது..... அதாவு இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்கள் அல்கமா (ரலி) அவர்களிடம் இருக்கும் ஒரு நபிமொழியைக் கேட்டு வர மதீனாவிலிருந்து மிஸ்ருக்கு பயணமானார்கள். மிஸ்ரின் பிரதான தெரு ஒன்றின் வழியில் மஸ்லமா இப்னு மகல்லத் அல் அன்ஸாரி (ரலி) அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது, மஸ்லமா (ரலி) அவர்கள் மிஸ்ரின் கவர்னராக இருந்தார்கள். இருவரும் சந்தித்து முஆனக்கா செய்து, ஒருவருக்கொருவர்...

Monday, 12 November 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 211

மீலாதுன் நபி (ﷺ) சிறப்புப்பார்வை  தொடர்கிறது....... அல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் எனும் வதந்தியால் உஹத் யுத்தகளத்தின் நிலைமைகள் முற்றிலுமாய் மாறிப்போயிருந்த தருணம் அது… நபித்தோழர்களில் பலர் எதிரிகளின் தாக்குதல் தாங்க முடியாமல் யுத்த களத்தின் நாலாபுறமும் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர். இந்த வதந்தியைக் கேட்ட மாத்திரத்தில் யுத்தகளத்தின் நடுப்பகுதியிலிருந்து தங்களது குடும்பம் சகிதமாக அண்ணலாரைத் தேடும் பணியில் ஈடுபட்டார்கள். ஆம்!...

Sunday, 11 November 2018

மீலாதுன் நபி (ﷺ)சிறப்புப்பார்வை 210

மீலாதுன் நபி (ﷺ)சிறப்புப்பார்வை வாழ்க்கையாக இருக்கட்டும், வாழ்ந்து மறைந்த பின் விட்டுச் செல்கிற வரலாறாக இருக்கட்டும் புகழுக்குரியதாய் அமைந்திருக்க வேண்டும் என்கிற புதியதோர் இலக்கணத்தை இப்பூவுலகிற்கு தந்தவர்கள் பெருமானார் {ﷺ} அவர்கள். வரலாற்றிலும் கூட புகழோடு தோன்றுகிற பெரும் பேறு பெற்றவர்கள் நமது உயிரினில் கலந்த உத்தம நபி {ﷺ} அவர்கள் நபி (ﷺ) அவர்கள் மேற்கொண்ட ஒரு பிரயாணத்தின் போது ஒரு கிராமத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது ஒரு...

குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்

கொசு (நுளம்பு) தோற்றத்தில் மிகவும் சிறியது! அற்பமானது! ஆனால் படைப்பில் அது அற்புதமானது!!விந்தையானது. நுண்கருவி மூலம் பெரிது படுத்தப்பட்ட அதன் அற்புதத் தோற்றத்தை படத்தில் கீழே காணலாம். மேற்கொண்டு படியுங்கள். 1. அது பெண்பால். 2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள். 3. அதன் வாயில் 48 பற்கள். 4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள். 5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள். 6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள் 7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று...

Saturday, 10 November 2018

அன்பளிப்பு பொருட்கள்

                          அன்பளிப்பு பொருட்கள்    உத்தியோகத்தர்களுக்கு ஆகுமானதா? அரச நிறுவனங்களில் கடமை புரிபவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமைக்காக அமர்த்தப்பட்டிருக்கும் உத்தியோகத்தர்கள் சேவை பெறுனர்களிடம் இருந்து அன்பளிப்பு பொருட்களையோ வேறு உதவிகளையோ பெற்றுக்கொள்வது தொடர்பாக இஸ்லாமிய கண்ணோட்டத்தோடு, நடைமுறைகளோடு இணைந்த நடுநிலைப் பார்வை அவசியமான ஒன்றாக...

Friday, 9 November 2018

தூக்கணாங்குருவி

மஹர் கொடுக்குமாம் இந்த தூக்கணாங்குருவி..... ஒவ்வொரு பறவையிலும் அல்லாஹ் ஒவ்வொரு அத்தாட்சியை வைத்துள்ளான். சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு அதில் ஒரு படிப்பினை உள்ளது. உதாரணமாக தூக்கனாங் குருவி என்பது ஒரு பறவை என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால், அந்த பறவை கூட மஹர் என்ற திருமணக்கொடை கொடுத்து தான் தனது வாழ்க்கையை தொடங்கும் என்பது யாருக்காவது தெரியுமா ? கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு...

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 209

ல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்கள் நபித்தோழர்களோடு அமர்ந்திருக்கும் ஒரு சபையில் “எனக்கு சுவனம் காட்டப்பட்டது அப்போது அதில் நான் நுழைந்தேன். எனக்கு முன்னால் யாரோ ஒருவர் நடந்து செல்லும் காலடி சப்தத்தை நான் கேட்டேன். அப்போது நான் நடந்து செல்வது யார்? என்று கேட்டேன். அது ருமைஸா பிந்த் மில்ஹான் (ரலி) என்று கூறப்பட்டது” எனக் கூறினார்கள். உலகில் வாழும் காலத்திலேயே சுவனத்தின் சோபனத்தைப் பெறும் பேறு பெற்ற அப்பெண்மனி நபித்தோழியர்களில் உம்மு ஸுலைம் என்று வரலாற்றில்...

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம்

  கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்....!!! ‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம். மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும். ‘‘விவாகரத்துச்...

