السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 18 October 2024

சிறந்த தலைவன்

 சுபஹானல்லாஹ்  என்னவொரு வீரம் , தைரியம் - யஹ்யா சின்வர். 



அவரின் கடைசி நிமிட வீடியோவை இஸ்ரேலிய தீவிரவாத படையினர் வெளியிட்டுள்ளார்கள். 


அந்த காணொளியில், 


வான் தாக்குதலில் சிதைவுண்ட ஒரு வீட்டுக்குள் காயங்களுடன் ஒரு கதிரையில் சிங்கம்போல் அமர்ந்திருக்கின்றார்( ஓடி மறைந்து பதுங்கிக்கொள்ளவில்லை). எதிரிகள் அருகே வருவதை காண்கின்றார். கொஞ்சம்கூட பயமில்லை. அவரின் ஷஹீத் இலட்சியம் நிறைவேறும் தருணமது.  


" அருகே எதிரிகள் வந்ததும் இரண்டு கைகுண்டுகளை அவர்களை நோக்கி வீசுகின்றார். " 


நாய்கள் விரண்டோடுகின்றார்கள். இது அவரின் இறுதி மூச்சுவரையான புனிதப் போராட்டம். அப்புறம்தான் அவர்மீது தாக்குதல் செய்து அவரை கொலை செய்கிறார்கள். 


தன்னுடைய சிறுவயதில் இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்ட போது எதிரிகளின் ஹிப்ருவ் மொழியையும் அவர்களையும் அணுவணுவாக கற்றுக்கொள்கின்றார். 


வெளிவந்ததிலிருந்து சியோனிச நாசகாரர்களை தெறிக்கவிடுகின்றார். 


விசேஷமாக, கடந்த வருடம் இஸ்ரேல் ஆரம்பித்த காஸா மீதான படையெடுப்பின் தொடக்கத்தில் இருந்து கடைசிவரை அவர் சுரங்கப்பாதைக்குள் செல்லாமலே போரிட்டுக்கொண்டே இருந்ததாகவும் வாசிக்க கிடைத்தது. 

சுபஹானல்லாஹ் . எப்படியொரு தலைவர், எப்படியொரு வழிகாட்டல். 


தன்னுடைய இளமையையும் முதுமையையும் இந்த உம்மத்தின் உடைமைக்காக செலவிட்ட அந்த மகானை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக.


ஆமீன்.