السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 16 October 2024

அப்துல் காதிர் ஜீலானி தொடர் 06


 கெளதுல் அஃழம் #முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ


தொடர் -07

தொகுப்பு: Maadhihur Rasool 


#குடும்பவாழ்வு


கெளதுல் அஃழம் அவர்கள் தனது வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில், தனது ஆன்மீக முன்னேற்றத்திற்குத் திருமணத்தைத் தடையாகக் கருதினார்கள். ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரசங்கித்த மற்றும் நடைமுறைப்படுத்திய சுன்னாவைக் கடைப்பிடிப்பதற்காக, 51ம் வயதில் திருமணம் செய்து கொண்டனர். நான்கு பேரை திருமணம் செய்து கொண்டனர். 


    இவர்கள் மனைவி, மக்களோடு இல்லற வாழ்க்கை வாழ்ந்து வந்த போதிலும், உலக ஆசாபாசம் இல்லாமலேயே இருந்து வந்தனர். இது பற்றி அவர்களிடம் கேட்டபோது, 'எனக்கொரு பிள்ளை பிறந்தால் அதைக் கையிலெடுத்து இது என்னைப் பொறுத்தவரை இறப்பெய்தியதாகும்' என்று கூறி அதுபற்றிய அன்பை உள்ளத்திலிருந்து அப்புறப்படுத்தி விடுவேன். பின்னர் அது இறப்பெய்தினாலும் அதன் காரணமாக எனக்கு அணுவளவும் கவலை ஏற்படாது' என்றனர்.


    கெளதுல் அஃழம் அவர்கள் தங்களின் 51ம் வயதிற்குப்பின்னர் 4 மனைவியரை மணந்து 27 ஆண்மக்களையும், 22 பெண்மக்களையும் பெற்றெடுத்தனர். இவர்களின் மக்களும் சிறந்த கல்வி அறிவு பெற்று மார்க்க மேதைகளாக திகழ்ந்தார்கள். 


He had forty-nine children; twenty-seven sons and twenty-two daughters. Many of his sons became famous for their education and learning, and they and their descendants spread Islam in other parts of the world:

https://www.sufiwiki.com/Abdul_Qadir_Jilani


மனைவியர்:

1) மதீனா ஸாஹிபா (ரஹ்) 

2) ஸாதிக்கா (ரஹ்) 

3) மூமினா (ரஹ்) 

4) மஹ்பூபா (ரஹ்) 


இப்னு நஜ்ஜார் என்பவர்கள் தங்களுடைய வரலாற்று நூலில் பதிவு செய்யும் பொழுது பின்வருமாறு கூறுகிறார்கள்.

நான் அப்துல் காதிர் ஜீலானீ நாயகத்தின் அருமை மகனார் அப்துர் ரஸ்ஸாக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்ல கேட்டேன். அவர்கள் கூறினார்கள். 

என்னுடைய தந்தைக்கு 27 ஆண் குழந்தைகளும் 22 பெண் குழந்தைகளுமாக மொத்தம் 49 குழந்தைகள் பிறந்தன. 

அவற்றில் 13 ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் தவிர மற்றைய எல்லா குழந்தைகளும் சிறு வயதிலேயே மரணித்து விட்டன. அவர்களின் பெயர்கள் பின்வருமாறு... 


1. அஸ்ஸெய்யித் “ஸைபுத்தீன்” அப்துல் வஹ்ஹாப் (பிறப்பு : ஹிஜ்ரி 522), (1127-1197) 

2. அஸ்ஸெய்யித் “தாஜுத்தீன்” அப்துர்ரஸ்ஸாக் (பிறப்பு : ஹிஜிரி 528), 1135 Age 57 ஸெய்யிது அப்துர் ரஜ்ஜாக்

3. அஸ்ஸெய்யித் “ஸர்புத்தீன்” ஈஸா 

4. அஸ்ஸெய்யித் “ஷம்ஸுத்தீன்” அப்துல்அஸீஸ் (1128-1206)   

