السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 8 January 2019

சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

பொதுமக்களுக்கு சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்.
நேற்று இரவு சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு கூட்டம் சம்மேளன காரியாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
01.சென்ற வாரம் தனது காணிக்குள் சென்ற எமது ஊரைச்சேர்ந்த அப்துல் காதர் என்ற சகோதரரை நிர்வாணப்படுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட செயலை சம்மேளனம் வன்மையாக கண்டிக்கின்றது. இவ்வாறான ஒரு நிகழ்வு எந்த இனத்தை சேர்ந்தவருக்கும் ஏற்படக்கூடாது.
02. மேற்படி தாக்குதலில் ஈடுபட்ட மயூரன் ( காணி உத்தியோகத்தர் ) உட்பட 8 நபர்களையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை காணி உத்தியோகத்தர் மயூரனை தவிர வேறு யாரையும் பொலிஸார் கைது செய்யவில்லை. இதற்கான காரணம் என்ன? என்பதை தெரிந்து கொள்வதற்கும் மீதமுள்ள 7 நபர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதற்காக சம்மேளனம் இன்று (09.01.2019) ஏறாவூர் பொலிஸ் அதிகாரியை சநந்தித்து பேசும் அத்துடன் இவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வைப்பதற்காக அரசியல் தலைவர்கள் பொலிஸ் மேலதிகாரிகள் போன்றோரிடமும் தொடர்பை ஏற்படுத்தி இக்கைதை வலியுறுத்தும் முயற்சியில் சம்மேளனம் தீவிர கவனம் செலுத்தும்.
03.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மதத்தலைவர்களை அவசரமாக சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹாமதுரு, பூசாரிமார்கள், பாதர், மௌலவிமார்கள் மற்றும் சமய தளங்களின் தலைவர்கள், வர்த்தக சங்கங்களின் தலைவர்கள், நகரசபை பிரதேச சபை தவிசாளர்கள் போன்றோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் (10.01.2018) திகதி அதாவது நாளை நடாத்துவதற்கு சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.இக்கூட்டத்தில் தற்போது மாவட்டத்தில் ஒரு குழுவினரால் ஏற்படுத்தப்பட்டு வரும் இக் குழுப்பத்தை விரைவாக கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட உள்ளது.
04.இன்ஷா அல்லாஹ் தற்போது நடைபெற்று வரும் அசாதாரன நிலைமைக்கு காரணம் யாது மற்றும் நடந்த சம்பவத்தை கண்டித்து ஊடக மாநாடு ஒன்றை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11.01.2019) நடாத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய காலம் எனவே பொறுமை தொழுகை துஆ போன்ற நல் அமல்கள் மூலம் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து துஆ செய்யுங்கள்.
மேலும் முகபபுத்தகத்தில் தயவு செய்து பொறுப்பற்றவிதத்தில் கருத்துக்களை எழுதுவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.இனவாதிகள் எப்படியாது ஒரு இனகலவரத்தை ஏற்படுத்த கடும்பிரயத்தனம் மேற்கொள்கிறார்கள் முஸ்லிம்கள் இவ்வாறான சந்தர்ப்பத்தில் மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் செயலாற்ற வேண்டும். இன்ஷா அல்லாஹ் சம்மேளனம் அவ்வப்போது தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்