நூரிஷா ஒரு முகமூடி முஃதஸிலா மட்டுமல்ல அது இன்றைய காலத்தின் ஈமானிய எதிர்ப்பு இயக்கம்,
கவாரிஜ்களின் கூட்டுக்குடும்பம்.
வரலாறு நீண்டது, நெடியது, வரலாற்றுப் பக்கங்களிலெல்லாம் கண்மணி நாயகம் பகன்ற பண்பியல் இஸ்லாத்துக்கெதிரான ( இஸ்லாமிய பெயர் கொண்ட இஸ்லாமிய ) இயக்கங்கள் அதிகம், அதிலும் தாடியையும் ஜுப்பாவையும் நவீனத்துவ நடை உடை பாவனைகளையும் அங்கீகாரமான இஸ்லாமியமாக காட்டி ஆன்மீக முஸ்லிம் உம்மாவை தடம் புரளச் செய்தது இந்த இயக்கங்களே,
வஹ்ஹாபிய ஊடுருவலுக்கு பின்னான இஸ்லாமியத்தின் ஈமானிய வாழ்வு நெறி பல்லாண்டுகள் பின்னோக்கி பயணித்தது என்பது வரலாறு, தூய்மையின் தாயகம் என்ற கண்மணி நாயகத்தினதும் தொடர்ந்த ஸஹாபாக்களினதும் தாபிஈன்களினதும் வாழ்க்கை நெறி, ஆன்மீக ஆளுமை என்பது கேள்விக்குறியாகி இஸ்லாமிய உம்மாவுக்குள் மார்க்க ரீதியான கேள்விகளை உள்வாங்கியதற்கான காரணம் இந்த வழிகெட்ட இயக்கங்கள் மேற்கொண்ட தரம் கெட்ட மரபு ரீதியான எது இஸ்லாம் என அறிமுகமாகி பேணப்பட்டு வந்ததோ அவைகளுக்கு எதிரான நடைமுறைகள் உண்மை என்றும் சீர்திருத்தம் என்றும் அறிமுகமானதாகும்,
அந்த பங்களிப்பை கணிசமான அளவில் பரப்பியது வஹ்ஹாபிஸ எழுச்சியாகும், தான் வாழ்ந்த காலம் வரையில் கண்மணி நாயகத்தின் மறைவுக்கு பின்னான 700 ஆண்டுகள் இடைவெளியில் இஸ்லாம் இருக்கவில்லை என்றும் தனக்கு பின்தான் அது தரமானது என்றும் அப்துல் வஹ்ஹாப் சொல்வது இதற்கான சான்றாகும், கேள்விகளை வேள்வியாக்கி அதில் குளிர் காய்ந்த முஃதஸிலா கவாரிஜ்களுக்கு பின்னான இஸ்லாமிய வரலாற்றை துவம்சம் செய்ததில் இந்த இயக்கத்துக்கு அதிக பங்கு உண்டென்று சொல்லலாம், காரணம் அஹ்லுஸ்ஸுன்னாவின் போர்வையில் இஸ்லாமியத்தை பிளவுபடுத்தி தூய இஸ்லாமியத்துக்கு எதிரான கேள்விகளை தூண்டியது இந்த இயக்கமே,
வழிகெட்ட இயக்கங்களான ஷீஆ காதியானி பஹாயிஸம், ரஷாத் கலீபாவின் நவீன நபித்துவம், எலிஜாவின் இஸ்லாம் போன்றவைகள் காலத்தால் தோன்றி அவைகள் புறக்கணிக்கப்படன என்பதற்கும் அவைகள் இஸ்லாமியம் அல்ல என்பதற்கான தீர்வுகள் எழுந்ததற்கும் ஒட்டுமொத்த இஸ்லாமிய உம்மாவும் ஒன்றிணைந்ததற்கான காரணம் அவைகள் அடிப்படையான நபித்துவத்தில் கை வைத்ததுதான், அதனால் அது மூலத்திலே புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டது,
ஆனால் வஹ்ஹாபிஸம் அவ்விதமானதல்ல, அது மூலத்தில் கை வைக்காமல் இறுதி நபித்துவத்துக்கு இடையூறு செய்யாமல் எது இஸ்லாமிய உம்மாவை தாக்கும் என்று உணரப்பட்டதோ அதிலிருந்து தந்திரமாக நழுவி சீர்திருத்தம் என்னும் சிந்தனை போக்கை உற்பத்தி செய்து அதிலிருந்து இஸ்லாமிய உம்மாவுக்குள் இன்னொரு முகத்தை வடிவமைத்து வலிமையுறச் செய்தது என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது,