5. அஸ்ஸெய்யித் அப்துல் ஜப்பார்  

6. அஸ்ஸெய்யித் “அபூ இஸ்ஹாக்” இப்றாஹீம் 1132 Age 54  

7. அஸ்ஸெய்யித் “அபுல் ஃபழ்ல்” முஹம்மத்  

8. அஸ்ஸெய்யித் அப்துர்ரஹ்மான்  

9. அஸ்ஸெய்யித் “அபு சக்கரிய்யா” யஹ்யா அஷ்ஙர் 1155 Age 77  

10. அஸ்ஸெய்யித் அப்துல் ஙப்பார் 

11. அஸ்ஸெய்யித் “அபுன்னஸர்” மூஸா 1140 Age54  

12. அஸ்ஸெய்யித் அப்துல் ஙனீ

13. பெண் குழந்தை: அமதுல் ஜப்பார் பாதிமா (ரழியல்லாஹு அன்ஹா)


தன் மகன்மாருக்கு முறையாக கல்வி புகட்டுவதில் அதிக அக்கறை காட்டினார்கள். அவர்களுக்கு நாயகம் அவர்களே கற்பித்ததோடு, மேலும் அக்கால சான்றோர்களின் கீழ் அவர்களின் கல்விக்கும் ஏற்பாடு செய்தார்கள். இதனால் அவர்களில் பெரும்பாலோர் நன்கு படித்தவர்களாகவும், பக்திமான்களாகவும் ஆனார்கள். 

வரலாற்றாசிரியர்களின் குறிப்பின்படி, அவர்களில் 07 மகன்மார் பாக்தாத்திலேயே வசித்து வந்தனர்.

1. Syed Saif-ud-Deen Abdul Wahab Gilani, 

2. Syed Abdul Jabbar Gilani, 

3. Syed Taj-ud-Deen Abdul Razzaq Gilani, 

4. Syed Muhammad Gilani, 

5. Syed Abdullah Gilani, 

6. Syed Yahya Gilani and 

7. Syed Abdul Rehman Gilani. 

இவர்கள் அனைவரும் பக்தாதிலேயே அடக்கம் செய்யப்பட்டனர்.

ஆனால் "ஷியாக்கள்" பாக்தாத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியபோது, மேற்குறிப்பிட்டவர்களின் சந்ததியினர் தங்கள் சொந்த நகரத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு, நிலைமை இயல்பு நிலைக்கு வந்ததும், செய்யித் அப்துல் ரஸ்ஸாக் ஜீலானியின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் நிரந்தர வதிவிடத்திற்காக பாக்தாத் திரும்பினர்.

மீதமுள்ளவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றனர். அவர்கள் சென்ற இடங்களில் காதிரிய்யா ஆன்மீக பாட்டையை பரப்பினர்.


மேலே குறிப்பிடப்பட்டவர்களான ஏழு மகன்களைத் தவிர, 

அஸ்ஸெய்யித் ஷர்புத்தீன் ஈஸா அல் ஜீலானீ எகிப்துக்கு குடிபெயர்ந்தனர்.

அஸ்ஸெய்யித் அப்துல் அஜிஸ் ஜீலானீ, ஜப்பல் (குர்திஸ்தான்) இற்கு குடிபெயர்ந்தனர், 

அஸ்ஸெய்யித் அபு இஷாக் இப்ராஹீம் ஜீலானீ, மற்றும் அஸ்ஸெய்யித் மூசா ஜீலானீ ஆகியோர் சிரியாவுக்கு குடிபெயர்ந்தனர்.


ஆண்டகை அவர்களின் 27 ஆண்மக்களுள் சிலரது விபரம் வருமாறு:


1. ஸெய்யிது ‘ஸைபுத்தீன்’ அப்துல் வஹ்ஹாப் அல் ஜீலானீ (ஹிஜ்ரி 521-593, நல்லடக்கம்- ஜல்பா, பக்தாத்) (மூத்த மகனார்) 

இவர்கள் ஹிஜ்ரி 522 ஷஃபான் மாதம் (கி.பி 1128) பக்தாதிலே பிறந்தார்கள். தந்தையிடமே பிக்ஹை கற்றார்கள். அறிவுக்காக பல நாடுகளுக்கும் பயணம் செய்து பின் பக்தாதிற்கு வந்து தந்தையாரின் மத்றஸாவில் கற்றார்கள். குத்பு நாயகம் வபாத்தானதன் பிற்பாடு இவர்கள் உரை நிகழ்த்தவும் மார்க்க ரீதியான தீர்ப்பும் வழங்க ஆரம்பித்தார்கள். அவர்களிடம் கல்விகற்ற எத்தனையோ மாணவர்கள் பெரும் இமாம்களாக திகழ்ந்தார்கள் இன்னும் இவர்கள் பெரும் சட்டமேதையாகவும் உரை நிகழ்த்துவதில் நிகரற்றவர்களாகவும் திகழ்ந்தார்கள். புத்திக் கூர்மையுள்ளவர்களாக இருந்தார்கள். இவர்கள் பக்தாதில் ஹி. 593 ஷவ்வால் மாதம் பிறை 25 இல் (கி.பி.1197) மரணித்தார்கள். 


