السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 16 October 2024

அப்துல் காதிர் ஜீலானி தொடர் 08

 


கெளதுல் அஃழம் #முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ


தொடர் -09

தொகுப்பு: Maadhihur Rasool 


#காதிரிய்யா_தரீக்காவின்_பரவல்.


கி.பி.1258 (ஹிஜ்ரி 656)இல் பக்தாதை மங்கோலியர்கள் கைப்பற்றியமை காதிரிய்யாவை பாதிப்படையச்செய்யவில்லை. மாறாக அது நன்கு செல்வாக்கு மிக்க சுன்னி நிறுவனமாக செழித்தது.

அப்பாஸிய கிலாபத்தின் வீழ்ச்சியின்பின்னர் பஹ்ஜதுல் அஸ்ரார் பி பஃத் மனாக்கிப் (The Joy of the Secrets in Abdul-Qadir's Mysterious Deeds - attributed to Nur al-Din 'Ali al-Shattanufi) என்ற நூலின் வாயிலாக ஜீலானி நாயகத்தின் வாழ்க்கை வரலாறுகள், அற்புதங்கள் மேலும் பரவலாயின.

நூலாசிரியர் இமாம் நூருத்தீன் அலி அல் ஷட்டனுபி காதிரிய்யா தரீக்கா இறையருள் பெற்ற ஓர் சம்பூரணமான ஆன்மீக வழி என்பதை விபரித்தார்கள். இந்நூல் மூலம் பக்தாதுக்கு அப்பால் தூரதேசங்களிலும் காதிரிய்யா தரீக்கா புகழ்பெறலாயிற்று.


All the illustrious sons of Hazrat Abdul Qadir Jilani (Allah's mercy be on him) and many of his mureeds were elevated to khilafat by him. Some are :


ஹஸ்ரத் அப்துல் காதிர் ஜீலானியின் அனைத்து மகன்களும் காதிரிய்யாவின் கிலாபத்தை பெற்றதுபோல் முரீதீன்கள் பலரும் அத்தரீக்காவின் கிலாபத்தையும் பெற்றனர். அவர்களுள் சிலர்;

1. Shah Abu Umar Qureshi Marzook

2. Shaikh Qareeb Alban Mosali

3. Shaikh Ahmed bin Mubarak

4. Shaikh Abu Saeed Shibli

5. Shaikh Shahabuddin Suharwardy

6. Shaikh Sayed Ahmed Rafai, etc.


கலீபாக்கள் மூலம் மத்திய கிழக்கு, பாரசீக பகுதிகளில் காதிரிய்யாவின் ஒளி படர்ந்தது.


Numerour followers of Hazrat Abdul Qadir Jilani (Allah's mercy be on him) carried the torch of Qadiriya order to different countries of the world, e.g.


ஹஸ்ரத் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் ஸில்ஸிலாவில் வந்த ஏராளமான ஷெய்ஹுமார்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு காதிரியா தரீக்காவின் தீபத்தை ஏந்திச் சென்றனர்.


1. Shaikh Usman Morwadi Lal Baz Qalandar (Shewan Sharif, Sind, Pakistan)

2. Sayed Mubarak Haqani (Uch Sharif, Punjab)

3. Shaikh Aman Panipati

4. Shaikh Bahauddin Junedi (Sirhind, India)

5. Sayedna Abdullah Sahani (Thatta, Pakistan)

6. Shah Abul Muali Qadiri (Lahore, Pakistan)


கி.பி.15ம் நூற்றாண்டின் இறுதியில் காதிரிய்யா தரீக்கா தனித்துவமான கிளை தரீக்காக்களை கொண்டிருந்ததோடு மொரோக்கோ, ஸ்பெய்ன், துருக்கி, இந்தியா, எதியோப்பியா, சோமாலியா, தற்போதைய மாலி வரை அது பரவியது.

நன்கு பக்குவப்பட்ட சூபி ஷெய்ஹ்மார்கள் உள்ளூர் சமூகங்களின் கலாச்சாரங்களை பெரும்பாலும் புறந்தள்ளாமல் அவற்றோடு காதிரிய்யாவின் ஸுலூக்-நடைமுறைகளை ஏற்படுத்தினர்.