பரம்பரை இஸ்லாமியமும் பாரம்பரிய இஸ்லாமியமும் பிழை என்பதும் அதற்கான ஹதீஸ் ஆதாரங்கள் ஆன்மீக வழிகாட்டல்கள் வரலாறுகள் செயற்பாடுகள் அனைத்தும் ளயீப் என்னும் மாயையை தோற்றுவித்ததின் பிரதான பங்கு இந்த இயக்கத்தையே சாறும், எலிஜா முஹம்மதின் இஸ்லாமிய இயக்கத்தை எதிர்த்து நின்ற மால்கம் எக்ஸ் தூய இஸ்லாத்தை தேடி புறப்பட்டு சவூதியில் தஞ்சமடைந்தது இந்த இயக்கத்தின் முரண்பட்ட இஸ்லாமியத்துக்கான வெற்றிக்கு இன்னுமொரு ஆதாரமாக கொள்ளலாம்,
இது அடிப்படையில் கவர்ச்சியையும் இளைஞர்களை ஈர்க்கும் செயற்பாடுகளையும் தளமாக கொண்டு செயற்பட்ட சியோனிஸ சிந்தனைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதன் எதிரொலி உலகளாவிய ரீதியில் உண்மையான இஸ்லாமியமாகவே உணரப்பட்டது, உண்மையான ஆன்மீக இஸ்லாம் என்பது கேள்விக்குறியாகவும் கண்மணி நாயகத்தின் மீதான அதிக பற்று என்பது அவசியமற்றதாகவும் பேசப்பட்டதெல்லாம் குர்ஆன் என்பது இறக்கப்படுவதற்கு ஊடகமாக மட்டுமே அவர்கள் இருந்தார்கள் என்று பின்னாளில் பிரச்சாரம் செய்வதற்கு தோதான அடிப்படைகளாக மாறின, அதை இஸ்லாமிய உம்மா ஏற்றுக் கொள்வதற்கான அடிப்படையை வஹ்ஹாபியம் தந்திரோபயமாக படிப்படியாக செய்தது, உண்மையான இஸ்லாம் எங்கு இருக்கிறது என்று கேட்டால் அது சவூதியில்தான் என்று இன்றையவர்கள் கூட விரல் நீட்டும் அளவுக்கு அதன் சியோனிஸ திட்டங்கள் வழிவகுத்திருக்கிறது,
இன்றைய ஹலோவீன் கொண்டாட்டங்கள் கூட இஸ்லாமிய முரணான ஷைத்தானிய கொம்பாக இல்லாமல் சவூதியின் இன்னொரு முகமாக அதன் வெளிநாட்டுக் கொள்கையாக பார்க்கப்படுவதற்கு காரணம் இவைகளே, கண்மணி நாயகத்தின் ஆன்மீக உண்மைகளை தகர்த்து விட்டால் எதையும் இஸ்லாமாக அறிமுகப்படுத்தலாம் என்பதில் வஹ்ஹாபிய சியோனிஸ சிந்தனை கொண்ட திட்டம் காலத்தை வென்ற காட்சியின் நாதமாக ஒலிக்கவே செய்தது,
ஆரம்பத்திலேயே துருக்கிய இஸ்லாமிய எழுச்சியை எதிர்த்ததும் புனித நகரங்கள் மீது படையெடுத்து புனித சின்னங்களை அழித்ததும் பெருமானாரின் பூர்வீக இஸ்லாமியத்தை தகர்த்து அவர்களின் ஆன்மீகத்தை பழிப்பதற்காகவுமான அதன் ஆரம்ப திட்டங்களாகும், சவூதிய எண்ணெய் பணம் அதற்கு மூலதனமானது என்பதும் இங்கு மறுக்கப்படக் கூடிய ஒன்றாக இல்லை, காரணம் இப்னு ஸபாவின் திட்டங்களை எடுத்துக்கொண்டு வந்து இப்னு அப்துல் வஹ்ஹாபின் கைகளில் கொடுப்பதற்கு சியோனிஸத்துக்கு அதுவே அடிப்படை மூலதனமாகியது, தன் விரல்களாலே தன் கண்களை காயப்படுத்திக் கொள்வதற்கு சியோனிஸம் செய்த சதி என்பதை இன்று வரையிலும் இஸ்லாமிய உம்மா புரிந்து கொள்ளவில்லை என்பதும் வரிந்து கட்டிக்கொண்டு வஹ்ஹாபிய சியோனிஸத்துக்காக வால் பிடிக்கிறது என்பதும் வேதனையாகும்,
