السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 8 January 2019

கைதுசெய்யப்பட்ட நபர் - Arrested

கைதுசெய்யப்பட்ட நபர் - Arrested
கைதுசெய்யப்படல் என்பது சட்டப்படி மட்டுமே இருக்க வேண்டும். ஆளுரொவர் பிடியாணை ஒன்றன் மீது, நியாயமான ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் அல்லது ஒரு முறைப்பாட்டின் மீது மட்டுமே கைதுசெய்யப்பட முடியும்.
கைதுசெய்யப்படல் என்பது கைகளில் விலங்கிட்டுக் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கப்படுதலை மட்டும் குறிக்காது. விலங்கிடப்படாமல் - ஒருவரது இயக்கம் - Movement, செயற்பாடுகள் - Activities, அணுக்கம் - Access என்பன கட்டுப்படுத்தப்படுதல் அல்லது தடுக்கப்படலும் "கைது" க்குள் அடங்கும். கைதுசெய்யப்படும் ஆளொருவருக்கு அதற்கான காரணம் சொல்லப்பட வேண்டும் அத்துடன் அவரது நெருங்கிய உறவினர்க்குத் தகவல் கொடுக்கப்படவும் அக்கைது தொடர்பாக கைதுசெய்யும் அதிகாரி தனது சொந்தக் குறிப்பேட்டிலும் காரியாலயப் பதிவேட்டிலும் பதிவுசெய்திருக்க வேண்டும். பதிவுசெய்யாமல் நபரொருவர் தடுத்துவைக்கப்பட்டிருத்தல் பாரியதொரு குற்றமாகும்.
எந்தவொரு Magistrate நீதிவானும் - எந்தவொரு பொலிஸ் நிலையத்துள்ளும் எந்நேரத்திலும் நுழைந்து அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளோர் தொடர்பில் விசாரணை செய்ய முடியும். ஊடகவியலாளர்களுக்கும் இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள - வரையறுக்கப்பட்ட - சுதந்திரம் உண்டு. கைதான எவரும் தன் சம்மதமில்லாமல் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்கப்படக் கூடாது. கைதுசெய்யப்படும் நபர் ஏதாவது சுகவீனமுற்ற நிலையில் அல்லது போதை நிலையில் காணப்பட்டால் உடனடியாக அவர் ஒரு JMO - Judicial Medical Officer - சட்டமருத்துவ அதிகாரி முன்னிலையில ஆஜர்படுத்தப்பட வேண்டும்.
இவ்விடத்தில் சில குறிப்புகள் தருகிறோம்:
போதையில் வாகனம் செலுத்தியமை - விபத்தொன்றை விளைவித்தமை.. போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு கைது நிகழ்ந்திருப்பின் கைதானவர் பலூன் ஊதிக் கொடுப்பதைத் தவிர்த்துக் கொள்ள - கூடிய அளவு முயற்சிகள் எடுக்க வேண்டும்.. அத்துடன் ஜேஎம்ஓ முன்னிலையில ஆஜர்படுத்தப்பட முன்பாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்ணீர், லெமன் பானம் அருந்தவும், தேவைப்பட்டால் செயற்கையாக வாந்தி எடுக்கவும் முடியுமான அளவு சிறுநீர், மலம் கழித்துக் கொள்ளவும் வேண்டும். இவற்றுக்கு மேலாக எல்லாச் சட்டத்தையும் விலைக்கு வாங்கும் சக்தி பணத்துக்கு உண்டு என்பதையும் நினைவூட்டுகிறோம். அத்துடன் கைதொன்று நிகழ்கையில் பொதுவாக தம்மிடம் உள்ள தமக்குப் பாதிப்பாக அமையக்கூடிய மொபைல் தொலைபேசிகள் மற்றும் சிம்களை எறிந்துவிடுவதோ மறைத்துவிடுவதோ பாதுகாப்பானது. ஏதேனும் குற்றமொன்றைச் செய்யும்போதோ, செய்யத்திட்டமிட்டது முதலோ தமது சொந்தத் தொலைபேசிகளைப் பயன்படுத்தவோ, அவற்றின் மூலம் தமக்கு வேண்டியோருடன் தொடர்பு கொள்ளவோ கூடாது. அத்துடன் நிம்மதியாக வாழவிரும்பும் எவரும் இன்னொருவரின் பெயரில் உள்ள சிம் எதையும் பாவிக்கவோ, திருடப்பட்டதாகச் சந்தேகம் தரும் மொபைல் தொலைபேசிகளை