கி.பி.1508 முதல் 1534 வரை சபவித் வம்ச ஆட்சியின்போது பக்தாதிலும் சூழவுள்ள பிரதேசங்களிலும் தலைமை சூபியாக-மார்க்கத்தலைவராக காதிரிய்யாவின் ஷெய்ஹுமார்கள் நியமிக்கப்பட்டனர்.

1534இன் பின்னர் பக்தாதில் ஆட்சியைக் கைப்பற்றிய ஒட்டமன் ஆட்சியாளர் சுல்தான் சுலைமான் செய்யிதினா அப்துல் காதிர் ஜீலானி அவர்களுடைய கப்ர் ஷரீபுக்கு மேல் குப்பா ஒன்றை அமைக்கும்படி கட்டளையிட்டார். அத்தோடு இராக்கில் காதிரிய்யா தரீக்காவை தமது முக்கியமான மார்க்கத் துணையாக வைத்திருந்தார்.

By the seventeenth century, the Qadiriyya had reached Ottoman-occupied areas of Europe.

அதேபோல் கி.பி.17ம் நூற்றாண்டுகளில் ஒட்டமன் அரசு கைப்பற்றிய ஐரோப்பாவின் பகுதிகளிலும் காதிரிய்யா தரீக்கா சென்றடைந்தது.

Khawaja Abdul-Allah, a sheikh of the Qadiriyya and a descendant of Muhammad (s.a.w), is reported to have entered China in 1674 and traveled the country preaching until his death in 1689. One of Abdul-Allah's students, Qi Jingyi Hilal al-Din, is said to have permanently rooted Qadiri Sufism in China. He was buried in Linxia City, which became the center of the Qadiriyya in China. 

பெருமானார் (ﷺ) அவர்களின் தலைமுறையில் 29வது தோன்றியவர்களும் காதிரிய்யா தரீக்காவின் ஷெய்ஹுமான ஹாஜா அப்துல்லாஹ் என்பவர்கள் கி.பி.1674இல் சீனாவுக்கு வந்து பலபிரதேசங்களுக்கு வருகைதந்து கி.பி.1689ல் அவர்கள் மரணிக்கும் வரை அங்கேயே மார்க்கப்பிரச்சாரம் செய்ததாகவும் கூறப்படுகின்றது.

அவர்களுடைய மாணவர்களில் ஒருவரான Qi Jingyi Hilal al-Din (கி.பி.1656-1719) என்பவர்கள் காதிரிய்யாவின் அடிப்படையில் ஸூபிஸத்தை சீனாவில் நிரந்தரமாக வேரூன்றவைத்தது. சீனாவில் Linxia city என்ற இடத்தில் இவர்களுடைய மஸார் உள்ளது. அங்கிருந்து மென்மேலும் காதிரிய்யா சீனாவில் பரவியது.

கி.பி. 15ம் நூற்றாண்டில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (குத்திஸ ஸிர்ரஹு) அவர்களுடைய தலைமுறையில் தோன்றிய திருப்பேரர் ஹழ்ரத் ‘அஸ்ஸெய்யிதுஸ்ஸாதாத்’ ‘அபுல் அப்பாஸ்’ அஹ்மத் அல் ஜீலானி அவர்களிடமிருந்து கிலாபத்தை பெற்று இந்தியா மீண்ட அஷ்ஷாஹ் பஹாவுத்தீன் அன்ஸாரி ஜுனைதி அல் காதிரி வல் ஷத்தாரி (தவ்லத்தாபாத் d:1516) அவர்கள் ஊடாக எமது இந்த காதிரிய்யா சில்சிலா கிளைத்து பெரிதும் பரவியது.


Sultan Bahu contributed to the spread of Qadiriyya in western India. 

His method of spreading the teachings of the Sufi doctrine of Faqr was through his Punjabi couplets and other writings, which numbered more than 140. He granted the method of dhikr and stressed that the way to reach divinity was not through asceticism or excessive or lengthy prayers but through selfless love carved out of annihilation in God, which he called fana.