வரலாற்றுத்தொடரில் உண்மையான இஸ்லாத்துக்குள் பிளவை ஏற்படுத்திய சர்வதேசிய சியோனிஸ சமூகத்தின் பிதாவான பிரிட்டிஷ் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பனிகள் எனும் பெயரில் காலூன்றியபோது அதற்கான உந்து சக்தியாக இன்னொரு முகத்தை உருவாக்க திட்டமிட்டது, ஆங்கில அரசுக்கெதிரான ஒன்றிணைந்த இஸ்லாமிய போர்ப்பிரகடணத்தை துவம்சம் செய்யும் நோக்காகவும் ஆன்மீக இஸ்லாத்தில் வேரூன்றிய இஸ்லாத்தை கடமைக்கான இஸ்லாமாக மாற்றவும் அது கைக்கொண்ட உக்திதான் ‘ தொழுகைக்கு அழைத்தல் ‘ எனும் தொனியாகும்,
தொழுகைக்கு அழைத்தல் என்பதிலும் அது கொண்டு இஸ்லாத்தை பரப்புதல் என்பதும் வெளிப்பார்வைக்கு இங்கிதமாக தெரிந்தாலும் மூலத்தில் அது முஸ்லிம்களை வேறு சிந்தனைகளற்று ஓரிடத்தில் அமரச்செய்வதாகும், அதற்கான ஏஜன்டுகளையும் அவர்களுக்கான கொடுப்பனவுகளையும் அது ஏற்கனவே திட்டமிட்டிருந்ததால் அதன் கவர்ச்சி மூல தப்லீக்கியத்தை தோற்றுவித்தது எனலாம்,
மூலத்தில் வஹ்ஹாபிஸமாகவும் கோலத்தில் அது இன்னொரு மாயையாகவும் மாறியது, மூல இஸ்லாத்தை மொழிவதற்கு பதிலாக வேறு இஸ்லாத்தை மொழிபெயர்க்க இதுவே காரணமாகியது, பிற்காலத்தில் தப்லீக் என்னும் கோல முகத்தில் இன்னொரு இஸ்லாமாக இல்யாஸினால் அறிமுகமாவதற்கு அதுவே காரணம் எனலாம்,
இஸ்மாயில் திஹ்லவி அப்துல் வஹ்ஹாபின் அத்தெளஹீதை தக்வியதுல் ஈமான் என்று மொழிபெயர்த்து நேரான பாதையை தோற்கடிக்கும் முயற்சிக்கு வித்திட்ட போது ஆன்மீக இஸ்லாமியத்தின் எதிர்ப்புக்கு உள்ளாகியது, அவரின் இறப்பு வரை அந்த முயற்சி முன்னெடுக்கப்பட்ட பின்னும் சியோனிஸத்தின் மூலத்திட்டம் பின் வாங்க வில்லை,
கலீல் அஹ்மது அம்பேட்டி ரஷீத் அஹ்மது கொங்கோஹி அஷ்ரப் அலி தானவி காஸீம் நானூத்தவி இல்யாஸ் என்று படிப்படியாக முன்னைய இஸ்மாயில் திஹ்லவியின் முயற்சியை முன்னெடுக்கும் நோக்கில் விஸ்வரூபமடைந்தது, இவர்களின் முயற்சியின் முளையாக தூய இஸ்லாத்தை தகர்க்கும் முயற்சிகள் பிரசுரங்களாக பரிணாமமடைந்தது, மூல இஸ்லாத்தின் மூத்த வேரான முத்து முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஆன்மீகத்தை தகர்க்கும் முயற்சியே இந்த பிரசுரங்களின் முக்கிய பாடுபொருளாக அமைந்தது, காஸீம் நானூத்தவியின் காஸிமிய்யா மத்ரஸா இந்த முரண்பாட்டின் பிரதான தளமாக அமைந்தது, பின்னர் தேவ்பந்த் என்றும் தாருள் உளூம் தேவ்பந்த் என்றும் இதன் கோலம் மாறியது, எங்கு கண்மணி நாயகத்தின் மீதான நேசம் எதிர்க்கப்படுகிறதோ அதன் தலைமைப்பீடமாக இத்தலம் செயற்படுவதற்கு இன்று வரையிலும் அதனால் வெளியிடப்படுகின்ற புனித மீலாதுக்கெதிரான பத்வாக்களே சாட்சி பகரும், முதலில் படைக்கப்பட்டது கலம் என்று கண்மணி நாயகத்தின் நூருக்கு எதிரான தப்லீக்கிய சிந்தனையானது அதன் நோக்கு இஸ்லாம் அல்ல முஹம்மதுற்றஸூலுல்லாஹ்வின் ஆன்மீகத்தை நிராகரிப்பதுதான் என்பதை பரை சாற்றுகிறது,
