
சஹாபாப் பெண்களின் சமூகப் பங்களிப்பின் கருத்தாளங்களை கட்டுரைப்படுத்த முன் முதலில் சமூகம் என்றால் என்ன? சமூக கட்டமைப்பில் உள்வாங்கப் படுபவர்கள் யார்? என்ற புரிதலுக்கான கேள்விகளுக்கு விடை தொடுக்க முனைகிறேன். தமிழ் அகராதியின் பிரகாரம் ஒரு குறிப்பிட்ட தொழில், துறை, இனம் முதலியனவற்றைச் சேர்ந்தவர்களின் தொகுதியை சமூகம் என வரையரைப்படுத்தலாம். மேற்குறிப்பிட்டவற்றைச் சார்ந்தவர்கள் அச்சமூக கட்டமைப்பில் உள்ளடங்குபவர்கள். ஏன் இதை தலைப்பிற்கு அப்பால் நின்று...