கி.பி. 17ம் நூற்றாண்டில் செய்யிதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் தலைமுறையில் சிரியாவின் ஹாமா என்ற ஊரில் கி.பி.1615ல் பிறந்த ஷெய்ஹ் அப்துர் றஹ்மான் ஜீலானீ அவர்கள் கி.பி.1653ல் டெல்லிக்கு வருகை தந்து காதிரிய்யாவின் ஷெய்ஹான செய்யித் அப்துல் ஜலீல் என்பவர்களின் திருக்கரம்பற்றி காதிரிய்யாவை மேலும் பலப்படுத்தினார்கள். கி.பி.1677ல் மறைந்த இவர்களுடைய மஸார் ஷரீப் டெல்லியில் Abdur Rehman masjid என்ற பள்ளிவாயலுடன் அமைந்துள்ளது.

இவர்களிடமிருந்து காதிரிய்யா தரீக்காவின் கிலாபத்தைப்பெற்ற ஹழ்ரத் சுல்தான் பாஹு அவர்கள் (கி.பி.1630-1691) மேற்கிந்தியாவில் (தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில்) தரீக்காவை மென்மேலும் பரவச்செய்தார்கள். இக்காலப்பகுதியில் ஷாஹ் ஜஹான், அவ்ரங்கஸீப் ஆகிய முகலாய மன்னர்களின் ஆட்சி காணப்பட்டது.

ஹஸ்ரத் சுல்தான் பாஹு; fபக்ர் (பனா) என்ற ஸூபி கோட்பாட்டின் போதனைகளை (பஞ்சாபி மொழியிலான) கவிதைகள், எழுத்துக்கள் வாயிலாக பரவச்செய்யும் முறையை கையாண்டார்கள். சுமார் 140 வரையான ஈரடி கவிதை தொகுப்புகள், கட்டுரைகள் பதிவுசெய்துள்ளார்கள்.,

மேலும் காதிரிய்யாவின் அடிப்படையில் இறைவனை அடைவதற்கான வழி துறவு வாழ்வோ, உடலை வருத்தி புரியும் நீண்ட வணக்கங்களோ அல்ல. மாறாக தன்னை அழித்து இறைவனில் பனா-அழிவதே அதற்கான வழியாகும் என வலியுறுத்தினார்கள். திக்ர் முறைமைகளை அமைத்து வழங்கினார்கள். இவர்களுடைய காதிரிய்யா வழித்தொடர் காதிரிய்யா சர்வாரிய்யா என்று அழைக்கப்படுகின்றது. 

இந்த ஆன்மீக வழித்தொடர் கீழ்வருமாறு:

Ghaus-ul-Azam Hazrat Shaikh Abdul Qadir Jilani > Syed Abdul Razzaq Jilani > Shaikh Syed Abdul Jabbar > Shaikh Syed Mohammad Sadiq Yahya > Shaikh Syed Najm-ud-Din Burhan Puri > Shaikh Syed Abdul Fattah > Shaikh Syed Abdul Sattar > Shaikh Syed Abdul Baqqa > Shaikh Syed Abdul Jaleel > Shaikh Syed Abdul Rehman Jilani Dehlvi.

மேற்படி ஆன்மீக வழித்தொடரை ஆய்வுசெய்கையில் புர்ஹான் பூரைச்சேர்ந்த ஷெய்ஹ் நஜ்முத்தீன் என்பவர்கள் 5வதாக வருகிறார்கள். அந்த வகையில் காதிரிய்யா தரீக்கா முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களின் மறைவையடுத்து 300 வருடங்களுக்குள் (ஹிஜ்ரி 8ம் நூற்றாண்டு) இந்தியாவிற்கு வந்துவிட்டதை அவதானிக்கலாம்.


காதிரி நோஷாஷீ Qadri Noshahi

The Qadri Noshahi silsila (offshoot) was established by Syed Muhammad Naushah Ganj Bakhsh of Gujrat, Punjab, Pakistan, in the late sixteenth century. Notable Sufis in this order include Sayeen Shams Ali Qalandar of Shamsabad, Hujra Shah Muqeem, Pakistan.

காதிரிய்யா நோஷாஷிய்யா ஞான வழித்தொடர் கி.பி.16ம் நூற்றாண்டின் இறுதியில் பாகிஸ்தானில் பஞ்சாப்பில் பிறந்த Syed Muhammad Naushah Gannj baksh qadiri (கி.பி.1552- 1654) என்பவர்களால் ஏற்படுத்தப்பட்டது.