Amongst his sons, HAZRAT SHEIKH ABDUL WAHAB was the eldest; He was a great scholar. He was given charge of the Madrasa of his father in 543 A.H. He learnt Fiqh and Hadith from his father and other savants of Islam of the time. He too visited several towns in Ajam for the acquisition of knowledge. After his fathers death, he used to deliver sermons and express his opinion on question of Islamic Shariath. He also held an office under the state and was very popular. He breathed his last in 593 A. H. and was buried in the Graveyard of Mohallah Halbah.

https://naqeebofbaghdad.wordpress.com/2017/12/29/family-tree-of-gaillani-family/


2. ஸெய்யிது 'ஷர்புத்தீன்' 'அபூ முஹம்மத்' ஈஸா அல் ஜீலானீ (எகிப்து சென்று வாழ்ந்து ஹிஜ்ரி 573ல் (கி.பி.1178) அங்கேயே மறைந்தார்கள்.)


Sayed Shaikh Sharfuddin Asa. He was also educated as a scholar in the Jamia and later became a teacher. He was a mystical scholar and wrote many books especially Jawahirul Asrar and Lataiful Anwar. He was a poet and his poems shows his longing for Baghdad. He spent his later years in Egypt, preaching and imparting religious education. He died on 12th Ramzan 573 Ah (1178 AD) in Egypt and was buried there.

He was also a very blessed and pious person. He attained all his education at the feet of his blessed father. He was a Master of Hadith and Fiqh and was well-versed in the field of Islamic Jurisprudence. He was also a great writer. He wrote many religious and mystical poems in the love of Allah and His Rasool ﷺ.


HAZRAT SHEIKH SHARFUDDIN ABU MUHAMMAD ISSA. He was a teacher of Hadith and a great Jurist. He was also a poet and a very good preacher. He was written books on Sufism. He settled down in Egypt and died in 573 A.H. One of his famous books is known as Jawahir-ul-Asrar.


இவர்கள் பிறந்த ஆண்டு அறியப்படவில்லை. தந்தையிடம் பிக்ஹ் படித்தார்கள் இவர்கள் கற்றுக் கொடுக்கக்கூடியவர்களாகவும் ஹதீதுக்கலையில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் உரை நிகழ்த்தக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். 

இவர்கள் ஸுபிச ஞானத்தில் அதிக நூற்களை இயற்றியுள்ளார்கள். அதில் ஒன்று தான் جواهر الأسرار ولطائف الأنوار என்ற கிதாபாகும் இன்னும் இவர்கள் இறைஞான கவிகள் இயற்றுவதிலும் புலமை பெற்றிருந்தார்கள். 

மிஸ்ர் நாட்டிற்கு பயணம் செய்து அங்கே மார்க்கப்பணி செய்தார்கள். இவர்களுக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. மரணிக்கும் வரை மிஸ்ரிலேயே இருந்தார்கள் இவர்கள் ஹி. 573 ரமழான் பிறை 12 இல் வபாத்தானார்கள் .


تحمل سلامي نحو أرض أحبتي وقل لهم إن الغريب مشوق

فإن سألوكم كيف حالي بعـدهم فقولوا بنيران الفراق حريق

فليس له إلف يسيـر بقر بهـم وليس له نحو الرجوع طريق

غريب يقاسي الهم في كل بلـدة ومن لغريب في البلاء صديق

இது இவர்கள் இயற்றிய கவியாகும். 


3. ஸெய்யிது 'தாஜுத்தீன்' அப்துர் ரஸ்ஸாக் அல் ஜீலானீ 

(ஹிஜ்ரி 528-603 பக்தாதில் அடங்கப்பட்டுள்ளார்கள்)

Sheikh Sayyidi Abdur Razzaq (ra) was born on the 18th of Zil Qaadah 528 AH. He also attained his education at the feet of his blessed father. Besides his proficiency in Hadith and Fiqh he was also a dynamic debater. He was a Haafizul Hadith and a very wise Jurist. His kindness, generosity and humility were well known to the people of Baghdad. He used to stay away from the people to the best of his ability, as he preferred silent meditation in the Court of Allah. He, however, dearly loved those students who were in search of knowledge of the Deen. He passed away on a Saturday, the 7th of Shawaal 613 AH in the city of Baghdad. The crowd that arrived at the Janazah of Sayyidi Abdur Razzaq (ra) when it was announced was so vast that there was no place in the city. The Janazah had to be performed outside the city so that all the people could join in the prayer. It was performed at various places for the benefit of the thousands of people attending.