நூரிஷா இந்த முகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூல வஹ்ஹாபிஸத்தின் நவீன முகம் எனலாம், ஊன்றிப்போன தரீக்காக்களின் உயர் மிகு ஆன்மீகத்தை தகர்ப்பதற்கு வெறும் வார்த்தைகளும் பிரச்சாரங்களும் வெற்றியை தராது என்பதை உணர்ந்த தப்லீக்கியம் அதன் நயவஞ்சக தரீக்கா முகத்தை நூரிஷா என்று பிரகடணப்படுத்தியது, கோலத்தை மாற்றிக்கொண்ட வஹ்ஹாபிஸம் தப்லீக் ஆனதைப்போல் தப்லீக்கிய முகத்தை நூரிஷா என்று மாற்றிக் கொண்டது,
ஷெய்கு ஸில்ஸிலா என்று மூல தரீக்காக்களின் முன்னுதாரணங்களை எடுத்துக் கொண்டு போலி முலாம் பூசத்தொடங்கியது, மூல இமாம்கள் மேதைகள் நாதாக்கள் என்று மூலத்தில் புரக்கணிக்கப்பட்ட, எதிர்க்கப்பட்ட, இறை நிராகரிப்பாளர்கள் என்று பத்வா வழங்கப்பட்ட தூய இஸ்லாமிய முரண் வாதிகளையெல்லாம் தலையில் வைத்து கொண்டாடியது, கண்மணி நாயகத்தின் ஆன்மீகத்தை கொச்சைப்படுத்தி இஸ்லாமிய உம்மாவை துண்டாடியவர்களை எல்லாம் தூயோர்கள் பட்டியலில் சேர்த்தது, முலாம் பூசிய ஞான பேச்சுக்களின் ஷைத்தானி சிந்தனையாளர்களின் நேசத்தை வளர்க்க துணிந்தது, சூபிஸ போர்வையில் பூர்வீக தரீக்காக்களை புறந்தள்ளி அதில் குறை காணவும் தொடங்கியது, இந்தியாவில் பகுதிகளை ஆக்கிரமிக்க துணிந்த இவர்கள் அவ்வப்பகுதிகளின் ஆன்மீக தலங்களை ஒன்றில் கைக்கொள்ளவோ எதிர்ப்பு வலுக்கும் பட்சத்தில் அவற்றுக்கான போலி காரணங்களை உருவாக்கி அவற்றின் மதிப்பை இழக்கச்செய்யவோ தன் ஆளுமையின் வீரியத்தை காட்டியது,
கண்மணி நாயகத்துக்காயினும் தலை சாய்க்க தயாரில்லை என்றும் அவர்களே சொன்னாலும் அவர்களுக்கு சுஜூது செய்ய முயல மாட்டோம் என்றும் அஹ்லுல் குர்ஆன்களின் அடாவடி முகத்தை காட்ட துவங்கியது,
கண்மணி நாயகம் காட்டித்தந்த மார்க்கம் இஸ்லாம், அவர்கள் எதை சொன்னார்களோ அதுதான் இஸ்லாம், நீங்கள் இதை சொல்லிவிட்டு வேறொன்றை செய்கிறீர்களே... என்று அவர்களை கேள்வி கேட்பது கூட ஈமானாக முடியாது, ஐயாமுல் ஜாஹிலிய்யா காபிர்கள் கூட இப்படி சொல்லவில்லை,
“ அவர்களுக்கு அதற்குரிய தரஜா இல்லை, அவர்களை நினைப்பது, அத்தஹிய்யாத்தில் அவர்களின் நினைவை கொள்வது பிழை என்று சொல்வது யாவும் இவர்களின் மூல பிதாக்களான முரணாளர்களின் கண்மணி நாயகத்தின் மீதான பொறாமையில் ஏற்பட்ட நிந்தனை என்பதை சிந்தனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டியது இன்றைய இவர்களின் தரீக்கா அடிவருடிகள் மட்டுமல்ல, அறியாமையால் இணைந்து கொண்டவர்களும் உணர வேண்டிய கட்டாய கடமையாகும்,
