கெளதுல் அஃழம் #முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ
தொடர் -08
தொகுப்பு: Maadhihur Rasool
#ஞானப்பொக்கிசங்கள்
1. புதூஹுல் கைப்
குத்பு நாயகம் அவர்களின் 78 உரைகளின் தொகுப்பு.
Futuh al-Ghaib (Revelations of the Unseen) – 78 discourses, fairly short and to the point but very powerful.
2. பத்ஹுர் ரப்பானீ
குத்பு நாயகம் அவர்களின் 62 உரைகளின் தொகுப்பு.
Al-Fath ar-Rabbani (The Sublime Revelation) – 62 discourses definitely longer, given in the Ribaat and Madrasa in Baghdad AH 545-546.
3. ஜலா அல் ஹவாத்திர்
குத்பு நாயகம் அவர்களின் 45 உரைகளின் தொகுப்பு.
Jala’ al-Khawatir (The Removal of Cares) – 45 discourses, also in the same locations, given in the year AH 546.
4. சிர்ருல் அஸ்ரார்
Kitab Sirr al-Asrar wa Mazhar al-Anwar (The Book of the Secret of Secrets and the Manifestation of Lights)
5. மழ்பூழாத்
Malfuzat (Utterances) – This is a collection of various sayings of Sheikh Abdul Qadir Jilani (ra). Generally it is found at the end of the hand copied Arabic manuscripts of Fath ar-Rabbani.
6. குன்யத்துத் தாலிபீன்
Al-Ghunya li-Talibi Tariq al-Haqq (Sufficient Provision for Seekers of the Path of Truth) – also known in the Indian sub-continent as Al-Ghunya li-Talibin. These five volumes, written by the Sheikh, at the request of one of his murids, is a comprehensive guide to all aspects of Islam, both the inward and the outward.
7. Khamsata ‘Ashara Maktuban (Fifteen Letters) –
These are 15 letters originally written in Persian by Sheikh Abdul Qadir to one of his murids.
8. அழ்புயூலாதுர் ரப்பானிய்யா
Al-Fuyudat al-Rabbaniyya (Emanations of Lordly Grace)
9. பஷாயிருல் கைராத்
Bashair al-Khairat (Glad Tidings of Good Things) – A Salawat by Sheikh Abdul Qadir by way of inspiration from Allah.
#மறைவு
இறப்பு வேளை நெருங்கியபோது, தம் மக்களை வானவர்களுக்கு இடம்விட்டு அமருமாறு சொல்லி, இரவுபகலாக அரூபிகளுக்கு சலாம் உரைத்துக் கொண்டிருந்தனர்.
'அல்லாஹ்' என்ற திக்ரோடு ஹிஜ்ரி 561 ரபீயுல் ஆகிர் பிறை 11 திங்கட் கிழமை (கி.பி.1166 பிப்ரவரி 14) தங்கள் 91வது வயதில் மறைந்தார்கள்.
இவர்களின் அடக்கவிடம் பக்தாதில் உள்ளது. அதன் மீது சுல்தான் சுலைமான் என்பவர் ஹிஜ்ரி 941 (கி.பி.1535)ல் ஒரு அழகிய கட்டிடம் எழுப்பினார்.
#மாவீரர்_சுல்தான்_ஸலாஹுத்தீன்_அய்யூபி
மேற்கத்திய நாடுகளில் 'சலடின்' (கி.பி.1137 –1193) என அழைக்கப்படும் இவர்கள் கிறிஸ்தவ சிலுவை போராளிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான போர்களை நடாத்தி வெற்றிகொண்டவர்கள். அவர்களிடமிருந்து பலஸ்தீனத்தை மீட்டு மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்டுத் தந்தவர்கள். (கி.பி.1189)
கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அவர்களின் கிடைத்தற்கரிய துஆவே சாதாரண போர் சிப்பாயின் மகனாரை அத்தனைப் பெரிய வீரராக, சுல்தானாக உருவாக்கியது.
அப்போது சலாஹுத்தீனுக்கு வயது ஒன்பது. அவர்களின் தந்தையார் நஜ்முத்தீன் அய்யூபி சிரியாவில் படைத்தளபதிகளுள் ஒருவராக இருந்தார். தன் மகனை மாவீரனாக உருவாக்கிப் பார்க்க ஆசையுற்ற அவர், மகனாரோடு பக்தாத் சென்று கௌதுல் அஃழம் ஆண்டகை அவர்களை சந்தித்தார்.
கௌதுல் அஃழம் அவர்கள் ஸலாஹுத்தீனின் உடலை தடவி விட்டு 'மாவீரராய் உருவாகுவார்' என்று வரமருளினார்கள்.
இதன் பலனாய் ஸலாஹுத்தீன் ஐயூபி கிறிஸ்தவ சிலுவைப் போராளிகளை வென்று வாகை சூடினார்கள். எகிப்து, சிரியா, மொஸப்பதேமியா, ஹிஜாஸ், ஆபிரிக்காவின் வடக்கிலுள்ள நாடுகள் யாவும் அவர்களுக்கு கீழ் வந்தன.
சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி அவர்கள் கௌதுல் அஃழம் அவர்களின் மகனார் அஷ்ஷெய்ஹு அப்துல் அஸீஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பைஅத் செய்து முரீதானவர்கள்.
கௌதுல் அஃழம் அவர்களின் பாதத்தடியில் அமர்ந்தவர்கள். இதற்கான அத்தாட்சி துருக்கியிலுள்ள டொல்காப்பி மியூஸியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அவர்களின் வாளில் பொறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் காதிரி ஸில்ஸிலாவில் உள்ளவர்கள் என்பதை உறுதிப்படுத்த அப்புனித வாளின் ஒரு பக்கத்தில் புனித கலிமா பொறிக்கப்பட்டுள்ளது. மறு பக்கத்தில் 'யா ஷைகு அப்துல் காதிரு ஷையன்லில்லாஹ்' என்று பொறிக்கப்படடுள்ளது.
அது மாத்திரமல்ல அவர்களின் படையணியில் இருந்தப் போராளிகளில் 50% வீதமானவர்கள் காதிரியா தரீக்காவைச் சார்ந்தவர்கள்.
தொடரும்....