இவர்கள் ஹி. 528 துல் கஃதா பிறை 18 இல் பிறந்தார்கள் தந்தையிடம் பிக்ஹை கற்று தேர்ந்தார்கள். உரை நிகழ்த்துபவர்களாகவும் மார்க்கத்தீர்ப்பு வழங்கக் கூடியவர்களாகவும் ஹதீதுக்கலையில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருந்தார்கள். இன்னும் இவர்கள் குர்ஆனை மனனம் செய்த ஹாபிழாகவும் ஹன்பலீ மத்ஹபின் சட்டங்களில் தேர்ச்சி பெற்றவர்களுமாவர். இன்னும் இவர்கள் மனிதர்களின் தொடர்பை விட்டும் நீங்கி வீட்டிலே தனித்திருப்பார்கள் ஜும்ஆஹ் தொழுகைக்காக மட்டும் வீட்டிலிருந்து வெளியாகுவார்கள் அறிவை தேடும் மாணவர்களை கண்ணியப்படுத்துபவர்களாகவும் அதிக பேணுதலுடையவர்களாகவும் பொருமையாளராகவும் இருந்தார்கள். இவர்கள் ஷவ்வால் பிறை 06 ஹி. 603 இல் வபாத்தானார்கள்.


4. ஸெய்யிது 'ஸம்ஸுத்தீன்' அப்துல் அஸீஸ் அல் ஜீலானீ

(ஹிஜ்ரி 536 - 603, மெளஸுல் இலிருந்து 85 மைல் தொலைவிலுள்ள அகராஹ் எனுமிடத்தில் அடங்கப்பட்டுள்ளார்கள்) 


He was born on the 28th of Shawaal 536 AH and passed away on the 28th of Rabi-ul-Awwal 603 AH. He was a great worshipper and a well-known Mystic. Many great and learned Ulama are amongst his distinguished students and disciples. He moved to a place called Jibaal in 570 AH and his descendants are present there even up to this day.


இவர்களிடம் பைஅத் பெற்றவர்களே கிறிஸ்தவர்களின் சிலுவைப்போரை (கி.பி.1187-1189) முறியடித்து மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்ட மாவீரர் சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி (ஹிஜ்ரி 531 – 589) (கி.பி.1137 –1193). இப்படையில் பங்குபற்றி போராடிய பெரும்பாலான வீரர்கள் காதிரிய்யா தரீக்காவைச்சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு அபூபக்கர் என்ற குன்யத்து பெயர் உண்டு. ஹி. 532 ஷவ்வால் பிறை 27 இல் பிறந்தார்கள். தந்தையிடம் பிக்ஹ் கற்றார்கள் இவர்கள் உரை நிகழ்த்தக்கூடியவர்களாகவும் பணிவுடையவர்களாகவும் திகழ்ந்தார்கள். ஹதீதுக்களையிலும் தன்னிறைவு கொண்டிருந்தார்கள். இன்னும் கற்றுக் கொடுக்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் ரபீஉனில் அவ்வல் பிறை 18 ஹி. 602 அல்லது 604 இல் வபாத்தானார்கள். 

HAZRAT SHEIKH ABDUL AZIZ From amongst the sons of Hazrat Ghousul Azam, Syed Sheikh Abdul Aziz is well famed for his knowledge and adoption of the ways of his father. He was born on 27th Shiwal in 522 A.H. in Baghdad. Like his brothers he had also learnt Hadith and Fiqh from his father and other scholars of his time. He had for a considerable time been teaching these subjects in Baghdad and also delivering sermons. He migrated from Baghdad in 585 A.H. towards the mountains and chose to reside there. The condition in the city of Asqualan became alarming and antisocial and in religious activities prevailing in that city. The city was therefore attacked by him and conquered for the Khalifa of his time. He restored Law and order in that city by dealing effectively with all the undesireable elements. He was well known for his religious and spiritual knowledge. His soul departed on 18th Rabe-ul-Sani 602 A.H. in the country where he migrated earlier. He was buried in Aqahrah 85 miles away from Mousel.