இவர்களுடைய மூதாதையரான Sayyid Awn ibn Yala al Hashimi al Gilani [Quthb shah] என்பவர்களே முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களிடமிருந்து காதிரிய்யா தரீக்காவை பெற்றுக்கொண்டு முதன்முதலில் (கி.பி.11ம் நூற்றாண்டில்) இந்தியாவிக்கு வருகை தந்து காதிரிய்யாவை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு குராஸான் – ஹெராத் பகுதியின் ஆட்சிப்பொறுப்பும் கிட்டியது. 

Sayyid Awn (கி.பி.1028-1099) அவர்கள், முஹ்யித்தீன் ஆண்டகையின் உறவினரும் (Maternal cousin), கலீபாவும் ஆவார்கள். [His Holy grave is located in Baghdad]. இவர்களுடைய மகன் Syed Zaman Ali Muhsin என்பவர்கள் இந்தோ பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான Kohistan-I Namak மற்றும் Saunsa kesarஐச் சூழவுள்ள பிரதேசங்களிலும் காதிரிய்யா வழியில் இஸ்லாத்தை பரப்பினார்கள். [His Holy grave is located in Kirana, district Sargodha in Pakistan]

இவர்களுடைய தலைமுறையில் வந்தவர்களே காதிரிய்யா நவ்ஷாஷியின் மூலவரான செய்யித் முஹம்மத் நவ்ஷாஷ் ஆவார்கள்.

இந்த ஞான வழித்தொடரில் Sayeen Shams Ali Qalandar of Shamsabad, Hujra Shah Muqeem -Pakistan ஆகியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.


Sheikh Sidi Ahmad al-Bakka'i (Arabic: الشيخ سيدي أحمد البكاي بودمعة‎ of the Kunta family, born in the region of the Noun river, d. 1504 in Akka) established a Qadiri zawiya (Sufiresidence) in Walata. In the sixteenth century the family spread across the Sahara to Timbuktu, Agades, Bornu, Hausaland, and other places, and in the eighteenth century large numbers of Kunta moved to the region of the middle Niger where they established the village of Mabruk. 

Sidi Al-Mukhtar al-Kunti (1728–1811) united the Kunta factions by successful negotiation, and established an extensive confederation. Under his influence the Maliki school of Islamic law was reinvigorated and the Qadiriyyah order spread throughout Mauritania, the middle Niger region, Guinea, the Ivory Coast, Futa Toro, and Futa Jallon. Kunta colonies in the Senegambian region became centers of Muslim teaching.


மேற்கு ஆபிரிக்காவில் மாலீ, செனகல், சஹாரா ஆகியவற்றிற்கு மத்தியிலுள்ள நாடான Mauritaniya நாட்டில் Walatah என்ற ஊரில் காதிரிய்யா செய்ஹும் ஞானியுமான Sheikh Sidi Ahmad al-Bakka'i al-kunti (Arabic: الشيخ سيدي أحمد البكاي بودمعة‎) (d:1515) என்பவர்கள் சாவியா ஒன்றை நிறுவி காதிரிய்யாவின் ஆன்மீகப்பணியை முன்னெடுத்தார்கள்.

அதேபோல் மாலி நாட்டில் Araouane அல்லது Arawan என்ற சிற்றூலிருந்து Sheikh Sidi Ali bin al-Najib என்பவர்கள் காதிரிய்யாவின் ஆன்மீகப்பணியை செய்தார்கள். 

அதேபோன்று அவர்களுடைய மாணவரான Sidi Al-Mukhtar al-Kunti (1728–1811) என்பவர்கள் மேற்கு சூடானில் காதிரிய்யாவை பரவச்செய்தார்கள். 

இவ்வாறு இந்திய துணைக்கண்டத்துக்குக் குடிபெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குத்பு நாயகம் அவர்களின் புகழ் பெற்ற அருமைப் புதல்வர்களில் ஒருவரான அஸ்செய்யித் அல் ஹாபிழ் தாஜுதீன் அபூபக்கர் அப்துல் ரஸ்ஸாக் அல் ஜீலானி (ரலி) அவர்களின் வழித்தோன்றல்களாவர். இவர்கள் தற்போதைய இந்தியா,பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் பல்வேறு நகரங்களைத் தளமாகக் கொண்டு தமது ஆன்மீகப் பணியை மேற்கொண்டு வந்தனர்.