கண்மணி நாயகத்தை புறம்பாக பார்க்கும் இஸ்லாம் எதுவும் இல்லை, கலிமாவின் பாடுபொருள் என்பதே அல்லாஹ்வும் ரஸூலும் இணைந்ததுதான் என்பதை இவர்கள் மறுப்பதும் அல்லாஹ்வையும் ரஸூலையும் இரண்டாக பார்ப்பதில் உள்ள ஈமானிய துவேஷம் என்ன என்பதும் இவர்களின் போக்கில் இன்னொரு இஸ்லாமாகவே இருக்கிறது, இதைத்தான் பஹாஉல்லாவும் எலிஜாவும் மிர்ஸா குலாமும் செய்தார்கள் என்பதை வரலாறு மறைக்கவில்லை, கலிமாவுக்கு வேறு வேறு அர்த்தங்கள் கற்பிக்க முயற்சிப்பதும் அதை ஊர்ஜிதப்படுத்த கலிமா விளக்க உரைகள் செய்வதும் சுத்தமான அஷ்ரப் அலி தானவியை முன்னிலைப்படுத்த எடுக்கும் பிரயத்தனம் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை,
முகமூடி கலையப்பட்டு இனம் காணப்பட்ட கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் இவர்களின் ஆதார புருஷர்களாகி இருக்கிறார்கள், சுயூத்தி இமாம் போன்ற பெரும் நாதாக்களின் வார்த்தைகளில் தெளிவை புரிந்து கொள்ளாமல் கொச்சைப்படுத்த துவங்கி இருக்கிறார்கள், ஷாஹுல் ஹமீத் நாயகத்தின் திருப்பாதங்களை ஒத்திக்கொள்வோம் என்று சொல்கிற இவர்கள் அவர்களை விட அதிக உயரத்தில் இவர்களின் ஷைகுமார்களை வைத்திருக்கிறார்கள்,
அஹ்லுபைத்துகளின் ஆன்மீகம் உணரப்பட்ட( ஈமானிய ஆன்மீகத் )தை வைத்துக் கொண்டு தங்களுடனான அவர்களின் இருப்பை அவர்களுக்கு ஆதாரமாக்கி அதில் ஆதாயம் தேட முயற்சிக்கும் இவர்களின் வண்டவாளங்களையும் ஈமானிய முரணையும் எடுத்துக்காட்டி இஸ்லாமிய உம்மாவை பாதுகாக்க துடிக்கும் அஸ்ஸெய்யித் அப்துற்றஹ்மான் தங்களும் ஒரு அஹ்லுபைத்துதான் என்பதை நிராகரிக்கிறார்கள் என்பது சாக்கடையில் வேர்க்கடலை பொருக்கித் திண்ணும் குரங்குகளுக்கு ஒப்பானவர்கள் என்பதற்கு ஆதாரமாகும்,
மூடிக்கொண்டிருப்பதால் அனைத்தும் சுத்தம் என்று எண்ணும் அந்த குரங்குகளை போல இவர்களின் ஆடைகளும் தோற்றமும் அவர்களை காட்டிக் கொடுத்து விடாது என்று எண்ணுகிறவர்கள், இவர்களின் உள் அழுக்கு என்பது ஈமானிய எதிர்ப்பும் கண்மணி நாயகத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியும் என்பதை புரிந்து கொள்ள முடியும்,
கண்மணி நாயகத்தின் கண்ணியத்தை எந்த வகையிலேனும் ஒருவன் குறைவாக மதிப்பிட்டால் அவன் காபிர் என்ற இமாம்களின் ஏகோபித்த முடிவை புறக்கணிக்கும் இவர்கள் அப்படி அவமதித்தவர்களையே மூல இமாம்களாக கொண்டு செயற்படுவது, அவர்கள் என்ன காரணத்துக்காக சொன்னார்கள் என்று ஆராயச் சொல்வது சுத்த வேடிக்கையாகும், நூறு கோடி பேர்கள் என்ன ஆயிரம் கோடி பேர்கள் கண்மணி நாயகத்தின் கண்ணியத்தை குறைத்து மதிப்பிடுகிற இவர்களின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டாலும் அத்தனை பேரும் இறை நிராகரிப்பார்கள் என்பது கலிமாவின் ஆன்மீக உண்மை என்பதை எவரால் மறுக்க முடியும்,
