السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 16 October 2024

அப்துல் காதிர் ஜீலானி தொடர் 01

 





அஷ்ஷெய்ஹ் “#கெளதுல்_அஃழம்” "ஸுல்தானுல் அவ்லியா", "பாஸுல் அஷ்ஹப்", “#முஹ்யித்தீன்” #அப்துல் #காதிர் #அல் #ஜீலானி (றழியல்லாஹு அன்ஹு)

(தொடர்-01)

(தொகுப்பு: Maadhihur Rasool)


மலர்வு: 1078-03-18 (ஹிஜ்ரி 470 றமழான் 01)

மறைவு: 1166-02-21 (ஹிஜ்ரி 561 ரபீஉல் தானீ பிறை 11)


#பிறப்பு

செய்யிதினா அலீ றழியல்லாஹுஅன்ஹு அவர்களிலிருந்து 

(இமாம் ஹஸன் றழியல்லாஹுஅன்ஹு வழியாக) தந்தைவழியில் 13வது தலைமுறையினராகவும்,  

(இமாம் ஹுஸைன் றழியல்லாஹுஅன்ஹு வழியாக) தாய்வழியில் 15வது தலைமுறையினராகவும் அஸ்ஸெய்யித் அபூஸாலிஹ் மூஸா – அஸ்ஸெய்யிதா உம்முல் ஹைர் பாத்திமா ஆகிய பெற்றோர்களுக்கு அருந்தவப்புதல்வனாக 1078ம் ஆண்டு (ஹிஜ்ரி 470 றமழான் 01) இல் ஈரான் - ஜீலான் நகரில் நீப் எனும் சிற்றூரில் மலர்ந்தார்கள். 

அந்தவகையில், தந்தை வழியில் ஹஸனியாகவும் தாய்வழியில் ஹுஸைனியாகவும் இருக்கிறார்கள்.

..... 

தந்தை வழி 

01) அஸ்ஸெய்யித் “அபூஸாலிஹ்” மூஸா “ஜங்கிதோஸ்த்” (about 1033-1138 AD) (தந்தையார்)

02) அஸ்ஸெய்யித் அப்துல்லாஹ் அல் ஜீலி (Born about 989 AD)

03) அஸ்ஸெய்யித் யஹ்யாஅல் ஸாஹித் (Born about 946 AD)

04) அஸ்ஸெய்யித் முஹம்மத் (about 0902 – 1009 AD)

05) அஸ்ஸெய்யித் தாவூது (Born about 859 AD)

06) அஸ்ஸெய்யித் மூஸா அல் தானி (about 815-870 AD) Iraq

07) அஸ்ஸெய்யித் அப்துல்லாஹ் அல் தானி (Born about 772AD)

08) அல் இமாம் மூஸா அல் ஜவ்ன் (about 748-797AD) Died about 0797 at about age 49 in Sūq Suwayq, Al Madīnah

09) அல் இமாம் அப்துல்லாஹ் அல் மஹழ் (b: 772AD)

10) அல் இமாம் ஹஸன் அல் முதன்னா (661 – 715 AD)

11) செய்யதினா இமாம் ஹஸன் (625- 670 AD)

12) அமீருல் முஃமினீன் செய்யதினா அலி இப்னு அபீதாலிப் (றழி) 600-661 AD)

.......

தாய் வழி:

01. அஸ்ஸெய்யிதா பாத்திமா உம்முல் ஹைர் (தாயார்)

02. அஸ்ஸெய்யித் அப்துல்லா அஸ் செளமஈ

03. அஸ்ஸெய்யித் “அபூ ஜமாலுத்தீன்” முஹம்மத்

04. அஸ்ஸெய்யித் மஹ்மூத்

05. அஸ்ஸெய்யித் “அபுல் அதா” அப்துல்லாஹ்

06. அஸ்ஸெய்யித் ஈஸா கமாலுத்தீன் 

07. அல் இமாம் முஹம்மத் அல் ஜவாத்

08. அல் இமாம் அலீ அர் றிழா

09. அல் இமாம் மூஸா அல் காழிம்

10. அல் இமாம் ஜஃபர் அஸ்ஸாதிக்

11. அல் இமாம் முஹம்மத் அல் பாக்கர்

12. அல் இமாம் அலீ “ஸெய்னுல் ஆப்தீன்”

13. அஸ்ஸெய்யிதுஸ் ஷுஹதா அல் இமாம் ஹுஸைன்

14. அமீருல் முஃமினீன் செய்யதினா அலீ பின் அபீதாலிப் (றழி)

------

பிறந்த இடம்

குதுபு நாயகமவர்கள் "ஜீலான்" எனப்படும் பிரதேசத்தில் பிறந்ததால் அவர்கள் "ஜீலானி" என்று அழைக்கப்படுகிறார்கள். 

ஜீலான் அப்போதைய செல்ஜூக் பேரரசின் (கி.பி 1037-1194) கீழ் இருந்தது. தற்போது அது ஈரானின் ஒரு பகுதியாக உள்ளது.

ஜீலான் என்ற பெயரில் ஈரானில் இரண்டு இடங்கள் காணப்படுகின்றன. ஒன்று ஸெம்னான் மாகாணத்திலுள்ள ஜீலான் என்ற ஊராகும். மற்றையது. ஈரானின் வடமேற்குப் பகுதியில் கஸ்பியன் கடலை அண்டியுள்ள ஜீலான் மாகாணமாகும். இது ஈரானிலுள்ள மிகவும் செழிப்பானதொரு பிரதேசமாகும். 

ஜீலான் மாகாணத்தின் அழகிய மலைப்பிரதேசத்தில் அமைந்திருந்த ஒரு ஊரிலேயே குதுபு நாயகமவர்கள் பிறந்தார்கள். அவர்கள் பிறந்த ஊர் நீப்f அல்லது நைப்f என்று அழைக்கப்படுகிறது. 

He was born on 1 Ramdhan 470 AH (March 23, 1078) in the town of Na'if, Rezvanshahr in Gilan, Iran,

 

குதுபு நாயகமவர்களின் தாயார் ஸெய்யிதா உம்முல் கைர் பாத்திமா (ரலி) அவர்களின் மகாம் இப்பிரதேசத்திலுள்ள ஸவ்ம் ஏ ஸாரா என்ற ஊரில் அமைந்துள்ளது. 

அவர்களின் தந்தையார் ஸெய்யித் அபூ ஸாலிஹ் மூஸா (ரலி) அவர்களின் மகாம் இப்பிரதேசத்திலேயே ஸவ்ம் ஏ ஸாரா கிராமத்திலிருந்து பல மைல்களுக்கு அப்பாலுள்ள பியாசல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. 

 

இங்கு படத்தில் இணைக்கப்பட்டுள்ளது குதுபு நாயகமவர்களின் தந்தையார் ஸெய்யித் அபூ ஸாலிஹ் மூஸா (ரலி) மற்றும் அவர்களதும் தாயார் ஸெய்யிதா உம்முல் கைர் பாத்திமா (ரலி) ஆகியோரின் மகாம்களாகும்.


தொடரும்..


மேலும்