Some of the saints of the descendents of Hazrat Abdul Qadir Jilani (Allah’s mercy be on him) and Qadiri order are in India and Pakistan.

ஹழ்ரத் அப்துல் காதிர் ஜீலானி அவர்களுடைய வழித்தோன்றல்களில் காதிரிய்யா தரீக்காவை இந்திய உபகண்டத்துக்கு கொண்டுவந்த சில பெரியார்கள் வருமாறு:

1. Sayedna Abdulla Sahabi. Died in 1060 AH in Thatta.

2. Shah Abdul Murali Kadri. Birth 960 AH. Died 1024 AH in Lahore.

3. Sayed Ghous Jilani. Died 923 AH, Uch Sharif, Punjab.

4. Shah Fazeel Kadri Died 999 AH, Makli, Thatta.

5. Sayed Abdul Qadir bin Sayed Murid Ghous Jilani. Died 940 AH, Uch Sharif, Punjab.

6. Sayed Abdul Qadir Jilani, died 941 AH, Lahore.

7. Sayed Abdur Razzak Jilani, died 941 AH, Uch Sharif, Punjab.

8. Sayed Mohammad Ghous Bolapir, died 959 AH, Satghira, etc.

During Mughal control, Sheikh Abdul Qadir and his sons, Sheikh Niamatullah, Mukhdum Muhammad Jilani, and Miyan Mir, founded the Qadri silsila, which was popular in Punjab. 

முகலாய ஆட்சியின் போது, ஷேக் அப்துல் காதர் மற்றும் அவரது மகன்களான ஷேக் நிஹ்மத்துல்லா, மக்தும் முஹம்மது ஜிலானி மற்றும் மியான் மிர் ஆகியோர் பஞ்சாபில் பிரபலமான காதிரி சில்சிலாவை நிறுவினர்.

This silsila was followed by Mughal princess Jahanara and her brother Dara Shiok.

முகலாய இளவரசி ஜஹானாரா மற்றும் அவரது சகோதரர் தாரா ஷியோக் Dara Shiok ஆகியோர் பின்பற்றினர்.

சில்சிலாவின் மிக முக்கியமான புனிதர்களில் ஒருவரான Miyan Mir மியான் மிர், இளவரசர் தாரா ஷியொக்கை பட்டியலிட்டுள்ளார்.

This order included Urdu poets Hasrat Mohani and Muhammad Iqbal

இந்த தரீக்காவில் உருது கவிஞர்களான ஹஸ்ரத் மொஹானி மற்றும் முஹம்மது இக்பால் ஆகியோர் அடங்குவர்.

Shah Badakhshani was another well-known saint of this order. 

ஷாஹ் பதக்ஷானி இந்த தரீக்காவில் நன்கு அறியப்பட்ட மற்றொரு பெரியார் ஆவார்கள்.


In 941 AH the Turks became conquerors. Sultan Suleman offered Fatiha at the Dargah Sharif after saying his prayers in the house of Hazrat Abdul Qadir Jilani (Allah’s mercy be on him). 

இவ்வாறாக காதிரிய்யா தரீக்கா உலகெங்கும் அதன் கிளைகளுடன் பரவியது. சிரியா, துருக்கி, பாலஸ்தீனம், ஆபிரிக்கா கண்டத்தில் கெமருன், கொங்கோ, மொரிடானியா, தன்ஸானியா, சூடான், மொரோக்கோ போன்ற தேசங்களிலும், ஆசியா கண்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிலும், ஐரோப்பா கண்டத்தில் வடகிழக்குப்பகுதியின் Balkan நாடுகளான அல்பேனியா, பொஸ்னியா, கொஸோவா, சேர்பியா, செக் ரிபப்லிக் போன்ற நாடுகளிலும் பரவியது. உலகெங்கும் எண்ணற்ற இறைநேசர்களை உருவாக்கியது. இஸ்லாத்தின் உயிர்நாடியான ஆன்மீக அறிவுடன் கூடிய இஸ்லாத்தின் ஒளியை பரவச்செய்தது.


தொடரும்....