Thursday, 8 November 2018

தவறு செய்தவர்களோடு தாஹா நபி

கண்ணியமிக்க முஸ்லிம்களே.!     தவறு செய்தவர்களோடு ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பழகுகிற பழக்கம் சற்று வித்தியாசமாக இருக்கும்.     ஒருமுறை இளைஞர் ஹவ்வாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஒரு அந்நியப் பெண்ணோடு தெருவில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார். இதை அந்த வழியாக வந்த பெருமானார் பார்த்துவிட்டார்கள். என்ன ஹவ்வாப், இங்கே என்ன பண்றீங்க? யா ரசூலல்லாஹ்! என்னுடைய ஒட்டகம் ஒன்று காணாமல் போய்விட்டது. அதைத் தேடி வந்தேன்னு "பொய்" சொல்லிவிட்டார்....

உம்மி நபி உதித்த தினம்

மீலாதுன் நபி (உம்மி நபி உதித்த தினம்) விழாவை இயற்கையே கொண்டாடியது. நமது நாயகம் ﷺ அவர்களின் அருமைத் தாயாரான செய்யிதத்துனா ஆமினா றலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு பிரசவ நேரம் ஏற்பட்டது. என்றாலும், இதை யாரும் அறிந்திருக்கவில்லை. காரணம் என்னவெனில் பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுகின்றது போல மசக்கையோ உடல் ரீதியான மாற்றங்களோஅவர்களுக்கு ஏற்பட்டிருக்கவில்லை. எனவே தனது இந்த நிலையை அல்லாஹ்வின் சமூகத்தில் முறையிட்டார்கள். திடீரென அவர்களின் வீட்டின் மேற்கூரை...

Wednesday, 7 November 2018

முக்தி பெறுவதற்கான வழிz

உரை: ஷைகனா கௌதனா ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி ஹழ்ரத் காதிரி காஹிரி  கத்தஸல்லாஹு சிர்ரஹுல்  அஜீஸ் மய்யித் என்றால் மௌத்தானவர் என்ற பொருளா? அல்லது மௌத்தாகிறவர் என்ற பொருளா? அல்லது   இனிமேல் மௌத்தாகக்கூடியவர் என்ற பொருளா? இம்மூன்று காலத்தையும் விட்டுவிட்டு வெறும் மௌத்தையும், ஆளையும் எடுத்துக் கொள்ளுங்கள். ‘இன்னக மய்யிதுன்’ நேற்றும் மய்யித்துதான். இப்பவும்   மய்யித்துதான், நாளைக்கும் மய்யித்துதான்! இதைபோன்று அவர்களும்...

Tuesday, 6 November 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 208

மதீனாவின் ஒரு நாள் காலைப் பொழுது.. ஒரு கிராமவாசி பதற்றத்துடனும், பரபரப்போடும் அண்ணலாரை நோக்கி வந்தார். அப்போது அண்ணலாரும், அலீ (ரலி) அவர்களும் மதீனாவின் வீதியில் நின்று கொண்டிருந்தார்கள். மாநபி {ﷺ} அவர்களின் அருகே வந்த அந்த கிராமவாசி ”அல்லாஹ்வின் தூதரே! நான் இன்ன கிராமத்தில் இருந்து வருகின்றேன். இப்போது எங்களின் கிராமத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு மக்களெல்லாம் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கின்றனர். நான் அவர்களிடையே இஸ்லாத்தை அறிமுகம் செய்த போது...

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 207

அபூஹுரைரா (رضي الله عنه ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் { ﷺ} அவர்கள் மிஃராஜ் – விண்ணுலகப்பயணம் சென்று வந்த செய்தியை, அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை எங்களிடையே அறிவித்தார்கள். இதை அறிந்த குறைஷிகள் அல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்களிடம் வந்து “உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர். அல்லாஹ் நபி {ﷺ} அவர்களின் கண்முன்னே பைத்துல் முகத்தஸை காண்பித்தான்....

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 206

அலீ (ரலி) அவர்கள் அப்போது தான் மாபெரும் ஒரு யுத்தத்தை முடித்து விட்டு வந்திருந்தார்கள். அவர்கள் கவலைப் படுவதற்கும், அழுவதற்கும் ஆயிரமாயிரம் பிரச்சனைகள் அவர்களின் கண் முன்னே இருந்து கொண்டிருந்தது. ஆட்சித்தலைவராக இருந்து கொண்டு யுத்தத்திற்குச் சென்று விட்டு இப்போது தான் ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.ஒரு அமீருல் முஃமினீனாக அங்கேயும் சிந்திப்பதற்கும் கவலைப் படுவதற்கும் ஏராளமான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்தது. ஆனாலும், மண்ணறையின் முன் நின்று...

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 205

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வாழ்ந்த பொற்காலத்தில் நபித் தோழர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளின் போதும், கருத்து முரண்களின் போதும் ஸஹாபாக்கள் நபி {ஸல்} அவர்களின் சமூகத்திற்கு வந்தே நின்றனர். நபி {ஸல்} அவர்களும் அந்தப் பிரச்சனைகளை முன் நின்று தீர்த்து வைத்தார்கள். ஸஹாபாக்கள் அத்தீர்வையே முடிவாக ஏற்றுக் கொண்டார்கள். தாதுஸ் ஸலாஸில் எனும் போருக்கு அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களின் தலைமையில் 300 பேர் கொண்ட ஒரு படையை நபி {ஸல்} அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவருக்கு...