DECENDENTS OF SYED ABDUL AZIZ WHO HELD THE VENERABLE AND HIGH OFFICE OF NAQEEB OF BAGHDAD.


5. ஸெய்யிது 'ஸிராஜுத்தீன்' அப்துல் ஜப்பார் அல் ஜீலானீ 

(ஹிஜ்ரி 575ல் பக்தாதில் மரணித்தார்கள்) 


Shaikh Sayed Sirajuddin Abdul Jabbar. He was a sufi and graduate form his father’s Jamia. He was found mostly in company of Darvesh and mystics. He died young on 9th Zil Hajj 575 AH 1186 AD in Baghdad. He is buried in the compound of Roza Aqdas of Hazrat Abdul Qadir Jilani (Allah’s mercy be on him).

இவர்கள் பிறந்த ஆண்டு அறியப்படவில்லை. தந்தையிடம் பிக்ஹ் படித்தார்கள் இவர்கள் ஸுபிச பாதை வழி சென்றவர்கள் இன்னும் எழுதுவதில் வியப்பூட்டும் வகையில் எழுதக்கூடியவர்கள். இவர்கள் வாலிபனாக இருக்கும் போதே ஹி. 575 துல் ஹஜ் பிறை 17 இல் வபாத்தானார்கள் 


6. ஸெய்யிது 'அபூ ஸகரிய்யா' யஹ்யா அல் ஜீலானீ 

(ஹிஜ்ரி550-600, அவர்களுடைய சகோதரர் ஷெய்ஹ் அப்துல் வஹ்ஹாப் அல் ஜீலானி அவர்களுக்கருகில் நல்லடக்கமானார்கள்) 


Sayyidi Yahya (ra) was born in 550 AH and passed away in the year 600 AH He is buried beside his brother, Sheikh Abdul Wahab (ra) in the Musaafir Khana (Guest-house) of Sheikh Abdul Qadir Jilani (ra).

இவர்கள் தான் குத்பு நாயகத்தின் பிள்ளைகளில் இறுதியானவர்கள் குத்பு நாயகம் வபாத்தாகுவதற்கு பதினொரு வருடங்களுக்கு முன்பதாக ஹி. 550 இல் பிறந்தார்கள். அவ்வப்போது குத்பு நாயகத்தின் வயது 80தாக இருந்தது. இவர்கள் பிறப்பதற்கு முன் ஒரு தடவை குத்பு நாயகம் கடுமையாக நோயுற்றார்கள் அப்போது அவர்களின் பிள்ளைகள் தந்தையார் வபாத்தாகி விடுவார்களோ என்று பயந்தார்கள். அப்போது குத்பு நாயகம் சொன்னார்கள். நீங்கள் பயப்பட வேண்டாம் இப்போது நான் மரணிக்க மாட்டேன். என்னிலே ஓர் ஆண் குழந்தை இருக்கிறது அதன் பெயர் யஹ்யா அந்த குழந்தையின் தாய் ஜாரிய்யா ஹபஷிய்யா என்று கூறினார்கள். அதன் பிறகு தான் இவர்கள் பிறந்தார்கள். இவர்களும் தந்தையிடமே அறிவு ஞானங்களை கற்றார்கள் ஹதீதுக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் மக்கள் இவர்களை கொண்டு அதிக பயன் பெற்றார்கள் மிஸ்ர் நாட்டிற்கு பயணம் செய்து அங்கே தங்கியிருந்தார்கள் அங்கேயே திருமணமும் செய்தார்கள். அதில் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை கிடைத்தது அதற்கு அப்துல் காதிர் என்று தனது தந்தையின் பெயரை சூட்டினார்கள் பல வருடங்கள் கழித்து தன் மகனோடு பக்தாதுக்கு வந்தார்கள் ஹி. 600 ஷஃபான் மாதம் அங்கேயே வபாத்தானார்கள். இவர்கள் அப்துல் வஹ்ஹாப் என்ற தனது சகோதரனுக்கு பக்கத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். 