அல்லாஹ்வுக்கான தொழுகையில் கண்மணி நாயகம் அழைத்தால் அத்தொழுகையை விட்டே செல்ல வேண்டும் என்பதை ஈமானாகவே அல்லாஹ் பிரகடணப்படுத்தி இருக்க அவர்களை குறைத்து மதிப்பிடல் எவ்வாறு ஈமானாக முடியும், புரிந்து கொள்ள முடியும் ஒரு முஸ்லிமுக்கு இது ஒன்று மட்டுமே இந்த நூரிஷா வழிகேடுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தகுந்த சிந்தனையாகும்,
என்ன காரணத்துக்காக சொல்லியிருந்தாலும் அப்படிச் சொன்னவர்கள் அறியாமையில் இருந்த அறிவற்றவர்கள் சொன்னவைகள் அல்ல, அல்குர்ஆனை அல்ஹதீஸை அறிந்தவர்கள் வேண்டுமென்றே கண்மணி நாயகத்தின் கண்ணியத்தை குறைக்க சொன்னவைகள் என்பது அன்றைய கால தேடல்களும் அஹ்லுஸ்ஸுன்னாவினரின் பத்வாக்களும் உறுதிப்படுத்துகின்ற உண்மை, இன்றைக்கு வரைக்கும் அந்த வழிகேடர்களின் புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டு அவர்களுக்காக வக்காலத்து வாங்குகிற இவர்கள் சுத்த ஈமானியத்தை புறக்கணிக்கும் கழிசடைகளாகவே இருக்கிறார்கள்,
தவிர அன்றைய கால கட்டத்தில் இவர்களின் போக்கை எதிர்த்தவர்களை இன்றைக்கும் பழிவாங்க துடிக்கும் போக்கை இவர்கள் கைக்கொள்கிறார்கள் என்பது ஸூபி நாயகத்தையும் அவர்கள் தரீக்காவையும் பழிவாங்க துடிப்பதில் இருந்து உணர்ந்து கொள்ள முடியும், ஸூபி நாயகத்தின் தரீக்காவை வழிகேடாகவே பார்க்கும் இவர்கள் எல்லா தரீக்காக்களுக்கும் எதிரிதான் என்பதும் இவர்களின் மூல பிதாக்களான முரண்வாதிகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஈமானிய சமூகமாக இல்லை என்பதும் இவர்களின் போக்கின் சாராம்சமே,
ஆதம் அலைஹிஸ்ஸலாத்துக்கே தலை சாய்க்காத இப்லீஸை துரத்தியடித்தவன் அல்லாஹ், இவர்கள் அந்த இப்லீஸின் இக்கால தரகர்கள் என்பதில் என்ன வியப்பு இருக்க முடியும்,
தேவ்பந்துக்கு போவதே தப்லீக்கர்களுக்கு மக்கா மதீனாவுக்கு செல்வதை விட உயர்ந்த அமலாகும், ஷைத்தானுக்கு கடை வீதி போல்தான் இதுவும், அந்த தேவ்பந்துக்கு தான் சூரையாடிய சொத்துக்களை எழுதி வைத்தார் என்று தன் மூல குருவை பிரகடணப்படுத்துகிற நூரிஷாக்கள் சுத்த வழிகேட்டினைத்தான் சம்பிரதாயமான இஸ்லாமாக காட்ட முயற்சிக்கிறார்கள்,
“ இன்றையவர்களுக்கு அது ஏன்
முடியாது “ என்று கேட்கிற கேள்வியில் அடுத்தவர்களின் சொத்துக்களையும் சூரையாட திட்டமிடுகிறார்கள் என்பது புரியும், உழைத்து சம்பாதிக்காமல் அல்லாஹ் கொடுத்தான் என்றால் அது எப்படி..? திருட்டா, கொள்ளையடித்ததா, அல்லது ஏய்த்து சூரையாடியதா,
