السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 8 January 2019

தண்டனைகள் / Punishments

தண்டனைகள் / Punishments


1. மரண தண்டனை - Death Sentence
2. சிறைத்தண்டனை - Imprisonment
3. தண்டம் - Fine
4. நஷ்டஈடு/நிவாரணம் - Compensation/ Remedy
5. புனர்வாழ்வு/சீர்திருத்தம் Rehabilitation / Correction
சிறைத்தண்டனை மூன்று வகைப்படும்:
1. ஆயுள் சிறைத்தண்டனை - Life Imprisonment
2. உடனடி சிறைத்தண்டனை - Imprisonment
3. ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை - Suspended Sentence
உடனடி சிறைத்தண்டனை நான்கு வகைப்படும்:
1. ஆயுள் தண்டனை - Life Imprisonment
2. கடூழிய சிறைத்தண்டனை - Rigorous Imprisonment
3. சாதாரண சிறைத்தண்டனை - Imprisonment
4. ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை - Suspended Sentence
தூக்குத்தண்டனை / மரணதண்டனை தற்போது இலங்கையில் நடைமுறையில் இல்லை. ஆனால், மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற உரையாடல் நடந்துவருகிறது. ஐ.நா. விலும் மரண தண்டனையை ஆதரித்து இலங்கையும் அண்மையில் வாக்களித்துள்ளது.
மரணதண்டனைக்குப் பகரமாகச் சாகும்வரை சிறையில் அடைத்துவைப்பதே இப்போதுள்ள நடைமுறை.
ஆயுள் தண்டனை என்பது இருபது வருடங்கள் கொண்ட சிறைத்தண்டனை ஆகும்.
சிறைக்கைதிகளின் 'ஒரு வருடம்' என்பது எட்டு மாதங்களும் பத்து நாட்களும் மட்டுமேயாகும். அதாவது நமக்கு 12 மாதங்கள் ஒரு வருடமாக இருக்கையில் கைதிகளுக்கு வெறும் 8 மாதங்கள் + 10 நாட்கள் மட்டுமே ஒரு வருடமாகக் கணிப்பிடப்படும். அதாவது 20 வருடங்கள் கொண்ட ஆயுள் தண்டனை எட்டு வருடங்களில் கழிந்துவிடும். அதற்கிடையிலும் நன்னடத்தை, பொது மன்னிப்பு, ஜனாதிபதி மன்னிப்பு என்ற வழிகளிலும் "செல்வாக்குள்ளவர்" வெளியே வந்து விடலாம்.
கடூழிய சிறைத்தண்டனை என்று சொல்லப்பட்டபோதும் ஆங்கிலேயர் காலத்தில் போலில்லாமல் இப்போது சாதாரண இலகுவான வேலைகளே கைதிகளுக்கு கொடுக்கப்படுகின்றன. அதற்கும் நாட்கூலியாக நீண்ட கால சிறைக் கைதிகளுக்குச் சில ரூபாய்கள் (இப்போது 3 ரூபா 50 சதம் நாள் சம்பளம்) சேமிப்பில் இடப்பட்டு, கைதி விடுதலையாகும்போது கொடுத்து அனுப்பப்படுகிறார்.
இலங்கையின் சிறைச்சாலைகள் முறைமையும் சிறைத்தண்டனைகளும், தண்டனைகளும் கேலிக்கிடமானவை. செல்வாக்குள்ளவர்களுக்குச் சிறைத்தண்டனை - ஒரு தண்டனையே அல்ல. பொதுமக்கள் வரிப்பணத்தில் குற்றவாளிகள் சொகுசாக, பாதுகாப்பாக, உணவு - உடை - உறையுள் மூன்றும் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் காலம்கழிக்கும் பேர்வளிகளே பெரும்பான்மையான கைதிகள் !
சிறைச்சாலையிலும் உண்மையிலேயே தண்டனை அனுபவிப்போர் அநியாயமாக மாட்டிக்கொண்ட நிரபராதிகளும், வெளியே கண்ணியமாக, கெளரவமாக வாழ்ந்த - விதிவசத்தால் / திடீர்க்கோபத்தில் / வெறியில் / சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளிகளான / சட்டத்தின் பாதுகாப்பை முழுமையாகப் பெற்றுக்கொள்ளக் கூடிய பொருளாதார வசதிகள் இல்லாத காரணத்தால் / குடும்ப உறுப்பினர்களின் உதவி, ஆதரவு, அனுசரணை கிடைக்காமல் குற்றவாளிகளானோர் மட்டுமே உண்மையிலேயே சிறைச்சாலைகளில் "சிறைத்தண்டனை" யை அனுபவித்து வருகின்றனர்.
சிறைத்தண்டனை எதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அந்த அந்த விளைவு சிறைத்தண்டனையால் ஏற்படுவதில்லை..
ஒரே கைதி பல தடவைகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளான். முன்னைய சிறைத்தண்டனை அவனில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லையே..?
வெளியே வாழ்வதைவிடவும் சிறையில் வாழவிரும்பும் கைதிகளும் கணிசமாக உள்ளமை ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. வெளியே உயிர்வாழ ஒருவருக்கு ஆகக்குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 500/= வாவது உழைக்க வேண்டும், படுத்தெழும்ப ஓரிடம் வேண்டும்... மொபைல் போன் வேண்டும்.. கைதிகளாக உள்ளோரில் பலருக்கு இதெல்லாம் வெளியுலகில் பெரிய பிரச்சினைகள்.. உள்ளே இவையெல்லாம் அத்தகைய "வாழ வக்கற்ற" வர்களுக்கு சிறைக்குள் இலவசமாக, எந்தச் சந்தேகமும் இல்லாமல், சிரமமும் இல்லாமலேயே கிடைக்கின்றன.
உதாரணமாக, ஏதோ ஒரு குற்றத்திற்காக 1000/= தண்டம் விதிக்கப்பட்ட ஒரு கைதி அதைச் செலுத்தாவிட்டால் பொதுவாக ஒருமாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படுவார். ஒருமாதம் என்பது சிறையில் 14 நாட்கள் மட்டுமே. சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீடுகளின்படி ஒரு கைதிக்கான நாளாந்தச் செலவாக 360/= ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலும் உண்மையிலேயே கைதிகளின் நலன்களுக்கு இறுதியாகச் செலவிடப்படுவது சுமார் 250/= மட்டிலுமே, மீதியை அதிகாரிகள் சுரண்டிவிடுகிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. சரி, அதை விட்டு விடுவோம். இப்போது 1000 ரூபா தண்டம் கட்டாத கைதியைச் சிறையில் 14 நாட்கள் அடைப்பதால் அரசாங்கம் அவருக்கு 14 நாட்களுக்கும் 5400 ரூபாவைச் செலவிடுகிறது. இது எவ்வளவு முட்டாள்தனமான செய்கை ! குற்றங்கள் தொடர்ந்து கூடிக்கொண்டிருப்பதே நமது தண்டனை முறைகள் பொருத்தமற்றவை என்பதற்கான தெளிவான சான்றாகும்...
(... இன்னும் வரும்...)