7. ஸெய்யிது அபுன் நஸ்ர் மூஸா அல் ஜீலானீ (ஹிஜ்ரி 535-618 டமஸ்கஸ்) 

இவர்கள் ரபீஉனில் அவ்வல் ஹி. 539 இல் பிறந்தார்கள். தந்தையிடம் பிக்ஹ் படித்தார்கள் கௌதுல் அஃழம் ஆண்டகை அவர்கள் இவர்களை டமஸ்கஸிற்கு அனுப்பி வைத்தார்கள். இவர்கள் ஹன்பலீ மத்ஹபை பின்பற்றக் கூடியவர்களாகவும் பேணுதலுடையவர்களாகவும் பெரும் ஷெய்ஹாகவும் திகழ்ந்தார்கள். இவர்கள் வபாத்தாகும் வரை டமஸ்கஸிலேயே இருந்தார்கள் ஹி. 618 ஜமாதுல் ஆஹிர் மாதம் வபாத்தானார்கள் இவர்களே குத்பு நாயகத்தின் பிள்ளைகளில் இறுதியாக வபாத்தானவர்கள். 

HAZRAT SHEIKH MUSA Was born in 533 A.H. He migrated to Damuscuss and settled down there. He too learnt Fiqh and Hadith from his father and from Abu Said Bin Noba and other scholars of the time. He was pious and exalted man and people of that place greatly benefited by him. He died in Damuscuss and was buried there.


8. ஸெய்யிது 'அபுல் பழ்ல்' முஹம்மத் அல் ஜீலானீ (ஹிஜ்ரி 600ல் பக்தாதில் மரணித்தார்கள்) 

 (ஹிஜ்ரி 600ல் பக்தாதில் மரணித்தார்கள்) 

Sayed Shaikh Abul Fazl Muhammed. He had specialized in Hadis and he died in 600 AH 1204 AD at Baghdad.

இவர்கள் பிறந்த ஆண்டு அறியப்படவில்லை. தந்தையிடம் பிக்ஹ் கற்றார்கள் ஹதீதுக்கலையில் தேர்ச்சிபெற்றவர்கள் 

ஹி. 600 துல் கஃதா மாதம் வபாத்தானார்கள். 


9. ஸெய்யிது 'அபூ இஸ்ஹாக்' இப்றாஹீம் அல் ஜீலானீ (ஹிஜ்ரி) 

(ஈராக்கின் கிழக்குப் பிரதேசத்திலுள்ள வாஸித் என்ற இடத்துக்கும் குடி பெயர்ந்து அங்கு தமது மார்க்கப் பணியைத் தொடர்ந்தார்கள். ஹிஜ்ரி 592ல் அங்கேயே மரணித்தார்க்கள்.)

இவர்களுடைய பிறந்த ஆண்டும் அறியப்படவில்லை தந்தையிடம் கற்றுத்தேர்ந்தார்கள் ஹி. 592 இல் வபாத்தானார்கள். 


10. அப்துல்லாஹ் அல் ஜீலானீ (ஹிஜ்ரி 589ல் பக்தாதில் மறைந்தார்கள்)

இவர்கள் ஆண்டகை அன்னவர்களின் முதற் குழந்தை இவர்கள் பக்தாதிலே 508 இல் பிறந்து அங்கேயே ஹிஜ்ரி 587 அல்லது 589 இல் வபாத்தான ர்கள். தந்தையிடமே தங்களுடைய அனைத்து கல்விகளையும் கற்றுக் கொண்டார்கள். 


11. ஸெய்யிது அப்துர் ரஹ்மான் அல் ஜீலானீ 

(ஹிஜ்ரி 587ல் மறைந்தார்கள்) 

Sayed Shaikh Abdr Rehman. He died in 587 AH 1191 AD


https://www.youtube.com/watch?v=0nx40sPUJN4


குத்புல் அக்தாப் நாயகம் அவர்களின் ஏனைய அருமைப் புதல்வர்களின் புதல்வர்களும் வழித்தோன்றல்களும் பல்வேறு காலகட்டங்களில் ஆபிரிக்க, மத்திய கிழக்கு, மத்திய ஆசிய நாடுகளுக்கும், ரஷ்யா, சீனா மற்றும் இந்திய உப கண்டத்துக்கும் பிற்காலத்தில் ஐரோப்பிய, தென் கிழக்காசிய நாடுகளுக்கும் குடிபெயர்ந்து அந்தந்த நாடுகளில் இஸ்லாத்தின் வளர்ச்சியில் மறுமலர்ச்சியில் பாரிய பங்களிப்பொன்றை ஆற்றினர்.