வாங்கவோ, கைவசம் வைத்திருக்கவோ வேண்டாம். உரிமையாளர் இல்லாமல் கிடக்கும் போனொன்றைக் கூடக் கையில் எடுக்க வேண்டாம், ஏதேனும் ஒரு குற்றவாளியின் அத்தகைய போன்களில் உங்கள் கைரேகைகள் பதிவாக - படிய முடியும். எவ்வளவு நம்பிக்கைக்குரியவராக இருந்த போதிலும் உங்கள் பெயரில் இன்னொருவருக்கு சிம் அட்டைகள், மொபைல்கள் வாங்கிக் கொடுக்க வேண்டாம். எச்சந்தர்ப்பத்திலும் முன்பின் தெரியாதோருக்கு - ஒரு மிஸ்ட் கோள் பண்ணவோ, அல்லது அவர் வேறெவருக்கும் உங்கள் போனிலிருந்து அழைப்பொன்று எடுக்கவோ அனுமதிக்க வேண்டாம். அவசர நிலை யொன்றில் கூட முன்பின் தெரியாத ஒருவரின் சிம் அட்டையை உங்கள் மொபைலில் போட்டு அழைப்பெடுக்க அனுமதிக்க வேண்டாம். உங்கள் போனொன்று காணாமற் போனவுடன் குறித்த சிம் கார்ட் கம்பனிக்கு அறிவித்துவிட்டு முறைப்பாட்டு ரெஃபரன்ஸ் இலக்கத்தைக் கேட்டுவாங்கி குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல பொலிஸ் முறைப்பாடு ஒன்றும் செய்து விடுங்கள். போனின் விலை 500/= விலும் குறைவாக இருந்தாலும் இவ்வெச்சரிக்கைகளைப் பின்பற்றத் தவற வேண்டாம்.. கைதுசெய்யப்படும் சந்தர்ப்பங்களும் ஏனைய வில்லங்கங்களும் வீடு தேடி வரும்..
கைதுசெய்யப்பட்டவுடனேயே எவரும் குற்றவாளியாகி விடமாட்டார். குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் பட்சத்தில் அவர் விடுவிக்கப்படலாம். கைதுசெய்யப்பட்ட நபருக்கு உதவ முடியுமான வழிகளில் பொலிஸாருடன் இணைந்து, தேவைப்படின் சட்டத்தரணியின் உதவியோடு முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதைய சிலவேளை பிரச்சினையை இலகுவாகக் கையாள முடியும். சாதாரண கைதுகளின்போது பொலிஸ் பிணையிலேயே விடுவித்துக் கொள்ள முடியும். பின்னர் நீதிமன்றம் செல்லலாம். தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு போதும் முறைகேடாகத் தப்பியோடவோ, அதற்கு உதவவோ கூடாது. அது ஆபத்தைக் கொண்டு வரலாம். சில பாரதூரமான குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டுசெல்வதில் பயனில்லை, எப்படியும் தப்பிவிடுவான் எனச் சந்தேகிக்கப்படும் பிரபலமான குற்றவாளிகள் "தாமாகத் தப்பித்து ஓடக்கூடிய வாய்ப்புகளை" போலிஸாரே மேலதிகாரிகளின் முன்னாலோசனையுடன் கைதானவருக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பர்.. இத்திட்டத்தை அறியாத கைதி தப்பியோடுவார்.. அப்போது மிகத்துல்லியமாக - சரமாரியாகக் குண்டுகள் பின்னால் பாயும்.. இந்நடைமுறை 'என்கவுண்டரி'ல் போட்டுத் தள்ளுதல் எனச் "சட்டப்படி" அழைக்கப்படும்.
தவறான கைதுக்கு எதிராக, அனாவசியமாகக் கைதுசெய்யப்பட்டு நிரபராதியாக விடுவிக்கப்படும் பட்சத்தில் அடிப்படை உரிமைகள் மீறல் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். இது எல்லாவற்றுக்கும் பணம், அதிகாரம் மற்றும் ஆள்பலம் இருக்க வேண்டும். அப்போது பல்லாயிரக்கணக்கான கோடிகளை ஆட்டையப்போட்டவனும் போனவுடன் ராஜா மாதிரி வெளியே வந்துவிடுவான்... இவைகள் இல்லாத ஒருவன் "புள்ளச் செலவுக்கு" மாதம் ரெண்டாயிரம் கட்டிக் கொள்ளேலாமல் ஆறாறு மாதமாகத் தொடர்ந்து பதினைந்து ஆண்டுகளும் ஏன் சாகும்வரை கூட சிறைச்சாலைகளில் கழிக்க வேண்டியும் வரும்...
(சட்டம் இன்னும் வரும்...)