இவைகளுக்கு மாற்றமான ஆன்மீகமாக அல்லாஹ் அருளுவதற்கு எதுவும் தடையில்லை என்றாலும் இவர்களுக்கு அது சாத்தியப்படாது, காரணம் ஈமானும் உண்மையும் இவர்களிடம் தேடியும் கிடைக்காத ஒன்று மட்டுமல்ல கண்மணி நாயகத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியை இஸ்லாமாக, ஈமானாக காட்ட முயற்சிக்கிறார்கள் என்பதுமாகும்,
எனவே ஈமானிய இஸ்லாத்துக்கு அன்றிலிருந்து இன்று வரை எதிர்ப்பை கிளப்பிய, கிளப்புகிற அத்தனை இயக்கங்களும் அவைகள் என்னென்ன பெயர்களில் வந்தாலும் அவைகளின் மூல நோக்கு கடமைக்கான இஸ்லாத்தில் அல்ல, கண்மணி நாயகத்தின் கண்ணியத்தை குறைக்கும் காழ்ப்புணர்ச்சி இஸ்லாமாகவே இருந்தது, இருந்து வருகிறது, அதற்காகத்தான் ஆன்மீக குர்ஆனின் விளக்கத்தை கூட மாற்றுகிறார்கள், ஹதீஸ்களை மறுத்து அவைகளுக்கு ஸஹீஹ் ளயீப் என்று சாயம் பூசுகிறார்கள், ஸியோனிஸ சிந்தனைக்கு தோதான சமயோசித இஸ்லாமாக மாற்ற முயற்சிக்கிறார்கள், இது இன்றைய பீஜேக்கும் நூரிஷாவுக்கும் புறம்பானதல்ல, கண்மணி நாயகத்தை தரம் தாழ்த்துவதே அவர்கள் நோக்கு, அதில் வெற்றி கண்டால் இஸ்லாமிய பெயரில் எதனையும் உட்புகுத்தி விட முடியும் என்று அவர்கள் மனப்பால் குடிக்கிறார்கள்,
அதனால் தான் வஹ்ஹாபிஸ சிந்தனைகளும் தப்லீக்கிய தலைமுறைகளும் தரீக்கா போர்வைகளும்,
எனினும் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை பூர்வீகமான குர்ஆனில் அல்லாஹ் பூமான் நபிகளாரின் புகழை உயர்த்தி விட்டதாக பிரகடணப்படுத்தி இனிமேல் அதில் எவரும் கைவைக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துகிறான்,
இந்தியாவில் இலங்கையில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியிலும் இந்த நூரிஷாவின் ஊசலாட்டங்கள் தெரிகிறது, ஆனாலும் கோடிக்கணக்கில் என்பதெல்லாம் சுத்த மாயை, அமெரிக்காவிலும் இவர்கள் எலிஜாவுடன் இணையலாம், லோடஸ் டெம்பலின் பஹாவுல்லாவோடு சமரசம் செய்து இஸ்ரேலிய உம்மாவை வலுப்படுத்தலாம், பிரிட்டன் மிர்ஸாவோடு ஆதாய நிமித்தம் ஆலிங்கணம் செய்து கொள்ளலாம், ரஷாத் கலீபாவுக்கு சங்கடம் ஏற்படுத்தாமல் ரகஷிய ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்,
அது எங்களுக்கு சங்கடமில்லை, இஸ்லாத்தின் ஆரம்ப நிலைக்கு ஈமானிய இஸ்லாம் வந்து விடும் என்று எங்கள் கண்மணி நாயகம் சொன்ன வார்த்தையில் உள்ள கூட்டம் நாம் என்பதால் ஆனந்தமே,
இது தெளிந்து கணிக்க வேண்டிய நீண்ட ஆய்வு என்றாலும் இது பற்றிய தெளிவுகள் மக்கள் மத்தியில் பெரும்பாலாக பேசப்படுவதால் இதை ஒரு முன்னுரையாக மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள், சிந்தியுங்கள், விவாதியுங்கள், பரப்புங்கள், பாமரர்களின் இஸ்லாத்தை மட்டுமல்ல கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று நிற்கின்ற படித்தவர்களின் ஈமானையும் பாதுகாக்க அது ஒன்று மட்டுமே உதவி புரியும்.
( Izzath quadiree )