குத்புல் அக்தாப் ஜீலானீ நாயகத்தின் மகன் ஹழ்ரத் காஸிம் பக்தாதி அவர்களின் தர்ஹா ஷரீப் இந்தியா ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீரிலிருந்து சர்வார் செல்லும் வழியில் இடையில் கிளைத்துச்செல்லும் பாதையில் Tantoti என்ற இடத்தில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.  

https://www.youtube.com/watch?time_continue=38&v=NWoBva809jw&feature=emb_logo


பெண்மக்கள்: 

01. அஸ்ஸெய்யிதா ஆஃபியா 

02. அஸ்ஸெய்யிதா யாசீன்

03. அஸ்ஸெய்யிதா ஹலிமா 

04. அஸ்ஸெய்யிதா தாஜ்

05. அஸ்ஸெய்யிதா ஸாஹிதா

06. அஸ்ஸெய்யிதா தாஹிரா

07. அஸ்ஸெய்யிதா உம்முல் பஸல் 

08. அஸ்ஸெய்யிதா ஷரீபா

09. அஸ்ஸெய்யிதா ஆபிதா

10. அஸ்ஸெய்யிதா கதீஜா

11. அஸ்ஸெய்யிதா ரஜி

12. அஸ்ஸெய்யிதா உம்முல்பத்ஹு 

13. அஸ்ஸெய்யிதா ஸஹரா

14. அஸ்ஸெய்யிதா ஜமால்

15. அஸ்ஸெய்யிதா கைருன்னிசா 

16. அஸ்ஸெய்யிதா ஷாஹ் Syeda Shah Khatim Gilani 

17.Syeda Shah Bibi Gilani 

18.Syeda Fakira Gilani 

19.Syeda Fatima Gilani

20.Syeda Um-e-Salma Gilani

21.Syeda Fazal-un-Nisa Gilani 

22.Syeda Taj-un-Nisa Gilani


பெண் குழந்தை அமதுல் ஜப்பார் பாதிமா (ரழியல்லாஹு அன்ஹா) eeஅவர்களைத்தவிர ஏனைய பெண்குழந்தைகள் சிறுவயதில் இறந்துவிட்டதாக இப்னு நஜ்ஜார் என்பவர்கள் தங்களுடைய வரலாற்று நூலில் பதிவு செய்துள்ளார்கள். குழந்தைகளின் புனைப்பெயர் சில இடங்களில் குறிப்பிடப்படுகின்றது. (சில இடங்களில் இயற்பெயர் குறிப்பிடப்படுகின்றது. அதனால் சில குழப்பம் காணப்படுகின்றன)

இவர்கள் குத்பு நாயகத்தின் அருமை மகளார் ஆவார்கள். இவர்களை அஷ் ஷெய்ஹ் அப்துர் ரஹ்மான் என்ற பெரியாரின் மகனார் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் பிறந்த, வபாத்தான ஆண்டுகள் அறியப்படவில்லை. 

அஷ் ஷெய்ஹ் யூனுஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அவர்களுடைய கிதாபில் குறிப்பிடும் போது குத்பு நாயகத்தின் மற்றைய மூன்று பிள்ளைகளில் ஒருவரான அஷ் ஷெய்ஹ் அப்துர் ரஹ்மான் ரஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் ஹிஜ்ரி 587இல் மரணித்தவர்கள். என்றும் மற்றையவர்களான அஷ் ஷெய்ஹ் ஸாலிஹ், அஷ் ஷெய்ஹ் அப்துல் கனீ ரஹ்மதுல்லாஹி அலைஹிமா ஆகியோரை பற்றிய விபரம் புதுஹுல் கைப் என்ற கிரந்தத்தில் வருகிறது. ஆயினும் அவர்கள் பிறந்த வபாத்தான ஆண்டுகள் அறியப்படவில்லை. அதை அல்லாஹ் மிக அறிந்தவன் என்று கூறுகிறார்கள். 


نفعنا الله بعلوم غوث الأعظم وعلوم أولاده رضي الله عنهم أجمعين

https://mynasab.com/the-syed-and-sadat-family-tree/hassani-sadat/gilani-family-tree/


https://naqeebofbaghdad.wordpress.com/2017/10/26/naqeeb-ul-ashraf-baghdad/


https://web.facebook.com/GhouseAzamDastagirYaShaikhAbdulQadirJilaniR.A/posts/family-of-ghaus-ul-azam-peeran-e-peer-hazrat-sayyedina-abdul-qadir-gilani-radi-a/2143476662545598/?_rdc=1&_rdr


தொடரும்….